.

Pages

Thursday, January 16, 2014

[ 18 ] அறிவுத்தேன் [ வழிபாடு வணக்கமாகாது ]

உருவ வணக்கம்
அதுவே வழிபாடு !
அரூப வணக்கம்
அதுதானே வணக்கம் !

வணக்கமும் வழிபாடும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் நேர் எதிரிடைக் கருத்துக்கொண்டது என்பதை கடந்தகால தொடர்களின் முடிவாகத் தெரிந்து இருக்கலாம்.

வணக்கத்தில் ஓர்மையான ஒருமை நிகழ்வு இருக்கும். உச்சமான பரிபூரண அர்ப்பணிபு இழத்தல் என்ற ஒருமை இருப்பும் இருக்கும்.

வழிபாட்டில் அவ்வாறல்லாத பயபக்தியான இருமை உணர்வுகள் நிகழ்வு இருக்கும். குறைந்தது இரண்டு இருப்புகள் இருக்கும்.

உருவ வணக்கத்தில் உச்சமான இழத்தல் ஏற்பட வாய்ப்பின்மையால் அதனை வழிபாடு என்று சொல்வதே பொருத்தம். எனவே உருவ வணக்கம் என்று சொன்னால் அது வழிபாடு என்பதைத்தான் உணர்த்தும்.

அரூப வணக்கத்தில் உச்சமான இழத்தல் என்ற பரிபூரண அர்ப்பணிப்பு ஏற்பட்டு ஓர்மையான ஒருமை நிகழும். எனவே அரூப வணக்கம், வணக்கம் என்ற கருத்தின் பூரணம் கொண்டது என்று சொன்னால் மிகையாகாது.

இத்தொடரின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட மூன்று தத்துவங்களை இங்கு நினைவு கூறுவோம்.

துவைதம்: 
இதில் இரண்டு உள்ளமைகள் உள்ளன. இறைவன் ஒர் உள்ளமை. மற்றொன்று வேறு ஓர் உள்ளமை. இந்த மற்ற உள்ளமையிலிருந்து தனக்கு முற்றிலும் மாற்றமான படைப்பினங்கள் படைக்கப்பட்டுள்ளன என்ற தத்துவம் உடையது.

விசிஷ்டா துவைதம்: 
இதிலும் இரண்டு உள்ளமைகள் உள்ளன.  இறைவன் ஒர் உள்ளமை.  மற்ற உள்ளமையிளிருந்து தனக்கு முற்றிலும் மாற்றமான படைப்பினங்கள் படைக்கப்பட்டுள்ளன. மற்றும் படைப்பினத்தில் சில நல்லொழுக்கமுடன் வாழ்ந்து வருபவர்களிடம் இறைவன் வாசம்புரிகிறான் என்ற தத்துவத்தில் உள்ளது.

இவ்விரண்டு கொள்கைப்படி இறைவணக்கம் என்பது இறைவழிபாடு என்ற அமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

அத்வைதம் இதில் இரண்டு உள்ளமைகள் இல்லை. ஒரே உள்ளமை அது தன் அறிவிலே கணக்கற்ற  படைப்புகளை படைத்துள்ளது. இருந்தபோதிலும் அவ்வறிவு தான் தானாகவே இருக்கின்றது. படைப்புகள் பின்பு அதனளவில் மீண்டுவிடுகிறது. இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இக்கொள்கைப்படி இறைவணக்கம் உச்சமான இருமை இழந்தல் என்ற பரிபூரண அர்ப்பணிப்பு நிகழும் வணக்கம் என்ற அமைப்புக்கு உட்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு தத்துவமும் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. மூன்றும் வேவ்வேறு தத்துவம் உடைய மத,மார்கமாக இருந்தும், அவைகளில் இவர்களின் அறியாமையாலோ அல்லது அறிவு திருத்தத்தாலுமோ காலப்போக்கில் ஒவ்வொன்றிலும் மற்ற கொள்கைகள் புகுந்து அதில் பலப்பலப் பிரிவுகள் உண்டாகிவிட்டது.

வழிபாடு, வணக்கம் இதன் வேறுபாடுகளைக் கொண்டு  உருவ வணக்கம் என்பது வழிபாடு என்றும், அரூப வணக்கம் என்பது வணக்கம் என்றும், வழிபாடு வணக்கமாகாது என்பதையும் அறியலாம்.
(தொடரும்)
நபிதாஸ்

இத்தொடரில் புரிதல் சிரமமாக இருக்கும் பட்சத்தில் வாசகரிடமிருந்து விளக்கம் வேண்டின் கேள்விகள் கேட்கலாம். எமது அறிவுக்கு தெரிந்தவரை விளக்கங்கள் எழுதப்படும். ஏனென்றால் தொடர் எழுதியது வாசிப்போர்கள் விளங்கிக்கொள்வதற்கே.

அறிவுத்தேனின் வணக்கம் என்றப் பகுதி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறை நாட்டத்துடன் அறிவுத்தேன் தொடர் இதுபோன்ற வெவ்வேறு சிறு தலைப்புகளில் தொடரும்...

18 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    உருவ வழிபாடு வணக்கமாகாது.

    இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று நான் ஒன்னாங்க கிளாஸ் படிக்கும்போது சொல்லிக்கொடுத்தது இப்போது நன்றாக ஞாபகம் வருது.

    அப்படிப் பாருக்கும்போது நம் உடம்புக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்றுதானே அர்த்தம்.

    இப்பொது உருவ வழிபாட்டில் உள்ளவர்களை எடுத்துகொண்டால், அவர்கள் உடம்பிலும் இறைவன் இருக்கின்றான் என்றுதானே அர்த்தம்.

    இப்போது அவர்கள் உருவ வழிபாட்டிற்கு செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். எந்த உருவத்தை வணங்க அவர்கள் சென்றார்களோ அந்த உருவத்துக்கு முன்பு இப்போது நிற்கின்றார்கள்.

    (இந்த நிகழ்வை சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள்)

    அவருக்கு எதிர்புறம் உருவம் இருக்கின்றது, உருவத்துக்கு எதிர்புறம் இவர் இருக்கின்றார்.

    நாம் முன்பு சொன்னதுபோல் இவர் உடம்பிலும் இறைவன் இருக்கின்றான்.

    அந்த உருவத்தை பார்த்து இவர்(இறைவன்) கும்பிட்டாரா? அல்லது இவரை(இறைவனை) பார்த்து உருவம் கும்பிட்டதா?

    யாரை யார் கும்பிட்டது (வணங்கியது)

    குறிப்பு:- இது யாரையும் சாடியோ, கிண்டல் செய்தோ கேட்டது அல்ல, சரியான விளக்கம் வேண்டியே கேட்கப்பட்டது.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies

    1. நல்லக் கேள்வி.

      //உருவ வழிபாடு வணக்கமாகாது.

      இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று நான் ஒன்னாங்க கிளாஸ் படிக்கும்போது சொல்லிக்கொடுத்தது இப்போது நன்றாக ஞாபகம் வருது.

      அப்படிப் பாருக்கும்போது நம் உடம்புக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்றுதானே அர்த்தம்.//

      எங்கும் நிறைந்தவன். ஏகன். என்று நாம் அடிக்கடிச் சொல்லும் கருத்தைக் கொண்ட "தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" என்று, இறைவன் என்ன என்பதை விளங்கிக் கொள்ள சொல்லும் வார்த்தைகள்.

      அதன்படி நம் உடம்பிற்குள் இறைவன் இருக்கின்றான் என்றுக் கூறுவது மற்ற இடங்களில் இறைவன் இல்லை என்றக் கருத்தை கொண்டதாகவும் உள்ளது. எனவே அவ்வாறு கூறுதல் எங்கும் நிறைந்தவன் என்ற இலக்கனத்திற்குட்பட்டு சரியன்று. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றால் "அவன்" இல்லாத இடமே இல்லை என்ற பொருளைத்தான் காணவேண்டும். எனவே தன்னிலே உள்ளான் என்றால் தன்னை நீங்கி பிறவற்றில் இல்லை என்றப் பொருள்படி இஸ்லாமிய மார்க்கத்தில் இணை வைத்தல் ஏற்பட்டுப்போய்விடும். இவ்விசயத்தில் மிக கவனமாக இருத்தல் வேண்டும், எழுத வேண்டும். அதனால் கேள்வி கேட்டது தவறில்லை. விளங்கத்தான் கேட்கிறோம்.

      மேலும் //கும்பிட்டது (வணங்கியது)// என்றும் எழுதியுள்ளீர்கள்.
      கும்பிடுதல் என்பது வழிபாடு முறை. தன் பணிவைக் காட்டும் ஒரு செயல். கும்பிடுதல் வணக்கம் என்றதன் கருத்துக்குட்பட்டது அல்ல. அது சம்பந்தமான விளக்கம் கட்டுரையில் உள்ளது. வேண்டின் விளக்கலாம்.

      மேலும் இது போன்று ஒரு கேள்வி முன்பு [ 7 ] அறிவுத்தேன் [ ஒன்றேயது பலவானது ] என்ற தலைப்பில் எழுதப்பட்டதில் திரு R. புரட்சிமணி அவர்கள் என்பவரால் கேட்கப்பட்டது. அதனை இங்கு காணலாம்.
      //
      R.PuratchimaniOctober 30, 2013 at 10:24 PM
      ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
      உருவான செந்தமிழில் மூன்றானவன்,
      நன்றான வேதத்தில் நான்கானவன்,
      நமச்சிவாய என ஐந்தானவன்,

      இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
      இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
      சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
      தித்திக்கும் நவரச வித்தானவன்!

      பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்!
      பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்!
      முற்றாதவன்! மூல முதலானவன்!
      முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்!

      ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்!
      அவை ஒன்று தான் ஒன்று சொன்னானவன்!
      தான் பாதி உமை பாதி கொண்டானவன்!
      சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்!

      காற்றானவன், ஒளியானவன்! நீரானவன் நெருப்பானவன்!
      நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
      ஊற்றாகி நின்றானவன்! அன்பின் ஒளியாகி நின்றானவன்!

      படம்: திருவிளையாடல்

      Reply

      R.PuratchimaniOctober 30, 2013 at 10:29 PM
      நல்ல பதிவு .....
      அரூபத்திலிருந்தே கல்லும் உருவானது....அப்படி இருக்கும்பொழுது கல்லை வணங்குதலும் அவனை (அரூபத்தை) வணங்குவதாகத்தானே அர்த்தம்?

      Reply
      Replies

      நபி தாஸ்October 31, 2013 at 3:31 PM
      திரு புரட்சிமணி அவர்கள் வருகைக்கு நன்றி !

      அரூபத்திலிருந்தே கல்லும் உருவானது என்பதில் கல்லைத்தவிர ஏனவைகள் உள்ளது என்பதும் பொருள் உள்ளதே !

      எனவே, அரூபத்தின் மூலம் கல்லானாலும், அரூபத்திலிருந்து கல்லும் மட்டுமன்றி எண்ணிலடங்கா அறிந்தவைகள், அறியாதவைகள் படைப்பினங்கள் இருக்கின்றனவே !

      கல்லை மட்டும் வணங்கினால் எவ்வாறு அனைத்தையும் வணங்கியதாக ஆகும். கல்லை மட்டும் வணங்கும் போது அக்கல்லுக்குரிய ஆற்றல்தான் கிடைக்கும். சர்வத்தையும் வணகும் போது சர்வ வல்லமையும் கிடைக்குமே ! எனவே ஏன் பூரணத்தை விட்டுவிட்டு பூரணத்தின் ஒரு சிறு பகுதியை வணங்க வேண்டும் ?

      மனிதனின் அங்கங்கள் ஒவ்வொன்றும் மனிதனாகா ! கையும் மனிதனில் உள்ளது. எனவே கையை மட்டும் எப்படி மனிதன் என்று கூறுவது ?

      மேலும் திருவிளையாடல் பாடலுக்கும் இதுவே பதில்.

      ஒன்றானவன் என்று சொல்லப்பட்டுள்ளது. அவன் எப்படி ஒன்றாகி இருக்கின்றான் என்பதை எழுதிய ஆசிரயர் விளக்குகிறார். அதற்காக ஒவ்வொன்றையும் அவன் எனக்கொளல் சரியாகுமோ ?

      நன்றி !
      //
      அன்பரே ! மேலும் விளக்கம் வேண்டின் வினவவும்.

      நன்றி.

      Delete
  2. வழிபாடு குறித்து விளக்கிய விதம் அருமை !

    ReplyDelete
    Replies
    1. வழிபாடு விளக்கம் விளங்கினால் வணக்கமும் தெளிவாகும். ஆக வழிபாடு வேறு வணக்கம் வேறு என்பது தெரிய வேண்டிய அவசியம். தெளிவாக விளங்கி வணங்கும் போது பலன் அவன் நாட்டத்தால் நிறையும்.

      எத்தனையோ வணக்கங்கள் வணங்கியபின் உடனே முகத்திலே தீக்கி எறியப்படுமாம் என்ற அறிவுகளை இங்கு நாம் நினைவுகூற வேண்டும்.

      வணக்கம் நோக்கத்தை நிறைவு செய்ய வேண்டும். காரணம் வணங்கப்படுபவனுக்கு வணக்கத்தின் நல் விளைவுகள் (எந்த விளைவும் "அவனைச்" சேரா) தேவையிலையே. காரணம் இறைவன் ஒருவன் என்பதில் தேவையற்றவன் என்பது பொதிந்துள்ளது.

      இக்கட்டுரை எழுத காரணமான தங்களுக்கு என் நன்றிகள். உங்கள் கேள்வி ஒன்றுக்கே இத்தனை பதில்களாக இக்கட்டுரைகள். நன்றி.

      Delete
  3. \\கும்பிடுதல் என்பது வழிபாடு முறை. தன் பணிவைக் காட்டும் ஒரு செயல். கும்பிடுதல் வணக்கம் என்றதன் கருத்துக்குட்பட்டது அல்ல. அது சம்பந்தமான விளக்கம் கட்டுரையில் உள்ளது. வேண்டின் விளக்கலாம்.\\


    மரியாதைச் செலுத்துவதற்கு, வாழ்த்துவதற்கு அடையாளமாகக் கைகூப்பி “வணக்கம்” கூறுவது என்பது வேறு; இறைவனை வணங்கும் - வழிபாடு -தொழுகை என்பது வேறு.

    “ந்ற்றாள் தொழார் எனின்” என்ற வரிகளில் தொழுதல் என்பதே இறைவணக்கம். மற்றபடி, மனிதர்கட்கிடையில் கைகூப்பி வாழ்த்தும் வணக்கமும் கூறுவது பொதுவானதொரு முகமன் என்றே கருதலாம்.

    இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்வதால், இப்படி மனிதர்களுக்கு “வணக்கம்” என்னும் வந்தனம், நம்ஸ்காரம், salutation, greetings சொல்வதைத் தடுப்பதால் நல்லிணக்கம் தடைபடுகின்றது; இதுபற்றி ஞானியாரின் மறுமொழி காண பேரவா.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கருத்து முற்றிலும் ஏற்புடையதே. தாங்களே கேள்வியும் பதிலுமாக விளக்கம் தந்துள்ளீர்கள். அதனால் அதிகம் எழுத வேண்டியதில்லை.
      இருப்பினும் கட்டுரையில் வந்தக் கருத்துச் சார்ந்ததை ஞாபகம் செய்ய விழைகிறேன் ஈங்கு.

      வணக்கத்தில் இறைச் சந்திப்பு இருக்க வேண்டும். இல்லையேல் அது வணக்கம் அல்ல. உருவமற்ற இறைவனை உருவமுள்ள மனிதன் வணக்கத்தில் சந்திக்க வேண்டும். இறைவனில் இல்லாதது இல்லை. மனிதனில் உருவமும் அருவமும் உண்டு. இவன் அரூப அம்சத்திலாகியே அவனை வணக்கத்தில் சந்திக்க முடியும் கடலும் அலையும் போல். அவ்வாறு சந்திப்பு நிகழ்தலைக் கொண்டதே வணக்கம் மற்றது வழிபாடு ஆகும்.

      நன்றி. மேலும் வேண்டின் வினவுக.

      Delete
    2. \\உருவமற்ற இறைவனை உருவமுள்ள மனிதன் வணக்கத்தில் சந்திக்க வேண்டும். இறைவனில் இல்லாதது இல்லை. மனிதனில் உருவமும் அருவமும் உண்டு\\

      ஆம். ஞானியாரே! அத்தஹ்ஹியாத் என்று தொடங்கும் அந்த இருப்பின் ஓதுதலில் (தொழுகையில்) தாங்கள் குறிப்பிட்டதையே யாம் மனத்தினில் நிறுத்துவோமாக! (மிஃராஜ் என்னும் விண்ணகப் பயணத்தில் இறைச்சந்திப்பின் உரையாடலின் தத்ரூபமான -அப்பட்டமான ஓர் உண்மை விளக்கம் தான் அந்த இருப்பின் ஓதுதலின் உள்ளுணர்வு என்பதும், தொழுகைக்காக ஆயத்தமாகியதிலிருந்து விடுபடும் வரைக்கும் அந்த அரூபமானவன் முன்னே இந்த ரூப உடல் பணிந்து, குனிந்து, சிரம் தாழ்த்தி இறுதியில அந்த உரையாடலையே அப்படியே ஒப்புவிக்கின்றது என்று மட்டும் உணர்ந்தாலே ஒவ்வொரு தொழுகையும் உள்ளச்சம் மிக்கதாகி ஒளிரும்;மிளிரும். இன்ஷா அல்லாஹ்.

      இதுவே, தாங்கள் பயணித்த இந்த நீள்தொடரின் மைல்கல் எனலாம்.

      இன்னும் தங்களின் ஞானப்பாட்டையில் செல்க; யாம் பின் தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

      Delete
    3. தாங்கள் விளங்கியமைக்கு நிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. . //மரியாதைச் செலுத்துவதற்கு, வாழ்த்துவதற்கு அடையாளமாகக் கைகூப்பி “வணக்கம்” கூறுவது என்பது வேறு; இறைவனை வணங்கும் -தொழுகை என்பது வேறு.

    “நற்றாள் தொழார் எனின்” என்ற வரிகளில் தொழுதல் என்பதே இறைவணக்கம். மற்றபடி, மனிதர்கட்கிடையில் கைகூப்பி வாழ்த்தும் வணக்கமும் கூறுவது பொதுவானதொரு முகமன் என்றே கருதலாம்.

    இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக் கொள்வதால், இப்படி மனிதர்களுக்கு “வணக்கம்” என்னும் வந்தனம், நம்ஸ்காரம், salutation, greetings சொல்வதைத் தடுப்பதால் நல்லிணக்கம் தடைபடுகின்றது; //

    இதனாலே நம் பாரத சிறப்புமிகு, கண்ணியம்மிகு முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களை சிலர், பெருமைப்பட வேண்டியவர்களே தவறாக முனுமுனுக்க ஆரம்பித்தனர். அதுபோல் சிலைக்கோ, மனிதருக்கோ மாலையிடுதலை தவறாகவும் அல்ல இறைக்கு இணையாகவும் கருதுகின்றனர். மாலையிடுதல் எங்கு வணக்கம் என்று வழிகாட்டப்பட்டுள்ளது ? அவ்வாறானால் மாலையிடுதலையே வணக்கமாக ஏற்பதாகிவிடுமே ! வணக்கத்தின் தாத்பரியம் அதில் கொஞ்சம்கூட இல்லையே ? இது எழுத காரணமான கவிதீபத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ”வணக்கதிற்குரியவன்...” என்ற மொழிபெயர்ப்பில் கூட தவறுள்ளது

      லா= இல்லை
      இலாஹ்= இறைவன்
      இல்ல= தவிர்த்து
      அல்லாஹ்= ஓர் உண்மை இறைவன்

      இதனைச் சேர்த்தால், ஓர் உண்மை இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை

      இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் NO GOD ; BUT ALLAH

      எனவே நாமாக “வணக்கத்திற்குரிய” என்று வார்த்தையை முன்னோர்களின் தவறான மொழிபெயர்ப்பால் ஏற்று விட்டோம் என்பதால், மனிதர்கட்குச் செய்யும் மரியாதை என்னும் வாழ்த்தான வணக்கத்தையும் இறைவன்க்குரிய தொழுகை மற்றும் கட்டளைகளுடன் “இணைவைத்து” ப் பார்ப்பது என்பது எப்படி ஒன்றாகும்?

      ஆர்வமுடன் கைகூப்பி-மனம் ஒப்பி மாற்று சமய (தொப்புள்கொடி உறவுகள்0 சகோதர.சகோதரிகள் “வணகம்: என்று சொன்னதும், நம்மவர்கள் மீண்டும் “கைகூப்பி” வணக்கம் சொல்லி விட்டால், நாம் சாமி கும்பிட்டு விட்டதைப் போன்றே எம்மை “முஷ்ரிக்” என்கின்றனர்.

      இப்படி பத்வா கொடுப்பதற்கு இவர்கட்கு யார் அதிகார்ம கொடுத்தது>

      “தீர்ப்பு நாளின் அதிபதி” என்று 17 முறை தொழுகையில் தின்மும் ஓதி விட்டு , சக முஸ்லிமை ‘,முஷ்ரிக்” என்று தீர்ப்புச் சொன்னால், அந்த அல்லாஹ்வைத் தீர்ப்புச் சொல்லும் இடத்திலிருந்து இவர்கள் உட்கார்ந்து கொண்டார்களா(அல்லாஹ் பாதுகாப்பானாக)

      உள்ளன்புடனும், மரியாதையுடனும் கைகூப்பி வணக்கம் என்று சொல்லும் தமிழர்க்கு , ஒரு தமிழராகிய யாம் அதே முறையில் நன்றி வணக்கம் சொன்னது தப்பா?

      நிற்க. இதுபோல், அறபு மொழியில் “ஸல்” என்ற மூலச்சொல் , எம் கண்மணியாம் நபிகளார் (ஸல்) அவர்களை வாழ்த்தும் இந்த ஸலவாத்த்து என்னும் salutation க்கும், greetings க்கும் உள்ள அதே மூலச் சொல்தான்
      “ஸலா(த்) “ என்னும் தொழுகைக்கும் குறிப்பிடப்படுவதால், இரண்டும் ஒன்றல்ல; ஸல்வாத்து வேறு; ஸலாத் வேறு என்று எப்படி அழகாக- தெளிவாகப் புரிந்து வைத்துள்ளோமோ, அதுவேபோல், இந்த மனிதர்கட்கிடையில் பேச்சால், எழுத்தால் பரிமாறும் அன்பிந் ம்ரியாதையின் வெளிப்பாடான “வணக்கம்” என்பதும், இறைவனுக்கு மட்டுமே இணங்கி நடத்தும் தொழுகை மட்டும் கடமைகளும் வேறு என்று உண்ர முடியாமல் குழம்புவதும்; குழப்புவதும் காரணீயமாகவே,
      நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழ்ச் சகோதரர்களிடம் திருப்பி கைகூப்பி வணங்காமல் தள்ளி நின்று ப்கைமையை வளர்த்துக் கொண்டோம்.

      தெளிவாக அறிவோம்:
      மனிதர்கட்கிடையில் வணக்க்ம் சொல்வது வேறு= மரியாதை

      இறைவனுக்குச் செலுத்துவது தொழுகை என்னும் கடமை.

      ஆனால், நாம் இந்தத் தொழுகையில் செலுத்தும், குனிதல்- சிரம் பணிதல் எதுவும் மனிதர்கட்குச் செய்வது தான் இணைவைப்பாகும்.

      Delete
    2. //இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் NO GOD ; BUT ALLAH//

      சரியான விளக்கம் தந்தீர்கள். இதனை NO ENTITY BUT GOD என்றும் சொல்வார்கள்.

      Delete
  6. //”வணக்கதிற்குரியவன்...” என்ற மொழிபெயர்ப்பில் கூட தவறுள்ளது

    லா= இல்லை
    இலாஹ்= இறைவன்
    இல்ல= தவிர்த்து
    அல்லாஹ்= ஓர் உண்மை இறைவன்

    இதனைச் சேர்த்தால், ஓர் உண்மை இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை

    இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் NO GOD ; BUT ALLAH

    எனவே நாமாக “வணக்கத்திற்குரிய” என்று வார்த்தையை முன்னோர்களின் தவறான மொழிபெயர்ப்பால் ஏற்று விட்டோம் என்பதால், மனிதர்கட்குச் செய்யும் மரியாதை என்னும் வாழ்த்தான வணக்கத்தையும் இறைவன்க்குரிய தொழுகை மற்றும் கட்டளைகளுடன் “இணைவைத்து” ப் பார்ப்பது என்பது எப்படி ஒன்றாகும்?//

    சரியாகச் சொன்னீர்கள். ஆனாலும் அந்த "வணக்கத்திற்கு உரியவன் " என்ற பதங்களின் கருத்துக்கள் அம்மூல மந்திரத்திற்கு மாற்றமானவைகள் அல்ல என்பதாலேயும்கூட சேர்த்திருக்கலாம். இருப்பினும் அது ஒரு பெரும் திரையாகவே ஆகிவிட்டது.

    அம்மூல மந்திரம் தராசின் ஒரு தட்டிலும் இப்பிரபஞ்சம் மறு தட்டிலும் வைத்தால் மூல மந்திர தாங்கும் தட்டே தாழும் என்ற அறிவைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அம்மூல மந்திரத்தின் மொத்த எழுத்துக்கள் 24 என்பதிலிருந்து 24 மணி நேர வாழ்வும் அம்மூல மந்திரத்தின் கட்டுப்பாட்டில்- கடமையில் - கட்டளையில் வாழ்வதே ஒரு “இபாதத்” என்னும் இறைவன் வகுத்தக் கடமையை நிறைவு செய்தற்கு ஒப்பானதே!

      Delete
    2. அம்மூல மந்திர கருத்திற்கேர்ப்ப வாழ்வே துளி நொடிகூட விலகாது இருக்கவேண்டும். அப்பொழுதுதான் வணங்கவே படைத்தேன் என்பதில் நின்றும் இவன் வாழ்வு அமையும்.

      Delete
  7. //இப்படி பத்வா கொடுப்பதற்கு இவர்கட்கு யார் அதிகார்ம கொடுத்தது>//

    அரசனைப்பற்றி அறியாத ஆண்டி பயமின்றி எப்படியும் சொல்லும் என்றுதான் கூற வேண்டும்.

    ReplyDelete
  8. // நாம் இந்தத் தொழுகையில் செலுத்தும், குனிதல்- சிரம் பணிதல் எதுவும் மனிதர்கட்குச் செய்வது தான் இணைவைப்பாகும்.//

    வணக்கத்தில் நிய்யத் என்ற எண்ண உறுதிப்பாடு இல்லாமல் செய்யும் இச்செயல்கள் இறை வணக்கமாக என்பதை அறியாதோர் யாரும் இருக்கமுடியாது..

    ReplyDelete
  9. ஆக்கங்கள் எழுதி அழகு புகழ் வார்த்தைகளை அடுக்குவதைவிட்டும் அடுத்தவர்களும் தெளிய இதுபோல் பல கேள்விகள் கேட்பதிலே அக்கியோனின் நோக்கம் நிறைவாகுமாம் அருந்துவோரும் அகம் மகிழ்வாராம்.

    சிலர் கேள்விகள் கேட்பதோடு சரி. பதிலைப் படிக்காததுப் போலவும் இருக்கும் நிலையில் இருக்கின்றனர். அவ்வாறானால் அடுத்தவர் கருத்துகள் புரிந்துக்கொள்ளமுடியாது. தன்னின் அறிவுகளே தன்னிடம் தவறோ சரியோ நிற்கும். சிலர் கேள்விகள் கேட்டால் தவறாக தான் உணர்ந்து தன்னை இடைமறிக்கின்றார்கள் என்றுக் கருதிக்கொள்கின்றனர். தளமோ விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஆக்கியோன் அருந்துவோனைவிடச் சிறந்தவன் என்றும் கொள்ளல் ஆகாது. அனைவரும் சமமே. அனைவரையுமே அனைத்தையுமே அளித்தே படைத்தோன் பாரப்பட்சமின்றி படைத்துள்ளான். இவனோ இவன் தேடலுக்குத் தக்க மிளிர்கிறான். இக்கருத்தை எழுத தருணம் இன்று தகுமானதாயிற்று.

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது இங்கு நினைவு கூறப் பொருந்துது.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers