kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, February 3, 2014
பணமா அது எப்புடின்னு தெரியுமா !?
ஹலோ, பணத்தை வைத்து இவ்வளவு வேலைகளையும் செய்கின்றீர்களே, அந்த பணத்தப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா ?
கொஞ்சம் பொறுங்கள். பணம் பத்தும் செய்யுமாமே ? உங்களுக்கு அந்த பத்தும் தெரியுமா ? தெரிந்தால் கொஞ்சம் பகிருங்களேன்.
பணம் பத்தும் செய்யும், இது பழமொழி. அது பாதாளவரைக்கும் போகும், பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும், இதை எல்லோரும் அடிக்கடி சொல்வதுண்டு, பணம் அது ஒன்றும் இல்லை, ஆனால் அது இல்லாமல் ஒன்றும் இல்லை. எப்படி பார்த்தாலும் பணம் தேவைப்படுகிறது.
இன்று மனிதனின் மிகவும் முக்கியமான மற்றும் அடிப்படை தேவை எது என்றால் அது பணம், பணமில்லார்க்கு இந்த உலகம் இல்லை என்ற நிலை வந்து விட்டது.
பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றை எளிதாகப் பரிமாறிக்கொள்ளவும், கடன்களைத் திருப்பித்தரவும் சரி சமமான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு.
வரலாற்றுப்படி சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின்போது பண்டமதிப்பு பணம் நிறுவப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து பண அமைப்புகளும் ஆணைத்தாள் பணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. தனக்கான தனிமதிப்பு எதுவும் இல்லாத காசோலை அல்லது கடன் பத்திரம் போன்றே ஆணைத்தாள் பணத்திற்கும் ஒரு பண்டமாக மதிப்பு எதுவும் இல்லை. சட்டபூர்வமான தனது மதிப்பை அரசின் ஆணையாலேயே பெறுகிறது. எனவே இது அரசாணை இடப்பட்ட நாட்டின் எல்லைகளுக்குள்ளே மட்டுமே செல்லுபடியாகும். இத்தகைய அரசாணைகளால் ஆணைத்தாள் பணம் நாட்டின் எல்லைகளுக்குள் தேவையான பொருட்களையும் சேவைகளையும் வாங்கவும் விற்கவும் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.
சில பேர் அந்திவேளை, சந்திவேளையில் பணம் கொடுக்க மாட்டார்கள் இதை ஒரு கெட்ட சகுன செயலாக கருதினார்கள், ஏன் அப்படி கருதினார்கள்?
குறிப்பாக, மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்குகளின் உதவியுடன் முன்னோர்கள் கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டனர், எனவே இரவு நேரத்தில் எவ்வளவு கொடுத்தோம் வாங்கினோம் என்பதில் பல சிக்கல் ஏற்பட்டது. தற்போது மின்சார வசதி இன்னும் சோலார் வசதி உலகம் முழுவதும் இருந்தாலும் இன்னும் அந்தப் பழக்கம் பல இடங்களில் இருந்து வருகின்றது, அதாவது மாலை மணி 5.30 ஆகிவிட்டால் போதும் எந்த பண பட்டுவாடவும் நடக்காது. இது ஒரு மூடநம்பிக்கை என்றே சொல்லலாம்.
மனிதன் பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கின்றான்/ஈட்டுகின்றான்/பெறுகிறான், நல்ல வழிகளிலும், தீய வழிகளிலும் பெறுகிறான்..
உடல் உழைப்பைக் கொண்டு உண்மையாக, பாதி உடல் உழைப்பும் பாதி அப்படியும் இப்படியும், பிறரை ஏமாற்றி, கட்டப் பஞ்சாயத்து, திருடுதல், இன்னும் அனேக வழிகளில் பெறுவதை பல ஊடக வாயிலாக அறிகின்றோம்.
சில பேர் தாமே முதலாளியாகவும் தொழிலாளியாகவும் வீட்டிலே இருந்துகொண்டு அவரவருக்கு தெரிந்த முடிந்த வேலைகளை செய்து கொண்டு பணத்தை சம்பாதிக்கின்றனர், நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும் என்று யாரும் சொல்ல அதிகாரம் கிடையாது, இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் விரும்பும் நேரம் பணி செய்து விட்டு விரும்பும் நேரம் ஓய்வு எடுத்து விட்டு, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு, சிறப்புடன் இருக்கும் சிலரை பார்க்கலாம். இப்பேர்பட்டவர்களை நீ இந்த வேலையைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் அழுத்த முடியாது, மாதம் இவ்வளவுதான் சம்பளம் என்ற ஓர் அளவே கிடையாது, அவர் திறமைக் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்.
பஸ் ஸ்டான்ட், கடைத்தெரு போன்ற இடங்களில் பணத்திற்க்காக ஒரு கூட்டத்தினர் வந்து பாட்டு பாடுவது, குஸ்த்தி போடுவது, கம்பி வளையத்துக்குள் இரண்டு பேர் ஒன்றாக நுழைந்து வெளிவருவது, குரங்கை வைத்து நடனம் காட்டுவது போன்ற காட்சிகளை பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது, அதே சமயம் ஒரு ஐந்து பைசா, ஒரு ரூபாயாவது போடாமல் அந்த இடத்தை விட்டு நகராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், இதுவும் ஒரு வகையில் பணம் ஈட்டுதல்தான்.
அப்படியானால் பணம் யாருக்கு சொந்தம் என்று பார்த்தால் யாருக்குமே சொந்தம் கிடையாது என்றே சொல்ல முடியும். ஆனால் பணத்தை மனிதன் எதுவுக்கெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து கொள்கின்றான், ஆனாலும் பணத்தைக் கொண்டு செய்ய முடியாத காரியம் அநேகம் உண்டு அதில் ஒன்றை மட்டும் இங்கு நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இப்போ உள்ள சூழலில் மனிதனுக்கு முக்கியமானது தண்ணீர், இது வெகுவாக குறைந்து வருகின்றது, போதிய மழை இல்லை, நிலத்தடி நீர் படுவேகமாக இறங்கி வருகின்றது இது இப்படியே நீடித்தால் கடும் பஞ்சம் வரும்.
உலக அரங்கில் எவ்வளவோ முயற்ச்சித்து வருகின்றனர். ஆனாலும் முடியவில்லை. பணத்தை சிலவு செய்து எங்கெல்லாம் நீர் கிடைக்கும் என்று பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றது, சில இடங்களில் நீர் குறைவாகவே கிடைக்கின்றது பல இடங்களில் நீர் அறவே இல்லை. அதிகளவு பணம் சிலவு செய்தும் பலன் இல்லை.
இறைவன் தண்ணீரை இரண்டு மூலக்கூறுகளை வைத்து படைத்து இருக்கின்றான், “ஹைட்ரஜன் இரண்டு பங்கு, ஆக்சிஜன் ஒரு பங்கு” இது இப்படி இருக்க, தண்ணீரைப் பெற நாம் பணம் கொடுத்து இரண்டுபங்கு ஹைட்ரஜன்வாயு-ஒருபங்கு ஆக்சிஜன் வாயு இந்த இரண்டையும் விலைக்கு வாங்கி கலந்துவிட்டால் தண்ணீர் கிடைத்து விடுமா? தண்ணீருக்கு பதிலாக வேறு ஒரு வாயு உருவாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காற்று எப்படி இறைவனால் இலவசமாக கொடுக்கப்பட்டதோ, அப்படியே நீரும்.
ஆக, பணத்தைக் கொண்டு நீரை விலைக்கு வாங்கலாமே தவிர, உருவாக்க/தயாரிக்க முடியாது, இதுதான் உண்மையும்கூட.
உலகம் செழிக்க, நாடு செழிக்க, உயிர் இனங்கள் செழிக்க, சமூகம் செழிக்க, பணத்தைக் காட்டிலும் தண்ணீரே என்று உணர்ந்து நாம் எல்லோரும் அந்த நீரைப் பெறுவதற்கு மழைக்காக இறைவனிடம் வேண்டிடுவோம்.
முடிவாக ஒன்றை மட்டும் இங்கு சொல்ல விரும்புகின்றேன்.
அப்படிப்பட்ட பணம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், இருப்பவர்களுக்கு நன்மையான வழிகளிலும், அவரை சார்ந்துள்ள குடும்பங்களுக்கு, சமூகத்துக்கு, சமுதாயத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு நன்மையாக இருக்கும்.
இருக்கக்கூடாத இடத்தில் இருந்தால், இருப்பவர்களுக்கு தீமையான வழிகளிலும், அவரை சார்ந்துள்ள குடும்பங்களுக்கு, சமூகத்துக்கு, சமுதாயத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு தீமையாக இருக்கும்.
என்னங்க, நான் சொல்வது தவறா ?

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

Subscribe to:
Post Comments (Atom)
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை... மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை...
ReplyDeleteநல்லதொரு ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்...
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteபோக போக தெரியும், அந்த பூவின் வாசம் புரியும்.
பணத்தின் குணத்தை பற்றி சொன்ன விதம் அருமை !
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteபணத்திற்கு எத்தனை குணங்கள்?
பணத்தைப் பற்றிய விளக்கமான நல்லதொரு ஆக்கம். அருமை.
ReplyDeleteஇன்றைய சூழ்நிலையில் சொந்தபந்தம், அன்பு,பாசம், உறவு,நட்பு அனைத்துமே,அதிகபட்சம் பணம் தான் நிர்ணயிக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஉண்மையை சொன்னீர்கள்.
பொருளிலார்க்கு இவ்வுலகில்லை
ReplyDeleteஅருளிலார்க்கு அவ்வுலகில்லை
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteமனிதர்களுக்கு பயம் இல்லையே.
நீங்கள் சொல்வது தவறில்லை. இருக்ககூடாத இருக்க வேண்டிய இடங்கள் என்று எழுதி இன்றைய சமுதாய ஓட்டங்களின் நிலைகள் பற்றிய சிந்தனைத் தந்தீர்கள். நல்ல ஆக்கம்.
ReplyDeleteஇருக்க வேண்டிய நல்ல குணம் உள்ள இடத்தில் பணம் தங்க மாட்டேன் என்கிறதே ! இன்றைய காலகட்டத்தில் அவனுக்கு பெயர் பிழைக்கத் தெரியாதவன், ஏமாளி.
மனிதர்களின் நிம்மதியை சம்பாதிக்கின்றனர் பணத்தை மட்டும் சம்பாதிக்கின்ற பலர். பணத்தை எப்படியோ, எப்படியும் சேர்க்கின்றனர் பலர். காரணம் பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை. இக்கருத்து வெளித்தோற்றத்திற்கு மட்டுமே. இவர்கள் உள்ளில் பலதை இழந்துக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் உள்ளே நாற்றமெடுத்த மீன் வெளிய ஈக்கள் மொய்க்கும். இவர்கள் நோயை தந்துவிட்டு போவார்கள்.
மனிதர்கள் நிம்மதியாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதை சம்பாதிப்பவர்கள் சிலர். காரணம் அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்பதால் அல்ல. இவர்கள் சுபாவமே அப்படி. அருளுக்காக இவர்கள் வாழவில்லை. ஆனாலும் அருள் இவர்களைச் சுற்றிய நிற்கும். இவர்களோ கனிந்த பலாப்பழம் வெளியே மனிதர்கள் மொய்ப்பார்கள். இவர்கள் கடைசி வரைக்கும் நன்மைகளைத் தருபவர்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteகாற்றில் பறந்து வருகின்ற விதை நல்ல நிலத்தில் விழுந்தால் அது நல்ல நிலையில் முளைத்து பலன் தரும், மாறாக தீய நிலத்தில் விழுந்தால்?
தாளாய் நினைப்பது தாளா அதுவெகு
Deleteநாளாய் உழைத்ததை நானிங்குச் சேமித்தேன்;
தூளாய் நினைத்துத் தொலைக்கவும் வேண்டாமே
கேளாய் மகனேநீ கேள்
குழந்தைகளிடம் பணம் என்னும் காகிததைக் கொடுத்தால், அவர்கட்கு அஃது ஒரு காகிதம் என்றே கருதும்; அதனைக் கிழித்தும் விடலாம்; அதன் மதிப்பு அறியாத அக்குழந்தை; இதுவே போல் தான், இம்மையில் செய்யும் நன்மைகட்கு மறுமையில் கூலி என்னும் மதிப்பு உண்டு என்பதை அறியாமல் இருக்கின்றோம், அந்தப் பணத்தை வெறும் காகிதம் என்று கருதும் குழதையைப் போன்றே; அதனாற்றான் “நன்மை” என்றால் அதன் மதிப்பை அறியாமல் விட்டு விட்டோம்; அனைவர்க்கும் நன்மையின் மதிப்பை அறிய அல்லாஹ் அருள்வானாக!
உண்மைதான் மச்சான்.
Deleteபணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம்
ReplyDeleteகாசுமேலே காசுவந்து கொடுக்கிற காலமிது
காசேதான் ,,,,
துட்டு துட்டு ,,,
மணி மணி மணி
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteகாசுமேலே காசுவந்து கொடுக்கிற காலமிது. அது வட்டியா?
MONEY MAKES MANY THING
ReplyDeleteBUT DOES NOT MAKE EVERYTHING
மச்சான் சரியாக சொன்னீர்கள்.
Deleteபணத்தின் குணத்தைப் பக்கம் பக்கமாக அச்சிட்டு விட்டீர்கள் மச்சான்!
ReplyDelete