.

Pages

Monday, February 16, 2015

உலகமே என் உறவுதான் !

பால் மனம் மாறா
பச்சிளம் குழந்தைக்கு
பார்க்கும் முகமெல்லாம்
உறவு தான்...

பல் முளைக்கா
முகம் தன்னில்!
புன்முறுவல் பூத்த ழைத்து
பலர் முகத்தில் புன்னகையை
வரவழைக்கும் ஆச்சரியம்
இயற்க்கை தன்னின் மாச்சரியம்...

மனிதன் என்ற ஒரு உறவே
சிறுமுல்லை சொல்லி தரும்
பாடமைய்யா அம்முல்லை
வளருமுன்னனே அதற்கு நீ
கொடுக்கும் பாடம்
உலக போக்கை மாற்றும் பாடம்...

சிறு குறுத்து கைகளாலே
இரு கரத்தால் தட்டும் ஓசை
கேட்கும் தருணம்
பார்ப்பவரும் மகிழ்ந்திடுவர்
பட்டனவே சிரித்திடுவார்...

பச்சிளம் குழந்தையது
பாரெல்லாம் பறைசாட்டும்
எல்லாம என் உறவினமே
என கூறி

பாலினமும் அறியாத
வயதிற்கு மத இனமும்
அரியாது அறியாத அக்குழந்தை
யார் மடியில் வளர்கிறதோ
அவர் தம் கொள்கை தனை
பச்சிளம் குழந்தைக்கு
பாய்ச்சிடுவர்...

பல் முளைக்கா பரவமுதல்
பருவமது வரும் வரையில்
சொந்தங்கள் கூட செய்யும் சிறு
சச்சரவால் பகையென...
எனக்கூறும் பெற்றோரால்
பகை பாடம் முதல் பாடமாய்
பச்சிளம் குழந்தைக்கு
பெற்றோர்கள் சொன்னதினால்

பகை என்ற உணர்வுக்கு
புகை மூட்டி பணம் பார்க்க
இயக்கங்கள் பல உண்டு
இயக்கத்தின் கைகளிலே
நர பழிவாங்கும் பல கொள்கை கள்...

எல்லோரும் ஓரினமே
எல்லோரும் நம் சொந்தம்
உலகமே என் உறவு என்றுனக்கு
நாள் தோறும் நான் சொல்வேன்
வேற்றுமையாய் இருக்காமல்
வென்றிடுவோம் அன்பினாலே...

நீ பிறந்து புன்னைகைத்த
அன்று போல என்றும் நீயும்
இருந்து விடு மத பேதம் மறந்து விடு
இன பேதம் மறந்து விடும்
புன்னகையால் இவ்வுலகை
பூத்திடவே செய்து விடு
பூக்களும் ..பொறாமை கொள்ளும்
மனிதர்களின் மகிழ்வினாலே
மலர்களுக்கு வேலை இல்லை
மலர்களுமே சொல்லி விடும்

இனி கனிகளாக மாறி நாங்கள்
மகிழ்ச்சியினை தருகின்றோம்
என மலர்களும் சொல்லி விடும்
வண்ணத்து பூசிகளும்
தேன்னல்லும்  தேனிக்களும்
தேனாடைகள் தந்து நம்மை
இன்பத்தால் திளைக்க செய்திடுமே...

உலகமே உறவென்று  எண்ணுங்கள்
புன்கையே வாழ்வாகும்
சிறு முல்லை சிரிப்புடனே
முடிக்கின்றேன் என் பாவை

( பாவை என்றால் பெண் என்று பொருள்
எனவே என் கவியை என கொள்க...)
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

10 comments:

 1. பதிவுக்கு நன்றி.

  மிகவும் அருமையான கவிதை, உறவு சொல்ல ஒருவர் இல்லை என்று இருந்த எனக்கு இந்தக் கவிதை அமுதமாக இருக்கின்றது.

  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
  த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
  Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
  Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

  ReplyDelete
  Replies
  1. இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் மோடியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது,'இரு நாடுகளுக்கும் இடையிலான பலமான உறவு தொடரும். அதிபரானவுடன் எனது முதல் வௌிநாட்டு பயணத்தில் இந்தியாவை தேர்வு செய்தேன். இந்திய விஜயம் எனக்கு திருப்தியளிக்கிறது. பாதுகாப்பு மற்றும் கலாசாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் உறவு மேம்படும். இந்தியா, இலங்கை நாடுகளின் இடையிலான உறவு மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்,' என்று கூறினார்.

   Delete
  2. குடும்ப உறவுகளில் தகாத உறவுகளில் ஏற்படும் இன்ப கேளிக்கைகளில் அணிவகுப்பு

   Delete
  3. நன்றி ....
   ஜமால் காக்கா..,அவர்களே .
   நம் விழிப்புணர்வு தளத்திற்கு வரும் வாசக உறவுகள்
   மீண்டும் வர வேண்டும் ...அவர்களை வரவேற்கும் விதமாக ..நல்ல கவி கொண்டு வருகிறேன் ...

   Delete
  4. ஜமால் காக்காவின் ..
   ஆர்வத்திற்கு ..,உறவுகள் பற்றிய ஆய்வு தொடர்
   தொடர்கிறேன் ..இன்ஷா அல்லாஹ்

   Delete
 2. உறவை வலுப்படுத்த உணரவைக்கும் வரிகள் அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உறவுகள் ..தரும் ஆதரவு ...
   கொள்ளை இன்பம் ..
   தொல்லை தந்தால்..அதை போன்ற
   கொடுமை வேறு ஏதும் இல்லை ..
   உறவுகள் பற்றிய தொடர் ..விரைவில் தொடர்வேன்

   Delete
 3. உலகமே நம் உறவுதான் - இதை
  உணர்பவர் உயர்ந்தவரே !

  ReplyDelete
  Replies
  1. ஒன்றே குலம்..
   ஒருவனே தேவன் ....

   யாதும் ஊரே ..
   யாவரும் கேளிர் ...

   என்ற கோட்பாடு ஒற்றுமையின் வித்து
   நன்றி கவிஞர் நபிதாஸ் அவர்களே

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers