kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, November 6, 2013
உண்மைகள் வெறுக்கப்படுகிறதா !?
வெண் மதியே !
பெண் ரதியே !
எனும் காதலன்
பொய் கூற்றுக்கு
காதலி
ரசிக்கிறாள் ?
உடன் பிறப்பே !
ரத்தத்தின் ரத்தமே !
எனும் தலைவனின்
பிதற்றலை
தொண்டன்
ரசிக்கிறான் ?
என் வருமானம்
முழுவதும்
உன்னிடமே !
எனும் கணவனின்
பொய்க்கு
மனைவி
சந்தோசிக்கிறாள் ?
மாராக
இவ்வளவு
அலங்காரம்
தேவையா?
எனும் காதலன்
உண்மை வார்த்தையை
காதலி வெறுக்கிறாள் !
உங்கள்
மனைவி,மக்களை
காப்பாற்றும்
வழியை பாருங்கள் !
எனும் தலைவனின்
எதார்த்த வார்த்தையை
தொண்டன்
மறுக்கிறான்?
என் வருமானத்தில்
ஒரு பகுதி
என் கஷ்டப்படும்
தம்பிக்கு
போய் சேர்க்கிறது !
எனும் கணவனின்
உண்மை வாரத்தையை
மனைவி
வெறுக்கிறாள்?
இப்படி இருக்க
நான்
உண்மை பேசட்டுமா ?
பொய் பேசட்டுமா ?
பெண் ரதியே !
எனும் காதலன்
பொய் கூற்றுக்கு
காதலி
ரசிக்கிறாள் ?
உடன் பிறப்பே !
ரத்தத்தின் ரத்தமே !
எனும் தலைவனின்
பிதற்றலை
தொண்டன்
ரசிக்கிறான் ?
என் வருமானம்
முழுவதும்
உன்னிடமே !
எனும் கணவனின்
பொய்க்கு
மனைவி
சந்தோசிக்கிறாள் ?
மாராக
இவ்வளவு
அலங்காரம்
தேவையா?
எனும் காதலன்
உண்மை வார்த்தையை
காதலி வெறுக்கிறாள் !
உங்கள்
மனைவி,மக்களை
காப்பாற்றும்
வழியை பாருங்கள் !
எனும் தலைவனின்
எதார்த்த வார்த்தையை
தொண்டன்
மறுக்கிறான்?
என் வருமானத்தில்
ஒரு பகுதி
என் கஷ்டப்படும்
தம்பிக்கு
போய் சேர்க்கிறது !
எனும் கணவனின்
உண்மை வாரத்தையை
மனைவி
வெறுக்கிறாள்?
இப்படி இருக்க
நான்
உண்மை பேசட்டுமா ?
பொய் பேசட்டுமா ?
மு.செ.மு.சபீர் அஹமது
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசகோ. சபீர் தம்பி அவர்களே, கேட்டாலும் கேட்டிய, இப்படியொரு கேள்வியா கேட்பது?
நான் உங்களுக்கு எப்படி பதில் அளிப்பது?
பொய் பேச சொல்லியா அல்லது உண்மை பேச சொல்லியா?
இந்த மானிட சமுதாயம் விரும்புவது உண்மையைத்தான். நீங்களும் அதைத்தான் விரும்புவீர்கள், ஏன் நானும் கூட அப்படித்தான்.
இருந்தாலும் கூட யாரும் சரி, எவரும் சரி, நூறு சதவிகிதம் உண்மையவர்களும் கிடையாது, அதுமாதிரி பொய்யவர்களும் கிடையாது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
எதார்த்த வரிகள் அருமை. ஆக மோதத்தில் இதல்லாம் நடந்தால் ஆச்சரியம் தான்.
ReplyDeleteயப்பா ..நல்ல கேள்வியப்பா ..
ReplyDeleteநான் முன்பே சொன்னேன் ஞாபகம் இருக்கா ..
வக்கீலுக்கு படிக்க வேண்டிய ஆளப்பா...
சிம்பிள் கவிதையாக இருந்தாலும் சிந்திக்க வைக்கும் வரிகள்.அருமை.
ReplyDeleteஉடல் நலத்திற்க்காக சாப்பிடும் மருந்து சுவையுடன் இருப்பதில்லை. அதுபோலத்தான் உண்மைகள் கசக்கத்தான் செய்யும்.
வெளி உலகத்தை பொருத்தவரை அலுவலகம் சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் பொய் முகம் தேவையாகத்தான் இருக்கிறது. ஆனால் உண்மையான அன்பை செலுத்தும் குடும்ப உறவுகளிடமாவது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. நல்ல ஆக்கம்.
ReplyDeleteFantastic poem !
ReplyDeleteWeldon brother
சக எழுத்தாளர்கள் அனைவரையும் என் கிறுக்கல் வரிகள் கவர்ந்திருக்கின்றது என்பதை தங்களுடைய கருத்துக்கள் மூலம் அறிகிறேன் சந்தோஷம்
ReplyDeleteஏற்கனவே மரணமும் ஜனனமும் பேசிக்கொண்டால் எனும் ஆக்கத்தில் என்னை ஏன் மனிதர்கள் வெறுக்கின்றார்கள் என்று மரணம் ஜனனத்தை கேட்க்குமே அப்பொழுது ஜனனம் சொல்லும் நான் இனிப்பான பொய் நீ கசப்பான உண்மை என்று சொல்லுமே இதுதான் நம் வாழ்க்கை
பொய் பேச்சை
ReplyDeleteபேச கேட்டு
பழகிப்போன
பெண்மை
காதலியும் மனைவியும்,
வழிகாட்டப்பட்ட
கோஷமிடும் தொண்டனும்
உண்மையைப் பேசினால்
எப்படி நம்புவார்கள் !?
பழக்கதோஷம் !