.

Pages

Friday, December 6, 2013

அய்மான் நடத்திய பூங்காச் சந்திப்பில் எங்கள் கவிஞர் பாடிய கவிதை ! [ புகைப்படங்கள் ]


அல்லாஹ்வை வணங்கிடவே சொல்லும் அய்மான்
......அதற்காக மார்க்கவிழா நடத்தும் அய்மான்
எல்லாரும் இணங்கிடவே  சொல்லும் அய்மான்
........இதயங்கள் ஒன்றுபடச் செய்யும் அய்மான்
இல்லார்க்கு வழங்கிடவே சொல்லும் அய்மான்
........ஈந்துவக்கும் ஜக்காத்தை வழங்கும் அய்மான்
கல்லூரி திருச்சியிலே அமைத்த அய்மான்
......கல்லாமை இல்லாமை ஆக்கும் அய்மான்

திருமறையின் மொழிபெயர்ப்பைத் தந்த அய்மான்
......திருவையென்னும் ஊரிலுள்ள அப்துற் றஹ்மான்
தருமுரைகள் ஒலிப்பேழைத்  தட்டில் கூறும்
....தரணியெங்கும் செவிப்பறையில் குர்ஆன் சேரும்
ஒருவரையும் நிந்திக்காப் பேச்சால் வெல்லும்
....ஒன்றுபட்டச் சமுதாயம் காணச் சொல்லும்
கருவறுக்கும் துர்குணங்கள் காணாச் சங்கம்
......கற்றவரும் மற்றவரும்  இணையும் அங்கம்!

ஒன்றுபடுவோம் என்றுதானே கூவும் கனிவு
........ஒற்றைவரிக் கோரிக்கை வைத்தப் பணிவு
நன்றுபெறுவோம் என்பதையும் சொல்லும் எண்ணம்
......நம்மவர்கள் வாக்குகளைச் சிதறா வண்ணம்
வென்றிடுவோம் அரசியலில் இத்னால் என்று
........வேண்டுகோளை முன்வைத்த அய்மான் அன்று
சென்றரமலான் இஃப்தாரில் தீர்ப்பைக் கண்டு
.....சென்னைவரை எட்டியதால் மாற்றம் உண்டு!

படியாதார் வேலையின்\றித் தவித்த நொந்தப்
......பணியாளர், படித்தோர்க்கும்  வேலை தந்து
முடிவாகக் கண்ணீரைத் துடைத்த சங்கம்
....முதலாக அமைந்திட்ட முஸ்லிம் அங்கம்
நெடியதொரு பயணத்தில் நிழலின் வாசம்
.....நிகழ்ந்துவிடும் விபத்துக்கும் உதவும் நேசம்
விடியலாக  வெளிச்சத்தை ஆங்குப் பார்த்தேன்
.....வென்றிடுக என்றுமனம் கூறும் வாழ்த்தே!

"கவியன்பன்"
அபுல் கலாம்



22 comments:

  1. இந்தியாவில் நீதி அநீதிக்கு கட்டுப்பட்டது. அநீதி அயோக்கியர்களுக்கு கட்டுப்பட்டது. அந்த அயோக்கியர்களின் கைகளினால்தான் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

    சொடுக்கி படியுங்கள்:


    மதம் மாற்றப்பட்ட மசூதி! அயோத்தி ராமன் அழுகிறான்.

    ReplyDelete
  2. கவிதை அருமை... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete
  3. சாக்கு ஓட்டம் கேள்வி பட்டுள்ளேன் பார்த்துள்ளேன் இது என்ன ஓட்டம் கவியன்பரே கவினயமாய் பதிலுண்டோ

    ReplyDelete
    Replies
    1. சாக்குக் கிடைக்காச்
      சாக்குப் போக்குச்
      சொல்லியதால்
      மெல்லியத் துணிகளாலானத்
      தலையணை உறைகளாம்!

      Delete
    2. வருகைக்கும் வினாவுக்கும் நன்றி.

      Delete
  4. எல்லா சங்கமும் நன்றாக வளரணும்.. தமிழ்ச்சங்கங்களும் வளரணும்

    ReplyDelete
    Replies
    1. ஆப்பு வைத்து விட்டார்கள் அரசாங்கம்! ஆம். எந்தச் சங்கமும் எந்த விழாவும் இந்த நாட்டில் நடத்தவியலாது என்பதாற்றான், சமீபகாலமாக இப்படிப் பூங்காக்களில் சந்திப்பென்ற பெயரில் நடத்துகின்றோம். வருகைக்கு நன்றி; தேன்குரல் பாடகரே!

      Delete

  5. அய்மான்சங் கம்சிறப்புகள் அழகாய் தந்தீர்
    .....அதனையறி யநாங்கள்வி பரம்பு ரிந்தோம்
    செய்தசெயல் எல்லாமே சிறப்பு என்கின்
    .....சீர்மைபெறும் சிறந்தநல் சங்கம் என்போம்
    பொய்மைநிரைந் தஉலகில்இப் படியும் சங்கம்
    .....புகழவார்த்தைத் தேடித்தொடுத்த மாலை இங்கே
    மெய்மறந்து படித்தேன்உந் தன்நல் பாடல்
    .....மேன்மைதொட ரதினம்நான் வாழ்த்தும் பாவே !

    ReplyDelete
    Replies
    1. என் சீரான அடிகளைப் பின்பற்றி எண்சீர்க் கழிநெடிலடி விருத்தம் வனைந்த கரங்கட்கு அன்பு முத்தங்கள்!

      Delete
  6. சிறப்பான கவி. அழகிய புகைப்படங்கள். கவித்தீபத்தின் செழிப்பான தோற்றம் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி. ஜஸாக்கல்லாஹ் கைரன்.

    இன்று துபைக்கு வந்திருந்தேன்; ஒரு நேர்முகத் தேர்வின் அழைப்பினை ஏற்றும், மற்றும் சங்கமம் தொலைக்காட்சியில் என் கவிதை (பாரதியார் விழாவுக்கான) படபிடிப்பில் கலந்து கொள்ளவும் வந்திருந்தேன். நேரமாகி விட்டதால் உங்களைச் சந்திக்கவில்லை.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ....
    அதிரைக்கு ...புகழ் பெற்ற கவி ..கிடைத்த மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. அன்பின் அதிரைத் தமிழூற்றே! அஸ்ஸலாமு அலைக்கும்.

      இப்போட்டியை நடத்திக் குழந்தைகளை நெறிப்படுத்துபவர் உங்கள் உறவினர் , ஷாஹுல்ஹமித் (அய்மான் சங்கத்தலைவரும்) அவர்களே தான் என்பதை நினைவு படுத்துங்கள்; அதிரையின் புகழை அவர்களும் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் தன்னலமற்ற சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களாக என்பதையும் ஈண்டுச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

      அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்:

      இந்தக் கவிதை வானில் தமியேன் சிறகடித்துப் பறந்த காலமெல்லாம், சிறப்பான வரவேற்பும், அரவணைப்பும், கவுரவமும், அரசியல், சமுதாய , வணிகம் மற்றும் உலகளாவிய இலக்கிய விற்பன்னர்கள் ஆகியோரின் தொடர்புகளும் நெருக்கங்களும் அழிக்க முடியாத அன்பென்னும் நட்பு வட்டங்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. உண்மை; வெறும் புகழ்ச்சியல்ல. என்னை அழைத்தும், அதிரையின் புகழை அகிலமெல்லாம் அறியச் செய்யும் முயற்சிகளில் பலர் அயல்நாட்டிற்கு அழைத்தும் என்னால்- என் பணிநெருக்கத்தால் அவ்விழாக்களில்- அயல்நாட்டிற்குச் சென்று வர இயலாமையும் உண்டு என்பதை எண்ணி வருந்தவும் செய்கின்றேன். அப்படிப்பட்ட மூன்று அழைப்புகளை- வாய்ப்புகளைத் தமியேன் அண்மையில் தவற விட்டேன் என்பதை விட யான் தவிர்க்கும் வண்ணம் என் பணி என்னை நெருக்கி விட்டது.

      1) என் ஆசான் காப்பியக்கோ அவர்கள் அழைத்த கொழும்புத் தமிழ்ச் சங்கப் பாராட்டு விழா

      2) இலங்கைக் கவிஞரும் என் ஆருயிர் நண்பருமான - பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் அவர்களின் “பாம்புகள் குளிக்கும் நதி” நூல் வெளியீட்டு விழாவில் பிரதம் அதிதியாகவும், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நேர்காணல் நிகழ்வுக்கும் அழைப்பு

      3) என் தங்கத்தமிழைத் தன்னுடைய தேன்குரலால் அகிலமெலாம் பரவச் செய்த ஆற்றல்மிகு அன்புத்தங்கை ஷைஃபா மலிக் (இலண்டன் வானொலி) அவர்கள் தற்பொழுது அவர்களின் தாயகமான கொழும்பில் அவர்கள் த்லைமையில் நடக்கும் விழாவுக்கும் என்னைக் கவுரவப்படுத்த அழைப்பு

      இப்படி இன்னும் ஏராளமாக அல்லாஹ் ஒருவனால் மட்டுமே என்பால் கொண்ட அன்பால் தரும் கம்பீரமும் கவுரவமும் யான் பிறந்த மண்ணின் பெருமைக்குச் சமர்ப்பிக்கும் வண்ணம் ஏற்றும் செல்ல இயலாமையின் கொடுமையை எண்ணி வருந்தினாலும் , இத்தகவலை ஈண்டுப் பதிவதன் நோக்கம்; என்னைப் போல் இன்னும் கவிஞர்களும் அதிரையில் பலர் உளர்; அவர்களை இன்னும் என்னைப் பின்பற்றி வர வேண்டும் என்ற “ஊக்கம்” மட்டுமே நோக்கம். இஃது என் உளத்தூய்மையின் வெளிப்பாடு; இதில் எவரும் தவறு கண்டால் அவரின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.

      புரிதலில் குறைபாடுடையோரின் கண்ணோட்டம் பற்றி யான் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை நேற்று மகாகவி பாரதியாரின் விழாவில் (துபைச் சங்கமம் தொலைக்காட்சி நிகழ்வில்- அதன் படமும் பாடலும் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் பதிவாகும்) கற்றுக் கொண்டேன்; அதாவது: கவிஞன் தன்னைத் தாழ்த்திக்கொள்பவனல்லன்; வறுமையில் வாடியபோதும் அந்த மகாகவிஞன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் உயர்த்தியே பேசியிருக்கின்றான் என்ற அந்தக் கருத்துகள் என்னை ஈர்த்தன. எனவே, யானும், இன்னும் கவிதைகள் எழுதும் எவரும் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும் வேண்டா; யாருக்கும் தலைவணங்கவும் வேண்டா.

      நீங்கள் எழுதிய வாழ்த்துரையின் பயனாக யான் மேற்காணும் விளக்கங்கள் எழுதியுள்ளேன்.

      உங்களின் உளம்போந்த வாழ்த்தினுக்கு என் உளம்நிறைவான வாழ்த்துகள்.

      Delete
  9. கவிதை அருமை... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மற்றுமோர் இனிய நற்செய்தி:

      நேற்று துபைச் சங்கமம் தொலைக்காட்சியில் என்னுடன் கவிதை பாடிய் மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் என்பவர்கள் (அவர்கள் அரசியல், சினிமா, வணிகத்துறைகளில் மிகுந்த நெருக்கம் உடையவர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டார்கள்) என்னிடம் இரண்டு கோரிக்கைகள் வைத்தார்கள்.

      1) என் கவிதை நூலை அவர்களே முன்வந்து அவர்களின் பெஒருட்செலவில் வெளியிடுவது

      2) என்னை இரு திரைப்படங்கட்குப் பாடல்கள் எழுத வேண்டும் என்பது.

      அப்பொழுது அவர்கள் வைத்த சோதனையில் யான் வென்று விட்டேன் (யான் கற்ற மரபே அதற்குக் காரணம்; மரபின்றி வண்ணப்பாடல் வனையவே இயலாது என்பேன்)

      என் கவிதை நூலின் அணிந்துரைக்கு எடுத்துச் சென்ற என் ஆசான் காப்பியக்கோ அவர்களிடமிருந்து எனக்கு இன்னும் மறுமொழி கிட்டவிலை என்றேன்; அதற்கு அன்புச் சகோதரர்- மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சொன்னார்கள்: கவிஞர் மு.மேததாவிடம் அணிந்துரையை வாங்கித் தருகின்றேன் என்றார்கள்.

      ஏற்கனவே,
      கோவை தகிதா பதிப்பகம்
      சென்னை டிஸ்கவரி புக் பேலஸ்
      சிங்கப்பூர் புத்தக வெளியீட்டாளர்ப் பதிப்பகம்
      சென்னை மணிமேகலைப் பிரசுரம்
      அதிரைநிருபர் பதிப்பகம்

      ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றில் என் கவிதை நூல் வெளியிடலாம் என்றும் அதற்கான அணிந்துரை தான் இன்னும் கிட்டவில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்,

      1) செல்வைத் தானே ஏற்பதாகவும்
      2) அணிந்துரையையும் புகழ்பெற்ற கவிஞர் மு.மேத்தா அவர்களிடமே பெற்றுத் தருவதாகவும்

      வாக்களித்த அந்த நல்லுள்ளம் , இந்தக் கவிதை என்னும் ஈர்ப்பு சக்தியின் வெளிப்பாடன்றோ?

      அல்ஹம்துலில்லாஹ்
      எல்லாப் புகழும் இறைவனுக்கே!

      --

      Delete
  10. போட்டி ஏற்பாட்டளார் - போட்டியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்பான வாழ்த்துரைக்கும் பாராட்டுகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்;ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

      மேலே அதிரைத் தமிழூற்றுக்கு எழுதிய விளக்கத்தின்படியே, இந்தக் கவிதை வானில் உங்களின் பேருதவியால் சிறகடித்துப் பறக்கும் என்னை - என் கவிதையின் இரசிகராகச் சுமார் ஏழு ஆண்டுகள் (முகம் காணாமலேயே நட்புப் பாராட்டி வரும் ஓர் உயர்பதவி வகிக்கும் “தணிக்கையாளர்” அவர்களிடம் நேரில் சென்று என் சொந்த வாழ்க்கைப் பிரச்சினையை முன்னிட்டு ஒரு நேர்காணலுக்காகச் சென்று அவர்களின் ஆலோசனைகள்- வழிகாட்டுதலைப் பெற்று விட்டு, அப்படியே துபைச் சங்கமம் தொலைக்காட்சி நடாத்திய மகாகவி பாரதியாரின் விழாவில் என் கவிதையைப் படிக்குமாறும் அவ்விழாவின் பிரதம அதிதி -சிறப்பு விருந்தினர் அவர்களை என் கரங்களால் பொன்னாடைப் போர்த்த வேண்டியும், எங்களை ஏற்றி விட்ட ஏணியான அத்தொலைக்காட்சியின் இயக்குநர் கலையன்பன் ரஃபீக் அவர்களால் அன்புடன் தரப்பட்ட அழைப்பை ஏற்று அவ்விழா இறுதி வரை இருந்து விட்டு அபுதபி வருவதற்குத் தாமதமாகி விட்டதால் பின்னூட்டங்கட்கு நேற்றே மறுமொழி இட முடியாமற்போனது.

      Delete
    2. நிற்க. ஓர் இனிய நற்செய்தி:


      என்னைப் பின்பற்றி என்னை ஆசானாக மன்ப்பூர்வமாக ஏற்கின்ற உறுதியுடன் இருப்பவர்களை யான் என்றும் கைவிடாமல் உச்சியில் ஏற்றி வைத்து அழகு பார்ப்பேன் என்பதை நீங்கள் நன்றாகவே என்னைப் பற்றி அறிந்தபடியே, என் வாக்கை நிறைவேற்றி வருகின்றேன்:

      1) ஞானகுரு நபிதாஸ் அவர்களை என்னைப் பின்பற்றி மரபுக் கவிஞராகவும் பாவலராக்வும் மாற்றி விட்டேன்.; அவர்களும் மனப்பூர்வமாகவும் பொதுத் தளத்திலும் யான் மரபுக்கு ஆசான் என்றும், அவர்கள் என்னிடம் தான் பாடம் கற்கின்றார் என்பதையும் வெளிப்படையாகச் செருக்கின்றி ஒத்துக் கொண்டதும் அவர்களின் உயர்வுக்குக் காரணீயமாகும். அல்ஹம்துலில்லாஹ்.

      2) என் பாடலைத் தானாகவே முன்வந்தும், மிகவும் பணிவன்புடனும், மரியாதையுடனும், “ காக்கா உங்கள் பாடலை நான் பாடிப் பார்த்தேன்; நன்றாக இருந்தால் அனுமதி தாருங்கள்; உங்களின் பாடல்களை நானே பாடித் தருகின்றேன்” என்று ஆர்வமுடனும் ஒரு மாணவனுக்கே உரிய அடக்கத்துடனும் கேட்டுக் கொண்ட அன்புத்தம்பி அருமைப்பாடகர் ஜ்ஃபருல்லாஹ் அவர்கள் எம்முடன் இணைந்து இதுவரை ஆறு வெளியீடுகள் (அவரின் கடின உழைப்பால் காட்சி அமைப்புடன்) செய்து விட்டார்கள்

      ஐந்தாம் வெளியீடு (வெற்றிதரும் பாதையில் கற்றுதரும் பாடல்) அவர்கள் பாடிப் பதிவேற்றும் வேளையில் அவர்களின் மற்றப் பாடல்களை என் கவிதை வெளியீட்டைக் கேட்ட அபுதபி காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் (லால்பேட்டை அப்துற்றஹமான் - இந்தப் படங்களில் வெள்ளை நிறச் சட்டையில் குழந்தைகளை நெறிபடுத்தும் பணியில் இருப்பவர்) அவர்கள் என்னிடம் வேண்டியதற்கிணங்கி, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28ஆம் திகதி திருச்சி மாநகரில் நடைபெற இருக்கும் இளம்பிறை மாநாட்டிற்கு இளைஞர் எழுச்சிப் பாடல் எழுதிக் கேட்டார்கள்; அதனை எழுதிக் கொடுத்து நம் பாடகர் ஜஃபருல்லாஹ் அவர்களின் அழகிய குரலில் ஒலிப்பதிவும் அவர்களின் கடின உழைப்பில் காட்சி அமைப்புகளும் கோத்து மாநாட்டு அமைப்பாளர்க்கு அனுப்பபட உள்ளது. இன்ஷா அல்லாஹ் நீங்கள் அந்த மாநாட்டை ஒலி.ஒளி பதிவு செய்து உங்கள் தளத்தில் வெளியிடலாம், இதன் மூலம் அதிரையின் புகழைப் பரப்ப என்னுடன் வருப்வார்களை யான் உயர்த்தியே காட்டுவேன் என்பதும் நிதர்சனமாகும்.

      Delete
  11. பதிவுக்கு நன்றி.

    மச்சான் நீங்க ரொம்பதான் அசத்திட்டீங்க.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. அசந்து விடாமல் அசத்திடவே வேண்டும்; அதற்கு மச்சானின் துஆவும் வேண்டும்.

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      Delete
    2. மச்சான், உங்களுடைய அசத்தளுக்கு மற்றவர்கள் அசந்துவிடுவார்களே தவிர, நீங்கள் அசர மாட்டீர்கள்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers