.

Pages

Monday, February 17, 2014

அறியாமையினால் பிரிவுகளா !?

II அறிவுத்தேன்
ஒரு சொல் பல கருத்தைத்தரும். அதனால் அவரவர் அறிந்த அல்லது அவரவர்களின் நோக்கத்திற்கு ஏற்ப கவிதை வார்த்தைகள் அதற்கு பொருள் கொள்கின்றனர்.

கண்ணில் கோளாறு இருக்கும் போது சிலவைகள் இரண்டாகத் தெரியும். சிலருக்கு தெளிவாகத் தெரியாது. சிலதுக்கு பொருளின் வண்ணம் தெரியாது. கண்ணின் தன்மைக்கேற்ப ஒரே பொருள் அது எவ்வாறு உள்ளதோ அவ்வாறு உள்ளபடி அவர்களுக்குத் தெரியவில்லை.

இருட்டில் கிடக்கும் கயிறு பலருக்கு பாம்பாகத் தெரியும். காரணம் இரவு நேரத்தில் தனிமையில் இவனை அறியாமலே ஒரு வித பயம் கவ்வும். அதனால் அரண்டவன் கண்ணுக்கு அது பாம்பாகத்தான் தெரியும்.

மனதில் தெளிவாக எச்சலனமும் இல்லாதவனுக்கு அது பாம்பாகத் தெரியாது. அதுப் போல ஒரே வார்த்தை அல்லது வாக்கியத்திற்கு பலர் பல மாதரிக் கருத்துக் கொள்கின்றனர். தெளிவான உள்ளம் சலனமற்றது. அதற்கு உண்மைகள் புரியும்.

ஒரு கருத்தில் தெளிவடைய தாம் அறிந்ததைத்தான் சொல்லி விளக்க வேண்டும். அதன்படி போலிகள் எவ்வாறு தான் போலி என்றே அறியாமல் உருவாகின்றார்கள் என்பதை விளக்குவதற்காக அறிந்த இஸ்லாம் மார்க்கத்தை ஈங்கு எடுத்தாள்வதில் தவறாக என்பதற்கு இணங்கி இஸ்லாமிய கருத்தொன்று எழுதப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கத்தில் காயத்திரி மந்திரம் என்ற கலிமா. அது ஒரு இருவரி இஸ்லாமிய கொள்கையின் மந்திரச்சொல் ( மந்திரம்=அறிவு ).

கலிமா அதன் விளக்கம் எத்தகையது என்பதை விளங்கிக்கொள்ள இப்பிரபஞ்சமும் ஒரு தட்டிலும் அக்கலிமா மறு தட்டிலும் வைக்க கலிமா உள்ளதட்டே தாழும், என்று கூறப்படும்.

மேலும் அக்கலிமா சொன்னவர் சுவர்க்கவாதி என்றும் சொல்லப்படும். கலிமா சொன்ன இஸ்லாமியர்கள் அவர்களே நாளை மறுமையில் இறைவனின் சன்னதியில் அவனின் தீர்ப்புக்காக இருப்பார்கள் என்றும் உள்ளது. இதன் பொருள் என்ன ?

ஒன்றை ஒருவர் சொல்கின்றார் என்றால் அதைப்பற்றி அறிந்ததை அவர் உணர்ந்து சொல்வார். அதுபோல் கலிமாவை அறிந்து, புரிந்து சொல்கின்றவர் வாழும் போதே சுவர்க்கவாதி என்றப் பொருள் தானே அவ்வுண்மைகளில் உள்ளது என அறிந்தோர் உணருவர்.

ஒவ்வொரு இஸ்லாமியரும் கலிமா சொன்னவர்கள். அவர்கள் வாழ்வில் அவர்கள் சுவர்க்கவாதிகள் போல் உள்ளனரா என்று அவர்களே உற்று நோக்கினால் தன்நிலை தெரியும்.

ஒன்றுபட்டு அமைதியுடன் ஓர் உயிர் பலவுடலாக இருக்க வேண்டியவர்கள் கலிமாவை அறிந்த நிலைக்கேற்பவே இன்று பல குழுக்களாக உள்ளனர். இது போன்றே பல மதத்திலும் பல குழுக்கள் இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

நற் போதனையில் பேதங்கள் நீங்கி வாழ வேண்டிய மனித இனம் இன்று அறிந்தோம் என்ற அறியாமையில் பலப் பிரிவுகள் தன்னுள் கொண்டுள்ளது.

மனிதனில் இந்த மாற்றங்களுக்கு காரணம்தான் என்ன ? அதனைப் போக்க வழிதான் உண்டா ?
தொடரும்...
நபிதாஸ்

10 comments:

  1. தெளிவாக விளங்கிகொள்ள முயற்சிப்போம்...

    தவறான புரிதலில் ஏற்படும் விளைவுகள் பற்றிய விளக்கத்தை ஒரு தனிப் பதிவாக கொண்டு வர கட்டுரையாளர் முயற்சிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் அதனையே இறைவன் விரும்புகிறான்.
      "நான் மறைந்த பொருளாக இருக்கின்றேன், என்னை அறியப்பட நாடினேன். அதற்காத் தான் படைப்புகளைப் படைத்தேன்.", என்று இறைவன் கூறுவதை பலரும் அறியாமல் இருக்கமாட்டார்கள். இதன் கருத்தே தெளிவாக அறிந்துக்கொள்ளுதல் தான். அது மனிதனின் மகா கடமை என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

      காயத்திரி மந்திரத்தில் (கலிமாவில்) இறைவன், அவன் திருத்தூதர் அவர்கள் தான் உள்ளனர். எனவே அந்த இரண்டையும் தெளிவாக அறியாதவரைக்கும் இஸ்லாம் புரியாது. அதை உணர்ந்து சொன்னால்தான் இஸ்லாமியன். இதுபோலவே மற்ற மூல மந்திரங்களும் அவரவர் அறிந்து இருக்க வேண்டும்.

      தாங்கள் கேட்டுக்கொண்டதர்க்கினங்க தவறான புரிதலில் ஏற்படும் விளைவுகள் பற்றிய விளக்கத்தை ஒரு தனிப் பதிவாக கொண்டு வர முயற்சிக்கின்றேன.

      Delete
  2. ஓரிறையை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் ஏன் பல பிரிவுகளானார்கள்? என்று நானும் பலநாட்களாக ஆராய்ந்து பார்க்கிறேன்.. பதில் இல்லை..

    ஆனால் ..சிலரின் சதி வலையில் முஸ்லிம்கள் பிரிவினை என்ற அரக்கணுக்கு இரையாகி விட்டனரோ! என்பது மட்டும் புலப்படுகிறது.

    தற்போது ஒற்றுமையின் நிர்பந்தம் உள்ளதை ஒற்றுமையை விரும்பாத முஸ்லிம்கள் உணர வேண்டும்.

    மிகச்சிறந்த தெளிவு பெறும் கட்டுரை,.

    ReplyDelete
    Replies
    1. நல்லது அன்பரே.
      ஓரிறை ஏற்றுக்கொண்டவர்கள் முஸ்லிம்கள்.

      இதில் ஓர் இறை எப்படி என்பதில் அவரவர் உணர்ந்த நிலையில் பிரிவுகள். உருவமில்லாதவன் என்றும், உருவம் உள்ளவன் என்றும், உருவம் இன்னது என்று சொல்லமுடியாது வானத்தில் எங்கோ இருக்கின்றான் என்றும் போன்ற பிரிவுகள்.

      பெருமானாரை தன் உயிரைவிட மேலானவர்கள் என்றும், தான் போன்று சக மனிதர் என்றும், பெருமானார் இல்லையேல் வேறு ஒரு நபர் இறைத்தூதராக வந்திருப்பார் என்றும், பெருமானரை புகழ்தல் மட்டும் கூடாது என்றும், பெருமானாருக்கு மறைவான அறிவுகள் இல்லை என்றும், இதுபோல் பெருமானரை புரிந்துக்கொள்வதில் தான் இன்னும் பல அதிகப் பிரிவுகள்.

      இவ்வாறு பிரிவினைகள் ஏற்படக் காரணம் தன்னை முக்கியப்படுத்துதல் போன்றவைகளிலாலும் ஏற்படுவதைக் காணலாம்.

      அபுஜகில் இறைவன் ஒருவன் என்பதை ஏற்றுக்கொண்டான். ஆனால் இறைத் தூதரை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தனக்கென்று ஒரு கூட்டம் உள்ளது அதற்கு தான் தலைவன் என்பதை விட்டுக்கொடுக்க அவன் மறுத்தான் என்பதே உண்மை.

      சைத்தானும் இறைவனை ஏற்றுக்கொண்டான். அனால் ஆதமுக்கு இறைவன் சஜ்தா செய்யச் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. தான் ஆதமை விட உயர்ந்தவன் என்று தற்பெருமைக் கொண்டான். இறைவன் சொல்வதெல்லாம் வணக்கம் என்பதை அவன் ஏற்கவில்லை.

      ஆகத் தாங்கள் எழுதிய பிரகாரம் தான் என்ற தற்பெருமையும், தான் தலைவன் என்ற அதிகார உருசியும் சதிகார வலை எனக் கொள்ளலாம்.

      கலிமாவில் முதல் அடியை எறுக்கொன்டாலும் பின் அடியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவன் இஸ்லாமியன். பொதுவாக பெரும்பாலும் முதல் அடியை புரிந்தாலும் புரியாவிட்டாலும் எல்லோரும் ஏற்பர். ஆனால் பின் அடியை புரிந்து ஏற்பதில் பலப் பிரிவுகள்.

      இறைத் தூதரை முக்கியப்படுத்தாமல் தன் பெயரிலே தன் ஆதரவாளர்களை உணரும்படி செய்துக்கொண்டு சிலர் உள்ளனர் என்பது தெரியாமல் யாருக்கும் போகாது.

      Delete
  3. சகோ.ஜாஃபர் அவர்களின் விளக்கம் சரியானவையே.!

    ஓரிறைக் கொள்கை என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சிலர் சிர்க்கான சில வழிபடுதலும் செய்வதால் தான் குழப்பம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாது ஓரிறைக் கொள்கையாளர்களிடமும் சரியான ஒற்றுமையின்மை, போட்டி,பொறாமை என்று பிரிவினையாக்கிக் கொள்கின்றனர். அனைவரும் புரிந்து ஒருங்கிணைய வேண்டும். அதற்க்கு துவா செய்வோம்.

    ReplyDelete
  4. சிலர் எல்லாவற்றையும் படிப்பார்கள். ஆனால் படிக்கும்போது தன் மனதில் என்ன உள்ளதோ அந்த நினைப்பிலே தான் படிப்பார்கள். அதனால் அவர்களுக்கு அந்த ஆக்கத்தின் கருத்துக்கள் கடைசிவரைக்கும் புரியாது. இதுவும் ஒருவகை போலிதான். தான் நம்பினது எதுவோ அதுவே உண்மை மற்றவைகள் பொய்மை என்பதுபோலவும் சிலர் இருப்பார்கள். எதனையும் துணிந்து ஆழச்சிந்திப்பது இதுபோன்றவர்களிடம் இல்லை. சிந்திக்கும் ஆற்றல் எல்லோருக்கும் உண்டு. அதனை பயன்படுத்தும் விதத்தில் அது அதனதன் பலன்களைத்தரும். அறியாமைகளை அறியாமலே வளர்க்கும்போது அதுவே அறிவாக வழிநடத்தும் போலி நிலை. அதனைப் புரிவது அந்நிலையில் இருப்பவருக்கு மகாக் கடினம்.

    ReplyDelete
  5. அறிஞர்கள் கூடியதால் குழப்பம் தான் கூடியது.

    ReplyDelete
  6. அறிவு வழிகாட்டும். நல் வழிகாட்டுபவை அறிவு. இறை பொருத்தத்தை அடைய காட்டும் வழி அறிவாளிகள், அறிஞர்கள் வழி. இறை பொருத்தத்தை அடைய வழி காட்டுபவர்கள் அறிஞர்கள். அங்கு அமைதிதான் நிலவும். அதைவிடுத்து குழப்பங்கள் நிகழ்ந்தால் அவர்களை எங்கனம் அறிஞர்கள் என்று கூறுவது ? குழப்பம் நிகழ்ந்தால் அது குழப்பவாதிகள் செயல்.
    ஒரு செயலில் குழப்பம் நிகழ்ந்தால் அது குழப்பவாதியின் செயல். மாறாக அமைதி நிலவினால் அது அறிஞர்களின் செயல்.

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    அருமையான பதிவு.


    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  8. உண்மைகளை உள்ளபடி உள்வாங்கும் உயர்ந்த உள்ளம் அருமை.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers