kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, March 6, 2015
[ 13 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]
(45)
பிடிப்புகள் கொண்டே பிறப்புகள் தோன்றும்
தடிப்புகள் தன்னில் தலைக்கும் - வடித்திடும்
நடிப்புகள் நாயனின் நாட்டத்தில் தோன்ற
படிப்புகள்வேந்தரில் பற்று
(46)
பற்றிலே உச்சம் படைப்பில் மலர்திடும்
பற்றிலே பற்றற்றான்பற்றாகின் - பற்றினில்
பார்வையில்சாந்தமும் பாசமும் ஈர்த்திடுமவ்
ஓர்மையில் ஆக்கமும் உண்டு
(47)
உண்டென்றால் எல்லாமே உண்டுதான் என்றாலும்
கண்கள்தான் இல்லையே காயமன்றி - உண்மையில்
ஒன்றினிலே எல்லாமே ஒன்றென்றாய் உண்டுமைகள்
என்றிருப்பின்மெய்தான் எது?
(48)
எதுவாய் யெனத்தோன்றும் கேள்வித் தன்னை
அதுவாய் அறியும் அகமே - இதுதான்
அதுவாய் முதலாம் அறிதல் அசைவாம்
அதுவாய் அதனில் அறி
நபிதாஸ்
வெண்பா (45)
பொருள்: ஒவ்வொரு பிறப்பும் சிலக் குணப்பிடிப்புகளைக் கொண்டு பிறக்கும். அவ்வாறானக் குணங்கள் உருவத்தடிமன்களாக அப்பிறப்பில் மலர்ந்தமையும். எனவே வாழ்வினில் இறைவன் விரும்பும்படி வாழ, மனிதவாழ் கல்விகளை என்றும் தன் வழிகாட்டல் மூலம் இவ்வுலகை ஆளும் வேந்தர் பெருமானில் கற்றுப் பற்றுகவென்பதாகும்.
வெண்பா ( 46)
பொருள்: படைக்கப்பட்டவனாகிய மனிதனிவன் தன்பற்றினிலே அவ்வழியில் மிகச் சிறப்பென்றெது உச்சமோ அதனைப்பற்றுவான், இவன் பற்றிலே அவனாற்றலில் எல்லாமாகிய; அவன் படைப்பில் தேவையற்றவனாகிய அவனைப் பற்ற. அவ்வாறு இறைவழியினைப் பற்றியதன்படி அவ்வோர்மையில் வாழ்ந்து வருவோர்களின் பார்வையில் அமைதியும் கவர்ந்திழுக்கும் பாசமும் இருக்கும். அவர்கள் எண்ண விருப்பங்களும் இறைவன் நிறைவேற்றுவான்.
வெண்பா ( 47)
பொருள்: பார்க்கின்ற அனைத்தும் உண்டு என்றால் உண்டுதான். ஆனாலும் மனித உடம்பில்லாமல் அவனது கண்ணில்லை. கண் தனித்தில்லை. மனித உடம்பில் கண் போல் வாய், செவி, நாசி, கைகள், கால்கள் போன்றப் பல ஒவ்வொன்றும் என்ற உண்டுமைகள் இருக்கின்றன. இவைகள் மனிதன் இல்லையேல் இல்லை. அவ்வாறானால் இருக்கின்ற இவைகள் உண்மையாக எது ? பலப்புலன்களாக தெரிந்தாலும் மனிதன் என்பதுதான் உண்மை. அதுபோல் காண்கின்ற அனைத்தும் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடைய ஒன்றினிலானது. அவைகள் நிலையற்றது. நிலையானதில் பல உண்டுமைகளாகத் தெரிகிறது. எனவே இப்பொழுது எது உண்மை ? என சிந்தித்தறிந்துக்கொள்.
வெண்பா (48)
பொருள்: எதனாலப்படி தான் படைக்கப் பட்டோம் என்றக் கேள்வி எழுமதுவே அப்படியாகினேன் என்றறியும் அகம். இவ்வாறானதது முதலாம் அறிதல் அசைவாம். அவ்வாறன அமைவினகமாய் அறிந்துக்கொள் என்பதாகும்.

Subscribe to:
Post Comments (Atom)
வெண்பா வரிகளில் வெளிர்ந்திட்ட மொழிகள்
ReplyDeleteஅன்பால் அணைக்கும் அறிவுக்குத் தீனி
உன்பால் உள்ள உறுதுணையாவும்
பண்பால் மணக்கும் பரந்த மனத்தாலன்றோ
பரந்த மனத்தில் பூத்த மலர்களை நுகர்ந்தேன் இரசித்தேன்.
ReplyDeleteஆன்மீகமும் ....
ReplyDeleteஅறிவு சார்ந்த கல்வியும் ..
அளவாய் கலந்து ..வெண் பா தந்த
பாக்கள் ...பாகு களாய் இனித்தது
சாகா ஞானத் தெளிவுகள்
Deleteதாஹா நபியின் வழியே
பாகாய் பாவைப் பருகி
வாகாய் வார்த்தை வடித்தீர்