.

Pages

Tuesday, June 24, 2014

போலிகள் !? [ நடிப்புகள் ]

அறிவுத்தேன் II

அன்புடையீர், 
வேலை பளுவின் நிமித்தம் தொடர் காலதாமதமாக எழுதலாகிற்று.

பொதுவாக ஒருவரைப்போல் பேசுதல் அல்லது நடித்தல் என்பது போலியாகும்.

ஒரு நடந்த சம்பவம் அல்லது கற்பனை நீதிக்கதைகள் இதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த அல்லது விளங்க வைக்க பிறர் அந்த சம்பவத்தில் அல்லது கதையில் இருப்பவற்போல் நடித்துக் காட்டுவார்.

நடிப்பில் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லையாதலால் அதில் போலியின் பாதிப்புகள் இல்லை. அதனால் காதால் கேட்பதை கண்ணாலும் பார்த்து விளங்கிக் கொள்வதற்காக தத்ரூபமாக நடிப்பதை போலியின் தீமை தரும் வட்டத்திற்குள் அல்லாமல் உள்ளது என்று சொல்லலாம்.

இங்கு நடிப்பவர் அந்த அந்த கதாப்பாத்திரமாக நடித்து அதனின் உண்மைகளை அறியச்செய்வதற்கு துனைபுரிகிறார். கதாபாத்திரத்தைப் பொறுத்து இவர் போலி. ஆனால் போலியின்சுபாவம் இல்லை. நடித்த பின் அக்கதாபாத்திரம் வேறு தான் வேறு என்றதான் இருப்பார். அதனால் இவரை  நடித்து விளங்க உதவுகிறார் என்றதான் சொல்வோம். இதன் விளைவால் பாதிப்புகள் இவரால் இருக்காது..

பொதுவாக போலி என்பதின் தாத்பரியம் அதனில் ஏமாற்றுதல் அல்லது பாதகம் அல்லது துரோகம் இழைத்தல் அல்லது துன்பத்தில் வீழ்த்துதல் போன்றவைகளும் இருக்கும்.

சில நேரங்களில் சில பல பொது நன்மைக்காக இவ்வாறு உண்மையைப் போன்று நடிக்க வேண்டிவரும். அதனை ஆகுமானப் போலி எனலாம்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட ஆஸ்திரிய நாட்டில் பிறந்து, ஜெர்மானியில் சர்வாதிகாரியாக இருந்து, அர்ஜென்டினாவில் இறுதிவரை வாழ்ந்து மறைந்த அடால்ப் ஹிட்லர் ஆறு நபர்களை தன்னைப்போன்று டூப்பாக ஜெர்மனியில் சர்வாதிகாரியாக இருந்தபோது சில காரணங்களுக்காக் வைத்திருந்துள்ளார்.

நன்மை தரும் கசப்பு மருந்தை இனிப்புத் தடவி தருவதும் போலியின் குணம் கொண்டதாகாது. அதுபோல் எந்த ஒரு செயலும் அதனால் அதன் விளைவால் பொது நன்மை தராமல் தீமைகள் விளைவிக்குமானால் அவைகளே போலியாகும். அவ்வாறு சொல்வதில் தவறிருக்காது.

ஏமாற்றுவதற்காக சில தடயங்களை விடுதல், பிறர்போல் தன குரலில் பேசுதல், நடித்தல் போன்றவைகள் போலிகளாகும்.

ஒரு சிலர் சில சமூக நல்ல வாழ்வியல் தத்தவங்களை தன் வாழ் நாட்களில் சொல்லி, போதித்து வாழ்ந்து செயல்படுத்தி காட்டிச் சென்றிருப்பார்கள். பின்னாளில் தன் சுய இலாபங்களுக்காக அக்கொள்கைகளை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. அதன் மூலம் அத்தத்துவங்களே தவறு என்று பலர் சொல்லும் நிலைக்கு இவர்களால் ஏற்பட்டுவிடும் அல்லது கொண்டும் போய்விடும். காரணம் போலிகள் அதில் நுழைவதால் தான் அவ்வாறு ஏற்படுகிறது.

சில நேரங்களில் அசல் போலவே உருவத்திலும் போலிகள் இருக்கும். சில பொருள்களை மிகத்தரமாக செய்து விற்பவரே போலிகளையும் செய்தும் விற்பார். அதனைப்பற்றி வரும் வாரத்தில் பார்ப்போம்.
(தொடரும்)
நபிதாஸ்

10 comments:

 1. போலிகளை தோலுரித்த விதம் அருமை !

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நாம் அறிய வேண்டியது என்னவென்றால்...அசலை விளங்காவிட்டால் போலி எதுவென்பது தெரியாது.

   Delete
 2. போலி- நயவஞ்சகம் இரண்டும் சகோதரிகளே!

  ReplyDelete
  Replies
  1. வஞ்சிப்பவனுக்கு இரண்டும் சமயத்திற்கு தகுந்த ஆயுதமாகப் பயன்படும்.

   Delete
 3. எச்சரிக்கை வேண்டும் என்றும் - அதுவும் இன்றைய காலத்தில் அதிகம் வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆம் ! அழகாகச் சொன்னீர்கள். கவனம் விட்டால் காலியாகிவிடுவோம் !

   Delete
 4. பகிர்வுக்கு நன்றி.

  நல்லவை போல் வேடமிட்டு போலிகளே அதிகப் புழக்கத்தில் உள்ளன.ஆகவே பொதுமக்களே அனைத்திலும் விழிப்புணர்வு பெறவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நூற்றுக்கு நூறு உண்மையே !
   நல்லவை போல் வேடமிட்டு போலிகளே அதிகப் புழக்கத்தில் உள்ளன.
   எனவே, எது நல்லது என்பதை அறிந்திடல் வெற்றியில் பாதி.

   Delete
 5. போலிகள் பற்றி இனம் கண்டு வொதுங்குதல் நலம் .
  தங்களின் பதிவு எதிர்கால சந்ததியினருக்கு உதவியாக இருக்கும் ...வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. எழுதுபவர்கள் நாம் எல்லோருக்கும் நன்மைகள் கிடைக்கவேண்டும் என்றுதான் எழுதுகிறோம். மாகவே கேள். தலைப்பே நன்மையைத் தருகிறதாகத்தான் இருக்கின்றது.

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers