.

Pages

Wednesday, January 28, 2015

[ 4 ] எழுதலாம் வாங்க ! பேட்டி எடுக்கும் முறை

நீண்ட இடைவெளி...

ஆம்...

நீண்ட நெடுந்தூர பயணம்....

உறவினர்களோடு சந்திப்பு... மீண்டும் அமெரிக்கா வந்த அயர்வு... இவைகளால் எனது பகிர்வில் நீண்ட இடைவெளி.

மீண்டும் தொடர்கிறேன்... தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி...

ஆ,,, சொல்ல மறந்து விட்டேன்.

புத்தாண்டு நல வாழ்த்துக்கள் ! பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!

நம் வாழ்வில் அமைதி நிலவட்டும்...

1980 கால கட்டத்தில் பேட்டி எடுப்பது என்பது  ஒரு சம்பிரதாய அடிப்படையாக அமைந்து இருந்தது. சிற்றூர் - பேரூர் மற்றும் நகராட்சி போன்ற
இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் நிருபர்களிடம்
அளிக்கப்படும். அவர்கள் அதனை அப்படியே போஸ்ட் செய்வார்கள்
இரண்டு நாள் கழித்து செய்தியாக வரும். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு
வரும் மந்திரிகள் பற்றிய செய்தி, நிருபர்களுக்கு தெரிவிக்கப்படும்.

நிகழ்வன்று செய்தியாளர்கள் வரவழைக்கப்படுவார்கள். அவர்கள் துறைசார்ந்த கேள்விகள் கேட்ப்பார்கள். மந்திரி தரும் தகவல்களை அப்படியே செய்தியாக தருவார்கள்.

நான் பதினாறு வயது இளைஞனாக வயது முதிர்ந்த செய்தியாளர்களுடன்
அமர்ந்து செய்தி சேகரிக்கும் போது, தினத்தந்தி செய்தியாளர் எனக்கு தகவல் தந்து உதவியது இன்றும் ஞாபகம் உள்ளது. அன்றைய கால கட்டத்தில் நிருபர்களை கண்டு அரண்டு ஓடியது கிடையாது ..மாறாக அவ்வப்போது அன்பாய் கவனிக்கப்படும் நபராக இருந்தார்கள்.

1990 களில் பத்திரிக்கை துறை பரிணாம வளர்ச்சி அடைந்த தருணத்தில், தமிழகத்தை பொறுத்தவரை ஜூனியர் விகடன் பத்திரிகை வரவு பத்திரிக்கையாளரை தலை நிமிர்ந்து நடக்க வைத்தது. கொலையா ? தற்கொலையா ? என்று தலைப்பிட்டு கேள்வி கேட்க மட்டுமே முடிந்த பத்திரிகை களத்தில் இறங்கி உண்மையை வெளிக்கொணர உதவும் ஒரு சக்தியாக உருபெற்றது. இதன் பின்னர் இளம் பத்திரிக்கையாளர்கள் உருவாகினார்கள். நல்ல பல சாதனைகள் பத்திரிக்கை உலகம்
கண்டது.

பேட்டிஎடுக்கும் முறை:
*  எந்த ஒரு துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் பேட்டி
எடுக்க செல்பவர்கள், உடனே தான் கேட்க நினைக்கும் கேள்வியை கேட்டு
விட்டால் அவரிடம் எந்த ஒரு விவரத்தையும் பெற இயலாது. மிக அன்னியோனியமாய் உறவாடி நாம் கேட்க நினைக்கும் கேள்விக்கு அடி எடுத்து வைக்கவேண்டும்.

* யூகம் என்பது மிக அவசியமான ஒன்று, சூழ்நிலை, நாம் சந்திக்கும் நாபரின் முகபாவம் அடிப்படையில் அவர் நமக்கு தரும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

* கூட்டாக பேட்டி எடுக்கும்போது அவசியம் சூழ்நிலை கேற்ற முக்கியமான கேள்வியை கேட்க தவறக்கூடாது.
இன்னும் சொல்வேன்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

9 comments:

 1. நண்பருக்கு நல் வாழ்த்துக்கள் இளம் பத்திரிக்கையாளருக்கு நல்லுபதேசம் தொடரட்டும் தம் பணி

  ReplyDelete
 2. பல ஊடகங்கள் ஊரில் இருப்பதால் இது போன்ற கருத்துக்கள் அவசியமே.

  ReplyDelete
  Replies
  1. நம் ...தளத்திற்கு வருகை தந்தால்...
   அறிவமுதம் பெறலாம் ..தங்களை போன்ற
   அறிஞர்கள் வருகை தரும் தலமல்லவா

   Delete
 3. நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களது ஆக்கம் தளத்தில் வந்தாலும் பேட்டிஎடுக்கும் முறையை நல்ல பல விளக்கத்துடன் பகிர்ந்துள்ளீர்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ,,நண்பரே ..
   தங்களின் ..ஊக்கத்திற்கு நன்றி

   Delete
 4. நீண்ட நாட்களுக்கு பிற்கு உங்களின் ஆக்கத்தை கான முடிகிறது உங்களின் இந்த சேவைக்கு மிக்க நன்றி உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ....
   தங்களின் ஆர்வமூட்டல் ...ஆதரவு எனக்கு மகிழ்வை
   தருகிறது ..நன்றி நண்பரே

   Delete
 5. இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers