.

Pages

Wednesday, June 18, 2014

[ 6 ] மகவே கேள் : நேரம் கடந்து செல்வதில் கவனம் கொள் !

நேரம் கடந்து செல்வதில் கவனம் கொள் !
உனக்கு இவ்வுலகில் இறைவன் எல்லா வற்றையும் அளவுடனேயே தந்துள்ளான். நீ சுவாசிக்கும் காற்று முதல் உனக்கு உணவு உடைஎன்று எல்லா வற்றிக்கும் அளவுகோல் உண்டு. அதில் முக்கியமான ஒன்று உனக்கு தரப்பட்ட வாழ்நாள் .அதனை நீ எப்படி கடந்து வந்தாய் ? அல்லது எப்படி பயன் படுத்தினாய் ? என்பதில் தான் உன் வாழ்க்கை பயணம்.. வெற்றியின் பாதையிலா..? அல்லது படுபாதாள பாதையிலா ? என்பதை அறிய முடியும் ..!

கொஞ்சம் விளக்கமாய் அறிவோம் வா...
நாட்களை 24 மணி நேரமாய் பிரித்து மிக அழகாய் கடந்திட நம் முன்னோர் வழி காட்டியுள்ளனர் அதனை ஒவ்வொரு வயதிற்கும் வித்தியாச மான முறையில் கடத்திட வேண்டும். பிறந்தது முதல் ஒரு வயது வரை உணவு உடனே உறக்கம் அதுதான் ஆரோக்கியமான தன்மை தாய் மகிழ்வாள்.

குழந்தையின் உடல் நிலை ஆரோக்யமாக உள்ளது என மகிழ்வாள் ..பின்னர் ..ஐந்து.. ஆறு வயதிற்குள் அக்குழந்தை மனித வாழ்வின் அன்றாட தேவை பூர்த்தி செய்து கொள்ளும் வண்ணம் தாய் உதவியுடன் இருக்க பழகி ..நடக்க ..பேச பழகி ..நீ இயற்கையாய் உடல் ஆரோக்கியத்துடன் வளம் வரும்போது உன்னுடன் மகிழ்வும் அழகாய் வீட்டில் வளம் வரும் ..பின்னர் நீ உலக வாழ்வில் அங்கம் வகிக்க கல்விச்சாலை அனுப்ப படுவாய் அந்த கால கட்டம் தான் உணக்கு நேரங்களின் அவசியம் அறிய படவேண்டிய தருணம். 24 மணி நேரத்தை சரியாய் பிரித்து கொள். உறக்கம் 8 மணி நேரம், இரவு 9 மணிக்கு உறங்க சென்றால் அதி காலை 5 மணிக்கெல்லாம் விழித்து விடலாம்.

"உனக்கு இறைவன் தந்த விசாலமான நேரம் உன் முன் குவிந்து கிடக்கும் அதிகாலையில் உனது மனம் வெற்றிடமாக இருக்கும் அந்த நேரத்தில் நீ பாடங்களை படைக்க முற்பட்டால் ..மனப்பாடம் செய்ய ஏதுவாக இருக்கும் ..
ஓரிரு மணி நேரம் படித்த பின்னர் உடல் குளித்து ..உணவுண்டு பள்ளிக்கு செல்ல எத்தனிக்கும் நீ முதல் மாணவனாய் காட்சி அளிப்பாய் ..உன் முகம் பார்த்தாலே ..ஆசிரியர் முகம் மலரும் ஒவ்வொரு தருணத்திலும்    ஆசிரியரால்  பாராட்ட படும் மாணவனாய் காட்சி தருவாய் பள்ளி சென்று வீடு திரும்பும் உனக்கு சவாலாய் அமையும் மனோ ஆசைகளை கலைந்தால் மட்டுமே அடுத்த நாளும் மகிழ்வாய் கழிக்க முடியும் விளையாட்டு முக்கியம் என்றாலும் அதன் காரணமாய் நேர விரையம் ..வேண்டாத நட்பு என்று
உனது எதிர்கால இலக்கின் திசையை மாற்றி விட கூடும் நீ பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிய பின்னர் எவ்வளவு மணி நேரம் உள்ளது .உறங்க செல்லும் நேரத்தை அவசியம் கருத்தில் கொள் ..மீண்டும் அதிகாலை விழிக்க வேண்டும் அல்லவா ?

காலத்தை பற்றி கவியாய் சில வரிகள்...
கண்ணே ...
காலம் கண் போன்றது ..
உறங்கியே கழித்து விடாதே
நேரம் பொன் போன்றது
அளவாய் செலவிடு ..
காலத்தை வென்று விடு ..
இல்லையேல் உன் எதிகாலத்தை
அது கொன்று விடும் ..
ஒவ்வொரு நாளும்
உன் மீது வைக்க படும் சுமை
அன்றே இறக்கி வைத்து விடு
எச்சரிக்கை நீ இறக்கி வைக்கும்
சுமை நீ செல்லும் பாதைக்கு
இடையூறாக இருத்தல் கூடாது
உன் படு குழியை மூடும் பாறை களாய் அமையட்டும்
நேரமில்லை என்பதும் கூடாது ..
இவ்வளவு நேரம் இருக்கிறதே என்ற அங்கலாய்ப்பும்
கூடாது ..பள்ளி ..கல்லூரி நாட்களில் நீ செலவிடும்
உன் எதிர் காலத்தின் நன்மைக்கு வித்திடும் விதையாய்அமையட்டும்
நேரத்தை நலமாய் கழித்து வளமாய் வாழ வாழ்த்துகிறேன்...
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

10 comments:

 1. அறிவுரை அருமை !

  சிறந்த கருத்துகளை தாங்கி வருகிறது தொடர்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி .! தம்பி நிஜாம் அவர்களே ...!

   Delete
 2. மகவே கேள்.[6] நல்ல உபதேசம்.சிந்திக்குபடி இருந்தது.

  தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நேரங்களை..முறையாய் செலவழித்தால்
   வெற்றி நிச்சயம் ...வருகைக்குக் நன்றி

   Delete
 3. //பள்ளி ..கல்லூரி நாட்களில் நீ கவனமாக செலவிடும் நேரங்கள்
  உன் எதிர் காலத்தின் நன்மைகளுக்கு வித்திடும் விதையாய் அமையட்டும்//

  // உனக்கு தரப்பட்ட வாழ்நாள் .அதனை நீ எப்படி கடந்து வந்தாய் ? அல்லது எப்படி பயன் படுத்தினாய் ? என்பதில் தான் உன் வாழ்க்கை பயணம்..... அது வெற்றியின் பாதையிலா..? அல்லது படுபாதாள பாதையிலா ? என்பதை அறிய முடியும் ..!//

  இரசித்தேன், நல்ல அறிவுரை.

  ReplyDelete
  Replies
  1. தெளிவாய் ..அறிந்து கருத்திட்ட ..
   அறிஞர் நபி தாஸ் அவர்களுக்கு நன்றி

   Delete
 4. கடைசி வரிகள் கவித்துவமானவைகள்; பாராட்டுகள்; வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. நண்பனே நீ அமெரிக்கா சென்றது பொருள் ஈட்டவா? மதி திட்டவா?! .சிந்தனை வரிகள் சிலாகித்தேன் சிறந்தோங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பனே
   இணைய தளத்தில்
   கருத்துக்கள் பரிமாறி கொள்வதன் மூலம்
   மதி தீட்ட படுவது என்பது உண்மைதான்

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers