.

Pages

Wednesday, August 6, 2014

[ 9 ] மகவே கேள் : எளிதாக எண்ணி விடாதே !

ளிதாக எண்ணி விடாதே...!
வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலபேர், பலதரப்பட்ட மக்களை சந்திக்க கூடிய சூழல் ஏற்படும். நீ வசீகர தோற்றமுடையவனாக இருக்கலாம், நல்ல படித்த பட்டதாரியாக இருக்கலாம் ,இதன் காரணமாக இறுமாப்பு கொண்டு விடாதே ! தோற்றத்தால் சாதரனமான்வராக
இருக்கலாம் அவரை ஏளனம் செய்து விடாதே.

* ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் ஒரு உலகம் அதில்
அவனே கதாநாயகன் .

* நீ எவ்வளவு பெரிய இடத்தில இருந்தாலும் நீ மற்றவர்க்கு
ஒரு கதாபாத்திரம் தான்

* சில சமயங்களில் நீ சாதரனமனவனாக எடை போட்ட மனிதர்
உன் வாழ்க்கையில் இன்றியமையாத ஒருவராக அமையலாம்.

* அல்லது அவர் தம் உறவினரின் தேவை உனக்கு இன்றி அமையாதாக அமையலாம்.

ஒருவர் புதிய பணக்கார மிக குறிகிய காலத்தில் கோடிக்கணக்கான
பணத்திற்கு சொந்த காரர் எவருடைய உதவியும் தமக்கு தேவை இல்லை என்ற உணர்வு அவருக்கு பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் எடுத்தெறிந்து பேசி வருவார். அவருக்கு பின்னால் அவரை புது பணக்காரன், பணத்திமிரில் ஆடுகிறான் என்பார்கள்.

ஒரு சூழல் வந்தது அவர் தேர்தலில் போட்டியிட்டார் .ஒவோருவரிடமும் வாக்கு சேகரிக்க சென்ற போது நீ அப்படி பேசினாயே ,இப்படி நடந்து கொண்டாயே என்று பலரும் கேட்க, மன்னித்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு வராக சொல்லி திரிந்தது நகைச்சுவையாக இருந்தது.

சினிமாவில் கூட இது போன்ற காட்சிகள் ...மாற்றலாகி வரும்
பள்ளி ஆசிரியர் மாணவர்களால் பரிகாசிக்கப்பட்டு நொந்து போய்
அடுத்த நாள் பள்ளிக்கு வருவார். பரிகாசம் செய்த மாணவன்
வகுப்பறையில் விழி பிதுங்க நிற்கும் காட்சி.

அதே போன்று வங்கி மேலாளர் மாற்றலாகி  ஊர் வருவார் அதே
வங்கி ஊழியரால் பரிகாசிக்க பட்டு அதன் பின்னர் மேலாளர் என
தெரிந்ததும் அவர் படும் பாடு நகைப்புக்குரியதாக அமையும் ..

மகவே கேள் ! யாரையும் எளிதாய் எண்ணிவிடாதே..!
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

7 comments:

  1. வழக்கம் போல் புதுப்புது அறிவுரை !

    ReplyDelete
    Replies
    1. வாழ்வில் ..சந்திக்கும் பல அனுபவங்கள் ..
      மகவே கேள் ..தொடராக வருகிறது எனலாம்

      Delete
  2. நல்ல அறிவுரை கடைசியில் நகைச் சுவை உணர்வுடன் முடித்துள்ளீர்கள்..தொடருங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பல நிகழ்வுகள் ..
      சிலர் தம்மை புத்திசாலியாக நினைத்து செய்யும் செயல் காமெடியாக மாறி காட்சி அளிக்கும்

      Delete
  3. * ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் ஒரு உலகம் அதில்
    அவனே கதாநாயகன் .

    * நீ எவ்வளவு பெரிய இடத்தில இருந்தாலும் நீ மற்றவர்க்கு
    ஒரு கதாபாத்திரம் தான்

    * சில சமயங்களில் நீ சாதரனமனவனாக எடை போட்ட மனிதர்
    உன் வாழ்க்கையில் இன்றியமையாத ஒருவராக அமையலாம்.

    * அல்லது அவர் தம் உறவினரின் தேவை உனக்கு இன்றி அமையாதாக அமையலாம்.

    சிறந்த அறிவுரை. சிந்திப்போர்க்கு உயர்ந்த நன்மைகள் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தொடரின் மைய்ய கருத்தை ..
      தெளிவாய் அறிந்து கருத்தளித்த அறிஞர் நபிதாஸ் அவர்களுக்கு நன்றிகள் பல ...

      Delete
    2. * ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் ஒரு உலகம் அதில்
      அவனே கதாநாயகன்

      இவைகள் சாதாரண வார்த்தையில் பொதிந்த பேருண்மைகள்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers