kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, January 23, 2014
போலிகள் !?
அறிவுத்தேன் II
உண்மை என்பது சத்தியம். அது நிலைக்கும். அதில் நன்மைகள் மட்டும் இருக்கும். ஒருவருக்கு மட்டும் அல்லமல் எல்லோருக்கும் நன்மைகள் இருக்கும். இலகுவாக அதனை அறிதல் கடினம். ஆனாலும் முயற்சிகள் பலன் தராமல் போவதில்லை. அவ்வாறு அறிவதனால் அவனில் அது நிலைத்து நிற்கும். அது எதற்கும் அஞ்சாது. உண்மையை அறிந்த உள்ளம் அமைதில் ஓர்மையில் நிலைக்கும். கடல் அலைபோல் செயல்படும்.போலி என்பது அசத்தியம். அழியக்கூடியது. அதிலும் நன்மைகள் இருக்கும். அந்நன்மை எல்லோருக்கும் இருக்க இயலாது. அதிலும் பொது நலம் அன்றி, சுயநலம் மிகுந்து மலியும். அதனால் அந்நன்மை நன்மை போன்ற தோற்றமே அன்றி எனச் சொன்னாலும் மிகையில்லை. காரணம் இந்த நன்மை போன்ற நிலையற்ற இத்தன்மை. சொற்பக் காலம் சுகம் தரும் பின்னால் இவனையே நாசம் செய்யும். அதிலிருந்து இவன் தப்பிக்க முடியாமல் அழிவான். காரணம் அழிதல் அதன் குணம். அதனால் அதனைப் பற்றியோரையும் அழிக்கும். இரும்பும் தணலும் போல் செயல்படும்.
எங்கு பார்கினும் எதிலும் எல்லாவற்றிலும் போலிகள் இன்று அதிகமாகிவிட்டது. மேலும் போலிகளே, தன்னைத்தானே உண்மை என்றும் உண்மைகள் போலிகள் என்றும் அடிக்கடி பிரகடனம் படுத்தப்படுகின்றன. அது அதன் சுபாவம். இல்லையேல் அது அழிந்துவிடும். உணமை அவ்வாறு செய்யாது. ஏற்கனவே காலத்தாலும், அதன் பயன் பாடினாலும் அது உன்னத நிலையில் இருப்பதால் என்றும் அமைதியுடனே இருக்கும். பிரகனப்படுத்தப்பட வேண்டிய அவசியமும் அதற்கு இருக்காது என்பதுப் போலவே தான் அது இருக்கும். இது இதன் சுபாவம்
இதனாலேயே இச்சூழலால் பாமரர்களும் அவர்கள் விரும்பும் உண்மை எதுவென்று விளங்காது போலியே உண்மை என்று நம்பும் நிலை இவ்வுலகில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றது.
போலிகள் அதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவைகள் கருத்தில், செயலில், பொருளில் போலிகள்.
கருத்தில் போலிகள்:
ஒருவர் ஓர் உண்மையைச் சொல்வார். சொல்பவரிடம் அந்த உண்மையின் விளக்கம் தெளிவாக இருக்கும். அவர் சொன்னக் கருத்தை சிலர் அறிந்தோ அறியாமலோ தவறுதலாக விளக்கங்கள் சொல்வார்கள். சிலர் சுய இலாபத்திற்காக திரித்தும் பிறரிடம் சொல்வார்கள். சில உண்மைகள் எடுத்துச் சொல்பவரின் சுபாவத்திற்கேற்பவும் இருக்கும்.
ஒருவர் ஒரு சுற்றுலாத் தளத்திற்கு சென்ற வந்து அதனைப்பற்றி மற்றவரிடம் சொல்ல, அம்மற்றவர் அதனை மிகைப்படுத்தியோ அல்லது குறைத்தோ அச்சுற்றுலா விபரங்களை பிறரிடம் சொல்வார்.
ஒரு துயரச் சம்பவமோ அல்லது ஒரு நிகழ்வோ அது அவரவர் தன் சுபாவங்களுக்கு ஏற்ப அதன் கருத்து திரிந்து சுவைகள் பல கூட்டி காட்டுத் தீ போல பரவும், அதனை வதந்தி என்பார்கள்.
பத்திரிகை செய்திகள் கூட எழுதும் ஆசிரியரைப் பொறுத்து ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஒவ்வொரு விதமாக ஒரே சம்பவம் எழுதப்படும். அதனையும் பார்த்து இருப்போம்.
ஒரு சமைக்கப்படும் உணவு அதற்கு தேவையான பொருள்கள் எதுவோ அதனைக்கொண்டு ஒவ்வொருவரும் தன் கை வண்ணத்தால் ஒவ்வொரு விதமாகச் சமைப்பார்கள்.
மனிதனைப் பொறுத்து சொல்லும் உண்மைகள் பல மாதரியாகப் புரிந்துக் கொள்ளப்படும். பாடப் புத்தகத்தில் உள்ள ஒரே பாடம் ஒவ்வொரு ஆசிரியரைப் பொறுத்து ஒவ்வொரு விதமாக பாடம் நடத்தப்படும். உள்ளதை உள்ளபடி சொன்னால் புரிதல் சிலருக்கு இலகுவாக இருக்காது. அதனால் அது இலகுவாகப் புரிய அதனையொத்த கருத்துக்கள் கலந்து சொல்லப்படும். அந்த துணைக் கருத்தைப் பொறுத்து கேட்பவரையும் பொறுத்து புரிபவர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்தும்கொள்கிறார்கள்.
ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். சொல்பவரின் அறிவு, விளக்கம் அவரின் தகுதி தரத்தைப் பொருத்து தவறோ அல்லது பொய்யோ அதுகூட உண்மையாகப் பேசப்படும்.
இவைகளை நடைமுறையில் நாம் கண்டுதான் வருகிறோம். இது போல எழுதிக்கொண்டேப் போகலாம். அவ்வாறானால் எப்படி ஓர் உண்மைக் கருத்தை விளங்கிக் கொள்வது ?
(தொடரும்)
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
விளக்கினை ஏற்றிவிட்டு
ReplyDelete.. விசிறியால் வீசுவாரோ
அழுக்கினை நீக்கிவிட்டு
.. அசுத்தமும் பூசுவாரோ?
தேசியம் பேசுகிறார்
.. திருடுகள் பண்ணுகிறார்
ஆசியும் கூறுகிறார்
.. அழிவையே எண்ணுகிறார்
வேலியே பயிரைத்தான்
.. வேகமாய் மேய்தற்போல்
போலிகள் இவர்கள்தாம்
.. போதனைச் சாயத்தில்
என்ன மனிதரிவர்?
.. எளியவர்க்கு நல்லவராம்
அன்னார் நடித்திடுவார்
.. அரசியலில் வல்லவராம்
ஓரங்க நாடகம்
..ஒவ்வாத பாத்திரம்
யாரங்குக் கேட்பது
...எல்லாமே சாத்திரம்
என்னென்ன ஒப்பனை
...எளியோரின் வேதனை
எண்ணாமற் போதனை
....எளிதாய்ப்பொய் விற்பனை
அரிதாரம் இவர்களின்
....ஆதாரம் ஆனது
புரியாத பதங்களே
...பூமாலை ஆனது
இல்லாத ஒத்திகை
..எழுதாத வசனம்
பொல்லாத செய்திகள்
..பொழுதானால் விசனம்
போலிகள் விளக்கில்
Delete..பூச்சிகள் மாலும்
மாலியின் வெளிச்ச(த்)தில்
..மானிடர் வாழும்
அழிவுகள் உள்ளதும்
..அழகிடும் நல்லதாய்
தெளிவுகள் நிறைந்ததும்
..தெரியவும் இல்லையே
பிறரையும் அழிப்பார்
..பின்னால் இவரையும் !
அறத்தையும் விட்டதால்
..அழித்தலில் பண்பினர்
நடித்தலே சுபாவம்
..நல்லதில் கோபம்
பிடித்தவை குழப்பம்
..பிடித்ததும் ஏப்பம்
உண்மையில் வெறுப்பே
..உலகினில் பேரவா
கொண்டிடும் நடிப்போ
..கொள்ளையில் துடிப்பே
போலிகள் விளக்கில்
..பூச்சிகள் மாலும்
மாலியின் வெளிச்ச(த்)தில்
..மானிடர் வாழும்
சொன்னதில் கொண்டே
..சொக்கிடும் வார்த்தையில்
உன்னதில் கண்டேன்
..உவந்திட நிற்கிறேன்..
போலிகள் புகழுரை
ReplyDeleteமாளிகை உயரத்தில்
போற்றுவர் எண்ணத்தில்
பொல்லாங்கு உள்ளத்தில்
கேலிகள் மேலோங்கி
பாலினம் பாவத்தில்
கேளிக்கை தலைதூக்கி
நாளிகை துயரத்தில்
உள்ளொன்றும் புறமொன்றும்
ஊராரின் பார்வையாகி
உளம் நிறைந்த வாழ்த்துக்கள்
உதவா மனிதர் ஓசையாகி
உயிரழுகும் சப்தமோ
உற்றநட்பின் சனியாகி
எம்மாந்தர் பாரினில்
ஏகமும் போலியாகி
அம்மாந்தர் அடைந்திடும்
அளவில்லா மகிழ்வதுவோ
மாளிகை உயரம்
Deleteபோலிகள் புகழுரை
போற்றினாலும் உள்ளத்தில்
பொல்லாங்கு வெள்ளம்
கேலிகளாக பாய்ந்தாலும்
போலிகளளே பாவம்
உள்ளொன்றும் புறமென்றும்- ஆனால்
நல்லவர்போல் தோற்றம்.
சொல்லவும் வேண்டுமா ?
உள்ளுக்குள்ளே அழுகை
உதவாத வாழ்க்கை
உற்றநட்பாக தொடர்ச்சி
இம்மாதரி பாரினில்
அம்மாந்தர் வாழ்ந்திடுதல்
பாவிகளின் வசத்தால்
போலிகள் ஆனதே
மகிழ்ச்சிகள் மாண்டதே.
உங்கள் குமுறலில்
எந்தன் பங்கும்.
நன்றி.
மெய்ப்பொருள் காண்பது அறிவு... அலசல் தொடரட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஆன்றோர், சான்றோர் வார்த்தைகள் அல்லவா " மெய்ப்பொருள் காண்பது அறிவு"
Deleteஅறிவு என்றாலே மெய்ப்பொருளை அறிவதுதான் அறிவு மற்றவகை அறிவுகள் அறிவே அல்ல என்பது எவ்வளவு சாதுரியமாக முன்னோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
அத்தகைய அறிவை ஒருவர் பெற்றால் போலிகள் இலகுவாக அடையாளம் தெரியும், காட்டப்படும். அவர்களைக்கண்டு போலிகள் ஓடிவிடும்.
தங்களது வாழ்த்தினுக்கு நன்றிகள் பல.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான ஆக்கம்,
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
தாங்கள் போன்றோர் அருமை என்பது ஆக்கம் இன்னும் ஆழமாக எழுத தரும் ஊக்கம்.
Deleteவாழ்த்தினுக்கு நன்றிகள் பல
எங்கும் போலிகள் எதிலும் போலிகள் நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை சிறப்பாக சொன்னீர்கள் நன்றிங்க .
ReplyDeleteநிம்மதியற்ற வாழ்கை எங்கு நோக்கினும். வேதனைகள் சுமந்தே வாழும் மனிதகுலம். உலகில் அமைதியைக் குலைக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே ஏற்படுதல். இதற்கெல்லாம் காரணம் எல்லாவற்றிலும் போலிகள் ஆட்சி செய்கின்றது. நாம்தாம் விழிப்புடன் மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல. சகோதரியே தங்களது உள்ளுணர்வு எடுத்துக்காட்டும் விதம் சிறப்பானது. நன்றிகள் பல.
Deleteசிறந்த படைப்பு
ReplyDeleteபோலிகளிடமிருந்து எந்நேரமும் எச்சரிக்கையாக இருப்போம்
வதந்தீ என்பது வேண்டுமென்றே திரித்துச் சொல்லப்படும் தகவல்.. தவறான புரிந்துணர்வில் வெளிப்படும் கருத்து/தகவல் வதந்தியாகாது..
ReplyDeleteபோலிகளுக்கு பல அர்த்தம் கற்பிக்கலாம்.