.

Pages

Saturday, December 7, 2013

[ 23 ] 'வளைகுடா வாழ்க்கை' [ மகனின் நெகிழ்ச்சி ! ]

மகனின் நெகிழ்ச்சி :
வளைகுடா வாழ்வில் தியாகம் பற்றி கூற வேண்டும் என்ற நோக்கில் இந்த பதிவை எழுதுகிறேன். அது மட்டுமன்றி கல்வியினால் கிடைக்கும் நற்பதவி பற்றியும் இதில் பதிய முனைகிறேன்.

நான் கூறும் கால கட்டம் 1990 களில் நடந்த நிகழ்வுகள் கணினியின் முக்கியத்துவம் வெளிவந்த காலம். இந்தியாவில் கணினி பயிலும் ஆர்வம் நிறைந்த காலமது. வளைகுடா வாழ் நம்மவர்களிடமும் கல்வி கற்றவர்கள் நல்ல நிலையில் வசதியாக இருந்தமையால் கட்டிட தொழிலாளி கள்  தான் படும் கஷ்டம் பிள்ளைகள் பெற கூடாது என்பதை கருத்தில் கொண்டு படிக்க வைப்பதில் கவனமாக இருந்தனர். அதில் சிலர் வெற்றியும் கண்டுள்ளனர் அது பற்றிய பதிவே இவ்வார ஆக்கம்...

கட்டிடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து தனது வளைகுடா வாழ்வை துவங்கியவர் கண் இமைக்கும் நேரத்தில் பதினைந்து வருடம் கடந்து விட்ட நிலையில் தனது மகன் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்ல தயாராக  இருந்தான்.

சென்னைக்கு சென்று ஒரு கம்பெனியில் வேலை செய்து வருவதாக தந்தைக்கு கடிதமிட்டான். மிகுந்த மகிழ்வில் அன்று  தன்னுடன் வசிக்கும் நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தார். அதில் ஒருவர் தனது காம்பெனிக்கு ஆள் தேவை உங்கள் மகனின் கல்வி தகு மிக சரியாக பொறுந்தும் உடன் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பி வைக்க சொல்லுங்கள் என கூற... மிக மகிழ்ந்தார். மகனுக்கு விசா கிடைக்க பெற்று வளைகுடா வந்து சேர்ந்தான் .

ஒருவாரத்தில் எல்லா வேலைகளும் முடிந்து கையில் அடையாள அட்டையும் கிடைத்தது. கம்பெனிக்கு செல்ல  ஆயத்தமானான் தந்தை என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் அறியா மகன் தனது வேலை உண்டு தான் உண்டு என்று ..ஒரு மாதம் கழிந்தது. ஒரு நாள் தனது கம்பென்யில் வேலை பார்ப்பவருடன் நண்பகல் ஒருமணி அளவில் வெளியில் சென்று கொண்டிருக்கும் போது மூன்று மாடி கட்டிடத்தின் உச்சியில் தனது தந்தை பெயின்ட் அடித்து கொடிருக்கும் நிலையை கண்டு அதிர்ந்தான்.

அப்பா ! அப்பா !! என்று அழைத்தான் மகன் அழைப்பை உணர அவர் வேளையில் கவனமாக இருந்தார். நிலைமையை உணர்ந்த மகன் வீடு வந்து
பேசி கொள்ளலாம் என தன சகாவுடன் அலுவலகம் திரும்பினான் மாலையில் தனது அப்பா தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றான்.

அப்பா என்று கதறி அழுதான்...

அப்பா ..நீங்கள் இப்படி கஷ்டபட்ட காசில் தான் எனது கல்லூரி காலத்தை ஆடம்பரமாக கழித்தேனா ! என்று கதறி அழுதான்.

தம்பி நீ சந்தோசமாக  கல்லூரி வாழ்க்கை முடித்தது எனக்கு மகிழ்ச்சி. படிப்பை முடித்து பட்டதாரியாய் வரவேண்டும் என்பதே எனது நோக்கம் அது நிறைவேறி விட்டது. நான் பட்ட கஷ்டம் நீ படக்கூடாது என்பதே நோக்கம்
அது நிறைவேறி விட்டது. அயர்ச்சியை மீறிய சந்தோசம் அவர் முகத்தில் தெரிந்தது.

அப்பா ! இனி  இந்த வேலை செய்ய வேண்டாம். ஊருக்கு போய் விடுங்கள். நான் இனி பார்த்து கொள்கிறேன் என்றான் அன்பு மகன்.

சில காலம் கழித்து ஊர் சென்று தந்தை ஓய்வெடுக்க சென்றார். கல்வி கற்ற மகன் சிறப்பாய் வாழ்வை கழித்து வருகிறான்.

நல்ல தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திப்போம்...
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

17 comments:

 1. பாசக்கார புள்ளே !

  இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை வைத்திருந்தால் எப்புடி இருக்கும் !

  நெகிழ வைக்கும் படைப்பு

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நல்ல பிள்ளைகளுக்கு மட்டுமே ஏற்படும் நெகிழ்ச்சி
   இது ..சுய நல மிக்க குழந்தைகள் தாய் தந்தையை
   கண்ணீர் விட்டு கத வைக்கும் நிகழ்வுகளும் உண்டு

   Delete
 2. இவரின்[பைண்டர்]என்ணம் நிறைவேற மகனின் நல்ல குணமும் அமைந்ததே அல்ஹம்துலில்லாஹ் சிலருக்கு எதிர்மறையான சம்பவங்களும் நடை பெற்று இருக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. சரியாய் கூறினீர் ..நண்பரே .
   இலங்கையில் நடந்த நிகழ்வு ..பற்றி முக நூலில் பார்த்தேன் ..முப்பது வருடம் உழைத்த அன்னையை
   கவனிக்காமல் நாடு வீதியில் விட்ட நிகழ்வு கண்டு
   மனம் வெறுத்தேன் ..முடிந்தால் அந்த நிகழ்வு பற்றி
   பதிகிறேன்

   Delete
 3. மனம் இளகி கண்களில் பணிக்க ஆரம்பித்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. நல்ல மகன் நீங்கள் ..
   உங்கள் கண்கள் பணித்தது ..நல்ல மனதை வெளி காட்டுகிறது

   Delete
 4. இந்த ஒரு சம்பவத்தின் மூலம் பல அப்பாக்களின் தியாகத்தை நினைவுக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள்..

  ReplyDelete
  Replies
  1. கல்லூரியில் பயிலும் மாணாக்கள்..அப்பாவின்
   கனவை நினைவாகும் விதமாக நன்றாக படிக்க வேண்டும்

   Delete
 5. . அருமையான மகன் அருமையான தந்தைன் தந்தையின் கஷ்டங்கள் தெரியாத மகன் கண்டந்தும் கலக்கினான் மகன்களுக்கு இது ஒரு சமர்ப்பணம்.வாழ்த்துக்கள். சகோ சித்திக் அவர்களே

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ...ஹபீப் அவர்களே

   Delete
 6. பிள்ளைகளுக்கு தகப்பனாரின் கஷ்டங்களை நன்கு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பதிவு. வாழ்த்துக்கள் சகோ.சித்திக் அவர்களே.!

  கல்வியைமுழுமை படுத்தாமல் வளைகுடாவிற்கு வந்து வேலைபார்க்கும் நிறைய தகப்பனார்களின் நிலைமை.கஷ்டமான நிலைமைதான். தான்கல்விகற்க்காமல் இன்று கஷ்டப்படுகிறோம் என்பதை நினைத்து தமது பிள்ளைகள் நல்லபடி கல்விகற்று அவர்களின் வருங்காலம் சிறப்புடன் இருக்கவேண்டி கஷ்டங்களை காட்டிக் கொள்ளாமல் இங்கு நிறைய தகப்பனார்கள் கஷ்டப் படுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக சரியாக சொன்னீர்கள் ..
   பல நல்ல தந்தைகள் தான் படும் கஷ்ட்டம் பிள்ளைகள் பட கூடாது என்று கஷ்ட படுகிறார்கள் .
   நல்ல பிள்ளைகள் பலனாக இருப்பார்கள் ..
   எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளையாக
   பெற்றோருக்கு உதவும் பிள்ளையாக இருக்க
   எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்

   Delete
 7. அழுதுவிட்டேன் மகனாக அல்ல; ஓர் அப்பாவாக! இப்படிப்பட்ட மகன்களுக்காகவே ஆயிரம் ஆயிரம் அப்பாக்கள் உருகிக் கொண்டும், கண்ணீர்ப் பெருகிக் கொண்டும் வளைகுடாவில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

  மனத்தைக் கசக்கிப் பிழிந்த மகன் பாசத்தை வைத்து எழுதிய உங்களின் கரங்கட்கு என் அன்பு முத்தங்கள்!

  ReplyDelete
 8. அண்மையில் படித்ததில் பிடித்தது:

  “மகன் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவர் அப்பா; மகன் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் மிகச் சிறந்த அப்பா.”

  ReplyDelete
 9. மிக சரியாக சொன்னீர்கள் ..
  தான் படும் கஷ்டம் பிள்ளை பட கூடாது .என நினைக்கும்
  நல்ல தந்தைக்கு ..பிள்ளைகள் கடைசி காலத்தில் உதவியாக இருக்க வேண்டும்

  ReplyDelete
 10. இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை வைத்திருந்தால் எப்புடி இருக்கும் !

  ReplyDelete
  Replies
  1. இதுபோல் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை வைத்திருந்தால் எப்புடி இருக்கும் ///
   முதியோர் இல்லம் ..இல்லாமல் இருந்திருக்கும் ..
   தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers