kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Tuesday, March 10, 2015
[ 2 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !
வெளி நாடுகளில் வாழும் நம்மவர்களில் சிலர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர். ஊரில் வசிக்கும் பலரின் பார்வையில் உயர்வாக தெரியும் உங்களுக்கென்ன வெளிநாட்டு வாழ்க்கை கொடுத்து வைத்தவங்க நீங்க விமான பயணம்...சொகுசான வாழ்க்கைதான் போங்க... என்று வியக்கும் பலருக்கு நான் தரும் தகவல்கள் எதிர்மறையாக இருக்கும் எப்படி ?
பாவம் அவர்கள் பாசை தெரியா ஊரில் வீட்டிற்குள் அடைப்பட்டிருக்கும்
அப்பாவிகள்... அதிகாலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ..பிறகு கணவனை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு ..பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வரும் வரை தனியாய் காத்திருப்பார்கள் .பின்னர் பிள்ளைகள் வரவு அவர்களுக்கு உணவு பரிமாறி முடித்த கையோடு இரவு நேர உணவுக்கு ஆயத்தமாகி அதன் பின்னர் கணவர் வேலை விட்டு வரும் தருணம் கணவனுக்கு பணிவிடை. முடிந்த பின்னர் ..அதிகாலை பிள்ளைகளுக்கு உணவு தயாரித்தல் இப்படியாக இரவு பத்து மணி ஆகிப்போகும் ..உறக்கம் ஐந்து மணி நேரம் கிடைப்பதே கடினம் இப்படியாகவே அவர்கள் வாழ்வு.
ஆசையாய் ஒரு நாள் வெளியே செல்ல ஆசைபடும் மனைவிக்கு கணவனின்
ஆர்வம் அவ்வளவாக இருப்பதில்லை வாரத்தில் ஒருநாள் ஓய்வாய் இருக்கவே ஆசைப்படுவார். வெளிநாட்டில் வாழும் இல்லத்தரசிகள் தொலை பேசிகள் மூலமாகவே தனது தொடர்புகளை வைத்துக்கொள்வார்கள். தங்க கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகள் தான் அவர்கள்.
ஊடகப்பார்வை:
தற்போதைய ஊடத்தில் குறிப்பாக தொலைக்காட்சியில் அன்றாட நிகழ்வுகளை விவாதிப்பது நடைமுறையில் உள்ளது. தினத்தந்தி தொலைக்காட்சியில் விவாதம் செய்யும் நிகழ்வை ..கேலி செய்யும் விதமாக விஜய் டிவியில் காட்டினார்கள். முற்றிலும் உண்மையான செயல்பாடுகளை அப்படியே சித்தரித்து இருந்தார்கள்.
ஒருமுறை முஸ்லிம்களை குற்றம் சாட்டும் தலைப்பை எடுத்து ..அதன் அடிப்படையில் விவாதம் செய்ய குற்றம்சாட்டி விவாதிக்க நல்ல அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். முஸ்லிம் தரப்புவாதியாக ...படிப்பறிவற்ற ...தர்க்ககலை அறியாத அப்பாவியான தேசிய லீக் தலைவர் அழைக்கப்பட்டு இருந்தார். முஸ்லிம்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கும் போது பதில் சொல்ல தெரியவில்லை. அப்படியே பதில் சொல்லமுற்படும் போது ..சார் இடையே குறுக்கிடாதீர்கள் என்று அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது."குறுக்கே பேசாதீங்க "என்று ஒன்றும் பேசாத பசீர் அவர்களை அனுமதி மறுக்கும் அதே நிகழ்வை நினைவு படுத்தும் விதமாக ..விஜய் டிவியில் அது இது எது...என்ற நிகழ்ச்சியில் ..சிரிச்சா போச்சு என்ற பகுதியில் காட்டினார்கள்.
தேசிய லீக் கட்சியின் தலைவர் ஒட்டு மொத்த முஸ்லீம்களின் தலைவரோ, பிரதிநிதியோ கிடையாது. ஆயுத எழுத்து என்ற நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் அறிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லீம்கள் பற்றிய விவாதங்களுக்கு... பி.ஜெய்னுலாபுதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, பேராசிரியர் ஹாஜா கனி போன்றவர்கள் அழைக்கப்பட்டால் கொஞ்சமாவது தர்க்கங்களுக்கு தக்க பதில் கிடைக்கும். இதுவே இந்த வார ஊடகப்பார்வை.
'சின்னக்குத்தூசி' என்ற புனைப்பெயரில் பத்திரிகை துறையில் வளம்வந்ததென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் படைப்புகளில் முடிவுரை நகைச்சுவையாக முடித்து வைப்பார் அதே போன்று இவ்வார சிந்தனை....
ஒருவர் ...நாயுடன் நடந்து வந்தார் ..
எதிரே வந்த ஒருவர்... என்ன கழுதையுடன் இந்த பக்கம் ..
கோபமாக... இது நாய் தெரியல ...உனக்கு
அதற்கு அவர் ..நான் கூறியது நாயிடம் என்றார்.
இது தான் ஜோக்...
நாயுடன் வந்தவர் தன்னை கழுதை என்று கூறி விட்டார் என்பதை அறிந்து
விட்டார்.
ஒரு கேள்வி ! நாயுடன் வந்தவர் புத்திசாலித்தனமாக ஒரு பதில் கூறி மற்றவரை எப்படி மடக்கலாம் கூறுங்கள் பார்க்கலாம். பின்னூட்டம் மூலம் பதிலை எதிர்பார்கிறேன்.

'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
ஆமாம் ஆமாம் நாய் பாஷை நாய்க்குதானே தெரியும்
ReplyDeleteசரியாய் சொன்னீர்கள் ..நண்பரே
Deleteஅதிரை சித்திக் அதிக சிந்திக்க வைத்து விட்டீர்கள் பதிலுக்காக.
ReplyDeleteசகோ.fazee jabbar .அவர்களே ..
Delete.தங்கள் வரவு நல்வரவாகுக ..
பத்திரிக்கையாளரின் பலபக்க பார்வையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteகடைசியாக கேட்கப்பட்ட புதிரான கேள்விக்கு சகோதரர் சபீரின் பதில் பொருத்தமானதே .!
அதிரை மெய் சா..அவர்களே ..
Deleteதங்களின் கருத்திற்கு நன்றி ..
வலைதளங்களில் வரும் படைகளில் இது ஒரு வகை ....
அன்றாட செய்திகள் பற்றி அலச இது போன்ற பகுதி உதவியாக இருக்கும்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன். என்ற தலைப்பில் முத்தான முழு விளக்கம் கொண்ட ஒரு கட்டுரை.
பத்திரிக்கைக்கு பல பக்கங்கள் இருப்பது போல்; பத்திரிக்கையாளனுக்கும் பல சிந்தனைகள் இருப்பது நியாயமே. அதுபோல் பல சிந்தனைகளோடு வரைந்தெடுத்த இந்த கட்டுரைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com
யார் உண்மையான பத்திரிக்கையாளன்?
Deleteஅவன் ஒரு சிங்கள பத்திரிக்கையாளன் நாட்டின் ஜனாதிபதியுடன் விருந்துண்ணும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவன், ஜனாதிபதியின் நெருங்கிய நண்பனும் கூட. ஆனால் தனதுநாட்டில் அரசின் ஆசிர்வாதத்துடன் சிறுபான்மை மக்களின் வாழ்வியல் உரிமைகளை பறிக்கும் சிங்களபேரினவாதத்தை கண்டு உள்ளம் கொதிக்கிறான். ஒரு பத்திரிக்கையாளனாக உண்மை செய்திகளை தனது ஊடகத்தின் மூலம் உலகிற்கு தெரிவிக்கிறான். ஆளும்வர்க்கம் கோவம் கொள்கிறது. பேரம் நடக்கிறது இருந்தும் தனது கடமையை புறம்தள்ள அந்த பத்திரிக்கையாளனால் முடியவில்லை. தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தை உலகிற்கு தோலுரித்து காட்டுகிறான். இவன் மேலும் வாய்திறந்தால் நமக்கு ஆபத்து என்ற முடிவுக்கு வந்த அரசு உயிர் பயம் காட்டுகிறது. உயிரே போனாலும் தனது லட்சியத்தில் பின்வாங்குவதில்லை என்ற முடிவிற்கு அந்த பத்திர்க்கையாளன் வருகிறான். தனது முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று முன்கூட்டியே உணர்ந்து கொண்டு தனது மரணசாசனம் தீட்டுகிறான். எதிர்பார்த்தது போலவே ஆளும்வர்கத்தால் படுகொலை செய்யப்படுகிறான். அவன் மரணத்தை தொடர்ந்து அவனது மரணசாசனம் வெளிவந்தது அந்த பத்திரிக்கையாளனின் நெஞ்சுரத்தை உலகிற்கு உணர்த்துகிறது.
Deleteஅவன் ஒரு தமிழ் பத்திர்க்கையாளன் தனது நாட்டில் தன்னுடைய இனத்தை சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் இன ஒதுக்கல் மற்றும் இனப்படுகொலைகளை நேரிடையாக பார்க்கிறான். ஒரு பத்திர்கையாளனின் கடமை என்னவென்பதை நன்கறிந்து இருந்தாலும் தான் வாழும் நாட்டில் பத்திரிகை சுதந்திரம் கேலிக்கூத்தான ஒன்று என்பதை நன்கறிவான். தனது எழுத்துக்களால் சொல்லன்னா துயர்களை தான் அடையவேண்டியிருக்கும் என்பதும் அவனுக்கு தெரிந்திருந்தது. இருந்தாலும் தனது சிறுபான்மை இனத்திற்காகவும் தனது பத்திரிகை தொழிலின் நேர்மையின் பொருட்டும் உண்மைகளை எழுதுவது என்று தீர்மானித்தான். தொடர்ந்து எழுதினான் மிரட்டல்கள் தொடர்ந்தது இருந்தும் எழுதினான். அரசு கடுமையான சட்டத்தின் மூலம் சுமார் 425 நாட்கள் சிறையில் அடைத்தது. நீதிமன்றமோ இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பளித்து இருக்கிறது. நியூயார்க்கைச் சேர்ந்த ‘பத்திரிகையாளர் பாதுகாப்பு குழு‘ என்ற அமைப்பு ஆண்டிற்கான ‘பன்னாட்டு ஊடக சுதந்திர விருது‘ அளித்திருக்கிருக்கிறது. இருந்தும் இந்த பத்திரிக்கையாளர் சிறைக்கம்பிகளுக்கு பின்னே கடுங்காவலுக்கு மத்தியில் சிறைத்தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறார்.
Deleteமேலே கூறிய இரண்டு நிகழ்வுகளும் தமிழகத்தின் மிக அருகே இருக்கும் இலங்கை தீவில் நடைபெற்றவை. சிங்களரான லசந்தாவும் தமிழரான திசநாயகமும் தாம் மேற்கொண்ட ஊடகவியல் தொழிலின் பொருட்டு ஒருகணமும் தமது நேர்மையில் பின்வாங்காமல் இருந்து பெரும் துயருக்கு ஆளானவர்கள். தனது நாட்டின் சர்வாதிகாரபோக்கினை நன்கு உணர்ந்திருந்தாலும் தமது கடமையை மறக்காத இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் நாம் வாழும் காலத்தில் நமக்கு மிக அருகில் இயங்கி கொண்டு இருந்திருக்கிறார்கள். இவர்கள் பெயர்களை கேட்டாலே ஊடகவியலாளர்கள் மேலே நமக்கு தன்னாலே மதிப்பு ஏற்படும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியுமா?
Deleteஇதே நேரத்தில் இந்தியாவிலும் எத்தனையோ பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். லசந்தாவை போன்றே சிங்கள ஜனாதிபதியுடன் விருந்துண்ணும் அளவிற்கு நெருக்கமான ‘இந்து’ ராம். ஒரு ஊடகவியலாளராக சிங்கள அரசின் அகதிமுகாம்களை பார்வையிடுகிறார். அகதிமுகாமின் நிலைமையை சிங்கள ஊடகவியலாளர்களே கடுமையாக விமர்சிக்கும் பொழுது ஜனநாயகநாட்டின் ஊடகவியலாளர் அகதி முகாமிற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். பொய்யாக அகதிமுகாம் பற்றிய தனது புனைவுகள் மூலம் மக்கள் நலமுடன் இருப்பதாக எழுதுகிறார்.
Deleteஅதே நேரத்தில் தமிழகத்தில் தேநீர்கடைகளில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளர் விபச்சாரத்தில் ஈடுபட்டு காவல்துறையில் மாட்டிக்கொண்ட ஒரு பெண்மணி காவல்துறையிடம் அளித்ததாக சொல்லி பிரபல நடிகைகள் சிலரின் படத்தோடு செய்தி வெளியிடுகிறார். கொதித்தெழுந்த திரைத்துறை காவல்துறையிடம் முறையிடுகிறது கண்டன கூட்டம் நடத்துகிறது. உடனே காவல்துறை பொருப்பாசிரியரை கைது செய்து 15 நாட்கள் சிறையில் தள்ளுகிறது. உடனே ஒருங்கிணைந்த தமிழகபத்திரிகையாளர்கள் பத்திரிகை சுதந்திரம் போச்சேன்னு கூப்பாடு போடுகிறது. அந்த ஊடகவியலாளர் வெளிட்ட செய்திக்கு கைது செய்வது சரியா வேண்டுமென்றால் வழக்கு போடுங்கள் பார்த்து கொள்ளலாம் என்று பத்திரிகையாளர்கள் வாதம் செய்கிறார்கள். ஈழம் பற்றி சிங்கள பேரினத்தின் குரலாக இந்த பத்திரிகை செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
Deleteமுற்போக்கு முகமுடிக்கு சொந்தக்காரர் ‘ஞானி’ இதே நேரத்தில் ஒரு திரைப்பட இயக்குனர் பத்தி எழுதி அவரு இவருக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து பதலுக்கு இவரு அவரைவிட கடுமையான பதிவை வெளியிட்டு பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
Deleteஇலங்கையில் கடுமையான சட்டங்களுக்கு மத்தியில் தனது உயிரையும் உடமையையும் பொருட்படுத்தாமல் நேர்மையாக செயல்பட்டு உரிமையையும் உயிரையும் இலங்கை ஊடகவியலாளர்கள் இழந்துவிட்ட இந்த சூழலில் இந்தியாவில் ‘அம்சா’ என்ற சிங்கள கைக்கூலி மூலம் பணம் பெற்று சிங்களபேரினவாத கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்களோடு ஜூனியர் விகடனில் இருந்து பணிநிக்கம் செய்யப்பட்டுள்ளார் ஊடகவியலாளர் ஒருவர்.
Deleteஇன்றைய பத்திரிக்கையாளர்கள் ஜஸ்ட் ப்ளாக் மெயிலர்களாக மாறிவருகின்றனர். கல்வி தகுதியை பக்கம் வைத்தால் பத்திரிக்கையியல் தொடர்பான தகுதிகளும் சூனியமாக உள்ளன. போலீஸ் கேஸ் இல்லாத பத்திரிக்கையாளன் கிடையாது. குடிப்பழக்கம் இல்லாத பத்திரிக்கையாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஓ.சி. என்றால் காசி வரை பாயும் பத்திரிக்கையாளர்கள் யதேஷ்டம்.
Deleteநானும் ஒரு பத்திரிக்கையாளன் தான் இருந்தாலும் யாரோ ஒருவர் வெளியிட்டுத்தானே ஆகவேண்டும் உண்மைகளை.அன்னாரின் லேட்டஸ்ட் சாதனை என்னவென்றால் பிரஸ் க்ளப் மாடிக்கு இரவு ராணி ஒருத்தியை அழைத்து சென்றது. ஏதோ லாலா போடப்போறானு பார்த்தா தள்ளிக்கிட்டு போறான் பா என்று சக பத்திரிக்கையாளர்களே லாடம் கட்டியிருக்கிறார்கள்.
Deleteஊடகத்தின் அசுர வளர்ச்சி ..
ReplyDeleteபல தியாகத்தின் பலன் ..
ஊடகத்தால் மக்கள் பெற்ற பலன் பல ..
அரசியல்வாதிகள்...போலீஸ்காரர்கள் என்று பலரும் அஞ்சும் ஒரே துறை ஊடக
துறை தான் ..அது சார்பு தன்மையால் திணறி கொண்டு இருப்பது உண்மையே
ஜமால் காக்காவின் பதிவிற்கு நன்றி
பத்திரிக்கையாளன் பார்வையில்....
ReplyDelete//பாவம் அவர்கள் பாசை தெரியா ஊரில் வீட்டிற்குள் அடைப்பட்டிருக்கும்
அப்பாவிகள்... அதிகாலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ..பிறகு கணவனை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு ..பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வரும் வரை தனியாய் காத்திருப்பார்கள் .பின்னர் பிள்ளைகள் வரவு அவர்களுக்கு உணவு பரிமாறி முடித்த கையோடு இரவு நேர உணவுக்கு ஆயத்தமாகி அதன் பின்னர் கணவர் வேலை விட்டு வரும் தருணம் கணவனுக்கு பணிவிடை. முடிந்த பின்னர் ..அதிகாலை பிள்ளைகளுக்கு உணவு தயாரித்தல் இப்படியாக இரவு பத்து மணி ஆகிப்போகும் ..உறக்கம் ஐந்து மணி நேரம் கிடைப்பதே கடினம் இப்படியாகவே அவர்கள் வாழ்வு.//
இதைப்படிக்க இவர்களும் அங்கு வேலைக்குச் சென்றதுபோலத்தான் இருக்கின்றது. சொறிந்துக் கொண்டே இருக்கச் சுகம் காணுதல் இதுதானோ ! பாவம் சொறிந்துவிட்ட இடம் பின்னர் வலிக்கத்தான் செய்யும். அன்னைகள் துன்பங்களை இன்பமாகப் பார்த்துப் பழகியவர்கள்.
அறிஞர் நபிதாஸ் அவர்களின் ..பின்னூட்டம் ..
Deleteபதிவின் முதல் பகுதிக்கு ஆணித்தரமான பதில்