.

Pages

Saturday, April 4, 2015

அரபகத்தின் பாலையில் மணற்புயல் !

புழுதிக் காற்றே என்று
புலம்பிடவில்லை நாங்கள்
அழுதுச் சாற்றவுமில்லை
அவனே அறிவான்

ஆற்றல்மிக்க எங்களின்
அயராத உழைப்புக்கு
காற்றே நீ தானே
தோற்றுப்போனாய்!

கரைகாணா எங்களின்
கடின உழைப்பைக் கண்டு
அரைநாளுக் குள்ளாக
அடங்கிப் போய் ஒளிந்துவிட்டாய்!

நெருப்பின் ஆற்றலை
நேசரின் நம்பிக்கை வென்றது
விருப்பமுடன் குளிர்ந்தே
வியப்பினைச் சொன்னது

கத்திக்கு ஆற்றலில்லை
கலீலுல்லாஹ்வின்
பக்திக்கு முன்னால்
பணிந்து விட்டது!

கடலுக்கு ஆற்றலில்லை
கலீமுல்லாஹ்வின் கைத்தடியால்
திடலாக மாறியதும்
திகைப்புக்கு ஆளானோர்

அத்தனை ஆற்றலும்
அல்லாஹ் ஒருவனுக்கே!
இத்தரையில் நிகழும்
இவைகளே சான்றுகள்

இறைதூதர்களின் நம்பிக்கைக்கு
இத்தனை ஆற்றலும்
குறையேதும் செய்யாது போலவே
கூவி வந்த புயற்காற்றே

எதிர்நீச்சல் போட்டோம்
எதிர்வந்த  வேகத்தை
எதிர்த்தே போராடினோம்
என்னவாயிற்று உனக்கு?

மண்ணுக்குள் சென்றதும்
மண்ணே எங்களை உண்பாய்
மண்ணையும் உண்டோமின்று
மண்ணுக்குள் செல்லும் முன்பாய்!

உன்னாற்றலுக்கு முன்னெங்கள்
உழைப்பாற்றல் வென்றதை
உன்னையும் எங்களையும்
உருவாக்கியவனிடம் சொன்னாயோ?
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

மூர்க்கமாய் வீசினாலும்
மூச்சடைக்க வைத்தாலும்
போர்க்குண வீரியமாய்
புறப்பட்டுப் பணிசெய்து
மூக்குக்கு மூடியும்
கண்ணுக்குக் கண்ணாடியும்
செவிகட்கு அடைப்பானும்
தற்காப்புக் கேடயங்களை
தரித்துக் கொண்டே
அயராது உழைத்த
அரபகத் தொழிலாளிகள்
அனைவர்க்கும் சமர்ப்பணம்!

உங்களனைவரின் வாழ்த்துகளும், பாராட்டுகளும்..

9 comments:

 1. பதிவுக்கு நன்றி; ஜஸாக்குமுல்லாஹ் கைரன்

  ReplyDelete
 2. கலாமின் கவிதை
  கவனம் கொள்ள
  உலாவ வந்தது
  உள்ளே இருந்து...

  நெருப்பும் கத்தியும்
  நேசரைக் காப்பாற்ற
  விருப்பம் கொண்டே
  விதியை மாற்றியது

  கடலும் நிலவும்
  கைகளுக்குக் கட்டுண்டே
  தொடர்ந்த உத்தரவில்
  துரிதமாய் பிளந்தது

  கல் பேசியது
  கறியும் பேசியது
  நில் என்றதும்
  நிலம் பிடித்தது

  விரல் சுரந்தது
  விதிகளெல்லாம் மாறியது
  குரல் விடுக்க
  கொட்டியது மழை

  கம்பு கத்தியானது
  கைத்தடிப் பாம்பானது
  நம்ப முடியாவிட்டால்
  நல்லது நழுவிடு

  ஆற்றல் அவனதே
  அதிலென்ன குழப்பம்
  ஏற்றிடு எல்லாம்
  ஏகனின் செயலே

  ஏகனில் இழந்தால்
  ஏகனே செய்கிறான்
  ஊகம் இருந்தால்
  உடனே பிடித்துக்கொள்.

  ReplyDelete
  Replies
  1. இறையவனின் ஆற்றல், இறைதூதர்களின் நம்பிக்கையின் ஆற்றலுக்குக் கிடைத்தப் பரிசில்கள் போலவே, உழைப்பவர்களின் ஆற்றலுக்கும் இறையவனின் பரிசில்களாய் இப்படி ஆபத்துகளை விட்டும் தூரமாக்கி விடுவான் என்பதே என் கவிதையின் உட்பொருளாகும்,நன்றி நபிதாஸ் என்னும் நற்கவியே!

   Delete
 3. மணற்காற்றுக்குப் பின்னால் கலாமின் கவிக் காற்று
  மாறாத வாசளையில் வீசியதே
  மதியுணர வைத்தனவே உந்தன் மாபெரும் சிந்தனை

  ReplyDelete
  Replies
  1. கவித்துவம் பொங்கி வழியும் கருத்துரைக்கு மிக்க நன்றி, கவிஞர் மெய்ஷா அவர்களே!

   Delete
 4. பதிவுக்கு நன்றி.
  கவிதைக்கும் நன்றி.

  தமிழில் ஒரு பாட்டு உண்டு, “மாச்சானை பார்த்தீங்களா மழைவாழ தோப்புக்குள்ளே” அந்தப் பாடலை இன்று பாடினால் “என் மாச்சானை பார்த்து விட்டேன் புழுதி புயல் காற்றுக் குள்ளே”

  மச்சானின் கவிதை அருமை, தொடர்ந்து எழுதுங்கள், மச்சான உங்களை மறந்தாலும் உங்களின் ஆக்கத்தை மறக்க முடியாது, அதுபோல் உங்கள் ஆக்கத்தை மறக்க முடியாது என்றால் உங்களை மறக்கத்தான் முடியுமா?

  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  இப்படிக்கு.
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
  த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

  ReplyDelete
  Replies
  1. உத்தர பிரதேசத்தில் பயங்கரமான புழுதி புயல் வீசி வருகிறது. இதில் சிக்கிய 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

   புழுதி காற்று பல்வேறு இடங்களில் பலமாக வீசி வருகிறது. அங்குள்ள மின்கம்பங்கள் சாய்ந்து, சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. புழுதி புயலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

   By dn, லக்னோ
   First Published : 04 April 2015 12:16 PM IST

   Delete
  2. முருக்கேரி: திண்டிவனத்தில் ஏற்பட்ட புழுதி காற்றால் போக்குவரத்து போலீசார் சாலையின் நடுவில் வைத்திருந்த பேரி காடுகள் கீழே விழுந்தன.
   திண்டிவனம் பகுதியில் நேற்று காலை 7.30 மணியில் இருந்து புழுதி காற்று வீசி ஆரம்பித்தது. சாலையில் நடந்து செல்பவர்கள் கண்களின் மண் விழுந்தன. சாலை ஓரக்கடைகளில் மண் படிந்ததால் மூடப்பட்டன. ஜெயபுரம் ரவுண்டான சாலையில் போக்குவரத்து போலீசார் சாலையின் நடுவில் வைத்திருந்த பேரிகாடுகள் கீழே விழுந்தன. புழுதி காற்று மாலை வரை வீசியதால் வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.
   அவலூர்பேட்டை
   அவலூர்பேட்டை பகுதியில் நேற்று காலையிலிருந்தே வெப்பம் அதிகரித்தது. தொடர்ந்து பலமாக காற்று அடித்தது. இதனால் மரங்கள் ஆட்டம் கண்டன. வேகமாக சென்ற பைக் ஓட்டிகள் காற்றின் வேகத்தினால் தடுமாறினர். தெருக்களில் புழுதி கிளம்பியது. கடை வீதியில் கடைகளின் டாப்புகளில் இருந்த புழுதியும் வெளியே காற்றின் வேகத்திற்கு அடித்து கிளம்பியது. வேகமாக காற்று வீசியதால் வெப்பத்தின் தாக்குதல் சற்று குறைந்திருந்தது.

   Delete
  3. மச்சானைப் பார்க் கலாம் கருத்துரைகளின் நீண்ட நெடிய வரிகளுக்குள்ளே என்று நான் சொல்லுகின்றேன் உங்களைப் பற்றி என் அன்பு மச்சான் ஜமால் அவர்கட்கு அன்பான நன்றிகள்.

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers