.

Pages

Sunday, January 25, 2015

சோம்பலை விலக்கு: வெற்றியே இலக்கு !

இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக் களத்தினு ளிறங்கினால் வெற்றி
விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால் துவக்கிடுப் புள்ளியும் முன்னால்

நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும் நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும் ஊடலும் விலகவும் வேண்டும் 
ஆக்கமும் குறையக் காரணம் என்ன ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்து தாங்கிடும் நண்பரும் வேண்டும்

திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித் திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலை சுற்றியே மனத்தை வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்து தடுத்திட முனைந்தால் நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும் படைத்தவ னருளவும் வேண்டும்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

7 comments:

  1. இலக்குகள் அடைய நிதானமும் வேண்டும் இதுவரைப் பெற்றதைக் கொண்டு
    கலக்கமும் வேண்டாம் இடையினில் தடுக்கம் காத்திருக் கடைசியில் ஏற்றம்
    விலக்கமும் பெறுதல் விவரமும் குறையில் விலகிட அமைதியும் உண்டு
    துலக்கிடும் முறையில் துன்பமும் கண்டால் தொடருதல் விடுதலே நன்று.

    ReplyDelete
  2. சோம்பலால் அனைத்தும்
    சாம்பலாய்ப் போகுமுன்
    சுறுசுறுப்பாய் இருந்து
    இலக்கினை அடைய
    கவியன்பாரின் இக்கவி
    காலத்தில் பயிரிடப்பட்ட
    நெல்மணிக் கதிர்

    ReplyDelete
  3. இலக்கினை ...
    அடைய சோம்பலை துரத்த ..
    கவிஞரின்...கவி ஒரு பாடம்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers