kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Saturday, February 1, 2014
[ 2 ] கருத்துப்போலிகள் !?
II அறிவுத்தேன்
ஓர் உண்மைக் கருத்தை எவ்வாறு விளங்கிக் கொள்வது ?
எல்லோருக்கும் நன்மைதரும் ஓர் உண்மைக் கருத்தானது அவ்வாறு எல்லோருக்கும் நன்மை தராமல் சிலரைத் தவிர்த்து பிறருக்குத் துன்பம் தருமானால் அது தவறுதலாகப் புரிந்து உள்ளது என்றதான் சொல்ல வேண்டும்.
புரிதலுக்காக வேண்டி கருத்தைச் சொன்னவரிடம் தாம் விளங்கியதை நேரடியாகத் திருப்பிச் சொல்லும்போது சொன்னவர் கருத்திற்கேற்ப தன் புரிதலைத் திருத்திக்கொள்ளலாம். மேலும் புரிதலுக்காகவும் சந்தேக கேள்விகள் கேட்டும் விளங்கிக் கொள்ளலாம்.
சொன்னவர்கள் காலம் கடந்து இருக்குமானால் அவர்கள் வழித்தோன்றல்கள் மூலமும் அல்லது மற்றவர்கள் விளங்கியவர்கள் அவர்களிடம் அக்கருத்தின் குணமான உதாரணமாக எல்லோருக்கும் நன்மை பயக்குதல் அவர் மூலமும் நிகழ்ந்தால் ஏற்றுக்கொள்ளலாம்; விளங்கிக்கொள்ளலாம்.
மாறாக அறிவு மயக்கம் தரும் அல்லது எதையும் சொல்லும் திறமைமிகு ஆற்றலாலும், அதனை செவியுறும் விபரம் குறைந்தவர்கள் அவர்களால் மறுக்கத்தெரியாததாலும், சிலவற்றால் கட்டுப்பட்டும் இருக்கும் சிலராலும், உண்மை அதனினின்றும் விலகி விளங்கியவர்களின் போலிக் கருத்தில் சிக்குவது தவிர்க்க இயலாது.
இவ்வாறுதான் பெரும்பாலும் ஒரு உண்மைக் கருத்தின் உண்மையிலிருந்து விலகி தப்புகளும் தவறுகளுமாக விளங்கிக்கொள்வதில் ஏற்படுகின்றது.
ஒன்றைபற்றி ஒருவரிடம் விளக்கம் கேட்டால் அதை அறிந்தவர், சொல்லும் திறமை குறைந்து இருந்தால் அவர் விளக்கம் எடுபடாது. அதே நேரத்தில் சொல்லும் திறமை மிகுந்தவர் தவறாக விளக்கம் தந்தால் அது விளக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நாம் பெரும்பாலும் நம்மை அன்மித்தவரிடம்தான் முதலில் விளக்கம் கேட்ப்போம் அல்லது நமக்கு பழகப் பட்டவரிடம்தான் விளக்கம் கேட்ப்போம். அவர்கள் வழிகாட்டும் முறையில்தான் நம் விளக்கங்கள் இருக்கும்.
இது போன்றவர்களிடம் விளக்கம் கேட்பது தகுதியானதா என்பதைப் பற்றி பெரும்பாலும் பலர் சிந்திப்பதில்லை. ஒருவரிடம் விளக்கம் கேட்பதானால் அவர் கல்விமானாக இருப்பது மட்டும் பொருத்தமில்லை. அவர் நல்லவராக இருக்க வேண்டும்.
நல்லவர் என்றால் அவரின் வாழ்க்கையில் தன் குடும்பதாருடனும், மற்ற பிற மனிதருடனும் இவர் பழகும் விதம், அவர் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட நலன்கள், இவைகளை வைத்து அவரைக் கணித்து விடலாம். நல்லவர் யாருக்கும் துன்பம் தரமாட்டார். இவர்கள் போன்றவர்களிடம் விளக்கம் கேட்டால் அவர்கள் வழி காட்டும் முறை சரியானதாக் இருக்கும்.
திரும்ப திரும்ப ஒரு போலிக் கருத்தை அடிக்கடி வலியுறுத்திப்பேசினாலும் அதைக் கேட்கும் அக்கருத்தை புதிதாக கேட்பவர்கள் அதுப் பற்றியே தன் சிந்தனையைச் செலுத்தும் போதும் அக்கருத்து விரும்பப் படலாம். போதைக்கு அடிமையானவன் ஆரம்பத்தில் அரைகுறையாகப் பிடிக்காமலும் ஆனாலும் ஓர் ஆசையில், அடிமையானவர் நிர்பந்தத்தில்தான் போதை வஸ்த்தை அருந்துவான். பின்னர் அதற்கு அடிமையாகி அதுதான் அவனுக்கு மிக உயர்வானப் பொருளாகத் தெரியும். திரும்ப திரும்ப பார்க்க கழுதைகூட அழகாகத்தான் தெரியும்.
போலியை உண்மை என நம்பி, அதனைப்பற்றியே அப்போக்கிலே அதற்கு ஒத்த சாதகமான விதத்தில் சிந்தித்து, அதில் மயங்கி அதனை விட்டு மீளமுடியாமல் இருப்பவர்கள், அதிலிருந்து, ( தான் போலியை உணர்ந்து; அறிந்து) வெளி வருவது மிகக் கடினம். பொது உண்மைகளை மறுத்தும் எதிர்த்தும் பேசுவது அந்நிலையில் தவறாகத் தெரியாது. இவ்வாறான நிலைதான் மிகப் பரிதாபத்திற்குரியது.
இதனை எப்படிப் புரிந்துக் கொள்வது ?
நபிதாஸ்

தொடரும்...
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
விளங்கிகொள்ளும் கருத்துகள் குறித்த விளக்கம் அருமை !
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
விளங்கி கருத்திட்டமைக் குறித்த வாழ்த்தினுக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்...
தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteபோலிகள்.
இன்று எல்லாமே போலியாகவே தெரிகின்றது, உண்மையாக இருக்க தகுதியும் திறமையும் வேண்டும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
ஆம் !
Deleteதகுதியும் திறமையும் வேண்டும்.
அதனுடன் தெளிவும் வேண்டும்.
நன்றி, கருத்திட்டமைக்கு.
தெளிவோடு தூய்மை இருந்து விட்டால், அதை விட வேறு ஏதும் உண்டோ?
Deleteதூய்மை, தெளிவு, தகுதி, திறமை.
Deleteஅட, போங்க, மிகவும் சிரமமும்க, என்ன செய்வது, புதியதாக ஒரு கட்சி ஆரம்பிக்கலாமா?
பொது மக்களிடம் இன்று உள்ள (Trend) போக்கு என்ற தெரியுமா?
Deleteஎந்தக் கட்சி அதிக பணம் தருதோ அதிலே சேருவோம், அல்லது அதுக்கே ஓட்டு போடுவோம்.
இது உருப்படவா அல்லது வேறு எதுக்குவோ?
ஆனால் ஒன்று மட்டும் தெரியுது,
Deleteஅது என்ன தெரியுமா?
நீங்களும் நானும் பேசி ஒரு பலனும் இல்லை,
தண்ணி அடிக்கிறவன் பேசினால் அதில் பலன் இருப்பதாக சில பொது மக்கள் நினைக்கின்றனர்.
யாரும் எக்கேடும் கேட்டு போகட்டும். நமக்கு ஏன் நேரம் வேஸ்ட்.
Deleteநாம் நம்முடைய வேலையை சரியாக செய்வோம்.அடுத்தவீடு தீப்பற்றி எரியட்டும், இல்லே நாசமாக போகட்டும்.
ஒத்துழைப்பு இல்லே என்றால் இப்படித்தான்.
உங்கள் ஆதங்கம் கோலமிட்டுவிட்டது. வேதனைகளை உங்களில் உள்ளபடி தெரிவித்திருக்கிறீர்கள்.
Deleteதூய்மை, தெளிவு, தகுதி, திறமை. இவைகள் இருக்கும்போது துணிவு உண்டாகும். ஒவ்வொரு மனிதனுள்ளும் உண்மை இருக்கிறது. அது அவனிடம் பேச இவன் செவிசாய்த்தால் கருத்துப் போலிகள் வெருண்டோடும். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள். அதுபோல் ஒரு நாள் மாற்றம் வந்து தானேப் போகும்.
கடைதேருவிலே மீன் நிறைய விக்குதாம், போட்டி போட்டு வாங்க ஊரே திரண்டி இருக்கு.
ReplyDeleteஆனால், பொது சேவைக்கு ஒரு பிள்ளை இல்லை.
இரவு ஒரு மணிக்கு காளி கோயில் திடலில் விருந்து வைத்தால் ஊரே திரண்டு போய் சாப்பிடும்.
Deleteபகல் ஒரு மணிக்கு EBக்கு போகலாம் என்றால் ஒரு பிள்ளைகூட இல்லை.
என்னமோ நடக்குதுங்க, என்னாண்டு கேட்டா அடிக்க வர்றாங்கங்க.
Deleteஉணவை ருசிக்க ஆட்கள் உண்டு. அறிவை ரசிக்க உண்டு, ஒன்று, இரண்டு என்று என்கிறீர்கள்.ஒன்றில் விதை நெல்லாக ஒரு நெல்தான் பயன்படுகிறது. பதறுகள் இப்பொழுது அதிகம் உண்டாகின்றது. காரணம் அதிக போலிகள் வழி நடத்துவதால். ஆனாலும் உண்மைகள் சுபாவத்தால் பகட்டாவிட்டாலும், அதன் வெளிச்சத்தில் தான் நன்மைகள் தெரிகின்றது. என்னதான் நீங்கள் துவண்டது போல எழுதினாலும், உரிமையின் காவலர் உண்மையை நிலைநாட்ட அதிக சிரத்தையில் தான் நிற்கின்றீர்கள். அவ்வாறாக இருந்தால்தான் இவ்வாறு உங்களால் எழுத தோன்றும்.
Delete