.

Pages

Tuesday, January 28, 2014

நீங்க நல்லா இருக்கணும் !

நீங்க நல்லா இருக்கணும், என்ன எம்.ஜி.ஆர். பாடல் ஞாபகம் வருதா ? நான் பாட்டு பாட வரவில்லை.

'நீங்க நல்லா இருக்கணும்' என்ற சொல்லுக்கு ஈடு இணை ஏதும் உண்டோ என்று கேட்டால் யாரும் இல்லையென்றே சொல்வார்கள். அப்படியாகப்பட்ட அந்த சொல்லை நம்மைப் பார்த்து ஒருவர் சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்? அவர் அப்படி சொல்ல வேண்டுமானால் நாம் அவருக்கு என்ன செய்ய வேண்டும்?

கட்டுகட்டாக பணம் இருந்து என்ன பலன்? அடுக்கு அடுக்காக உடுப்புகள் இருந்து என்ன பலன்? பல தொழில்களுக்கு அதிபராக இருந்து என்ன பலன்? காலா காலமாக சம்பாதித்து என்ன பலன்? கூட்டம் கூட்டமாக நண்பர்கள் இருந்து என்ன பலன்? ஜால்ரா அடிக்க நான்கு பக்கம் நாற்பது பேர் இருந்து என்ன பலன்? அடுக்கடுக்கா மாடிகள் வைத்து வீடுகள் கட்டி என்ன பலன்? நன்றாக பேசக்கூடிய நாக்கு இருந்து என்ன பலன்? கட்டுமஸ்தான் மாதிரி உடல் இருந்து என்ன பலன்? இன்னும் கணக்கில் அடங்கா ஆடம்பரத்தனம் இருந்து என்ன பலன்?

தர்மம் இல்லையேல் ஒரு பலனும் இல்லை. தர்மம் செய்ய நல்ல பெருந்தன்மை கொண்ட மனம் வேண்டும்.

தர்மத்தை அவரவர் வசதிக்கேற்ப செய்வார்கள்¸ அது பணமாகவோ, பொருளாகவோ, நேரமாகவோ, வார்த்தைகளாகவோ இருக்கலாம். பணம் இல்லாவிட்டால் இருக்கின்ற பொருளை கொடுக்கலாம், பணமும் பொருளும் தர்மம் செய்கின்ற அளவுக்கு போதவில்ல என்றால், தன் நேரத்தையும் வார்த்தைகளையும் சிலவு செய்யலாம்.

சிலர் பணத்தை தர்மமாக சிலவு செய்வார்கள், சிலர் பொருளை தர்மமாக சிலவு செய்வார்கள், சிலர் நேரத்தை தர்மமாக சிலவு செய்வார்கள், சிலர் வார்த்தைகளை தர்மமாக சிலவு செய்வார்கள்,  வார்த்தைகளை தானே சிலவு செய்கின்றோம் என்று சிலர் வானத்தை வில்லாக வளைத்து தருவேன், அப்படி இப்படியென்று பெரிய பருப்பு மாதிரி எல்லாம் வார்த்தைகளை அள்ளிவீசுவார்கள், நீங்க கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும், ப்பூ இவ்வளவுதானா அதை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் அளந்து விடுவார்கள், முடிவில் ஒன்றும் இருக்காது, சூடப்பாகி காணாமல் போய்விடும்.

“தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” “மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்” இப்படி அன்று சும்மாவா சொன்னான்?

இன்று எப்படி இருக்கு? தர்மத்துக்கே வேட்டு வைக்கும் காலமாக இருக்குது, வாரி வாரி வழங்கின காலம் போய் பிடுங்கி தின்கிற காலமாக இருக்குது.

பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பதும் ஒரு வகையில் தர்மம்தான், எந்த பெற்றோரும் பிள்ளைகள் நாசமாக போக நினைக்க மாட்டார்கள், பெரியவர்கள் சிறியவர்களை கண்டிப்பது நன்மைக்கே தவிர தீமைக்கல்ல. இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள், இன்றைய சிறியவர்கள் நாளைய பெரியவர்கள், மறந்து விடவேண்டாம். புதன் கிழமை போய்விட்டது திரும்ப வராது என்று எண்ணிவிட வேண்டாம், இன்று பணக்காரன் நாளை ஏழை, இன்று ஏழை நாளை பணக்காரன், மாறி மாறி வருவதே வாழ்க்கையும், நிலைமையும், பணம் அது ஒன்றும் இல்லை, அது இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை.

ஆக நல்லது செய்யாவிட்டாலும் தீமைகள் செய்யாமல் இருக்கவேண்டு. நாம் எல்லோரும் நல்லா இருக்கத்தான் ஆசைப்படுகின்றோமே தவிர நாசமாக போக நினைக்க மாட்டோம்.

நாம் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதையே தூண்டுவோம், நாம் எல்லோரும் நல்லா இருப்போம்.

நீங்க நல்லா இருக்கணும்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

15 comments:

  1. // நாம் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதையே தூண்டுவோம், நாம் எல்லோரும் நல்லா இருப்போம்.//

    சிறந்த உபதேசம் !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்க நல்லா இருக்கணும்.

      Delete
  2. நீங்க நல்லா இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்க நல்லா இருக்கணும்,.

      Delete
  3. நல்ல சொற்களுக்கு என்றும் சக்தியுண்டு... ஆனால் பலன் கிடைக்க நாளாகும் - பல பரிச்சைகள் உண்டு என்பதால்...!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்க நல்லா இருக்கணும்.

      Delete
  4. Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்க நல்லா இருக்கணும்.

      Delete
  5. நீங்க நல்லாயிருக்கனும் என்று வாழ்த்துடன் கட்டுரையை தொடங்கி நல்லபல நடப்புக்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள். அருமை.அருமை. இந்தக் காலத்தில் இரட்டை வேஷமிடுபவர்களே அதிகம் உள்ளனர். நல்லாயிருக்கனுமென்று மனதாரச் சொல்பவர்கள் அரிதிலும் அரிதாகவே இருக்கிறார்கள். அனைவருக்கும் பொருந்தும் விதத்தில் சுற்றிக்காட்டியுள்ளீர்கள். நீங்க நல்லாயிருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்க நல்லா இருக்கணும்.

      Delete
  6. என்றும் போல் இரத்த உறவுகள் மட்டும் தான் பல சூழ்நிலையில் ஒரே மனதுடன் இருப்பது இயல்பு ஆனால் இடையில் வந்த உறவு கடைசி வரை நிழைக்கும் என்பது பகல் கனவு போல் ஆகி விடும் சில நேரங்களில்.... நாங்க நல்ல இருப்போம்

    இப்படிக்கு......ஜியாவுதீன் அமீரகம் -அல் அயின்.......


    இப்படிக்கு......ஜியாவுதீன் அமீரகம் -அல் அயின்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்க நல்லா இருக்கணும்.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. மற்றவரை மனதார வாழ்த்த நல்ல மனம் வேண்டும் வாழ்க பல்லாண்டு வாழிய வையகம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீங்க நல்லா இருக்கணும்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers