.

Pages

Monday, January 20, 2014

மிரட்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவது யாரு !?

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையில் மிரட்டல்கள், கணவன் மனைவிக்கு இடையில் மிரட்டல்கள், முதலாளி தொழிலாளிக்கு இடையில் மிரட்டல்கள், ஆசிரியர் மாணவிகளுக்கு இடையில் மிரட்டல்கள். அதாவது மிரட்டல் என்று வந்துவிட்டாலே பல தேசங்களுக்குள், அரசியல் கட்சிக்களுக்குள், இயக்கங்களுக்குள், இனங்களுக்குள், குடும்பங்களுக்குள், பல இடங்களில் பலர் விதவிதமாக மிரட்டுவதை பார்க்கலாம். அப்படிப்பட்ட அந்த எல்லா  மிரட்டல்களையும் ஒரு பட்டியல் போட்டு பேசினால் இந்த வலைதளமே போதாது.

ஏன் மிரட்டுகிறார்கள்? எதனால் மிரட்டுகிறார்கள் ? எதற்காக மிரட்டுகிறார்கள் ? மிரட்டல் என்ற ஆயுதத்தை ஏன் மனதிலும் கையிலும் எடுத்துக் கொண்டு அலைகிறார்கள் ? தான் நினைத்தை சாதித்துக் கொள்வதற்கோ அல்லது அடைவதற்கோ அல்லது வலுக்கட்டாயமாக அபகரிப்பதற்கோ யாராவது தடையாக இருக்குமேயானால் அவர்களை மிரட்டி காரியத்தை சாதித்துக் கொள்வது.

இன்று சாதாரணமாக நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஒரு சில மிரட்டல்களை மட்டும் உங்களுடன் ஒரு சில வார்த்தைகளைக் கொண்டு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

தொலைக்காட்சிகள் வராத நாட்களில் அன்று வாழ்ந்த மக்கள் சினிமாவை கண்டு களித்து மகிழ்ந்து வந்தனர், அன்று சினிமாவில் சொல்லப்பட்ட அத்தனை கதைகளும் சரி... காட்டப்பட்ட காட்சிகளும் சரி... நம் வாழ்க்கையோடு ஒத்துபோயின, இருப்பினும் ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களோ அல்லது காட்சிகளோ அப்படியும் இப்படியும் இருந்தது. இன்று சினிமாக்களில் வருகின்ற கதைகளும் காட்சிகளும் சரி, சின்னத்திரைகளில் வருகின்ற கதைகளும் காட்சிகளும் சரி, குடும்பங்களையும் சமுதாயத்தையும் சீர்குலைப்பதற்கென்றே வந்து கொண்டு இருக்கின்றன.

ஒட்டுமொத்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் குற்றம் சொல்ல முடியாது, நமக்கு தேவையான எத்தனையோ நல்ல விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளும் வந்தாலும், தேவையற்ற விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகள்தான் அதிகம் வருகின்றன, இதில் எதை அதிகம் பார்கிறார்கள் என்று ஒரு சர்வே எடுத்து பார்த்தலில் தேவையற்ற விஷயங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளைத்தான் மக்கள் பார்கின்றனர்.

இன்று பல சீரியல்களில் பத்து சதவிகிதம் தகுந்த வார்த்தைகளையும், தொண்ணூறு சதவிகிதம் தகாத வார்த்தைகளைக் கொண்டு பின்னப்பட்டு, அது ஒரு தொடர்கதைகளாக தொலைக்காட்சிகளில் இருபத்திநான்கு மணிநேரமும் இடைவிடாமல் ஒளி ஒலிபரப்பாகி வருகின்றது. இப்படியாக பல கதைகள் தொடர்கதைகளாக உருவெடுத்து பல சேனல்களில் பல மாதங்களுக்கு சின்னத் திரையில் காண்பிக்கப்பட்டு பல குடும்பங்களையும், குடும்பத்திற்கு வெளியிலும் சமுதாயங்களை குழப்பிக் கொண்டும் குலைத்துக் கொண்டும் வருகின்றது.

கதைகளில் காட்டப்படும் தகாத சம்பவங்களில் ஒன்றுதான் மிரட்டல் என்கிற சம்பவமும், இந்தமாதிரி நிகழ்வுகளில் ஆண்கள் பெண்கள் என்றில்லை, சிறியவர்கள் பெரியவர்கள் என்று கணக்கில்லை, ஏக போக அனைவரும் அடிமையாகி சீரழிந்து வருகின்றனர் என்பது மட்டும் உண்மை. தொலைக் காட்ச்சிகளில் வரும் கதைகளையும் காட்ச்சிகளையும் பார்த்தும் கேட்டும் இன்றைய சமுதாயம் வெகுவாக சீரழிந்து கொண்டு வருகின்றது என்றால் அதுதான் உண்மையாக இருக்கின்றனது.

பிள்ளைகள் சீரியல்களில் வருகின்ற கதைகளை பார்த்துவிட்டு தங்களுடைய பெற்றோர்களை மிரட்டுகின்றனர் பெற்றோர்களும் பிள்ளைகளின் மிரட்டல்களுக்கு அடிபணிகின்றனர் விளைவு பிள்ளைகள் தன் காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர், தகாத நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக்கொண்டு இஷ்டம்போல் ஊர் சுத்துகின்றனர், ஊர் வம்பை வளர்த்துவிடுகின்றனர். கடைசியில் பெற்றோர்கள் தலைகுனிகின்ற நிலைக்கு தள்ளபடுகின்றனர். பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டிக்காமல் வேறு யாரு கண்டிப்பது? நாய் குரங்கா வந்து கண்டிப்பது! எந்த பெற்றோர்களும் தன் பிள்ளை நல்ல நிலையில் இருக்கத்தான் ஆசைப்படுவர்.

மனைவி கணவனுக்கு கீழ்படிய கடைமைப் பட்டவள், ஆனால் அனேக இடங்களில் மனைவி தங்களுடைய கணவனை மிரட்டி அடிமைப்படுத்தி வைக்கின்றனர் இதனால் கணவன் வாயை பொத்திக்கொண்டு அமைதியாகி பெட்டிப் பாம்பைப் போல் ஆகிவிடுகின்றான், இவன் வாயைத் திறந்தால் அவ்வளவுதான் மனைவி அப்படியே ஒரு கொத்து கொத்திவிடுவாள், மனைவியின் இஷடத்துக்கு இவன் தலைகுனிந்து ஆடுகின்றான். இதுதான் கல்லானாலும் கணவனா ? புல்லானாலும் புருஷனா ? இன்றும் நற்குனத்தோடு கணவனுக்கு கீழ்படிந்து நடக்கின்ற சீதேவியான நல்ல மனைவியும் உண்டு, அதே நேரத்தில் கணவனுக்கு கீழ்ப்படியாமல் எடுத்தெறிந்து நடக்கின்ற மனைவிகளும் அநேகம் உள்ளனர். ஒரு மனைவி கணவனுக்கு தெரியாமல் ஒரு கடுகளவேனும் காரியத்தை செய்தால் அதுக்கு அர்த்தம் வேறு, அதை நான் இங்கு எழுத விரும்ப வில்லை.    

சில குடும்பங்களில் சொத்துப் பிரச்சனை காரணமாக ஒருத்தரை ஒருத்தர் மிரட்டுகின்றனர். இலாபம் யாருக்கு ? மூன்றாவது ஆளுக்கு.

பள்ளிக்கூடங்களில் சில ஆசிரியமார்கள் மாணவர்களையும் மாணவிகளையும் மிரட்டி எனக்கு இணங்காவிட்டால் உன்னை பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டுவதும் சகஜமாகிப் போய்விட்டது, இதை நாம் பல ஊடகவாயிலாக அறிந்துருக்கின்றோம்.

பணிக்கு போய்வருகின்ற பெண்களை பணி செய்யும் அலுவலகங்களிலும், போய் வரும் பாதைகளிலும், பேருந்துகளிலும், இன்னும் பிற இடங்களிலும் அவர்களை மிரட்டி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் ஒரு சில அல்லது பல ஆண் வர்க்கங்கள். மேலும் பணிக்கு செல்லும் சில பெண்கள் தங்கள் உடைகளை அநாகரிகமாக அணிந்துகொண்டு ஆண்களை கிண்டலடித்து மிரட்டி தன் இஷ்டத்துக்கு வைத்துக்கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஒரு பெண் நர்சிங் படிக்க ஆசைப்படுகிறாள் என்றால், அந்தப் பெண் பல நோயாளிகளை கவனிப்பதில் ஆர்வம் காட்டுகின்றாள் என்றுதான் அர்த்தம், ஆனால் இன்றைய நாட்களில் என்ன நடக்குது. அங்கேயும் இந்த ஆண் வர்க்கம் விட்டு வைக்கவில்லை.

தென்னந் தோப்பில் தேங்காய் வெட்டப்போனால் தோட்டக்காரன் மிரட்டுகின்றான், கடலில் மீன் பிடிக்கப்போனால் அடுத்தவன் மிரட்டுகின்றான். பஸ் ஸ்டாண்டில் அதிக நேரம் நின்றால் வேறு ஒருத்தன் வந்து மிரட்டுகின்றான். இப்படி ஒவ்வொரு கோணத்திலும் பார்த்தால் மிரட்டல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யாரு !?

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

16 comments:

  1. சமூகத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துக்கூடிய மிரட்டல்களுக்கு கண்டிப்பாக முற்றுபுள்ளி வைக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      முற்றுப்புள்ளி வைக்கின்றேன் என்று காற்புள்ளி வைத்துவிடப்போகின்றனர்.

      Delete
  2. Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      மீண்டும் மகாத்மா வருவாரா?

      Delete
  3. மிரட்டல் என்பது பலவிதத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிள்ளைகள் பெற்றோரிடத்தில் வேண்டியதைப் பெறுவதற்கும், கணவன் தனது மனைவியை மிரட்டியே காலம்கடத்தவும், நண்பன் தான் செய்த உதவியை சுற்றிக்காட்டியே மிரட்டிவைப்பதும். இப்படியான மிரட்டல்கள்....... இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

    உள்மனதில் மனப்பூர்வமாக வரும் நட்பு பாசத்திற்கு இப்படி கீழ்த்தரமாக மிரட்டத்தெரியாது. மிரட்டிப் பறிக்கும் நபர்களுக்கு இப்பதிவு பாடமாக அமையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நன்றாக சொன்னீர்கள்.

      இந்தக்காலம் மிரட்டலுக்கே மிரட்டல் விடுகின்ற காலமாச்சே.

      Delete
  4. உருட்டல் மிரட்டல்
    உள்ளதே உலகம்
    திருட்டும் கொலையும்
    தினசரி நிலவும்!


    உலக முடிவின் நெருக்கம் தான் முற்றுப் புள்ளி.

    ReplyDelete
  5. உங்கள் கருத்துக்கு நன்றி.

    உண்மையில் மச்சான், உலக முடிவின் நெருக்கம் தான் முற்றுப் புள்ளி, அந்த முற்றுப் புள்ளி சகலத்துக்கும் பொருந்தும்.

    என்னதான் இருந்தாலும் நம்முடைய காலத்தில் இப்படியெல்லாம் மிரட்டல்கள் இல்லையே மச்சான், எல்லா முசீபத்தும் இப்பத்தானே.

    ReplyDelete
    Replies
    1. ஆன்மீகம் கலவாத கல்வி முறைதான் அடிப்படைக் கோளாறு. நாம் படிக்கும் காலத்தில் நீதிபோதனை வகுப்பு இருந்தது; இப்பொழுது சில ஆசிரியர்களிடமும் ஒழுக்கம் இல்லை; மாணவர்களிடமும் ஒழுக்கம் இல்லை முடிவு மக்கள் நிம்மதியைத் தேடி (இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி) அலைகின்றனர்; “நிச்சயமாக உள்ளங்களில் அமைதி ஏற்படுத்த்வது இறைதியானமே”

      இற்றைப் பொழுதினில் இரத்த அழுத்தம்/ மன அழுத்தம் குறைய பரிந்துரை செய்யப்படுவதில் யோகா மற்றும் தியானம். இவைகள் மெஞ்ஞானிகள் தான் பின்ப|ற்றினர்; ஆனால் இன்று காலத்தின் கட்டாயம், விஞ்ஞானம் படித்த மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.

      1400 ஆண்டுகட்கும் மேலாக ஓர் எழுத்துக் கூட மாற்றப்படாத இறைவேதத்தில் அல்லாஹ் அறுதியிட்டுச் சொன்னதை எல்லாம் இப்பொழுது விஞ்ஞானம் கால்த்தின் கட்டாயமாக்கி வருகின்றன.

      மச்சான்! நமக்குப் பயிற்றுவித்த உஸ்தாத்கள் என்னும் மார்க்க போதகர்களும், பின்னர் பள்ளிக்கூட்ங்களில் கண்ணியமிக்க ஆசிரியர்களும் நல்லொழுக்கம் கற்பித்தனர்; அதனால் “முசீபத்துகள்” இல்லாமல் வாழ்ந்தோம்!

      Delete
    2. மச்சான், ஆணித்தரமான உங்களின் இந்தக் கருத்து மிகவும் சிந்திக்க வைக்கின்றது.

      நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனிவரும் தலைமுறையினர் காலமுழுக்க மிகுந்த வருத்தப்பட்டுக் கொண்டே வாழவேண்டி இருக்கும்போல் தெரிகிறது.

      Delete
  6. மனிதர்கள் அரிதாகி விட்டனர்.
    அசத்தப் போவது யாரு ?
    மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யாரு !?
    தாங்களே இன்னும் ஒரு ஆக்கம் எழுதி முற்றுப்புள்ளிகளையும் அதனை இடுவோரையும் செம்மைப்படுத்துங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நபி தாஸ் அவர்களே.
      உங்கள் கருத்து நன்றாக இருக்கின்றது, ஆனாலும் நான் இன்னும் ஒரு ஆக்கம் எழுதி முற்றுப் புள்ளி வைத்து அதனை இடுவோரை செம்மைப் படுத்தினால் பிறகு எனக்கே முற்றுப் புள்ளி வைத்து விடுவார்களே.

      Delete
  7. ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக மருந்துண்டு, அந்த மருந்தை உன்ன மறுக்கின்றனரே அதுதானே என் தலைவலி.

      Delete
  8. மருந்துன்ன வெறுக்கத்தான் செய்யும். குணமானவுடன் மருத்தவரை கண்ணியத்துடன் பார்க்கத்தான் செய்யும்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers