.

Pages

Saturday, June 28, 2014

“பிறை சொன்ன சேதி என்ன ?

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற
,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே
பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில்
,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே!

இருளகற்றி ஒளிவீசி வானில்நான்
…..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே!
அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம்
….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே!

வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம்
…வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே
உரமிட்டு வைத்திருந்து என்வரவை
….உற்சாகமாய்க் காணவந்தீர் வாயிலிலே!

பிறைக்கீற்றின் கதிர்வீச்சில் சுமந்துவந்தேன்
…..பிழைபொறுக்க ரமலானின் மாதமாக
இறைக்கூற்றை நான்சுமந்த ஒருபிறையில்
….இறக்கிவைத்தான் மாநபி(ஸல்)க்கு வேதமாக!

கறைகளையும் தீமைகளையும் அழுகின்றக்
,,,கண்ணீரால் கழுவத்தான் வந்துள்ளேன்
இறையிடமே மன்னிப்பைக் கேட்கவேண்டி
,,,இம்மாதமாய் உங்களிடம் தந்துள்ளேன்!

பசித்துணியால் பாவக்கறை துடைத்திடவே
,,,பயிற்சிகளைத் தருகின்றேன் சத்தியமாக
வசித்திருக்கும் ஷைத்தானை இப்பசியால்
,,,வதைத்திடுங்கள் ஒருமாதப் பத்தியமாக!

ஷைத்தானை விலங்கிட்டு அடக்குமாற்றல்
…. “சபுரென்னும் பூட்டுக்குள் பூட்டித்தான்
வைத்தேனே பிறையென்னும் ஒளியாக
,,,வீசுகின்ற ரமலானைக் காட்டித்தான்!

வானோக்கிப் பார்க்கின்ற கண்களையும்
…வரிசையான தீமைதரும் காட்சிகளால்
வீணாக்கிப் பறிக்கின்ற ஷைத்தானை
…விலக்கிடுங்கள் என்பிறையின் சாட்சிகளால்!

ஆன்மாவின் உணவாக இம்மாதம்
….ஆக்கிவைத்து நோன்பென்னும் பசியாக
தேன்பாயும் திருமறையைத் தினமோத
..தித்திக்க வைத்தேனே ருசியாக!

ஆண்டுதோறும் வருகின்றேன் உங்களிடம்
…ஆவலுடன் காத்திருப்பீர்; நம்புகின்றேன்
மாண்டுபோகும் ஷைத்தானை உங்களிடம்
…மடியினிலே கண்டுமனம் வெம்புகின்றேன்!

அழுகையெனும் தண்ணீரால் கழுவிடுங்கள்
….அழுக்காறு பாவத்தைக் கவனமாக
தொழுகையெனும் தவத்தினாலே பெற்றிடுங்கள்
….தொடர்ந்துவரும் வரமென்று சுவனமாக!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 26-06-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

23 comments:

 1. நோன்பின் மாண்பு அருமை !

  அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பதிவுக்குள் விரைவாய்க் கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி; ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா. எல்லார்க்கும் ரமலானின் வருகை; அமலால் நிறைந்து பெருக!!

  ReplyDelete
 3. please insert this video link which is from LONDON FA TV

  http://youtu.be/kxLgcmFnp94?t=2m59s

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி.
  ரமழான் முபாரக்.

  மச்சான் உங்களின் கவிதை மிகவும் அருமை.
  பாராட்டுக்கள்.

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
  Thanjavur District Organizer. Adirampattinam-614701.
  consumer.and.humanrights614701@gmail.com

  ReplyDelete
  Replies
  1. வடிவவியலில் பிறை(lune) என்பது கிட்டத்தட்ட, வளரும் நிலவின் வடிவிலமைந்த இரு உருவங்களில் ஏதாவது ஒன்றினைக் குறிக்கும். நிலவைக் குறிக்கும் luna (லூனா) என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து ஆங்கிலத்தில் இதற்கு லூன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

   Delete
  2. அமாவாசை (சங்கம) அன்று பிறை கண்களுக்குத்தென்பட்டதாம்! இது என்னங்கபுதுக்குழப்பம்? பிறை தெரியாமல்இருப்பதால்தானே அதற்கு அமாவாசை (சங்கம) நாள் என்றுபெயர் எனக் கேட்கிறீர்களா?. தங்களைவிஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் எனஅடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் அமாவாசை (சங்கம)பிறை என்ற அவதூறை தற்போதுகிளப்பியுள்ளனர். இதுபற்றிய உண்மை நிலையைஅறிய இக்கட்டுரையை இறுதிவரை பொறுமையாகப்படித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

   Delete
  3. சந்திரனின் தேய்ந்து வளரும் நிலைகளைஅறிந்து கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான்ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்கவேண்டும் என ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம்பிரச்சாரம் செய்தும், பின்பற்றியும்வருகிறோம். இதற்கு குர்ஆன்சுன்னாவிலிருந்து தக்க ஆதாரங்களைசமர்ப்பித்துள்ளோம்.

   அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட வடிவநிலைகளைக் கொண்ட பிறை படித்தரங்கள் நமக்குஅந்தந்த நாளின் தேதியை அறிவிக்கிறது.அவற்றை நாம் தொடர்ந்து கவனித்து வந்தால்மாதத்தின் இறுதி நாளுக்கு முந்தையநாள்வரையுள்ள பிறையை புறக்கண்களால் பார்க்கமுடியும். அதாவது ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்தான் என்றால் 29 நாட்கள் பிறைகளைப்பார்க்க முடியும். அதுபோல 29 நாட்கள்தான்அந்த மாதத்திற்கு உண்டு என்றால் 28 பிறைகளை அந்த மாதத்தில் நாம் பார்க்கமுடியும். அல்குர்ஆன் கூறும் (36:39) உலர்ந்த வளைந்த பழைய பேரீத்தப் பாளை எனும் 'உர்ஜூஃனில் கதீம்' என்ற சந்திரனின் இறுதி வடிவம்மாதத்தின் இறுதிநாளுக்கு முந்தைய நாள்ஃபஜ்ரு வேளையில் கிழக்குத் திசையில்புறக்கண்களுக்கு காட்சியளிக்கும்.

   Delete
  4. 'உர்ஜூஃனில் கதீம்' என்ற புறக்கண்ணால்பார்க்க இயலும் சந்திரனின் அந்த இறுதிப்படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமையசங்கமம் (Geocentric Conjunction) உடையதினமாகும். அமாவாசை (சங்கம) என்று மக்கள்புரிந்துள்ள புவிமைய சங்கமம் என்பதுஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும்சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒருகோட்டில் அல்லது ஒரே நேர்கோட்டில்சங்கமிக்கும் தினமாகும்.

   அந்த புவிமைய சங்கம (Geocentric Conjunction) தினத்தில் தேய்பிறை மற்றும்வளர் பிறையை பொதுவாக புறக்கண்களால்பார்க்க முடியாதவாறு அது மறைக்கப்படும் .இதற்குத்தான் 'கும்ம', 'கும்மிய', 'உஃமிய', 'கபி(F)ய', 'க(G)ம்மிய', 'ஹஃபிய்ய' அல்லது 'குபிய'வுடைய நாள் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம்தந்துள்ளார்கள்.

   இந்த அமாவாசை (சங்கம) நாளுக்கு அடுத்த நாள்சூரியனுக்குப் பின்னால் சந்திரன் கிழக்குதிசையில் தோன்றி (உதித்து) மேற்குதிசையில் அந்தப்பிறை மறையும் போதுநமக்குக் காட்சியளிக்கும். அந்த நாள்புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்குசாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சிலபகுதிகளில் அந்த முதல் பிறைபுறக்கண்களுக்குத் தென்படும். இதுவே முதல்நாளுடைய சந்திரனின் படித்தரமாகும்.

   முதல் நாளுக்குரிய அந்தப் பிறை அந்த முதல்நாளின் (கிழமையின்) பாதிப் பகுதியை(சுமாராக 12 மணி நேரங்களைக்) கடந்துவிட்டதின் அத்தாட்சியும் கணக்கும் ஆகும்.இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்)அவர்களும் சந்திரனில் ஏற்படும்படித்தரங்களான பிறைகளை மவாகீத்துலின்னாஸ்- மக்களுக்குத் தேதிகளை காட்டும் (Calendar For Mankind) என்று இந்த உம்மத்திற்குவலியுறுத்தியதாகும்.

   Delete
  5. அல்லாஹ்வின் உதவியால் நமதுபிரச்சாரங்களின் விளைவாக விழிப்படைந்தமக்கள் அல்லாஹ்வின் நாட்காட்டியின்முக்கியத்துவத்தை உணரத் துவங்கி விட்டனர்.பலர் சரியான நாட்களில் தங்கள் அமல்களைஅமைத்து வருகின்றனர் - அல்ஹம்துலில்லாஹ்.

   இதை அறிந்த ஷைத்தான் தனது சகாக்கள் மூலம்நமது பிரச்சாரங்களையும், ஹிஜ்ரிநாட்காட்டியையும் பொய்யாக்கிட தொடர்ந்துமுயன்று வருகிறான். உலகின் ஒவ்வொருபகுதிகளிலும் தனது ஏஜென்டுகளை நியமித்துஅவர்களை ஏவிவிட்டு ஹிஜ்ரி நாட்காட்டிக்குஎதிராக பல தவறான கருத்துக்களை போதித்துமக்களிடையே சந்தேகத்தையும் ஏற்படுத்திவருகிறான். அதன் வெளிப்பாடே அமாவாசை (சங்கம) அன்றுபிறையை புறக்கண்ணால் பார்க்கலாம் என்றவெற்றுக் கோஷத்தின் பின்னனியாகும்.

   Delete
  6. குறிப்பாக சமீபகாலமாக ஜோர்டான்நாட்டிலிருந்தும் இதுபோன்ற பல பொய்த்தகவல்கள் ஜோராக ஜோடிக்கப்படுகின்றன.அமாவாசை (சங்கம) அன்று தேய்பிறை கிழக்கில்புறக்கண்களுக்கு சர்வசாதாரணமாகத்தெரிகின்றது என்று ஜோர்டான் நாட்டின் ICOP என்ற குழுவினர் தங்கள் இணையதளங்களின்மூலம் தொடர்ந்து பொய்ச் செய்திகளை பரப்பிவருகின்றனர். 'முகம்மது ஒதே' என்பவரின்வழிகாட்டுதலில் அமைந்தicoprojectஎன்ற இணைதளம், காலித் சவுகத் என்பவரின்moonsighting இணையதளம், makkahcalendar என்ற பெயரில் இயங்கும் மற்றொரு இணையதளம்போன்றவை இத்திருப்பணியை செய்து வருகின்றன.

   Delete
  7. மேற்படி இணையதளங்கள் வெளியிடும் போலிவிண்ணியல் தத்துவ முத்துக்களை தமிழில்பரப்பிட தமிழகத்திலும் அவர்களுக்குஏஜெண்டுகள் கிடைத்துள்ளனர். மேற்படி போலிவிஞ்ஞானிகளின் பிறை அறிவிப்புகளைஅலட்சியம் செய்து புறக்கணித்து உங்களுடையஈமானை பாதுகாத்துக் கொள்ளுமாறு மக்களைக்கேட்டுக் கொள்கிறோம்.

   Delete
  8. ஒரு குழுவாக செயல்படும் மேற்படியார்கள், கடந்த 2013 வருடம் ஜூலை 8-ஆம் தேதிதிங்கள் கிழமை அன்று அமாவாசை (சங்கம) என்னும்புவிமைய சங்கம நாளிலும் இதுபோன்றகுழப்பத்தை ஏற்படுத்தினர். அதாவது அமாவாசை (சங்கம)தினமான அன்று சூரியன் மறைந்த பின்னர்தெஹீட்டி என்ற தீவில் வளர்பிறைபார்க்கப்பட்டது என்று ஒரு போட்டோவோடுஇதுபோன்றே செய்தியும் வெளியிட்டனர்.அச்செய்தியின் உண்மை நிலையை 'தெஹீட்டிபிறையும் தடுமாறிய சிந்தனையும்!' என்றதலைப்பில் கட்டுரையாக வெளியிட்டு நாம்மக்களுக்கு தெளிவாக்கினோம். (பார்க்க) அதில் நாம் எழுப்பிய வாதங்களுக்கு எந்தப்பதிலையும் சொல்லாமல் இன்றுவரைமேற்படியார்கள் மௌனம் சாதிக்கின்றனர்.

   Delete
  9. பின்னர்Conjunction என்னும் சங்கம நிகழ்வு உலக நேரம் 16 மணிக்கு மேல் நடைபெறும் போதுநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளில் உள்ளோர் அமாவாசை (சங்கம)நடைபெறும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப்பொழுதை அடைந்து விடுகின்றனரே அவர்கள்எவ்வாறு நோன்பை வைக்க முடியும் என்றும்கேள்வி எழுப்பினர். அந்தவிமர்சனத்திற்கும் 'ஹிஜ்ரி நாட்காட்டியின்உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின்தவறான குற்றச்சாட்டுகளும்' என்ற தலைப்பில்மிக விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.(பார்க்க)

   Delete
  10. குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல்படிஅமைந்த நமது அறிவுப்பூர்வமானவிளக்கங்களால் ஒவ்வொரு முறையும்மேற்படியார்கள் மூக்கறுபட்டே போகிறார்கள்.நமது பிரச்சாரங்களை எதிர்கொள்ள வேறுவழியில்லத அவர்கள் தொலை நோக்கியால்எடுக்கப்பட்ட ஒரு பிறை போட்டோவை வைத்துஅதில் கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டுகளைப்புரிந்து எதாவது ஒரு அமாவாசை (சங்கம) அன்று அதைவெளியிட திட்டமிட்டிருந்தனர் போலும்.

   Delete
  11. எனவே கடந்த 30-01-2014 அமாவாசை (சங்கம) தினத்தில்பிறையை புறக்கண்களால் பார்க்கலாம் என்றுமுற்கூட்டியே அறிவிப்பும் வெளியிட்டனர்.மேற்படி அமாவாசை (சங்கம) தேதியில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரியும் என அவர்கள்பட்டியலிட்டுச் சொன்ன எந்த நாட்டிலும்எந்தப் பிறையும் தெரியவில்லை (அது எங்கேதெரியப் போகிறது).

   Delete
  12. இது ஒரு பக்கம் இருந்தாலும், நாம்எதிர்பார்த்தபடி சங்கம தினத்திற்குப்பின்னர் அவர்கள் தயாராக வைத்திருந்தபோட்டோவை மறக்காமல் வெளியிட்டனர். இவர்கள்பிறை தெரியும் என்று அறிவித்த பட்டியலில்இடம்பெறாத ஈரானில் அந்தப் பிறைபார்க்கப்பட்டதாக கூறி ஒரு போட்டோவோடுதகவல் வெளியிட்டு அனைவரையும் திசைதிருப்பினர்.

   Delete
  13. ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கமநாளில்பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்றுநாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக இதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்வழிகாட்டுதலாகும்.

   எனவே தற்போது ஹிஜ்ரி நாட்காட்டியைபொய்படுத்திட சங்கம தினத்தில் பிறைதெரிந்ததாகப் பொய்யான போட்டோக்களைவெளியிட்டு இவர்கள் நம்மைப்பொய்ப்படுத்திட முயற்சி செய்யவில்லை.மாறாக நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைபொய்யாக்கிட முனைந்துள்ளனர் என்பதேஉண்மையிலும் உண்மை.

   குறிப்பாக பிறையை புறக்கண்ணால் பார்த்தேபின்பே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றுகூறிவரும் முஸ்லிம்கள்கூட அமாவாசை (சங்கம)தினத்தில் பொதுவாக பிறை புறக்கண்களுக்குதெரியாது என்பதில் எந்த மாற்றுக்கருத்துகளும் கொள்ள வில்லை.

   Delete
  14. மச்சானின் வருகைக்கும், கருத்துரைகளுக்கும் உளம்நிறைவான நன்றிகள்; ஜஸாக்கல்லாஹ் கைரன்

   Delete
 5. முத்திரை பதித்திடும்
  முப்பது நோன்பையும்
  மெத்தனம் காட்டாது
  மொத்தமும் நாம் நோற்போம்

  படைத்தவன் மகிழ்ந்திட
  படைத்திடும் நற்ச்செயல்
  பயணிக்கும் நம்முடன்
  பயனளிக்கும் மறுமையில்

  ReplyDelete
  Replies
  1. முத்திரைப் பதித்திட
   முயற்சிகள் செய்திட்டு
   எத்தனிக்கும் உங்கள்
   இம்முயற்சி வளர்க!

   வருகைக்கும் பதிவுக்கும் நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்,

   Delete
 6. பிறைசொன்ன சேதியென்ன வென்றுநீரும்
  .....பிசகாமல் நோன்பதனை விளக்குகின்றாய்
  மறைசொன்ன வல்லவனும் ஒன்றேதான்
  .....மாறிமாறி வளர்ந்துதேய்ந்த அதுவுமொன்றாம்.

  முப்பதுநாள் முப்பதுபி றையென்பதில்லை
  .....முழுபிரையே முப்பதாக நின்றிடுதே
  தப்பதுதான் பலதோற்றம் கண்டாலும்
  .....தடுக்கிடாமல் உணர்ந்திடுவோம் ஒன்றதுவே

  ஏகத்தில் எல்லாமே இருந்தாலும்
  .....இருக்கின்ற ஒன்றதனின் தோற்றமேயாம்
  ஊகத்தில் பிரித்திட்டே பிரிகின்றார்
  .....உண்மையிலே ஒன்றதனின் தோற்றமேயாம்

  பிறைதனிலே இவ்வுண்மை மறைவாக
  .....பின்னித்தான் உள்ளதுவே செய்தியாக
  மறைந்திடவே போகாமல் சேர்த்திடவே
  .....மதித்திட்டே வேண்டுகிறேன் அமைதியாக

  நோன்பதனின் கூலியாகத் தருகின்றான்
  .....நோகாமல் தன்னையேத்தான் நிறைவாக
  தான்னதனில் மதிசெலுத்திக் கண்டாலே
  .....தங்கிடுமே ஒன்றவனின் உறைவாக

  படைத்தவனின் நோக்கமுமே தாகமுமே
  .....படைப்பதனில் முழுமையையே உணர்ந்திடவே
  தடைகளுமே இடையிடையே தோன்றினாலும்
  .....தவிடுபொடி ஆக்கிடுவீர் தெளிந்திடவே

  எந்நாளும் எதனிலுமே மறவவேண்டாம்
  .....எப்போதும் ஒன்றதனை மறக்கவேண்டாம்
  இந்நாளில் புரிந்திடவே நன்னோம்பும்
  .....இறைவனவன் தந்திட்டான் அகலவேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. பாட்டுக்குப் பாட்டெடுத்துப் பாடிவரும்
   ....பாவலரே நாமிருவர் ஒருபள்ளிக்
   கூட்டுக்குள் கூடித்தான் படித்தோமே
   ....கூவுகின்றோம் மரபுப்பாக் குரலினாலே!

   வருகைக்கும் வாழ்த்துரைக்கக் கண்ணிப்பா
   ....வனைந்தளித்த திறமைக்க்ம் உளம்முகிழ்ந்துப்
   பெருமிதமாய் நன்றிதனை வழங்குகின்றேன்
   ....பெற்றிடுவீஈ ஞானியாரே நபிதாஸே!

   Delete
 7. பிறை பார்த்த நாள் .
  ஏழைகள் குறை தீர்ந்த நாள்
  முறையாய் கவி தந்து
  மகிழ்வித்த ..கவியன்பர் வாழியவே

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers