.

Pages

Tuesday, November 5, 2013

சூதும் மாதும் வேதனை செய்யுமா !?

சூதும் மாதும் வேதனை செய்யும் !

அப்படி என்றால் மது ?
ஹலோ, ஹலோ ஓ ஓ, உங்களைத்தான், நான் கூப்பிடுவது உங்கள் காதுகளில் விழுகலையா ? தயவுசெய்து கொஞ்சம் நின்னு கேட்டுட்டுத்தான் போங்களேன்.

சிறு வயது பள்ளிப்பருவம் ஞாபகம் இருக்குதா ?

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்

இப்படி டீச்சர் சொல்லிக் கொடுத்த நினைவு இருக்கின்றதா ?

அதோடு “சூதும் மாதும் வேதனை செய்யும்” என்று டீச்சர் சொல்ல நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் சூதும் மாதும் வேதனை செய்யும் என்று உரக்க சொன்னோமே,

அதாவது ஞாபகம் இருக்குதா ?

ஆ ஆ  ஆ! இப்போ ஞாபகம் வந்துருச்சி.

அன்று சூதையும் மாதையும் சொன்னவர்கள் ஏன் மதுவை சொல்ல மறந்தனர்? அப்போ, மது வேதனை செய்யாதா?

இன்று மதுவுக்கு பல பக்கத்திலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது, ஆனால் சூதையும் மாதையும் எதிர்க்க மறந்து விட்டனர்.

என்னங்க இது? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கின்றது.

இதற்கு என்னதான் விடை ? நானும் பல கோணங்களில் சிந்தித்து விட்டேன், ஒரு விடையும் கிடைக்க வில்லை.

மேற்கத்திய நாடாகிய ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சூதும் உண்டு, மாதுவும் உண்டு, மதுவும் உண்டு. சூது ஆட்டத்திலும், மாதுவின் அழகிலும் செல்வத்தை விரயமாக்கும் அவர்கள், மதுவை ஒரு மருந்தாக நினைத்து பருகி வருகின்றனர். அதாவது அவர்கள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு ஐந்து மில்லிக்குமேல் பருக மாட்டார்கள், அந்த ஐந்து மில்லியையும் அவர்கள் பருகி முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் முப்பது நிமிடங்கள்.

நம் நாட்டில் எப்படியோ எனக்கு தெரியாது. எது எப்படி இருந்தாலும் உடல் நலத்திற்கும் குடும்பத்திற்கும் தீங்கு என்று வரும்போது அது தேவையா?

ஒரு சொட்டு குடித்தால் என்ன ?
ஒரு பாட்டில் குடித்தால் என்ன ?
ஒரு பைசா திருடினால் என்ன ?
ஒரு கோடி திருடினால் என்ன ?

திருட்டு, திருட்டுதான். இது தானங்க உண்மை.

ஒட்டு மொத்த சமுதாயமும் ஒன்று சேர்ந்து இதனால் உடல் நலத்திற்கும், குடும்பத்திற்கும் நாட்டுக்கும் தீங்கு என்று சொன்னபிறகு அதை நாடுவது எவ்வளவு குற்றமான செயல்.

தண்ணீரை பாதுகாப்போம்.
தண்ணி அடிப்போரை கண்டு விலக மாட்டோம்,
அவர்களை திருத்த முயற்சிப்போம்.

செல்வங்களை பாதுகாப்போம்.
சூதாட்டத்தில் செல்வங்களை விடுவோரை கண்டு வெறுக்க மாட்டோம்,
அவர்களை திருத்த முயற்ச்சிப்போம்.

மாதர்களை தாய்மார்களாக, சகோதரிகளாக கண்ணியப்படுத்துவோம்.
விலை மாதுவை கண்டு ஒருங்க மாட்டோம்,
அவர்களை திருத்தாமல் நாங்கள் தூங்க மாட்டோம்.

சூதும் மாதும் வேதனை செய்யும், கூடவே மதுவும் தொழமையாகிவிடும்.

வாழ்க்கை என்ற பாதையில் ஒரு சில இடங்களில் வளைவுகளும் நெளிவுகளும் வரும், தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் உடல் நலத்திற்கும் கூடும் என்று இருந்தால் வளையலாம் நெளியலாம், கூடாது என்று இருக்கும்போது அந்தமாதிரியான வளைவுகளும் நெளிவுகளும் நமக்கு தேவையா?

சிந்தித்து பாருங்கள், மனதை ஒரு நிலைப் படுத்திப் பாருங்கள், உண்மையாக மெய்யாக நிச்சயமாக உங்கள் மனதில் ஒரு தெளிவு உதயமாகும்.

நம் பாரதத்தை மட்டும்மல்ல இவ்வுலகையே பரிசுத்தமானதாக மாற்றிவிடலாம்.

இப்போ பாருங்க, என் மனதில் பட்டதை உங்களிடம் சொல்லிவிட்டேன், இன்னும் நிறைய செய்திகள் எனக்கு தெரியாமல் இருக்கலாம், ஆகவே, உங்களுக்குள் தெரிந்த விஷயங்களை இங்கு சொல்லி எனக்கு விளங்கப்படுத்துங்களேன்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

22 comments:

 1. 'மனித உரிமை ஆர்வலர்' சகோ. ஜமால் முஹம்மது அவர்கள் மீண்டும் தளத்தில் சிறந்த சிந்தனை தரும் படைப்புடன் தொடர்கிறார்.

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. குடும்ப உறவுகளையே வேரோடு அறுத்து எறியக்கூடிய இதுபோன்ற சமூக தீமைகளிடமிருந்து விலகி இருப்பது நன்று !

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   ஒரு தேசத்தில் மக்கள் ஒரு கை என்றால், அரசு மற்றொரு கை, அந்த இரண்டு கைகளும் சேர்ந்தால் மட்டுமே இதுமாதிரி குடும்ப கொல்லிகளை வேரோடு அறுத்து எறியமுடியும்.

   அரசே துணைபோகும்போது மக்களால் என்ன செய்திட முடியும் என்று நினைத்து எல்லோரும் இருந்து விட்டால்?

   அது நல்லது இல்லை, ஒரு கை இல்லாவிட்டால் என்ன? மாற்றுத் திறனாளிகளைப் பாருங்கள் அவர்கள் உழைக்கவில்லையா? உறங்கவில்லையா? குடும்பம் நடத்தவில்லையா?

   பின்ன என்ன யோசனை? ஒற்று மொத்த மக்களும் களத்தில் குதித்தால்!? வேறு என்ன, ஆணி வேறே அறுந்துவிடும்.

   Delete
 3. ஜமால் காக்காவின் நீண்ட நாட்களுக்குப் பின் நல்லுபதேசத்துடன் கூடிய விழிப்புணர்வு கட்டுரை அருமை.வாழ்த்துக்கள்.

  அது சரி “சூதும் மாதும் வேதனை செய்யும்” என்று சொல்லிக் கொடுத்த டீச்சர் மதுவின் தீமையை சொல்ல மறந்தது ஏனோ...? புரியாத புதிராக உள்ளது..?!?!?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   நினைத்து நினைத்து இன்னும் விடை தெரியவில்லை.

   Delete
 4. மனிதனை அழிக்கும் சூது, மாது, மது.

  சில மனிதனோ அம்மூன்றையும் தன் நண்பன் ஆக்கிக்கொள்கிறான்.
  பின் தன்னை அழித்துக்கொள்/ல்கிறான்.

  தன் உயிரை அழிப்பதை(தற்கொலையை) இறைவன் ஏற்கவில்லை. மன்னிப்பில்லை. நரகம் பரிசு என்கிறான்.

  மனிதா !
  இதற்கா... நீ வாழ்கின்றாய் ?

  விழித்துக்கொள் !
  வாழும்போது இன்பமாகத் தெரியும் நரகம். பின் அதுவே அங்கு நிரந்தர வாழ்வாகிவிடுமே !?

  தானாகத் திருந்துவதே ஒரே மருந்து.

  இங்கு நரகத்தை தேர்ந்தெடுத்தால் ...
  அங்கு நரகம் தானே கிடைக்கும் ?!

  நீ நலமாக வாழ்ந்தால்
  உன் குடும்பம் சொர்க்கமாக வாழும்.

  சுவர்க்கமா ? நரகமா ?
  உன் கையில்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   எல்லா விஷயத்தையும் உஷாராக எழுதும் நீங்கள், இந்த விஷயத்திற்கும் உஷாராக கருத்து கொடுத்து இருப்பது உங்களுடைய ஆதங்கத்தை எடுத்துக் காட்டுகிறது.

   Delete
 5. Replies
  1. நன்றி,

   ஓ அப்படியா?
   இன்ஷா அல்லாஹ், முயற்சிக்கிறேன்.

   Delete
 6. 'மனித உரிமை ஆர்வலர்' சகோ. ஜமால் முஹம்மது அவர்கள் பதியும் ஓவ்வன்றும் பதிவும் சிந்திக்க கூடிய பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   இன்னும் வெவ்வேறு விஷயங்கள் இருக்கு, தொடர்ந்து வரும்.

   Delete
 7. ஒருவர் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டார் அதில் இருந்து விடுதலை பெறவேண்டுமானால் மூன்று விஷயங்களில் ஒன்றை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் விடுதலை கிடைக்கும் என்று அவரிடம் சொல்லப்படுகிறது அவரும் சம்மதித்து என்ன அந்த மூன்று விஷயம் என்கிறார்
  1.ஒரு பெண்ணை பலாத்காரம் செய்யவேண்டும்
  2.ஒரு பெரியவரிடம் உள்ள பணங்களை திருடி சூது விளையாட வேண்டும்
  3.மது அருந்த வேண்டும்
  என்ற நிபந்தனைகளை சொல்லப்பட்டது அவர் யோசித்தார் பண்ணை பலாத்காரம் செய்வது மிகவும் பாவம் நம் தாயும் சகோதரியும் பெண்தானே என்று அதை மறுத்து விட்டார் இரண்டாவது பெரியவரிடம் திருடி சூது விளையாடுவது இரண்டு குற்றம் பாவம் பெரியவர் அதுவு நிராகரித்து விட்டார் மூன்றாவது மது இது பிறருக்கு செய்யும் குற்றமல்ல நமக்கு மட்டுமே செய்யும் பாவம் ஆகையால் மதுவை குடிக்க ஒப்புக்கொண்டு மது அருந்துகிறார் மது போதையில் அவர் மறுத்த மற்ற இரண்டு காரியத்தையும் செய்து மூன்று தவறுகளையும் செய்து விட்டார் [மது என்பது மிகவும் ஆபத்தானது என்பதற்கு இந்த உதாரணம்]

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   நல்ல உதாரணம் காட்டி இருக்கின்றீர்கள், இதைவிட வேறு ஏதும் வேணுமா?

   Delete
 8. அனைவரையும் சிந்திக்க வைத்த பகிர்வு. அரசும் ஆவண செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   எனக்கும் நம்பிக்கை உண்டு.

   Delete
  2. சூதாடிகளை ..சமூகம் பார்க்கும் பார்வை
   குடிகாரனை சமூகம் பாக்கும் பார்வை வேறு
   ஆனால் விலை மாதை வீணாக்கும் சமூகம்
   அவளை மட்டும் ஒதிக்கி விடுகிறது ..அவள்
   யாரால் சீரழிந்தாள் என்று பார்ப்பதில்லை ..
   பாவம் விலை மாது தன்னை இழந்து ..
   சமூகத்திலும் புறக்கணிக்க படுவது வேதை தான்
   என்றாலும் ..பெண் தன்னை பொன்னாய் பாத்து காக்கா வேண்டும் ..எப்படி ஏன் கருத்து

   Delete
  3. உங்கள் கருத்துக்கு நன்றி.

   உங்கள் கருத்து நியாயமானது, அதே நேரத்தில் சிந்திக்க வேண்டியதாக இருக்கின்றது.

   ஒரு பெண்ணை, பெற்ற தகப்பன் பார்ப்பதற்கும், கணவன் பார்ப்பதற்கும், வேறு எவரோ ஒரு ஆண் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்குது.

   Delete
 9. நல்ல கருத்துள்ள ஆக்கம் ....
  வாழ்த்துக்கள் சகோ ...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   இதைப்பற்றி நீங்கள் ஏதும் நினைக்க வில்லையா?

   Delete

 10. மச்சான்! ஓர் ஆபத்தான செய்தி:

  “சென்னையிலும் மும்பையைப் போல் “ரெட்லைட் ஏரியா” வைத்து விபச்சாரம் நடத்த அனுமதி வேண்டும்” என்று சதை வியாபாரம் செய்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்களாமே?

  அப்படி என்றால், மதுவைத் தாராளமாக்கி அரசின் வருமானமாக்கியது போல்...................

  நினைக்கவே அச்சமாக உள்ளது. கலியுகம் அல்லது கியாமத் உடைய காலம் நெருங்கிக் கொண்டே வருவதன் அடையாளங்களைக் காண்கின்றோம். சிரத்தையுடன் - குமுகாயச் சிந்தையுடன் வரையப்பட்ட இவ்வாக்கம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவலாம். படைப்புக்குப் பாராட்டுகள், மச்சான்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   மச்சான், இந்த காலத்தில் யாரையும் எதையும் நம்பமுடியவில்லையே, அப்படியிருக்க சதையை எப்படி மச்சான் நம்புவது.

   சதையில் நிறைய கொழுப்பு இருக்கு, அதனால் அது தானும் வழுக்கி விழுவதொடு மற்றவர்களையும் வழுக்கி விட்டுடும், நாமும் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers