.

Pages

Tuesday, December 10, 2013

நல்லதொரு குடும்பமும் ! சரியான புளிரசமும் !!

நாம் வீடுகளிலும் ஹோட்டல்களிலும் சாதத்தில் புளிரசம் இட்டு சாப்பிட்டு இருப்போம், வீடுகளில் உள்ள சுவை ஹோட்டல்களில் இருப்பது கிடையாது. காரணம் முதலில் நீரில் இட்டு பிழிந்து எடுத்து காய்ச்சப்படுவதே சரியான புளிரசம், இரண்டாவதாக நீரில் இட்டு பிழிந்து எடுத்து காய்ச்சப்ப்படும்போது அது சரியான புளிரசமாக இருக்காது, மாறாக வெறும் சக்கை ரசமாக இருக்கும்.

மானிடவியலில் எத்தனை உறவுகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரஸ்யமானவை. அப்பா-உம்மம்மா, வாப்பா-உம்மா, காக்கா-தம்பி, ராத்தா-தங்கச்சி, மாமா-மாமி, மச்சான்-மச்சி, பெரியப்பா-சின்னவாப்பா, பெரியம்மா-சின்னம்மா, இன்னும் அநேக உறவு வட்டங்கள் நம் மத்தியில் வட்டமடித்துக் கொண்டு இருந்தாலும் அதையும் தாண்டி உள்ள ஒரு உன்னதமான உறவுதான் கணவன் மனைவி என்ற உறவு. இந்த கணவன் மனைவி உறவு சிலருக்கு சந்தோஷமாக அமைவதுண்டு, இன்னும் சிலருக்கு பாதிக்கு பாதி தேவலாம் என்றும், பலருக்கு ஏன்தான் இப்படி அமைந்ததோ என்றும் இருப்பதுண்டு. ஆக மொத்தத்தில் திருப்த்தி அடைவது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

பெறோர்கள் பார்த்து வைத்து முடிவு எடுத்து நடக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, காதலித்து தானாக முடிவு எடுத்து நடக்கும் திருமணமாக இருந்தாலும் சரி, சரியான புரிதல் இல்லாமால் இடையில் அந்த தம்பதிகள் பிரிந்து வேறு திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர்.

நான் பல நாடுகளில், பல பேர்களிடம் இந்த இரண்டாவது திருமணத்தைப் பற்றி ஒரு சர்வே செய்து பார்த்ததில் நூற்றுக்கு நூறு சதவிகிதத்தினர் முதலில் அடைந்த இல்லற வாழ்க்கையைத்தான் முதன்மை படுத்துகின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது? முதல் இல்லற வாழ்க்கையே சிறந்ததாக இருக்கின்றது.

இன்றைய அவசர காலத்தில் எதையும் சிந்திப்பது கிடையாது, கண்ணுக்கு அழகாக இருந்தால் மட்டும் போதுமா ? கை நிறைய காசு இருந்தால் மட்டும் போதுமா ? ஆணோ பெண்ணோ கடமை Duty, கண்ணியம் Respect, கட்டுப்பாடு Restriction, பண்பு Quality, கவுரவம் Dignity.  இதையெல்லாம் சிந்திக்காமல் முடிக்கப்படும் திருமணம் சரியான புளிரசமாக இருக்காது.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

26 comments:

 1. தலைப்பை வாசித்ததும் சிரிப்பு வந்துடுச்சி :)

  நீண்ட நாளைக்கப்பிறகு மனித உரிமை ஆர்வலர் ஜமால் காக்கா அவர்களின் ஆக்கத்தை வாசித்து மகிழ்ச்சி...

  சிறந்த சிந்தனை தரும் படைப்பு

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   அடுத்த வாரம் வருது இடியப்ப மாவு.

   Delete
 2. சுவாரஸ்யமாக சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி அய்யா.

   சரியா சொல்லிவிட்டேன்,

   Delete
 3. புளியைப் பிழிந்து எடுத்திடலாம்.
  ஆனால் மனித மனத்தை என்னத்தைத்தான் பிழிந்தாலும் சிலது ஒத்து வரமாட்டேன் என்கிறது என்ற ஆதங்கம் புரிகிறது.

  அதனால் மனதை பிழிந்து எடுக்கமுடியாது. மனதுக்கு தனக்கு தேவையானதைப் பிழிந்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒத்துவரும்.

  ஏனென்றால் மனம் ஒரு குரங்கு. மனித மனம் ஒரு குரங்கு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   உங்களுக்கு ஈடாக எழுத முடியாது.

   Delete
 4. நான் ஒன்று நினைத்திருந்தேன் இக்கட்டுரையை படித்தவுடன் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போச்சே காக்கா..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீங்கள் என்ன நினைத்து இருப்பீர்கள் என்று நான் சொல்ல வேண்டுமானால் ஒரு வருடம் காத்து இருக்கணுமே, ஏன் இந்த வம்பு, நீங்களே சொல்லி விடுங்களேன்.

   Delete
 5. கல்யாண வீட்டில் நல்லா சாப்பிட்டுவிட்டு கடைசியா புளியானத்த குடிச்சமாதிரி அருமை யாவ் [ஏப்பம் விட்டேன்]

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   இந்த புளியாணம் குடிக்க குடிக்க திகட்டாதது.

   Delete
 6. jamal kaka, really super romantic touch with 5 kari sahan sappadu

  ReplyDelete
 7. புளி ரசத்தை மையமாக வைத்து குடும்ப உறவின் குழப்பங்களை நன்றாக புளிந்துள்ளீர்கள். அருமை வாழ்த்துக்கள்.

  நான்கூட தேங்காய்ப்பாலில் தலைப்பாலை எடுத்து கத்திரிக்காபச்சேடிக்கும் உருளக்கிழங்குக்கும் ஊத்திவிட்டு கடைசிப்பாலில் தான் தேங்காச் சோறு ஆக்குவேன் ஆனால் நல்ல ருசியாத்தான் இருக்கும் கொலஸ்ட்ராலும் குறைச்சலாக இருக்கும் காக்கா. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. என்ன இது சமையல் வாடை ரொம்ப தூக்கலா ஈக்கிது : )

   Delete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி.

   ஆமாம், உண்மைஎலேயே சமையல் வாடை பயங்கரமா இருக்குது.

   அடுத்த வாரம் இடியப்ப மாவும் ஆட்டுத்தலையும் வரப்போவுதே, இந்த தளம் என்ன செய்யப்போகின்றதோ.

   Delete
 8. மச்சானின் புளியான ஒப்பீடு குடும்ப வயிற்றுக் கோளாறுக்கு நல்ல ஜீரண மருந்து; கட்டுரையோ செம விருந்து.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.

   புளிப்பு ஒரு நல்ல மருந்து.

   Delete
 9. நல்ல உவமை
  வாழ்வியலின் கருத்தை நன்றாய் சொன்னீர்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   உங்கள் வருகைக்கும் நன்றி.

   Delete
 10. நல்ல கருத்தை நலமாய் சொன்னீர்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   இந்த புளிரசத்தை நலமாய் சுவைத்ததற்கு நன்றி.

   Delete
 11. பதிவுக்கு நன்றி.
  படித்த வாசக சகோதரர்களுக்கு நன்றி.

  என்ன இது வாழ்க்கையே புளித்தது விட்டது என்று சொல்லும் அநேகம் பேர்களை நாம் பார்த்து இருக்ப்போம், அதனால்தான் அந்த புளிப்பு சுவையை வைத்து ஒரு ஆக்கம்.

  ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆக்கம் யாரையும் புளிப்படைய செய்யவில்லை.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 12. //நீங்கள் என்ன நினைத்து இருப்பீர்கள் என்று நான் சொல்ல வேண்டுமானால் ஒரு வருடம் காத்து இருக்கணுமே, ஏன் இந்த வம்பு, நீங்களே சொல்லி விடுங்களேன்.//

  அதெல்லாம் பொதுவில் சொல்ல முடியாதே!

  ReplyDelete
 13. வாழ்க்கை என்பது புளிப்பும் இனிப்பும் இருந்தால்தான் சந்தோசம் அழகாக பதிந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.

   உங்களுக்கு புளிப்பு வேண்டுமா அல்லது இனிப்பு வேண்டுமா?

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers