.

Pages

Thursday, February 6, 2014

புறத்தோற்றம் !?

இறைவனின் அருள் கொடைகளில் செல்வம், ஆரோக்கியம், மனை, மக்கள், அதில் மனிதனின் வெளித்தோற்றமும் அழகாய் மிடுக்காய் அமைவதும் அவனின் கிருபையே. ஆள் பாதி ஆடை பாதி என்பது நம் மானுட வர்க்கத்திற்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. first impression is best impression என்பார்கள் நம்முடைய முகத்தோற்றம் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் சந்திக்கும் நபரிடம் நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சுலபமாக இருக்கும் !

நம்மீது அவர் நல்ல அபிப்பிராயம் கொள்ளாத பட்சத்தில், நம் கருத்து எவ்வளவு சரியாய இருந்தாலும் எடுபடாமல் போய்விடும் !? இது நேர்முக தேர்வு விஷயத்தில் மிக பொருத்தமாக இருக்கும் சிலருக்கு எவ்வளவு உயர்ந்த ஆடை உடுத்தினாலும் மிடுக்காய் தெரியமாட்டார்கள் அதுதான் வெளி தோற்றம் சிறப்பாய் அமைந்து இருப்பவர்கள் இறைவனின் அருள் பெற்றவர்கள் என்றேன்.
     
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் திருடனை அவன் [ திருட்டு ] முழியிலேயே கண்டுகொள்ளலாம். பாராரியை அவன் தோற்றத்திலேயே சாதாரணமாக காணலாம். ஒவ்வொருவரின் உத்தியோகத்திற்கும் ஒரு உடை வழங்கப்பட்டுள்ளது. அதைவைத்து கண்டுகொள்ளலாம் இதுவெல்லாம் வெளி விஷயம் இனி சொல்ல இருப்பது முக்கியமான விஷயம்

எதிர்மறையான விஷயம் [ காண்போம் ]
   
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பண்டைய மொழி அதாவது உள்ளே உள்ள விஷயம்தான் வெளியே தெரியும் என்பார்கள் ஆனால் வேஷதாரிகள் தன் அறிவு நிலையை தன் ஆன்மீக நிலையை கல்வி கற்ற நிலையை பறைசாற்றுவதற்காக தன்னை முற்றும் துறந்தவன் என்றும் எதிலுமே நாட்டம் இல்லாதவன் போல் காட்டிக்கொண்டும் வேடமிட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களோ வேடதாரியின் மேல் மோகம் கொண்டு வீழ்ந்து விட்டில் பூச்சிகளாய் மாய்கின்றனர் பாவிகள் செய்யும் குற்றத்திற்கு பழமொழியை குற்றம் சொல்ல முடியுமா ? கோடி கோடி சொத்துக்கள் உள்ள ஆசிரமங்களுக்கு பெயர் மடம் அங்கே இருப்பவர் சாமியார் இது எதிர்மறை இல்லையா !?
       
இரண்டாம் விஷயம் ஆள் பாதி ஆடை பாதி என்பது உண்மையான விஷயம்தான் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்கள் மாணவர்களிடம் பேதங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளிச்சீருடை கொண்டுவந்தார். இன்று தமிழகத்தில் ஆங்கில வழிக்கல்வி பயில்விக்கும் பள்ளிக்கூடங்கள் நிறைய முளைத்து இருக்கின்றன. அங்கே  ஆங்கிலத்தைத்தான் முதல் பாடமாக  பயில்விக்கிறார்கள். சரி ஆங்கிலேயரின் சூழலுக்கேற்ற பழக்கமான காலுக்கு சூ, மோசா, கழுத்துக்கு இறுக்கி பிடித்த டை இடுப்புக்கு பெல்ட் அத்துனையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும் நம் தேசத்தில் என்பது எதிர்மறையான விஷயம் அல்லவா ? [ தேவையா நமக்கு ! :) ]

உள்ளொன்றும் புறமொன்றும் வேண்டாம் அகத்தின் அழகை முகத்தில் காட்டுவோம் [ உண்மையாய் ]

மு.செ.மு.சபீர் அஹமது

17 comments:

 1. // உள்ளொன்றும் புறமொன்றும் வேண்டாம் அகத்தின் அழகை முகத்தில் காட்டுவோம் [ உண்மையாய் ] //

  சிறந்த கருத்துடன் ஆக்கத்தை முடித்துள்ளீர்கள்

  ReplyDelete
 2. சரி தான் ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
  உறவு கலவாமை வேண்டும்

  ReplyDelete
 4. // வேஷதாரிகள் தன் அறிவு நிலையை தன் ஆன்மீக நிலையை கல்வி கற்ற நிலையை பறைசாற்றுவதற்காக தன்னை முற்றும் துறந்தவன் என்றும் எதிலுமே நாட்டம் இல்லாதவன் போல் காட்டிக்கொண்டும் வேடமிட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களோ வேடதாரியின் மேல் மோகம் கொண்டு வீழ்ந்து விட்டில் பூச்சிகளாய் மாய்கின்றனர்..... கோடி கோடி சொத்துக்கள் உள்ள ஆசிரமங்களுக்கு பெயர் மடம் அங்கே இருப்பவர் சாமியார் இது எதிர்மறை இல்லையா !?//

  அன்றோ அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் தனது குடும்பத்தின் சொத்துக்கள் அனைத்தையும் இம்மக்கள் நல வாழ்விற்காக அர்ப்பணித்தார்கள்.

  இன்றைய காலகட்டத்தில் அன்னை ஹதீஜா நாயகத்தின் சொத்துக்கள் பல ஆயிரங்கள் கோடி டாலர் மதிப்பீடுகள என்று கணக்கீடுகள சொல்கிறார்கள்.

  அத்தனையும் இம்மனித குலத்திர்க்காக செலவிட்டனர். எந்த அளவிற்கு என்றால் அன்னலாருக்குப் பின் பெண்கள் குலத் திலகம் அண்ணலாரின் மகளார் அன்னை ஃபாத்திமா நாயகம் அவர்கள் தாங்கள் மிகவும் கஷ்டப்படும்போது கலிஃபா அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அவர்கள் தந்தை கஜானாவிற்கு ஒதுக்கிய அவர்களின் சொத்துக்களிலிருந்து உதவி கேட்க்க மறுப்பு நிலையைத்தான் கண்டார்கள். அத்தகைய சம்பவங்களை ஒவ்வொரு இஸ்லாமியனும் நினைத்துப்பார்க்க வேண்டும்.

  150 வருடங்கள் பலர் உதவிகளில் வேலூர் மதரச வளர்ச்சி எந்த அளவிற்கு வளர்ந்துள்ளதோ அதைவிட பெருமானாரின் போதனைகளை சரி தவறு என்பதை வைத்தே இன்று சில வருடங்களிலே சிலர் பன்மடங்கு கோடீஸ்வரர்கள் ஆகிவிடுகின்றனர். இதனைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை !

  ReplyDelete
  Replies
  1. சகோ.நபிதாஸ் அவர்களின் விளக்கவுரையாக எடுத்துக்கொள்கிறேன் ஜசக்கல்லாஹ் ஹைரன் நீண்ட ஆயுளை அல்லாஹ் உங்களுக்களிப்பானாக

   Delete
 5. பதிவுக்கு நன்றி.

  ரம்பூட்டா பழம், பலாப் பழம், இன்னும் பிற பழங்கள் புறத்தோற்றம் கரடு முரடு போன்ற முட்கள் போல் இருந்தாலும் உள் தோற்றத்தில் இனிப்பு.

  மாம்பழம், ஆப்பில் பழம் இன்னும் பிற பழங்கள் புறத்தோற்றமும் உள் தோற்றமும் இனிப்பு,

  பாகற்காய் புறத்தோற்றமும் உள் தோற்றமும் கசப்பு.

  வெள்ளரிக்காய் புறத்தோற்றமும் உள் தோற்றமும் நல்லது.

  மேலே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் ஒரு நாளும் மாறப்போவதில்லை.

  ஆனால் மனிதம் (மனிதன்) அப்படியா?

  நல்ல கருத்தோட சிந்தனையுள்ள ஆக்கம்.

  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
  Replies
  1. இரம்புட்டான் அல்லது இறம்புட்டான் (rambutan, தாவரவியல் பெயர்: Nephelium lappaceum), இரம்புட்டான் சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழமரத்தாவரம். ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும். ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

   Delete
  2. முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான பலாப் பழத்தில் எத்தனையோ மருத்துவ குணங்கள் உள்ளன.

   கண் பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிக அளவில் உள்ளது.

   இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும். நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்.

   அடிக்கடி நோய் தாக்கி அவதிக்குள்ளாகுபவர்கள் பலா பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் பெறும்.

   பலாப் பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. சில இடங்களில் சின்ன சின்ன பலாக்காய்களை விற்பனைக்கு வைப்பார்கள். அது எதற்கு என்று பலருக்கும் தெரியாது. அந்த பலாக்காயை வாங்கி வந்து கூட்டு செய்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது.

   பாலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

   பலாக்காய் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் பெற்றது.

   Delete
  3. மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. மாம்பழம் உலகெங்கும், குறிப்பாக ஆசியாவில், கோடை காலங்களில் அதிகம் சுவைக்கப்படுகிறது. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன.

   எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
   100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

   மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

   மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.
   உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

   Delete
  4. ஆப்பிள் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளிப்பழம் (ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம்) ஒரு குளிர்ப் பகுதிப் பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும்.
   மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.
   ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.


   தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்..
   மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு.

   ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க் காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது.

   Delete
  5. பாகல் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும் ஒரு கொடி. இக்கொடி வெள்ளரிக்காய், பூசனிக்காய், தர்ப்பூசனி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசீ (Cucurbitaceae) என்னும் செடிகொடி குடும்பத்தைச் சேர்ந்த கொடி. பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. சம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொரித்தோ உண்பர். பாகற்காயின் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் (hypoglycaemic activity) அறிவியலறிஞர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு உண்மையாகும்.


   ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.

   இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.
   இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.
   பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக்
   கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.
   இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய
   நோய்களை எளிதில் போக்கும்.

   Delete
  6. வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்கு அதற்கென தனிச் சுவையும் உண்டு. நன்கு சமிபாடடையக் கூடியது. சிறுநீர் பிரிவதை தூண்டச் செய்வது. இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப் படுத்தக் கூடியது.

   சாதாரணமாக வெள்ளரிக்காயை பச்சையாக கடித்துச் சாப்பிடுவது வழக்கம். சிலர் பச்சையாக சலாதாக உணவோடு சேர்த்து உண்பதுவும் உண்டு. ஆனால், வெள்ளரிக்காயை அரைத்துத் தூளாக்கும் உபகரணத்தை பயன்படுத்தி அதாவது மிக்ஸியை பயன்படுத்தி சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்ற ஆரோக்கிய இரசமாக வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கின்றது.

   வெள்ளரிக்காயை சமைத்துச் சாப்பிடும் பொழுது அதிலுள்ள பொட்டாசியம், பொஸ்பரஸ், கனி உப்புக்கள் என்பன அழிந்து போய் விடுகின்றன. எனவே வெள்ளரிச் சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

   வயிற்றுப் புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆறு அவுண்ஸ் வீதம் வெள்ளரிச் சாற்றை அருந்தினால் வயிற்றுப் புண் குணமடையும்.

   வெள்ளரிக்காய் 2000 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் தோன்றியது. வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். பண்டைய எகிப்தியர்கள் வெள்ளரிக் காயைப் நன்கு பயன்படுத்தினர். நாமும் இதனைப் பயன்படுத்தி பயன் பெறுவோம்.

   Delete
  7. KMAJ அவர்கள் ஓர் அறிவுக்களஞ்சியமாக திகழ்கிறார்கள் என்பதி மாறுபட்ட கருத்திருக்கமுடியுமோ வாழ்க வளமுடன்

   Delete
 6. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று ஒரு பழமொழி உண்டு.

  ஆகவே புறத்தோற்றத்தை வைத்தே அகத்தோற்றத்தை அறிந்து கொள்ளலாம்.

  நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வெளித் தோற்றம் என்னும் முகத்திரையைக் கிழித்துக் காட்டும் ஆக்கம்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers