.

Pages

Monday, July 14, 2014

போலிகள் !? [ உற்பத்தியாளர்கள் ]

அறிவுத்தேன் II
இதுவரை ஓர் உண்மை அல்லது ஒரு கருத்து அவரவர் அறிவின் நிலைக்கேற்ப சிதைந்து போலியாகிவிடுதலும், ஒருவரைப்போல் பேசுதல் அல்லது நடித்தல் போலியாகும் எனப் பார்த்தோம். இனி பொருள்களில் போலியைப் பற்றிப் பார்ப்போம்.

பொருள் போலியில் பலவகையுண்டு. ஒன்று, உணவுப்பொருளின் ஒத்த உருவத்தில் உள்ளவைகளை அந்தப் பொருளுடன் கலப்படம் செய்து மறைவான வழிகள் மூலம் சந்தைப்படுத்தி ஏமாற்றுவது . இது மகாக் குற்றம். மனித இனத்தை அழிக்கக்கூடியது. இவர்கள் தீவிர தண்டனைக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

இரண்டாவதாக, உணவல்லாத அனைவருக்கும் அன்றாட பயன்பாட்டுக்கு உதவும் பொருள்கள். இவைகள் தரமற்ற மூலப் பொருள்களால் செய்து அசல் போலவே அசலின் பெயரிலேயும், அதன் சந்தைப்படுத்தப்பட்ட பெயர் (பிரான்ட்) பிரபலத்தை பயன்படுத்தி, மறைவானத் தவறான வழிகள் மூலம் சந்தைப்படுத்துவது. இவைகள் நீண்ட நாட்கள் உழைக்காது. அசல் உற்பத்தியாளருக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுக்கும். பயன்பாட்டாலருக்கும் ஏமாற்றுவதின் மூலம் பயன்பாடு நஷ்ட்டம் விளைவிக்கக்கூடியது. இவர்களால் தரமான பொருள் உற்பத்தி செய்ய முடியாமையினால், தரம் குறைவாக உற்பத்தி செய்தவைகளை  அனைவராலும் பிரபலம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரான்ட் பெயரில் மறைவான வழிகள் மூலம் விற்பனைச் செய்வார்கள். இவர்களின் போலி உற்பத்திக் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனைக்கு உள்ளாவார்கள்.

மூன்றாவதாக, எந்திரம், வாகனம் போன்றவைகளுக்கு உண்டான அடிப்படை பாகங்கள், உதிரி பாகங்கள், அதற்குண்டான அழகு, வசதி பொருள்கள். இவைகளும் நீண்ட காலம் உழைக்காது அல்லது கலர் அல்லது தாங்கும் திறனில் நிலைமாறும், சக்தி குறைவானது. அவசரத் தேவைகளுக்கு பயன்படும். அசலைப் போல் அங்கிகரிக்கப்பட்ட அவர்கள் பெயரிலேயே உற்பத்திச் செய்யும் இவர்களை கண்டுபிடித்து குற்றம் சாற்றப்பட்டால் தண்டனைக்கு உட்படுவார்கள்.

நான்காவதாக, மேற்கண்டவைகள் பிரபலமாக சந்தைப்படுத்தப்பட்ட பிராண்டில் ஒரு சில மாற்றம் செய்து, ஒத்த உச்சரிப்பு அல்லது ஒத்த தோற்றம் அமைத்து பயனாளர்கள் துரித கவனத்தில் தரமற்ற போலி எனப் படாமல் தந்திரமாக விற்பனை செய்வார்கள்.. இவர்கள் சட்ட விவகாரத்தில் தப்பித்துக்கொள்வார்கள். ஆனால் பயனாளர்கள் கவனக்குறைவால் ஏமாறுவார்கள். சிலப் பயனாளர்கள் விபரம் புரிந்தாலும் அவசர தேவைகள் அல்லது விலை குறைவின் நிமித்தத்தால் வாங்கி பயன்படுத்தவார்கள்.
(தொடரும்)
நபிதாஸ்

4 comments:

 1. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காகவும், அதிகமான லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் விதம் விதமாய் கலப்பட உத்திகளை கையாள்கிறார்கள். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளளவிலும் பாதிக்கப்படுவது பொதுமக்களாகிய நாம்தான்.
  இதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் !! சில அதிர்ச்சியளிக்கும் !!! இதோ...

  உணவுப்பொருள்.........கலப்பட பொருள்

  பால்.......................................... தண்ணீர், ஸ்டார்ச்அரிசி........................................ கல்பருப்பு...................................... கேசரி பருப்புமஞ்சள் பொடி...................... lead chromateதானியா பொடி....................சானி பொடி, ஸ்டார்ச்நல்ல மிளகு....................... காய்ந்த பப்பாளி விதைகள்வத்தல் பொடி.................... செங்கல் பொடி, மரப்பொடிதேயிலை............................. மரப்பொடி, பொடிசெய்யப்பட்டஉளுந்து தோல், ....................................................ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலைபெருங்காயம்..................... மண், பிசின்கடுகு..................................... ஆர்ஜிமோன் விதைகள்சமையல் எண்ணை....... மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை
  வெண்ணை........................ பிற கொழுப்புகள்பச்சை பட்டானி................பச்சை சாயம்நெய்...................................... வனஸ்பதிஆட்டிறைச்சி.................... மாட்டிறைச்சிமிளகு................................... பப்பாளி விதைபுதியதாக தயாரித்த

  புரோட்டவுடன்................. பழைய புராட்டாவைசர்பத் – ஜூஸ்களில்..... சாக்கிரீன்
  ஹோட்டல்களில் சோறு

  விறைப்பாக வர............. சுண்ணாம்பு

  இப்படி பல.. நாம், அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களில் மீது கலப்படங்களை சேர்க்கிறார்கள்.

  அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், சகோதர, சகோதரிகளே ! நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக நாம் பொருட்கள் வாங்கும்பொழுது அதனுடைய தரம், உற்பத்தி செய்த நாள் மற்றும் பயன்படுத்தக்கூடிய கால அவகாசம் ஆகியவைகளை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

  உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006 ‘ ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும் சட்டத்தின்படி கலப்பட உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது கலப்படப் பொருளின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாவட்ட துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரி இந்த அபராதத்தை நிர்ணயிக்கலாம்.

  உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் நகராட்சி பகுதிகளில் நகராட்சி உணவு ஆய்வாளர் அல்லது நகராட்சி ஆணையர் அவர்களுக்கும் கிராமப்பகுதிகளில் துணை இயக்குனர் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.

  புகார் தெரிவிக்க வேண்டிய முகவரி :
  Food Safety Commissioner : Sh. Girija Vaidyanathan ( IAS )
  Contact Details : Chennai - 600 003
  TEL : 044 24320802, 24335075, FAX : 044 24323942
  E-mail : dphpm@rediffmail.com
  Status of Laboratories: Food Analysis Laboratory, Medical College Road,
  Near Membalam, Thanjavur - 673001

  ReplyDelete
  Replies
  1. உணவு கலப்படம் விவரம் அருமை.
   உயிர்கொல்லி அஜினோமோட்டோவையும் சேர்த்திருந்தால் நாக்கிற்கு இன்னும் ருசியாக இருந்திருக்கும்.

   சேவைக்கு விருது அளித்து கவ்ரவிக்கப்பட்ட தங்களது பின்னூட்டம் கட்டுரைக்கு ருசியைக்கூட்டியது. நன்றி.

   Delete
 2. அனைத்திலும் போலிகள் ஆக்கிரமிப்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளீர்கள். அருமை. இனி பொது மக்கள் தான் விழிப்புணர்வு பெறவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை போலியில் மாட்டியுள்ளோம். அதனைத் தெரிந்து தெளிவது மிகக் கடினமான ஒன்று. பொது மக்களாகிய நாம் அனைவரும் விழிப்புணர்வுப் பெற்றுதான் ஆகவேண்டும். நன்றி.

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers