.

Pages

Monday, January 26, 2015

Money... Money... Money...

Money... Money... Money...

காசேதான் கடவுலப்பா

பணம் பத்தும் செய்யும்

பணத்தை கண்டால் பிணமும் எழும்

பணம் பாதாலம் வரை பாயும்
   
இவ்வகை வழக்குச்சொற்க்கள் நம் அன்றாட வாழ்வில் பிறர் சொல்ல கேட்டிருப்போம் அல்லது நாம் பிறரிடம் கூறி இருப்போம்.

இவ்வகை மொழிகள் அனுப விஷயங்களாக இருக்களாம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ஆனால் இந்த வழக்குச்சொல்லில் இருக்கும் பொருள் இஸ்லாத்திற்க்கு எதிரான சிர்கான சொல்லாகும். முதலில் கூறப்பட்டது நேரடியாய் பணத்தை அல்லாஹ்விற்கு இணையாக வைக்கும் வார்த்தையாகும். மற்ற கூற்றுக்கள் அல்லாஹ்வையன்றி அனுவும் அசையாது என்பதை மறந்து பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வார்த்தைகளாகும்.

பணம் வரும் போகும் மனுஷனை முதலில் மதிக்கவேண்டும்.

பணம் என்னடா பணம் குணம் தானடா நிரந்தரம்.

இதுபோன்ற தத்துவங்களை சொல்பவரை பார்த்து இவர் விரக்தியில் பேசுகிறார் என்று மற்றவர்கள் ஏளனம் பேசுவார்கள் காரணம். என்னதான் சொன்னாலும் பணம் இல்லாமல் எதுவும் ஆகாது என்பார்கள் ? பணம் இல்லாவிடில் சொந்த பந்தங்கள் மதிக்க மாட்டார்கள் பணக்காரனைத்தான் ஊர் மக்கள் மதிக்கிறார்கள். ஏன் மனைவி, மக்கள் கூட பணம் இல்லாவிடில் மதிப்பு தருவதில்லை !?

இப்படி மனிதனோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது பணம். வாலிபத்தை தொலைத்து வெளி நாட்டிலும், பசியை மறந்து வேளையிலும், மார்கத்தை மறந்து அதிகமான பணத்தை சேர்க்கின்றனர். அந்த பணம் அவனின் வாழ்வில் அவனோடு எவ்வளவு தூரம் பயணிக்கின்றது என்று சற்று அலசி பார்ப்போம்.

முதல் சம்பவம்:
தாய், தந்தையரின் சொல் கேட்டு சமர்த்தாய் பள்ளிப்பாடங்களை படித்து முதல் மாணவனாய் தேர்வாகி நல்ல வேலையும் கிடைத்து கை நிறைந்த சம்பளம் White coller job ஜாலியாய் வாழ்கை போக சுற்றாத ஊரில்லை, உண்ணாத உணவில்லை இப்பொழுது வயது 40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயது திடீரென்று ஹாட் அட்டாக் அடித்துப்பிடித்து மருத்துவமனை சென்று ஆபத்தான கட்டத்தை தாண்டியாச்சு ஆனா டெஸ்டு செஞ்ச வகையில் இனிப்பு நீரும் இரத்தக்கொதிப்பும் அதிகமா இருக்குதாம் என்று சொல்லி உலகத்துல உள்ள முக்கால் பாக உணவு பண்டத்தை கண்ணுல கூட பார்க்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு இதுல உப்பு நீரும் இருக்குதாம் கை நிறைய காசு இருந்து என்ன செய்ய ? இனிப்பு இல்லாத டீ , உப்பில்லாத சாப்பாடுதான், இனி வாழ் நாள் முழுவதும். அவரின் சம்பாத்யம் 50 வயதை தொடும் முன்னே அவருக்கு பயன் அளிக்காமல் இருக்கிறது. இனி விழுந்து விழுந்து சம்பாதித்து என்ன பயன் என்று வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

இரண்டாம் சம்பவம்;  
டாக்டரால் கைவிடப்பட்டு  வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு 70 வயது இருக்கும் தன் வாலிப வயதில் பணம் ஒன்றே குறிக்கோளாய் இருந்து நேர்மை தவறி நிறைய சொத்துக்கள் சேர்த்துவிட்டார். இவருக்கு நான்கு ஆண் மக்கள். படுத்த படுக்கையில் நால்வரையும் பக்கத்தில் அழைத்து மூத்த மகனை பார்த்து சொன்னார். தாம் சேர்த்த சொத்தில் ஒன்றை குறிப்பிட்டு அதை ஏழ்மை நிலையில் இருக்கும் தன் சகோதரிக்கு கொடுத்துவிடச் சொன்னார், இதைக்கேட்ட இரண்டாம் மகன் கோபம் கொண்டவராக "ஏன் திடீர்னு தங்கச்சி மேலே பாசம் வந்துடுச்சு நாங்க சின்ன வயசா இருக்கும்போதே அவங்க வீட்டுக்கு போகாதே நம்ம ஸ்டேடசுக்கு அவங்க சரி வராதுன்னும் அவங்க கெட்டவங்கன்னும் சொல்லியே எங்கள வளர்த்துட்டு இப்ப என்ன மரண பயம் வந்துடுச்சா ? அதல்லாம் சல்லி காசு கூட எங்க நால்வரை தவிர வேரு யாருக்கும் கொடுக்க மாட்டோம்" என்று கத்தினார்.

பெரியவரின் கண்களிள் இருந்து கண்ணீர் தாரை தாரையாய் வந்தது எதையும் கண்டும் கலங்காதவர் தன் கையாலாகாத நிலை கண்டு மிகவும் வருந்தினார் இவ்வளவு சம்பாதித்தும் நாம் இருக்கும்போதே நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லையே என்று கண்கலங்கினார்.

நபிகளாரின்(ஸல்)கூற்று:
1. முதுமை வரும் முன் இளமையையும்
2. வருமை வரும் முன் செல்வத்தையும்,
3. வேலை வரும் முன் ஓய்வையும்,
4. நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும்,
5. இறப்பு வரும் முன் வாழ்வையும்,

நேரான வழியில் மனிதன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சூளுரைத்துள்ளார்கள்.

ஒருவன் உண்டு முடித்த உணவும் உடுத்திக்கிழித்த உடையும் அவன் செய்த நல் அமல்களுமே அவனைச்சேரும்- நபி மொழி

காசு பணம் என்பது அவன் வாழ்கிண்ற வரையில்தான் இறப்பிற்க்குப்பின்னால் அதுவெல்லாம் கூட வராது என்பார்கள் ஆனால் மேலே சொன்ன இறன்டு சம்பவங்களும் அவன் வாழ்கிண்ற காளத்திலேயே சேர்த்த பணமும், சொத்தும் அவனுக்கு பலனளிக்கவில்லை

பாலாய்ப்போன பணத்திற்கு ஆளாய் பறக்கின்ற மானுடர்களே சம்பாதிக்கும் காலத்திலேயே தான தர்மங்களையும் நம் பொருளுக்குரிய கடமைகளையும் நாம் தாம் சரிவர செய்யவேண்டும் நாம் சிரமப்பட்டதெல்லாம் போதும் நம் பிள்ளைகள் எந்த சிரமம் படக்கூடாது என்று விதியை மீறி யோசிப்பதுதான் மனிதனின் கெட்ட குணமாய் இருக்கிறது. நம் தந்தை நம்மைபற்றி எவ்வளவு யோசித்திருப்பார். நம் வாழ்வு எப்படி போகிறது உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் வாழ் நாளைய உணவும் நிர்ணயிக்கப்பட்டே பிறக்கிறார்கள்.

வாழ்வதற்காக சம்பாதியுங்கள் ! சம்பாதிப்பதே வாழ்க்கையல்ல !!
மு.செ.மு.சபீர் அஹமது

5 comments:

 1. ஹதீஸ் ஆதாரத்துடன் சொன்ன விதம் அருமை; உண்மை

  ReplyDelete
 2. அறிய வேண்டிய பதிவு. ஆனால் பணம் காசு இவ்வுலக வாழ்க்கைக்கு அவசியமானதே. அதை சரியான வழியில் தேடுவதில் தவறில்லை. அனால் தேவையை மிஞ்சும் அளவுக்கு பேராசை கொண்டு தேடுதலில் தான் தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். அளவுக்கு அதிகமாக பணம் காசு வைத்து இருப்பவர்கள்தான் இறுதியில் ஆதரவற்று நிற்கிறார்கள்.

  ReplyDelete
 3. ஆனாலும் பணத்தை மதிப்பவர்களே அதிகம்.
  ஏனென்றால் மனிதர்களைத் தேடி அலையவே வேண்டியுள்ளது.

  ReplyDelete
 4. தங்களின் கட்டுரையில் உள்ள நுணுக்கம் ..
  சிறு சிறு நிகழ்வு மூலம் மனதில் பதிய வைத்த விதம் அற்புதம்
  இது போன்ற கட்டுரை தொகுப்பை புத்தக மாக வெளியிடலாம்

  ReplyDelete
 5. சிறந்த விழிப்புணர்வு !

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers