.

Pages

Friday, December 13, 2013

அவனா நீ !?

அறிவியல் முன்னேற்றம் நாகரிக உலகம் எப்படி வேண்டுமானாலும் இன்றைய உலகை கூறிக்கொள்ளட்டும். தப்பை தப்பு என்று சொல்ல அது பெரிய புரட்சி என்று கருதப்படுகிறது ! காற்றை, நீரை மாசுபடுத்தும் செயலை மிக வன்மையாக கண்டிக்கிறோம் சுத்தப்படுத்தப்பட்ட நீரை மட்டும்தான் குடிப்பேன் என்று அடம்பிடிக்கின்றோம். ஆனால் முக்கியமான ஒரு விஷயத்தை சரியாக சொல்லப்போனால் கேவலமான செயலை நீதிமன்றம் வரை கொண்டு செல்கிறோம்.
   
ஆம்  ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு இப்படி ஒரு செய்தி தினசரி பத்திரிக்கைகளை வெளியாகி உள்ளது. ஓரினச்சேர்க்கை குற்றம் என்று நீதிமன்றம் சொன்னது அதிரடி விஷயமா!? ஆண்டாண்டு காலம் அந்த கேவலம் கெட்ட விஷயம் குற்றமில்லை என்று மானுடர்களால் சொல்லப்பட்டு வந்ததா ? இந்த நீதிமன்றம்தான் அது தவறு என்று கண்டுபிடித்து புதிதாய் நமக்கு சொல்கிறதா ? அது என்ன அதிரடி தீர்ப்பு ?
   
சென்ற 2009 ஆம் வருடம் தில்லி ஹை கோர்ட் ஒரு தீர்ப்பு வழங்கியது அது நாடு முழுவது பெரும் சர்ச்சையில் பேசப்பட்டது என்ன தெரியுமா அந்த கேவலமான செயலை [ ஓரினச்சேர்க்கை ]குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கியது அந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றனர். நான்கு வருடம் தேவைப்பட்டது ஓரினச்சேர்க்கை தவறுதான் என்று சொல்வதற்கு எப்படி இவ்வுலகை அறிவியல் முன்னேற்றம், நாகரீக உலகம் என்று சொல்ல முடியும்.
   
சரி உச்சநீதி மன்றமே அறிய கண்டுபிடிப்பை சொல்லி விட்டதே விட்டார்களா கயவர்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டவர்களில் சிலர்...

1. சிவானந்த திவாரி MP [ ஐக்கிய ஜனதா தளம் ] 2. டெரிக் ஓ பிரைன் MP [ திரிணமுல் காங்கிரஸ் ]ஆகியோர் கோர்ட் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறி இருக்கிறார்கள் இதற்காகவா உங்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள் .
   
மேலும் கவனியுங்கள் மத்திய அரசு கூடுதல் தலைமை வக்கீல் இந்திரா ஜெய்சிங் தீர்ப்பு குறித்து தனது அதிர்ப்தியை தெரிவித்துள்ளார் அவர் கூறுகிறார் "அரசியல் சட்ட கோட்பாடுகளை விரிவுபடுத்த கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை  இழந்து விட்டோம்" என்கிறார் அவரின் மேலை நாட்டு கலாச்சார மோகம் அப்படி பேச வைக்கிறது
   
இந்த தீர்ப்பு வந்த நாள் கேவலம் கெட்ட பழக்கமுடையோர்கள் கருப்பு தினமாக கருதுகிறார்களாம்! நீங்கள் தான் இந்த நாட்டிற்கு கரும் புள்ளிகள் கலை எடுக்கப்பட வேண்டியவர்கள் இந்த பாவிகளுக்கு மேலும் ஒருவரின் ஆதரவு உண்டு இந்தியாவை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்று விளம்பரத்தில் வருவாரே இந்தி நடிகர் அமீர்கான் அவரேதான்  இவர்களுக்கு எப்படி வெட்கமில்லாமல் ஆதரவு அளிக்கிறார்கள்.

ஒரு வேளை அவனா நீ  !?
மு.செ.மு.சபீர் அஹமது

24 comments:

 1. நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளன. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாக் கடமையாகும். நீதிமன்ற தீர்ப்பிறகு எதிராக கருத்து சொல்வது அவமதிக்கும் செயலாகும். முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்துடன் கருத்து தெரிவிப்பது நலம்.

  ReplyDelete
 2. நேற்றைய தின செய்தி :

  ஓரினசேர்க்கையால் நேர்ந்த துயர சம்பவம் !

  சேலத்தில் திருநங்கை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை உல்லாசத்திற்கு அழைத்துச்சென்ற இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

  நேற்று இரவு நடந்த இந்த கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

  அய்யோ...அம்மா சத்தம்

  சேலம் அம்மாபேட்டை குமரகிரி ஏரி அருகில் குமரகிரிபேட்டை பகுதி உள்ளது. இங்கு குமரகிரி ஏரியை தாண்டி சாக்கடை கழிவுநீர் செல்லும் ராஜவாய்க்கால் இருக்கிறது. நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜவாய்க்கால் பகுதியில் உள்ள மினரல் வாட்டர் நிறுவனம் அருகில் அய்யோ...அம்மா என அலறும் சத்தம் கேட்டது.

  அப்போது குமரகிரிபேட்டை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், குமார் ஆகியோர் குமரகிரி ஏரியின் கடைசி பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் பேசிக்கொண்டிருந்தனர். அலறல் சத்தம் கேட்டதும் இருவரும் சத்தம் வரும் திசைநோக்கி ஓடி வந்தனர். கும்மிருட்டான அப்பகுதியில் யாரோ சிலர் ஓடும் ஓசை மட்டும் கேட்டது.

  திருநங்கை கொடூர கொலை

  இருவரும் மினரல் வாட்டார் நிறுவனம் அருகில் உள்ள ராஜவாய்க்கலை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். கழிவுநீர் செல்லும் ராஜவாய்க்கால் ஒடையில் உடலில் சரமாரியான வெட்டுகாயங்களுடன் திருநங்கை (அரவாணி) கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். வெட்டுப்பட்டதில் அவரது இடது கை துண்டாகி சாக்கடை கால்வாயில் மூழ்கி கிடந்தது.

  கொலை செய்த நபர்கள், வெட்டி சாய்த்து அவரை மினரல் வாட்டர் நிறுவனத்தின் தடுப்பு சுவரில் வீசியிருக்கிறார்கள். திருநங்கையின் உடல் சுவரில் மோதி சாக்கடை கால்வாயில் விழுந்திருப்பது தெரியவந்தது. அந்த சுவரில் ரத்தக்கறை படிந்திருந்தது.

  உல்லாசம் அனுபவிக்க...

  இதுகுறித்து ராமகிருஷ்ணன், குமார் ஆகியோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் ஏ.ஜி.பாபு, பிரபாகரன், உதவி கமிஷனர் ரவிசங்கர், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

  திருநங்கை பிணத்தை அவரது தம்பி மணி அடையாளம் காண்பித்த பின்னரே அவர் யார்? என தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட திருநங்கை பெயர் ஈஸ்வரன் என்ற ஈஸ்வரி (வயது 45) என்பதும், உடையாப்பட்டி தொழில்பேட்டை பின்புறம் உள்ள காரிப்பட்டி அம்பேத்கார் காலனியில் வசித்து வருவதும் தெரியவந்தது. ஈஸ்வரியின் தந்தை நைனாமலை இறந்து விட்டார்.

  அதன் பின்னர் தாயார் பூங்காவனத்துடன் வசித்து வந்த திருநங்கை ஈஸ்வரி, பகல் வேளையில் பூண்டு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்ததாகவும், இரவு வேளையில் வாலிபர்களுடன் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு, வாலிபர்கள் சிலர், ஈஸ்வரியுடன் உல்லாசமாக இருப்பதற்காக மறைவான இடத்திற்கு அழைத்து சென்றிருக்கலாம் என்றும், அதன் பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் திருநங்கை ஈஸ்வரியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

  தேடுதல் வேட்டை

  இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கையை கொலை செய்த வாலிபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சேலத்தில் நேற்று முன்தினம் கட்டிட காண்டிராக்டர் வினோத் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து மறுநாளான நேற்று இரவு திருநங்கை கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகரில் தினமும் ஒரு கொலை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நல்ல தகவல் இதுபோல் நிறைய சம்பவங்கள் நாட்டில் நடைபெறுகின்றது

   Delete
 3. ஓரினச்சேர்க்கையை பண்டைய காலம் முதல் இந்திய கலாச்சாரம் அனுமதித்தே வந்துள்ளது. அறிவியல் உயிரியல் கூற்றின் படியும், உளவியல் பரிணாமவியல் நிபுணர்களின் அளவீட்டின் படியும் ஓரின பாலுணர்வு இயல்பான ஒன்றாகவே ஏற்கப்பட்டுள்ளது. அதுவும் ஓரின பாலுணர்வு மனிதர்களிடம் மட்டுமல்ல பல்வேறு உயர் உயிரின வகைகளான பறவைகள், பாலூட்டிகளிலும் காணப்படுகின்றன. பண்டைய இந்திய கலாச்சாரத்தை சித்தரிக்கும் கோனார்க் கோவில்கள், கஜூராகோ சிற்பங்கள், முதற்கொண்டு நாட்டார் பாடல்கள், வத்சாயனரின் காமசாத்திரம் முதலியவற்றிலும் ஓரின பால் குறித்தும், திருநங்கையர் குறித்தும் குறிப்புக்கள் உள்ளன.

  18-ம் நூற்றாண்டில் பிரித்தானிய சட்டங்கள் இந்தியாவுக்குள் புகுந்த போதே கிறித்தவ மத அடிப்படையில் ஓரின பாலுறவை தடைசெய்தனர். ஆனால் இன்று அந்த பிரிட்டனிலேயே இச் சட்டம் நீக்கப்பட்டு விட்டது. இந்தியா தமது பழஞ்சட்டத்தை மறுபரீசலணை செய்ய வேண்டும், அதன் ஊடாக மக்கள்தொகையில் 3 - 5 % உள்ள பாலியல் சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படும்.

  --- விவரணம். ---

  ReplyDelete
 4. விவரணன் நீலவண்ணன் அவர்களுக்கு முதலில் வரவேற்ப்புகள்
  பொதுவாக இந்திய கலாச்சாரம் என்பது இந்துமத சம்மந்தப்பட்டதாக கருதப்படுகிறது நீங்கள் சொல்லும் வாதம் "கிருஸ்துவ சட்டத்தில் ஓரினச்சேர்கை தவறாக கருதப்படுகிறது" அதுவேதான் இஸ்லாமிய கலாச்சரமும் அதை எதிர்க்கிறது அப்படி பார்க்கையில் இந்துமதம் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பதாய் கூருகிரீர்?! அப்படி பார்த்தால் முன்பு டில்லி ஹைகோர்ட் சொன்ன தீர்ப்பை எதிர்த்து ப.ஜ.க.வை சார்ந்த மறைந்த p.p.சிங்கால் இது இந்து மதகொள்கைக்கு எதிரான தீர்ப்பு என்று சொல்லி சுப்ரீம் கோர்டில் மனுதாக்கல் செய்து இருக்கிறார் உங்கள் பதில் என்ன
  கஜுகராவும்,கோனார்க் கோவிலில் இருப்பதும் கற்பனைதான் அதுவே சட்சியாகாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும் மீண்டும் சந்திப்போம்

  ReplyDelete
 5. லூத் நபி (அலை) காலத்தில் இப்படிப்பட்டக் கேவலமான -இயறகைக்கு முரணானச் செயல்களில் ஈடுபட்டோரை ஊரோடு அழித்து விட்டான் இறைவன் என்பதை பைபிளும் குர் ஆனும் ஒப்புக் கொண்ட உண்மைகள் என்பதாற்றான் கிறித்துவமும் இஸ்லாமும் எதிர்க்கின்றன என்பதை முதலில் சகோதரர் நீல வண்ணண் அவர்கள் அறியட்டும். ஹிந்துக் கோயில்களில் சித்திரங்களில் உள்ளதால் மட்டும் இந்தக் பழக்கம் இழிவானதல்ல எனப்தை ஏற்க மாட்டோம். இறைவனின் கடுமையான் கோபத்திற்கு ஆளான வரலாறுகள் உண்மை என்பதை மட்டும் நம்புவோம். இன்னும் “எய்ட்ஸ்” என்னும் ஆட்கொல்லி நோய்க்கும் எம்மை ஆட்படுத்திக் கொள்ளும் இந்த க் கொடிய பழக்கத்தை விரட்டுவோம்.

  ReplyDelete
 6. நாகரீகம் என்ற போர்வையில் அநாகரீகமான மனித இனத்தை இழிவுபடுத்தி இனமழிக்கும் இந்தச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லதொரு தீர்ப்பு வழங்கி நியாயத்தையும் மனசாட்சியையும் நிலை நாட்டிய உச்ச நீதி மன்ற தீர்ப்பு பாராட்டப் பட வேண்டியவை.

  ReplyDelete
 7. இந்தியாவில் 25லட்சம் பேர் இப்பழக்கத்தில் உள்ளனராம் அதில் 175௦௦௦ நபர்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாம்

  ReplyDelete
 8. பதிவுக்கு நன்றி.

  ஹலோ சார், நீங்க தானே அந்த சார்,

  ஆமா நாதான் அந்த சார், ஏன் உங்களுக்கு என்ன வேணும்?

  ஒன்னுஇல்லே சார், இந்த ஓரினசேர்க்கையை பத்தி நீங்க என்ன நினைகிறீங்க?

  அட போங்க தம்பி, இதெல்லாம் ஒரு கேள்வின்னு, மனுஷன் மிருகத்தோட திருமணம் செய்து கொள்ளமுடியுமா என்று யோசிக்கும் நேரத்தில் இதபோய் கேட்டுகிட்டு.

  என்ன சார் சொல்றீங்க, மிருகத்தொடவா!

  ஆமாம், இது போதுமா?

  சார் என்னே விடுங்க நாபோய் போத்திக்கிட்டு படுக்கபோறேன்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 9. இறைவன் ஆணும் பெண்ணும் படைத்து அவர்கள் மூலமாக அவர்களின் சந்ததிகளை ஏற்படுத்துகிறான். இது ஆத்திகர்களின் நம்பிக்கை.

  ஓரினச் சேர்க்கையால் மனித இனம் எப்படி உலகில் இருக்கும் ?
  மிருகங்கள் மட்டும் தான் உலகில் இருக்கும். மனித இனத்தையே அழிக்கும் ஒரு செயல் எப்படி பகுத்தறிவுக்கும் ஏற்புடையதாக பொருந்தும் ?

  அணுகுண்டும் மனிதனை அழிக்கும். ஓரினச் சேர்க்கையும் மனிதனை அழிக்கும்.

  சிந்தனை இவ்வாறு செல்வதை தடுக்கும் வழிகள் ஆரம்பத்திலே இல்லாததால் தான்தோன்றித் தனமாக எப்படியும் சிந்திக்கலாம் என்றால் ! அவர்களைப் பற்றி என்ன சொல்வது !

  மனிதன் நிம்மதி என்பது தன்னை அழிக்கும் வழியில் உள்ளது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் ?

  அத சரிதான் என்று ஞாயம் உரைப்பவர்கள் மனித வாழ்வியலை விட்டு அகன்று போகிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது ?!

  ReplyDelete
  Replies
  1. ஆம். முற்றிலும் யூதர்களிடம் இப்பழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்ததால் தான், இன்று வரை அவர்களிடம் இன விருத்தி என்ற இன்பமோ, குழந்தைகளிடம் பாசமோ இன்றி பச்சிளம் பாலகர்களான பாலஸ்தீனக் குழந்தைகளைக் கொன்று குவிக்கின்றனர், அந்த மகா பாவிகள்.

   Delete
 10. ஓரின சேர்க்கையை இந்து மதம் ஆதரிக்கிறது ...!
  என்ற வாதம் இங்கு தேவை இல்லாதது ....
  இயற்கைக்கு ஒவ்வாத ஒன்று ..உயிர் கொல்லி ..நோயை
  பரப்பும் செயல் ...இதனை வெறுக்க வேண்டும் ...
  காலம் செல்ல செல்ல என்னெனவோ நடக்கிறது ..

  ReplyDelete
 11. ஓரினச் சேர்க்கை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையொட்டி வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. பாலுறவு வேட்கை பருவமெய்திய பாலூட்டி இனங்களுக்கு இயற்கை அளித்த கொடை என்பதில் ஐயமில்லை. அதை நிறைவேற்றுவதற்கும் இயற்கை வகுத்த வழியைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.

  கிராமத்தில் சுண்ணாம்புக் கற்கள் எனப்படுகிற ஓடைக் கற்களை ஆடுமேய்க்கும் பிள்ளைகள் கடித்துத் தின்பதைப் பார்த்திருக்கிறேன். பசிக்கு ஓடைக் கற்களைத் தின்பதில் என்ன தவறு என்று கேட்கக் கிளம்பிவிடுகிறார்கள். அது பசி தீர்ப்பதற்கன்று, அது செரிமான உறுப்புகளுக்கு நாளடைவில் தீங்கு பயப்பது. இயற்கைக்கு எதிரான தீண்டும் இன்பங்கள் உணர்வுப் புலன்களைத் தடித்து மரத்துப்போகும்படி செய்துவிடும். அத்தகைய நாட்டம் கண்டிக்கத்தக்கதும் தண்டிக்கத் தக்கதும்தான்.

  தனி மனித சுதந்திரம் என்றும் சொல்கிறார்கள். தனி மனித சுதந்திரம் என்னும் உயர்ந்த கருத்தாக்கம் பாலுறவுப் பிறழ்நிலைகளுக்குப் பொருத்திப் பார்க்காமல் இன்னும் தரமான குறிக்கோள்களுக்குப் பயன்படட்டும்.

  இயற்கைக்கு இனம் விருத்தியாவதுதான் நோக்கம். அந்தச் செயலில் விளையும் சுகம் ஓர் உபவிளைவு. பழவிதைகள் காடெங்கும் பரவ பழத்தசைகள் சுவையூறி ஈர்ப்பதைப் போன்றது அது. இன்பவெறி பிடித்தலைந்தவர்கள் என்று எதிர்வரும் தலைமுறை நம்மைத் தாழ்த்தி மதிப்பீடு செய்துவிடக்கூடாது, பாருங்கள் !

  கி.ரா.வின் கதை என்று நினைக்கிறேன். கணவனும் மனைவியும் நாளெல்லாம் உழவுப் பணி புரிந்துவிட்டுக் களைத்துப் படுக்கச் செல்வார்கள். உழைத்துக் களைத்து சர்வமும் அடங்கி உறக்கத்துக்கு ஏங்கும் அவர்களின் உடல் தாம்பத்யத்தில் ஈடுபட முயலும்போது அதில் எந்த வேட்கையும் இருக்காது. அது ஒரு சடங்குபோல் ஈர்ப்பில்லாமல் நிகழும். கோடானுகோடி சனங்களின் உண்மை நிலை இதுதான். எங்கோ மறைவிலும் மறைவாக பேதுற்ற மனநிலையில் திரியும்
  நிரல்குலைந்த மனத்தினரின் போக்குக்கு அங்கீகாரமும் வேண்டும் என்று கேட்டால் எப்படி ?

  நன்றி: கவிஞர் மகுடேசுவரன், முகநூலில் பதிந்தது.

  ReplyDelete
 12. //இந்த விஷயத்தில் மட்டும் எல்லாருமே தவறாமல் மிருகத்தை உதாரணம் காட்டுகிறார்கள். அடடா, எப்பேர்ப்பட்ட மனிதர்கள் நாம்\\


  //விலங்குகளில் ஒருபார் ஈர்ப்பு என்பது முதிரா நிலை.மண்புழுக்களில் சிலவகையில் ஆணும் பெண்ணும் ஒரே உடலில் முன்பின்னாக இருக்குமாம். அதை எப்படி இங்கு கொணர்ந்து பொருத்துகிறீர்கள் ? நம் பிள்ளைகளுக்கு இயற்கையான தகைமைகளை ஏற்படுத்தித் தருகின்றவற்றை மட்டும் நாம் உறுதிசெய்தால் போதும். பிறவெல்லாம் சிறிதினும் சிறிய சீழ்க்கட்டிகள். இயற்கை என்ற வார்த்தை போதாதென்றால் வேறு வார்த்தை போட்டுக்கொள்ளவும்.//

  //மெத்தப் படித்தவர்கள் ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்குத்தான் வரவேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் ? இது உடலுறவு சம்பந்தப்பட்டது மட்டுமில்லை மனம் சம்பந்தப்பட்டது என்றால் எதற்காக அவர்களுக்குள் உடலுறவுத் தொடர்புகள் ஏற்படவேண்டும் ? ஒரு ஆண் ஆணைத்தான் காமுறுவான் என்பதைத்தான் மனப்பிறழ்வு என்று உறுதிபடச் சொல்கிறேன். அறிவியல் என்பது சமூக சட்டங்களுக்குள் எவிடென்ஸ் என்ற அளவில்தான் உள்நுழைய வேண்டும். அறிவியல் அடிப்படையில் சட்டங்கள் எங்கே வரையறைக்கப்பட்டிருக்கின்றன ? மேலை நாட்டில் பகலில் மைனஸ் 40 டிகிரி குளிர்நிலவும்போது ஒரே சிற்றறைக்குள் பருவகாலம் முழுதும் அடைபட்டிருக்கும் அவர்கள் என்ன எழவையோ செய்துகொள்வார்கள், அதை அப்படியே கொண்டுவந்து இங்கே பொருத்தி, ஃபிட்டிங் சார்ஜும் கேட்கிறார்களே, அந்த அடிப்படையில்தான் எதிர்க்கிறேன்.//

  நன்றி: கவிஞர் மகுடேசுவரன், முகநூலிலிருந்து

  ReplyDelete
 13. கவியன்பன் அவர்களின் சான்றுகள் முகநூலில் படித்ததையும் சமர்பித்தது நல்ல பலம். சனத்தொகையில் பெரிய சனநாயக நாட்டில் வாழ்கிறோமே என்று சந்தோஷப்படுவதா இப்படிப்பட்டவர்களுக்கும் சனநாயகம் உதவிடுமோ என்று கவலை கொள்வதா

  ReplyDelete
 14. ஓரினச் சேர்க்கை வரத்துக்கு இது என்ன அமெரிக்கவா லண்டன்னா இது இந்தியா எதற்கு வாக்கு வாதம் ஒரே தீர்ப்புதான் மறுப்பான ஓன்று.ஆதரிப்பவர்கள் அப்படித்தான் அவனா நீ? அருமையான தலைப்பு காக்கா.

  ReplyDelete
 15. வை.கோ அவர்கள் கருத்து கூறியிருப்பதாவது: டெல்லி உயர்நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை எனும் அருவருக்கத்தக்க பண்பாட்டு விரோதச் செயலை அங்கீகரித்தும், இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவு செல்லுபடியாகாது என்றும் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, டிசம்பர் 11ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.மனித குலத்தின் மாண்பை காக்கவும், இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட புராதன நாகரிகம் தழைத்த மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் கருத்தில் கொண்டு, மேலை நாட்டு கலாச்சார சீரழிவுகள் நமது மக்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் அபாயத்தை ஆராய்ந்தும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  ஆனால், இந்திய தண்டணை சட்டத்தின் 377வது பிரிவை நீக்குவதற்கும் தயாராகிவிட்ட மத்திய அரசின் நிதி அமைச்சர் சிதம்பரம், நாம் என்ன 1860ம் ஆண்டு சட்டத்துக்குப் போக முடியுமா? என்று கேள்வியை கேட்டிருக்கிறார். அப்படியானால், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் எண்ணற்ற பிரிவுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் போது தான் ஏற்படுத்தப்பட்டவை. அந்த சட்டப் பிரிவுகளை எல்லாம் சிதம்பரம் நீக்கச் சொல்வாரா? நாட்டின் கோடான கோடி மக்களும், அறநெறியாளர்களும் ஓரினச் சேர்க்கையை கடுமையாக வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும். உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11ம் தேதி தந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முற்படுவது வெட்கக்கேடான இழி செயல் என கண்டனம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

  ReplyDelete
 16. இந்தக் கேடு கெட்டச் செயலை இஸ்லாம் எதிர்ப்பதற்கு முழுமுதற்காரணம் படைத்தவன் வெறுக்கின்றான்; படைத்தவன் இதனால் கோப்பப்பட்டு ஓர் ஊரையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு அழித்து விட்டான் எனறால் (எவ்வளவு கோபம்) அதனை இன்னும் - அந்த ஊரை நீங்கள் போய்ப் பர்ருங்கள் என்றும் குர் ஆனில் சுட்டிக் காட்டுகின்றான் என்றால், இன்னும் மனிதன் மிருகமாக வாழத் துடிப்பதை வரவேற்பதா? (வேடிக்கை: இந்தத் தற்பால் புணர்ச்சி விரும்பிகள், மிருகப் புணர்ச்சிக்கும் ஆயத்தமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பதும்) அல்லது மனிதன் மிருகத்தினும் கேவலமாய்ப் போய்க் கொண்டிருப்பதை இறைவனே சுட்டிக் காட்டி அச்சமூட்டி எச்சரிக்கை (அடிக்கடி சுனாமி, பூகம்பம்) விடுப்பதை ஏற்பதா? உலகில் ஷைத்தானின் ஆட்சியைக் கொண்டுவர (இல்லுமினாட்டிசம்) பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகிய துறைகளில் ஊடுருவி கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என்று வாழப் பழக்கி விட்டனர். ஆயினும், அல்லாஹ்வின் ஆட்சியை நடாத்திக் காட்டிய நபிகளார் முஹம்மத்(ஸல்)அவர்களும், அவர்களின் வழியில் கலிஃபாக்களும் செய்த அந்தப் பொற்காலத்தில் இப்படிப்பட்டக் கேடுகளும், அழிவுகளும் இல்லை; மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்; காரணம் அது அல்லாஹ்வின் ஆட்சியின் மாட்சி சொல்லும் சாட்சி! இப்பொழுது, டா|ஸ்மார்க் (மது), சிவப்பு விளக்கு (விபச்சாரம்) ஹோமொசெக்ஸ் (தற்பால் புணர்ச்சி) இவைகள் அல்லாஹ்வின் ஆட்சியில் இல்லவே இல்லை; அதனாற்றான் சவூதியில் கடும் தண்டனைக் கொடுக்கின்றார்கள்!

  ReplyDelete
 17. ஒரே ஒரு கேள்வி- பதில் என்ன? **************************************** முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள் ஒருபால் உறவைப் பெரிதும் ஆதரித்து எழுதியுள்ளதால் முஸ்லிம் நண்பர்கள் பலரும் அவரைக் காய்ச்சி எடுக்கிறார்கள். மார்க்ஸ் அவர்கள் மீது மட்டும் குறை சொல்வது சரியல்ல. அவரைப் போன்ற முற்போக்கு மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒருபால் உறவு, மது போன்றவற்றை ஆதரிப்பவர்கள்தாம். (ஆமினா வதூத் பிரச்னையில் இதைச் சுட்டிக்காட்டப்போய்த்தான் பேராசிரியர் மார்க்ஸ் என்னை நட்பு வட்டத்திலிருந்து நீக்கிவிட்டார்) இப்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? ஒருபால் உறவு, மது போன்ற ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் பேராசிரியர் மார்க்ஸ் போன்றவர்களைக் கண்டிக்க வேண்டுமா? அல்லது அவர்களின் மனித உரிமைப் பணிகளையும் முஸ்லிம் ஆதரவுப் போக்கையும் கவனதில் கொண்டு அவர்களைக் கண்டுக்காமல் விட்டுவிட வேண்டுமா? இந்தக் கேள்விக்கு சமுதாயத்தின் பதில் என்ன? -சிராஜுல்ஹஸன்

  முகநூல் பதிவில் கண்டது

  ReplyDelete
 18. நாளும் தெரிந்த நல்கவி கூருவது ////// இப்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? ஒருபால் உறவு, மது போன்ற ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் பேராசிரியர் மார்க்ஸ் போன்றவர்களைக் கண்டிக்க வேண்டுமா?////// ஆம் நிச்சயம் கண்டிக்க வேண்டும் காரணம் தியதை கண்டால் சொல்லால்,செயலா,அல்லது மனதாலாவது தடுத்திடல் வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் கடமையல்லவா சத்தியத்தை சொல்ல தயக்கம் கூடாது

  ReplyDelete
 19. முஸ்லிம் சமூக பிரச்சனைகளில் முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம்களும் பின்வாங்கிய விஷயத்தில் மார்க்ஸ் சார் தைரியமாக தலையிடுகிறார் என்றால் இஸ்லாம் மீது உள்ள காதலை விட மனித உரிமை மீதான காதல் அதிகம்.

  நாம் ஒருவரை திருத்துகிறோம் என்றால், அவரின் எண்ணங்களையும் பின்னணியையும் நினைவில் கொள்வது சுன்னாஹ்.

  ஓரின சேர்க்கை விடயத்தில் முதலில் ஆதரித்த மார்க்ஸ் சார் நம் சகோதரர்கள் இட்ட கமெண்ட்ஸ் பார்த்து விட்டு, முதல் நாள் கோவப்பட்ட மார்க்ஸ் சார் , இரண்டாம் நாள் "ஓரினப்
  புணர்ச்சியைப் பரிந்துரைப்பதோ, அதுவே சிறந்தது என்றோ நாங்கள் சொல்லவில்லை. அப்படியானவர்களுக்கும் சமூகத்தில் இடமுண்டு. வயதுவந்த இருவர் மனமொப்பி இத்தகைய உறவில் இருந்தால் அவர்களைக் குற்றவாளிகளாக்கக் கூடாது என்பது மட்டுமே. மரண தண்டனை கூடாது எனச் சொல்வதைப்போலத்தான் இதையும் சொல்கிறோம்" என்று கூறினார்.

  இந்த முறை, அவர் வைத்த ஒவ்வொரு கருத்துக்கும் அழகிய முறையில் நமது சகோதரர்கள் பதில் வைத்துள்ளார்கள். மனங்களை மாற்றுபவன் இறைவனே.

  நம்முடைய கருத்து சரியாக இருந்தும், நியமாக இருந்தும் தோற்பதற்கு இரண்டு காரணம்:
  1) சொல்லும் முறையில் கோளாறு.
  2) சொல்வதற்கேற்ப நாம் இல்லை. (என்னை பார்க்காதே இஸ்லாத்தை பார் என்ற முட்டாள்தம்

  -முகநூலில் இருந்தது

  ReplyDelete
 20. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. ஓரினச் சேர்க்கை குற்றம். மனித தர்மத்துக்கு செய்யும் குற்றம். மனித இனத்துக்கு செய்யும் குற்றம். யாராக இருந்தாலும் அதனை ஆதரிப்பவர்கள் மனித துரோகிகள்.

  ReplyDelete
 21. sஆனநாயக நாட்டில்1. சூதாடிகள் சூதாட்ட கிளப் அனுமதி கேட்கிறார்கள் .விலை மாதர்கள் தனியாக இடமும் அனுமதியும் கேட்கிறார்கள் 3.இப்ப இவர்கள் .போறபோக்க பாத்தா தான்தோன்றித்தனமாய் சுய எண்ணம்போல் வாழவேண்டும் என்று சமுதாயத்தை சீரழிக்கும் முயர்ச்சயாய் கண்ட விஷயத்திர்க்கெல்லாம் அனுமதி கோருகிறார்கள்

  ReplyDelete
 22. ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற தேச தலைவர்களை (?) விட்டு விட்டீர்களே ...

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers