kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, August 22, 2014
இவரும் மகாக்கஞ்சன்
உன்னிடம் இருப்பதில்
ஒருவன் கேட்டால்
என்னிடம் இல்லை
என்று பதில்கூறுவார்
இருப்பதில் குறைவு
ஏற்படும் என்று
உருப்படியாக எதயையும்
உளமொன்றிச் செய்யார்
தனக்குத் தெரிந்ததைத்
தன்னுள்ளே வைத்துக்கொண்டு
எனக்கு எதுவும்
என்றுமே தெரியாதென்பார்
இவர்கள் எல்லாம்
இகத்தே வாழும்
விவரமாக இருக்கிறோமென்ற
விசித்திரக் கஞ்சன்கள்
ஆனாலும் அதைவிட
ஆசையைக்கூட அளந்து
போனாலும் போகட்டுமென்ற
புதுமை மாகக்கஞ்சனாமே !
எவரென்றால் ? எப்போதுமே
எண்ணும் எண்ணத்தில்கூட
இவர் உயர்ந்ததை
என்றுமே எண்ணாதவரே !
நபிதாஸ்
ஒருவன் கேட்டால்
என்னிடம் இல்லை
என்று பதில்கூறுவார்
இருப்பதில் குறைவு
ஏற்படும் என்று
உருப்படியாக எதயையும்
உளமொன்றிச் செய்யார்
தனக்குத் தெரிந்ததைத்
தன்னுள்ளே வைத்துக்கொண்டு
எனக்கு எதுவும்
என்றுமே தெரியாதென்பார்
இவர்கள் எல்லாம்
இகத்தே வாழும்
விவரமாக இருக்கிறோமென்ற
விசித்திரக் கஞ்சன்கள்
ஆனாலும் அதைவிட
ஆசையைக்கூட அளந்து
போனாலும் போகட்டுமென்ற
புதுமை மாகக்கஞ்சனாமே !
எவரென்றால் ? எப்போதுமே
எண்ணும் எண்ணத்தில்கூட
இவர் உயர்ந்ததை
என்றுமே எண்ணாதவரே !
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteயாரு அந்த இவரு?
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.அவன் அடிக்கடி அங்கு சென்று வருவதை ஒரு திருடன் கவனித்து ஒரு நாள் அவன் பின்னாலேயே சென்று அவன் பணத்தை புதைத்து வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டான்.ஒரு நாள் இரவு அங்கு சென்று பணத்தை எல்லாம் எடுத்துச்சென்று விட்டான்.மறுநாள் கஞ்சன் பார்த்தபோது பணம் காணவில்லை என்றதும்,வாயிலும் வயிற்றிலும் அடித்தக் கொண்டு கதறினான்.அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன்,''நண்பா,வருந்தாதே,பணம் அங்கு இருந்தாலும் நீ அதை செலவிடப் போவதில்லை.எனவே பணம் அங்கே இருந்தாலும் ஒன்றுதான்:இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.ஒன்று செய்.நீ பணம் வைத்த இடத்திலேயே அந்தப் பணம் இருப்பதாகவே நினைத்துக்கொள்.வீணே வருத்தப்படாதே.''என்றான்.
Deleteஒரு கருமியான பணக்காரன் சாகும் தருவாயில் இருந்தார்..அப்போது தன மூத்த மகனைக் கூப்பிட்டு,''என்னைஎப்படி அடக்கம் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்..மூத்த மகன்,'சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்வேன்,''என்றான்.இருந்த சக்தியெல்லாம் திரட்டி ஒரு அறை கொடுத்தார் தந்தை மகனுக்கு.''ஏண்டா,நான் சேர்த்து வைத்ததையெல்லாம் அநியாயமாகக் காலி செய்து விடுவாய் போலிருக்கே,''என்றவர்,அடுத்த மகனைக் கூப்பிட்டு அதே கேள்வியைக் கேட்டார்.அவன் சொன்னான்,''சாதாக் கள்ளிப் பலகையில் அடக்கம் செய்வேன்,''தந்தை கோபத்துடன்,''கள்ளிப் பெட்டியை ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?ஒரு நாள் அடுப்பெரிக்க உதவுமே.நீயும் சரியில்லை.''என்றார்.மூன்றாம் மகன் அதே கேள்விக்குப் பதில் சொன்னான்,''அப்பா,நீ இறந்தவுடன் உன் உடல் உறுப்புக்களை ஏதாவது ஒரு டாக்டரிடம் விற்று விடுவேன்.''தந்தை மகிழ்ச்சியுடன் சொன்னார்,''சபாஷ்,நீதான் சரியானபையன்.ஆனால் ஒன்று.என்உறுப்புக்களை மேலத் தெருவில் இருக்கும் டாக்டரிடம் விற்று விடாதே.மனுஷன் உடனே பணம் தராது இழுத்தடிப்பான்.
Deleteஒரு கஞ்சனிடம் கஞ்சன் என்று எழுதச் சொல்லியதற்கு,கருமி என்று எழுதினானாம்.ஏனென்று கேட்டதற்கு கஞ்சன் என்ற வார்த்தைக்கு நான்கு எழுத்துக்கள்;கருமி என்ற வார்த்தைக்கோ மூன்று எழுத்துக்கள் தானே என்றானாம்.
Deleteகருமி ஒருவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தான்.தன்னைக் காப்பாற்ற மற்றவர்களைக் கூவி அழைத்தான் அவன் மகன்.தண்ணீருக்குள் இருந்து ஒரு முறை எம்பிப் பார்த்த தந்தை கத்தினான்,''டேய்,அவர்கள் வந்து காப்பாற்றுவதாய் இருந்தால் காப்பாற்றட்டும்;ஆனால் ஐந்து ரூபாய்க்கு மேல் தர ஒத்துக் கொள்ளாதே.''
Deleteகஞ்சன் ஒருவனைப் புலி ஒன்று கௌவிக்கொண்டு சென்றது.அவனுடைய மகன் புலிக்குப் பின்னால் ஓடி வந்தான்.வில் அம்புகளோடு புலியை அவன் குறி வைக்கையில் புலியின் வாயிலிருந்து எட்டிப் பார்த்து தந்தை சொன்னான்,''காலைப் பார்த்து அம்பு விடு.புலியின் உடலில் எங்காவது பட்டு தோல் வீணாகி விடப் போகிறது.''
Deleteகஞ்சன் ஒருவனிடம் பிச்சை கேட்டான் ஒருவன்.அவனிடம் அப்போது பணமும் இல்லை;மனமும் இல்லை.ஆனால் பக்கத்தில் நின்ற ஏழை ஒருவன்அப்பிச்சைக்காரனுக்குத் தானம் செய்தான்.கஞ்சன்,அவன் முன் தன கௌரவத்தைக் காக்க அந்த ஏழையிடமே பத்து பைசா வாங்கி பிச்சைக்காரனுக்கு தானம் செய்து விட்டு மறுநாள் பத்து பைசாவை தன வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி அந்த ஏழையிடம் சொன்னான்.பிறகு அந்த ஏழையை பைசா கொடுக்காமல் பல நாள் அலைய வைத்தான்.அவனும் விடாக்கண்டன்.இவனை விடவில்லை.
Deleteஒருநாள் அவன் தன வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்ட கஞ்சன்,மனைவியிடம் சொல்லிவிட்டு இறந்தவனைப் போல நடித்தான்.அவனிடம் கஞ்சனின் மனைவி,''இறக்கும் தருவாயில் கூட உங்களுக்கு பத்து பைசாவை திரும்பக் கொடுக்க முடியவில்லையே என வருத்தப்பட்டார்,''எனக் கூறினாள்.ஏழையோ விடாமல்,'அப்படிப்பட்ட நல்லவரை சமாதியில் அடக்கம் செய்ய நானே ஏற்பாடு செய்கிறேன்.'என்று கூறி ஒரு சவப் பெட்டியை ஏற்பாடு செய்து அதில் கஞ்சனைக் கிடத்தினான்.அப்போது கூட கஞ்சனோ அவன் மனைவியோ வாயைத் திறக்கவில்லை.
ஏழை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு காட்டு வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது திருடர்கள் வரும் சப்தம் கேட்டு பெட்டியை அப்படியே போட்டு விட்டு ஒரு பெரிய மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான்.திருடர்கள் கொண்டு வந்த பணத்தை அந்த இடத்தில் கொட்டிக் கணக்கு பார்க்கும் போதுஏழை ஒரு வினோதமான சப்தம் கொடுத்தான்.திருடர்கள் பேயோ,பிசாசோ என்று பயந்து எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர்.இப்போது கஞ்சன் வெளியே வந்து,''இந்தபணத்தை நாம் இருவரும் சம பங்கு போட்டுக் கொள்வோம்,''என்று கூற ஏழையும் ஒத்துக் கொண்டான்.பிரித்தபின்ஏழை,''இப்போதாவது அந்த பத்து பைசா கடனைக் கொடுக்கக் கூடாதா?''என்று கேட்க கஞ்சன் சொன்னான்,''நீயே சொல்,இங்கே சில்லறை இருக்கா?நாளை வீட்டுக்கு வா,தருகிறேன்.''
என்னுடைய பின்னூட்டங்கள் கஞ்சத்தனமாக இருக்காது.
Delete//யாரு அந்த இவரு? //
Deleteஎவரென்றால் ? எப்போதுமே
எண்ணும் எண்ணத்தில்கூட
இவர் உயர்ந்ததை
என்றுமே எண்ணாதவரே !
//என்னுடைய பின்னூட்டங்கள் கஞ்சத்தனமாக இருக்காது.//
Deleteஉண்மை ! யாரும் மறுப்பதற்கில்லை !
பின்னூட்டங்களின் எண்கள் அதிகமாக தெரிந்தாலே தாங்கள் பின்னூட்டம் வாரி வழங்கிவிட்டீர்கள் என்பதை புரிந்துக்கொள்ளாமல் நம் வாசகர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
எப்படி இவ்வளவு விபரங்களை தருகிறீர்கள் என்பது மூக்கில் விரல் வைக்கும் ஆச்சிரியமே !
பின்னூட்ட வள்ளல் என்ற பெயர் இடலாமா...
//என்உறுப்புக்களை மேலத் தெருவில் இருக்கும் டாக்டரிடம் விற்று விடாதே.மனுஷன் உடனே பணம் தராது இழுத்தடிப்பான்.//
Deleteஎந்தவூரு மேலத்தெரு என்று புரியவில்லை.....அதையும் அவர் சொல்லி இருக்கலாம் கருத்து முழுமைப் பெற...
கஞ்சனை விளக்க
Deleteகருத்துமழைப் பொலிவு
மிஞ்சிவிட இங்கே
மிகைத்தவர்கள் உண்டோ !
கஞ்சனை விளக்க
கடல்போல் தருவீர்
பஞ்சமில்லாமல் தாங்கள்
படித்திட நாங்கள்.
எண்ணும் எண்ணத்தில்கூட
Deleteஇவர் உயர்ந்ததை
என்றுமே எண்ணாதவரே !
என்ற கருத்தை விளக்கி தாங்கள் இன்னும் பல பக்கம் பின்னூட்டம் எழுதிட முடியும்.
உண்மையின் சூத்திரம் தெரிந்தால் எத்தனையோ உடைகள் உண்டாக்கலாம் அல்லவா !
மகா காஞ்சனை பற்றி கூறிய விதம் அருமை !
ReplyDeleteஎண்ணமே வாழ்வு. எண்ணப்படித்தான் செயல்கள் இருக்கும் என்றக் கருத்தை தந்தவர்கள் மனிதருள் மாணிக்கம், மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டியவர்கள். அதனால் அவ்வாறு எண்ணும் எண்ணத்தில் கஞ்சத்தனம் இருந்தால் எவ்வாறு உயர்வு, அமைதி அடைய இயலும் ? உள்ளுவதெல்லாம் உய்ர்வுள்ளால் என்பதெல்லாம் இதனை வழியுருத்துகின்றனவே. எனவே நினைக்கும் நினைவில் உயர்வாக நினைக்க வேண்டும் அல்லவா !
Deleteகஞ்சத்தனம் கண்ணியக்குறைவு
ReplyDeleteமஞ்சத்தில் உறங்கிப் பயனில்லை
மதியுள்ளோர் மனது கஞ்சனாவதில்லை
எஞ்சியிருப்பது எள்ளாயினும்
வஞ்சகமின்றி வழங்கிடல்
மனிதகுணம்
பஞ்சத்தைப் போக்கி
நெஞ்சத்தை குளிரவைக்கும்
பண்பு இல்லாதவன்
மகாகஞ்சனே
எதிலெல்லாம் கஞ்சத்தனம் வேண்டும்
தீங்கிழைப்பதில் தீயசெயலில்
வஞ்சிப்பதில் வசைபாடுவதில்
கொடுஞ்செயலில் கொள்ளையடிப்பதில்
கடும்குற்றத்தில் கயவராவதில்
பகைகொள்வதில் பகல்கனவுகாண்பதில்
துன்புறுத்துவதில் துயரப்படுத்துவதில்
வழிமாறுவதில் பழிபோடுவதில்
வறியோர்க்கு வழங்குவதிலல்ல
இறையோனை வணங்குவதிலல்ல
இதையுணர்ந்து நடந்திட்டால்
இகம்போற்றி இன்பமாய்வாழ வாழவைக்கும்
//எதிலெல்லாம் கஞ்சத்தனம் வேண்டும்
Deleteதீங்கிழைப்பதில் தீயசெயலில்
வஞ்சிப்பதில் வசைபாடுவதில்
கொடுஞ்செயலில் கொள்ளையடிப்பதில்
கடும்குற்றத்தில் கயவராவதில்
பகைகொள்வதில் பகல்கனவுகாண்பதில்
துன்புறுத்துவதில் துயரப்படுத்துவதில்
வழிமாறுவதில் பழிபோடுவதில் //
மேற்கண்ட குணம் உள்ளவர்கள் அதில் உடன் கஞ்சத்தனமாக ஆகி பின் அதுவும் இல்லாது உடன் அக்குணங்களை விட்டுவிடவேண்டும் அல்லவா !