.

Pages

Sunday, December 28, 2014

வேலை வேண்டும் !

வேலைக் கூடச் சிறைதனிலே
விரும்பி நாமே நுழைந்துவிட்டு
மாலை நேர விடுதலையால்
மகிழ்ந்து கொள்ளும் மனிதமனம்!

வேலை யில்லாப் பட்டதாரி
வேலை தேடா  வேடதாரி
மாலை சூடும் மணமகளும்
மதிக்க என்றும் துணிவதில்லை!

வேலை தருமே மரியாதை
விரைந்து கிடைக்கும் ஒருபாதை
காலைத் தூக்கம் வெறுத்ததினால்
கடமை உணர்வு பெருத்திடுமே!

வேலை செய்து பெறும்பணமே
வெல்லும் வாழ்வில் பெருமிதமே
சோலை வனமாய்த் துளிர்த்திடுமே
சோகம் யாவும் துடைத்திடுமே!

வேலை செய்ய உலகமெலாம்
விழைந்து பறந்து அலைந்திடுக
பாலை வானமும் அரவணைக்கும்
பாடு பட்டால் புகழுனக்கு!

வேலை யில்லா இளைஞர்கள்
வீணர்  களிடம் விழுவார்கள்
மூளை யில்லா வன்முறைகள்
முழுது மிவர்கள் செய்முறைகள்!
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

8 comments:

  1. நாளை உலகில் நலம்பெறவே
    வேலைகுறித்த விழிப்புணர்வு
    விளக்கமாய் கண்டேன் கவிவடிவில்
    தீபம் தந்திட்ட நற்க்கவியில்
    தேகம் துடித்திடும் தீர்ச்சையாக
    வியர்வை சிந்தி உழைத்திட்டால்
    வியக்கும் உலகு உனைப் பார்த்து

    ReplyDelete
    Replies
    1. வேளை பளுவிலும் வேகமாய்ப் பின்னூட்டம்
      நாளை எனச்சொல்லி நாளையும் தள்ளாமல்
      வாழ்த்தும் பெருங்குணம் வாழ்த்தி மகிழ்கின்றேன்
      ஆழ்த்தும் இனியதோர் அன்பு.

      Delete
  2. வேலைப் பளுவின் நிமித்தத்தால்
    விலகி நின்றீர் என்றுணர்ந்தேன்
    மேலை நாட்டில் இருந்திடினும்
    மீறக் காதல் தமிழின்பால்
    நாளை என்றுத் தாழ்த்தாமல்
    நறுக்காய் கவிகள் தருகின்றாய்
    மூளை முழுதும் படைத்தவன்பால்
    முயற்சிச் செய்தே நிற்கின்றாய்

    ReplyDelete
    Replies
    1. விலகும் துன்பம் விரைவாக
      விலகா நமது தமிழின்பம்
      நலமாய்ப் பாடல் வனையத்தான்
      பலமாய் வந்தேன் இனிதாக!

      Delete
  3. வேலையின் சிறப்பு அருமை !

    ReplyDelete
    Replies
    1. வேலை பளுவிலும் விரைந்து சொன்ன மறுமொழிக்கு நன்றி

      Delete
  4. உத்தியோகம் புருஷ லட்ஷனம்
    மனிதன் உழைத்து கொண்டே இருக்கணும்
    மரியாதை தழைத்துக் கொண்டே இருக்கும்
    என்பதை அழகாகச் சொல்லும் கவிதை,

    ReplyDelete
    Replies
    1. உன்னிப்பாய்க் கவனித்து என் கவிதையினுட்கருத்தை உணர்ந்து எழுதிய மறுமொழிக்கு நன்றி,சகோதரா சாதிக் பாஷா

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers