kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, July 18, 2014
[ 8 ] மகவே கேள் : நேசம் கொள் !
மகவே கேள் :
நேசம் கொள் !
அன்றாட வாழ்வில் நேசம் என்பது இன்றி அமையாத ஒன்று
நேசம் என்ற உணர்வு நேசம் கொள், மோசம் போக மாட்டாய்.
நேசம் என்பது ஒரு வழி பாதை. தியாக உணர்வு கொண்டது.
உதாரணமாக இல்லத்தரசி தன கணவன் மீது கொள்ளும் நேசம்
பணக்காரனாக இருந்தாலும் சரி... பரம ஏழையாக இருந்தாலும் சரி
அவன் மீது வைத்திருக்கும் நேச உணர்வு, கடும் கோபம் கொண்டபோதும் பரிவாய் சேவை செய்யும் பாங்கை கொடுக்கும்.
நேசம் என்ற உணர்விற்கும் .அன்பு என்ற உணர்விற்கும் நூலிழை
வித்தியாசம் .அன்பு உயிருள்ளவர்க்கு மட்டும் செலுத்த கூடியவை
ஆனால் நாம் ஒரு பொருளை நேசிக்கலாம் .அந்த பொருளை பேணி
பாது காப்போம் ....இயற்கையை நேசித்தால் ..அதற்க்கு பாதகம்
செய்ய மாட்டோம் ...மொழியை நேசித்தால் எந்த தேசம் சென்றாலும்
வாசித்து நேசிப்போம் .
* உன்னை நேசித்தால் ...நீ உன் உடல் நலம் காப்பாய்.
* உன் ..பொருளை நேசித்தால் ...அதனை பராமரிப்பாய்.
* உன் உறவை நேசித்தால் பொறுமை காப்பாய் .அவர் தம் வெற்றியில்
பெருமை கொள்வாய்.
* உன் மொழியை நேசித்தால் .பல புலமை கொள்வாய்.
* கல்வியை நேசித்தால் அறிஞனாகுவாய்.
* உழைப்பை நேசித்தால் ..உயர்வாய் வாழ்வில்.
* இறையை நேசித்தால் எல்லாம் அவனிடம் கேட்டு பெறுவாய்.
இறைஞ்சுதலும், வணங்குதலும் உன் வாழ்வில் தலையாய
கடமை என்பாய்.
* தாய் ..,தந்தையை நேசித்தால் .அவர்தம் பிள்ளைகளை (சகோதர்களை .,சகோதரிகளை ) பாசம் கொள்வாய்
* தேசத்தின் மீது நேசம் கொண்டால் நல்ல குடிமகனாய் .திகழ்வாய்
* நேசம், உன் வாழ்வில் இரண்டற கலந்த ஒன்றாய் இருக்க வேண்டும் .
நேச வலையை மோசமான ஒன்றில் வீசி விடாதே.
விடுபட்ட நேசங்களை... என் அன்பு நேசர்களே பின்னூட்டம் மூலம் தாருங்களேன்...

அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
இறுதியில் சொன்ன பொன்மொழிகள் அருமை !
ReplyDeleteநேசம் குறித்து ஏராளமாக சொல்லலாம் என்றாலும், சார்ட்டா சொல்லலாம் என்றால் 'நேசமில்லாமல் உலகமில்லை'
நேசம் பற்றி பாசமுள்ள தம்பி நிஜாமின் ...
Deleteபின்னூட்டம் மகிழ தக்கவை
நேசத்தினை வகைப் படுத்தி அறியத்தந்தீர்கள். நேசம் கொள்ளுதலால் மனிதநேயம் காக்கப் படுகிறது. உறவுகள் மேம்படுகிறது. உணர்வுகள் மதிக்கப்படுகிறது.. இப்படி அனைத்திற்கும் அனையாய் இருக்கிறது நேசம்.
ReplyDeleteசுருங்கச்சொன்னாலும் சுல்லாய்ப்பாய் சொல்லியுள்ளீர்கள்.
நன்றி ...கவிஞர் அதிரை மெய்சா ...அவர்களே
Deleteஇறையை நேசித்தால் எல்லாம் அவனிடம் கேட்டு பெறுவாய்.
ReplyDeleteஇறைஞ்சுதலும், வணங்குதலும் உன் வாழ்வில் தலையாய////பொண்மொழிகளாய் பொழிந்துள்ளீர் அஅன்பரே
கடமை என்பாய்.
இறையை.நேசம் கொள் ...
Deleteவெற்றி நிச்சயம் ....
இரையை (உணவை )தேடுவதில் குறியாய் உள்ளோம்
* உன்னை நேசித்தால் ...நீ உன் உடல் நலம் காப்பாய்.
ReplyDeleteஉன்னை நேசித்தால்... நீ உன்னை அறிவாய்.
உன்னை அறிந்தால்.....நீ உன் தலைவனை அறிவாய்.
உன் தலைவனை அறிவதை....உன் தலைவன் விரும்புகிறான்.
மறைவான பொக்கிஷத்தை அறியப்படவே படைப்புகளை படைத்ததாக தலைவனும் சொல்கிறான்.
வாவ் ...
Deleteஉன் ...என்ற பதத்திற்கே இத்தனை விளக்கம் ..
மேலும் தொடருங்கள் ..உங்களிடம் மேலும்
பல விளக்கம் காண விளைகிறேன் ...நன்றி அறிஞர்
நபி தாஸ் அவர்களே