.

Pages

Friday, March 21, 2014

முன்மாதிரியாய் வாழ்ந்திடு !

நல்லவனாக வாழ வேண்டும்
நாம் மட்டும் அல்ல...
எல்லோரும் விரும்பும் ஒன்று.
என்றாலும் வாழ்வில் அவ்வாறில்லை !
அல்லும் பகலும் நற்போதனைகள்
அயராது கேட்டுமே சறுக்கல்கள் !
சொல்லும்படி செயல் இருக்கனும்
சொற்பொழிவில் மட்டும் உள்ளவைகள்.

நல்லவன் தனக்கு நல்லவன்
நம்மனம் காட்டும் இலக்கணம்.
பொல்லாத வழிகளும் காட்டிடும்
புதுமைகளென கெடுத்தும் விடும்
இல்லாத நியதியும் உண்டாக்கும்
இதுதான் சரியென வாதிடும்
கல்லாமை என்றாலும் அல்ல
கல்லாதோர் காட்டியதே வாழ்வு.

என்னதான் வழிகள் என்றால் ?
எத்தனையோ வழிகளும் உண்டே.
உன்மனம் ஏற்றுத்தான் செல்லும்
ஒருபோதும் விட்டிடாது சுயநலம்.
அன்புகள் அயராது பேசிடும்.
அதனை தான்மட்டும் மறந்திடும் !
தன்னிலே மாற்றம் கொண்டால்
தவங்களும் ஏற்றம் பெறுமே.

தங்கமும் தீட்டிட மின்னும்
தவறாது தினம் நினைக்கணும்.
"எங்கும் உள்ளவைகள் தன்போலாம்
ஏற்றே தன்னிலே காணவேண்டும்."
பொங்கிடும் பாசமும் நேசமும்
போய்விடும் வேசமும் துவேசமும்
உங்களின் உள்ளேயிது பதியனும்
உண்மையிதனை உடனே பற்றனும்.

ஓருயிர் ஓருடல் என்றின்
ஒதுக்கங்கள் நீக்கிடத்தான் வேண்டும்
ஆருயிர் நண்பனும் அன்றுதான்
அசலான நண்பனும் ஆவான்
ஈருயிர் என்பதெல்லாம் உண்டே
இயக்கங்கள் தன்னிலே நிகழ்ந்திடத்தான்.
மாவுயிர் அடைந்திடல் வேண்டும்
மதிதனில் மாறுதல் கொண்டே.

ஓதியே ஓர்மையில் வந்தாலும்
உளத்தூய்மையுடன் "ஓருமையே" வேண்டுமே.
நீதிகள் சுயநலம் இன்றியே
நேர்மை வழிதனை காட்டிடுமே.
மாதிரிகள் வேண்டுமெனில் முன்மாதிரியாய்
முன்னரே வாழ்ந்தும் தந்திட்டனரே
காதிரும் கவனமாய் பற்றியே
காலனையே வென்றே காட்டினரே

எத்தனைத்தான் போதனைகள் எழுதினாலும்
எப்படித்தான் உண்மைகளைக் காட்டினாலும்
அத்தனையும் நன்மைகள் தரா !
அழுக்குகள் உள்ளத்தில் அகலாவிடின்.
சித்தத்தில் நல்முன்மாதிரியாய் தனையிருத்தி
சிந்தித்து வாழ்ந்து காட்டு
மொத்தத்தில் எங்கும் நிலவிடும்
முதிர்ந்த வாழ்வியல் நன்றே.

உன்னை மற்றவர் உற்றவர்
ஊக்கமுடன் உறுதியாய் பின்பற்ற
தன்னையே தகைமைமிகு முன்மாதிரியாய்
தறித்தே வாழ்ந்தே காட்டிடு.
சொன்னவர் நல்ல வழிகளையும்
சுகமாக ஏற்றேதான் வாழ்ந்திடுவாய்
இன்னும் ஏன் தாமதம் ?
இகத்தினை மாற்றியே அமைத்திடு.

நபிதாஸ்

12 comments:

  1. // ஆருயிர் நண்பனும் அன்றுதான்
    அசலான நண்பனும் ஆவான் //

    அருமையான வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தன்னைப்போலவே பிறரையும் உணரும்போது
      // ஆருயிர் நண்பனும் அன்றுதான்
      அசலான நண்பனும் ஆவான் //
      இல்லையேல் வியாபார, சுயநல நோக்குடன்தான் நடப்பும் இருக்கும்.

      இதுபோல் பல வரிகள் என்று எழுதியமைக்கு வாழ்த்துக்கள் பல தங்களுக்கு, ஐயா.

      Delete
  2. சிந்திக்க தூண்டும் பதிவு !

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிஞன் என்கிறார்கள். ஒரு நாளைக்கு நான் ஒரு பதினைந்து நிமிடம் மட்டும் சிந்திக்கின்றே என்றார் அறிஞர் பெர்னாட்ஷா.

      Delete
  3. நல்ல எண்ணங்களை ..
    விதைக்கும் தங்களின் கவி
    கவிகளின் முன் மாதிரி .
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல.

    அதிரை சித்திக் அவர்களின் ஆக்கங்கள் படிக்க ஆவல். நடப்புகளை அழகாக படம்பிடித்துத் தரும் தங்கள் திறமைமிகு கலை பலரை உங்கள் அடுத்த தொடர் எப்பொழுது என்று காணத் தூண்டிக்கொண்டிருகின்றதே.

    ReplyDelete
  5. தங்களின் எதிர்பார்ப்பிற்கு ...நன்றி
    அலுவல் காரணமாக சிறிய இடைவெளி .
    வெகு விரைவில் ...தொடர் ஒன்றை தருகிறேன்
    தலைப்பு இதோ ..
    மகவே ..கேள் ...!

    ReplyDelete
  6. நல்ல தலைப்பு. போதனைகள் நிறைந்ததாக இருக்கும் என்று நினைக்கின்றேன். நல்ல வரவேற்புப் பெறும். முன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்லதலைப்புடன் கூடிய கருத்தாழமிக்க வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நன்றி அதிரை மெய்சா.
    தங்களின் எழுத்துக்களின் உண்மைகள் இதோ...
    //
    எத்தனைத்தான் போதனைகள் எழுதினாலும்
    எப்படித்தான் உண்மைகளைக் காட்டினாலும்
    அத்தனையும் நன்மைகள் தரா !
    அழுக்குகள் உள்ளத்தில் அகலாவிடின்.
    சித்தத்தில் நல்முன்மாதிரியாய் தனையிருத்தி
    சிந்தித்து வாழ்ந்து காட்டு
    மொத்தத்தில் எங்கும் நிலவிடும்
    முதிர்ந்த வாழ்வியல் நன்றே.
    //

    நன்றிகள் பல.

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி.

    அருமையான ஆக்கம்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  10. தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் பல.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers