kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, February 12, 2015
பெருமை !
பெருமை யடிப்பதால் -அது
நம்மையே
புரட்டி அடிக்கிறது!
குணக்கடல் குன்றிப்போகிறது!
மனக்கடல் மாசுவடைகிறது!
அறிவுக் கருவாகிறது
அடிக்கிற பெருமைக்கு!
பணம் பெருகப் பெருக
மனம் சுருங்கிப் போகிறது!
சிலரோ
அழகை வைத்து
அடிக்கிறார்கள் பெருமை!
அடிக்க அடிக்கப் பெருமை
அடித்தளம் ஆட்டம்
காண்கிறது
ஆற்றங்கரையில் அசைந்தாடும் மரம்
மணல்அரித்து மாள்வது போல!
சிறகறுந்த தேனீ
சேகரிக்குமா தேனை?
விறகெரிந்தபின்னர்
விளங்குவதோ சாம்பல்!
வீண்பெருமையின்
விளைச்சல்
பதர்!
அறிதொறும் அறிதொறும்
அறியாமையே
அங்கம் வகிக்கிறது
பெருமையால் அறியாமை இருள்
பங்கம் செய்கிறது!
பெருமை மழை போன்றது
பெருமைக் குரியவராய்
வாழ்தல் நன்றே!
மழை இறங்க,
அதில் மரங்கள்
களைப்பாறுகிறது!
கனிகள் சில இனிப்பாகிறது
கசப்பும் உண்டு
மழையால் குற்றமில்லை
சேர்ந்த மரத்தின் தன்மை!
"வெண்மேனி பெற்றவன்
கருமேனி பெற்றவனை விட
மேலானவனா? "
நபிகள் கேட்டார்கள்.
நிறத்தால் பெருமை,
நிறமின்னும்
உடையால் பெருமை
வணிகப் பொருளால்
பெருமை!
ஏழையை இழிவுக்கண்ணால்
பார்க்கும் ஈனர்களைப்
பெற்றெடுக்கும் பெருமை!
செல்வர்கள் மட்டுந்தான்
புனிதர்களா?
ஏழைகள் மனிதர்கள்
இல்லையா? அவர்களில்
புனிதர்கள் இல்லையா?
மறைவான உலகில்
ஏழைகள்
மன்னர்கள்!
நீ..... ?
நம்மையே
புரட்டி அடிக்கிறது!
குணக்கடல் குன்றிப்போகிறது!
மனக்கடல் மாசுவடைகிறது!
அறிவுக் கருவாகிறது
அடிக்கிற பெருமைக்கு!
பணம் பெருகப் பெருக
மனம் சுருங்கிப் போகிறது!
சிலரோ
அழகை வைத்து
அடிக்கிறார்கள் பெருமை!
அடிக்க அடிக்கப் பெருமை
அடித்தளம் ஆட்டம்
காண்கிறது
ஆற்றங்கரையில் அசைந்தாடும் மரம்
மணல்அரித்து மாள்வது போல!
சிறகறுந்த தேனீ
சேகரிக்குமா தேனை?
விறகெரிந்தபின்னர்
விளங்குவதோ சாம்பல்!
வீண்பெருமையின்
விளைச்சல்
பதர்!
அறிதொறும் அறிதொறும்
அறியாமையே
அங்கம் வகிக்கிறது
பெருமையால் அறியாமை இருள்
பங்கம் செய்கிறது!
பெருமை மழை போன்றது
பெருமைக் குரியவராய்
வாழ்தல் நன்றே!
மழை இறங்க,
அதில் மரங்கள்
களைப்பாறுகிறது!
கனிகள் சில இனிப்பாகிறது
கசப்பும் உண்டு
மழையால் குற்றமில்லை
சேர்ந்த மரத்தின் தன்மை!
"வெண்மேனி பெற்றவன்
கருமேனி பெற்றவனை விட
மேலானவனா? "
நபிகள் கேட்டார்கள்.
நிறத்தால் பெருமை,
நிறமின்னும்
உடையால் பெருமை
வணிகப் பொருளால்
பெருமை!
ஏழையை இழிவுக்கண்ணால்
பார்க்கும் ஈனர்களைப்
பெற்றெடுக்கும் பெருமை!
செல்வர்கள் மட்டுந்தான்
புனிதர்களா?
ஏழைகள் மனிதர்கள்
இல்லையா? அவர்களில்
புனிதர்கள் இல்லையா?
மறைவான உலகில்
ஏழைகள்
மன்னர்கள்!
நீ..... ?
'கவிஞர்' அதிரை தாஹா
Subscribe to:
Post Comments (Atom)
பெருமை ..
ReplyDeleteகவிஞர் பார்வையில் ..
சரியான சாட்டையடி ..
தற்பெருமைக்கு கொடுத்த அடி ..
நல்ல மகனை பெற்ற ..
தந்தைக்கு பெருமை ..
அது அருமை ...
நல்ல மாணவனை பெற்று
அவன் நல்ல பதவியில் புகழ் பெற்று திகழும் போது
ஆசிரியர் பெரும் பெருமை அது அருமை ..
சில சமயம் படைப்பாளி தனக்கு கிடைத்த அனுபவங்களை
பகிர்கிர்ந்து கொள்கின்ற போது அது பகிர்வா ..பெருமையா
உள்ளம் அறிந்த ஒன்று பகிர்பவர் ..பெருமையாய் சொன்னாரா
பகிரும் நோக்கோடு சொன்னாரா என்பதை பொறுத்தது ..
தன்னை தானே புகழும் தன்மை மிக கொடியது ..நகைப்புக்குரியது ...இறைவனுக்கு புடிக்காத ஒன்று ..
நல்ல கவிதை ..
பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசெல்வர்கள் மட்டுந்தான்
ReplyDeleteபுனிதர்களா?
ஏழைகள் மனிதர்கள்
இல்லையா? அவர்களில்
புனிதர்கள் இல்லையா?//
வேதனைப் புரிகிறது.
விவரிக்க வேண்டுமே
சாதனை இங்கே
செல்வத்தில் நிகழ்ந்திட
பாரனைய புகழ்ச்சி
பரிதாபம் நிறைகிறது.
வாழ்க்கையில் ..
ReplyDeleteசந்தேக புயல் அடித்தால் ..
சந்தோசம் என்னும் பூ ..உதிர்ந்து ..விடும்
அனைவரின் வெறுப்பிற்கு ஆளாகி ..தனி மரமாய்
நிற்க வேண்டி வரும் ...நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள்
அதிரை மெய்சா ...அவர்களே