.

Pages

Friday, August 8, 2014

போலிகள் !? [ இலாப யுக்தி உற்பத்தியாளர்கள் ]

அறிவுத்தேன் II
பொதுவாக அதிகமக்கள் விபரம் புரியாமலோ அல்லது தனது பொருளாதார வாங்கும் சக்திக்கேற்பவோ விலை குறைவானதையே வாங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் அசலை செய்து விற்பவருக்கு வியாபாரம் குறைவாகிப் போக நேரிடலாம். இதனைக் கருத்தில் கொண்ட, உணவுப் பொருள் உற்பத்தி செய்யாத எந்திரங்கள் அல்லது அன்றாட பயன்பாட்டிற்கு உதவும் மின்சாதனம் அல்லது மின்சாரமற்ற சாதனங்கள் அல்லது வாகனப் பாகங்கள் அல்லது உதிரிப் பாகங்கள் போன்றவைகள் செய்யும் சிலத் தொழில் அதிபர்கள் போலிகளை ஒழிக்க முடியாமையினாலும் அவர்கள் வேறு ஒரு நிறுவனைத்தை வேறு நாட்டில் நிறுவியோ அல்லது ஒப்பந்தம் செய்தோ அதில் இவர்களே அல்லது இவர்கள் தொடர்புகளுடனோ தரமற்றவைகளையும் செய்து விற்பார்கள்.

இவ்வாறு இவர்கள் உற்பத்தி செய்யும் இந்த பொருட்கள் நீண்டகாலம் உழைக்காதது மட்டும் அல்ல மனித உயிர்களுக்கும் பாதிப்புகள் உண்டாக்காது. இந்த வகையில் உபயோகிப்பாளர்கள் அதிகம் பேர் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை வாங்குவதால் இவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும். இவர்கள் மக்கள் மன நிலைக்குத் தக்கவாறு தொழில் செய்து இலாபம் ஈட்டக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறு அசல் பொருளைச் செய்பவர்களே தரமற்றவைகளையும் செய்து விற்பார்கள். ஆனாலும் கவனக் குறைவானவர்கள், பாமரர்கள் அதனை அசல் என்று வாங்கிவிடுவதும் நிகழாமல் இல்லை. பயன்பாட்டில் காலப்போக்கில்  இந்தப் பொருள்களும் போலிகள் என்றே வழக்கில் அழைக்கப்படும்.

போலிகள் அல்லது தரமற்றவைகள் அதிகமாக விற்பதால் உற்பத்தி செய்பவர்களுக்கு அதிக இலாபம். வாங்கி விற்பவர்களுக்கு அசலைக்காட்டிலும் மிகக் குறைவான விலையில் இருப்பதால் அதிகமாக பொருள் வாங்கி விற்கப்படும். அதன் மூலம் அதிக இலாபம் கிடைக்கும். வாங்குபவர்கள் (நுகர்வோர்கள்) விலை குறைவானதாக இருப்பதால் அதனையே வாங்கும் நிலை ஏற்படும். அதனால் தரமற்றவைகள் அல்லது போலிகள் மிக விரைவாகவும், இலகுவாகவும் பரவிவிடும். போலிகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லையாதலால் அதனில் அதன்மூலம் அதிக நன்மைகள் இருக்காது. . போலியை அசல் என்று ஏமாற்றி விற்பதினால் சில சமயம் சிலப் பொருள்கள் மூலம் பெரும் பாதிப்புகளும் ஏற்படும்.

பெரும்பாலான அசல் உதிரிப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பவர்கள் தரமற்றவைகளை (பாமரர்களைப் பொறுத்தமட்டிலும் போலிகளை) அவர்களே உற்பத்திச் செய்து விற்பது கிடையாது. ஆனால், உலக வர்த்தகம் செய்யும் சில நாடுகள் தன் நாட்டில் அசல் பொருள்களை உற்பத்திச் செய்து விற்பனைக்கு உலகெங்கும் அனுப்பும். ஆனால் அதன் உதிரி பாகங்கள் (Parts) அவர்களிடமிருந்து உடன் கிடைக்காது. அதே நேரத்தில் அதன் உதிரிப்பொருள் (Accessories) அல்லது உதிரி பாகங்கள் அசல் உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து கிடைப்பதைக்காட்டிலும் வேறு நாட்டிலிருந்து அசல் அல்லாத உதிரிப் பாகங்கள் உடனே கிடைக்கும்.

இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் உற்பத்தி செய்தவுடன் உடனே போலிகள் வெளிவாராது. இது பொதுவான வழக்கம். ஆனால் வாகனம், செல்போன் போன்றவைகள் புது மாடலில் வெளிவந்தவுடன் அதன் உதிரி பாகங்கள் அசலைக்காட்டிலும் போலியில்தான் உடன் கிடைக்கும் இதனை வெளி நாட்டில் உள்ளவர்கள் எளிதில் கண்கூடாகப் பார்க்கலாம்.

அந்தந்த நாட்டில் போலிகள் செய்து விற்பது எப்பொழுது ஏற்படும் என்றால், அந்த உற்பத்தி செய்து விற்கப்படும் பொருள் மிகப் பிரபலம் ஆனவுடன் தான் பிறர் போலிகளை செய்து விற்கின்றனர். ஆனால் தரமற்றவைகள் அவ்வாறல்ல.
(தொடரும்)
நபிதாஸ்

8 comments:

  1. ஆய்வு அருமை !

    இவர்களின் போலித்தனத்தை அடையாளம் காட்டுவது அவசியம்

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஒரு உண்மைக்கு ஒன்பது போலிகள் உருவாகிவிட்டது. உண்மைகள் எதுவென்று புரிவது இக்காலத்தில் ஒரு சவாலே !

      Delete
  2. போலிகளைப் பற்றிய விளக்க உரை அருமை. இன்னும் பல போலிகளை அடையாளம் கண்டு எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. போலிகள் எல்லா இடத்திலும் புகுந்துவிட்டதால் எது போலிகள் என்பதைக் காட்டிலும் போலியே உண்மை என்று நம்பும் நிலைக்கு இன்று மனிதன் தள்ளப்பட்டுவிட்டான். இன்று உண்மைகள் அனாதையாக்கப்படுகின்றன. உண்மைகளைக் கண்டறிய அதிகச் சிரத்தைகள் வேண்டும். இல்லையேல் அருகில் இருக்கும் உண்மை பாராதூரமாய் எங்கும் தேடினும் கிடைக்காமல்தான் இன்று போகிறது !

      Delete
  3. Replies
    1. தொடர வேண்டுவதை அறிந்து, தேடும் உள்ளங்களுக்கு தரவேண்டும் என்ற ஆவல் அதிகமே.

      Delete
  4. அசலை ..தயாரிப்பவர்களே ..
    போலிக்கு உடந்தையா ...
    என்னத்தை சொல்ல ...

    ReplyDelete
  5. வியாபாரப் போட்டிகள்
    இயலாமையின் தேவை பூர்த்திகள்
    இலாபங்களே இலக்கு
    இவைகளே காரணிகள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers