kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, April 5, 2015
[ 16 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]
(57)
முடிவு அமையும் முயற்சி நிலைக்கே
வடிவு மனதில் வகுத்தே - துடிப்புப்
படியப் படியப் பலனும்அருகே
பிடிக்கப் பெறுதலுமே பேறு
(58)
பேறுகள் பெற்றோர் பெருமைகள் கொள்ளாதே
வீறுடன் செல்லார் விரிந்தவர் - ஏறுவோர்
ஏகனில் உச்சம் இருந்தே விசாலமாய்
ஆகுதல் ஆனந்தம் ஆகும்.
(59)
ஆகிடத்தான் ஆசை அவனடிமைப் பூரணமாய்
தாகிக்கத் தந்திடுவான் தக்கதை - ஊகிக்க
ஒன்றும் நிகராக உன்னைப் படைத்தவன்
என்றும் தனித்தவனே எண்ணு.
(60)
எண்ணம் வருமுன்னில் எந்தவழிப் பாதையறித்
திண்ணம் தனித்தவன் திக்கேதான் - உண்மைத்
திரையிட்டே தன்னின் திறமைகள் என்பார்
அரைகுறையின் அர்த்த அறிவு.
நபிதாஸ்
வெண்பா (57)
பொருள்: தான் விரும்பிய ஒன்றதான் அமைவு; அதன் முடிவு; அவைகளை மனதால் காணுதலோடுக்கூடிய முயற்சியின் நிலைக்கேற்பவும் முடிவுகள் அமையும். அம்முயற்சியின் அடிக்கடியாழ்ந்த ஈடுபாடு அதன் நிலைக்கேற்ப அதனை அடைதல் குறுகியக் காலத்தில் நிகழும்; இயலும். இவ்வாறான நம்பிக்கை, இதனையறிந்து அவ்வாறுச் செயல்படுதலுமே இறைப் பேறுப்பெற்றதாகும்.
வெண்பா (58)
பொருள்: விசால விரிந்த மனதுடைய இறைப்பேற்றினைப் பெற்றவர்கள் பெருமைக் கொள்ளாது அடுத்தவர் மனம் நோகும்படி நடக்கமாட்டார்கள். அவ்வாறன இறையன்பை; இறைநெருக்கம் என்றப் பேற்றினைப் பெற விரும்புபவர் எங்கும் நிறைந்த வல்லவனில் அவன் குணங்களில் ஒன்றான விசாலமாகத் தன் மனத்தைக் கொள்ளுதல் ஆனந்தம் ஆகும்.
வெண்பா (59)
பொருள்: மனமே ! எந்த ஊகங்கள் எதற்கும் நிகராகதவன்; உன்னைப் படைத்த வல்லவன் ஒருவனே; தனித்தவனே என்பதை என்றும் உன்னில் நிலைநிறுத்து. வேண்டுமென்பதைத் தாகிக்கத் தகுந்தைத் தருபவனான ஏகன் அவனே. அத்தகைய ஏகனின் பரிபூரண அடிமையாக ஆகிடத்தான் ஆசைக் கொண்டவனாக அலைகிறேன்; வேண்டுகிறேன் அவனிடத்தே.
வெண்பா (60)
பொருள்: எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றதென அதன் பாதையை அறிந்து செல்வீரானால், நிச்சயம் அவனன்றி ஏதுமில்லா எங்கும் நிறைந்த எல்லாம் வல்லவனிலிருந்துதான் என்ற அதன் திக்ககை அறிந்திடுவாய். உண்மையாகச்; சத்தியமாக நான்தான் அவ்வாறுச் சிந்தித்துச் செய்தேன் என்பவரிவர்கள் அரைகுறையாக அர்த்தங்கள் புரியும் அறிவுடையவர்களே.

Subscribe to:
Post Comments (Atom)
பிடிக்கப் பெற்று பேணுதல் முறையே
ReplyDeleteஅடக்க நினைக்கும் ஆளுமை மனது
உரக்கச்சொல்லி உணர வைக்கும்
உந்தன்பாக்கள் வெண்பாவாய்
This comment has been removed by the author.
Deleteஆளுமை என்றும் அடக்கத்தான் பார்க்குமாம்
Deleteமீளுமாம் நேர்மை மிடுக்காகச் - சூளுரைத்
தூண்டுமாம் வென்றிடச் சாதுரிய எண்ணத்தால்
வேண்டுமே உண்மையின் வித்து.
தங்களின் கவி ..
ReplyDeleteவாழ்வியல் முனேற்றம் அடைய வழிவகுக்கும் வரிகளும் அமைந்ததை பார்க்கும் போது ..வருங்காலத்தில் அனைவரும் படிக்கும் நூலாய் வளம் வரும் என்பதில் ஐயமில்லை ...வாழ்த்துக்கள் நபி தாஸ் அவர்களே
விருப்பம், வரிகளை விரித்தே சுவைத்தால்
Deleteதிருப்பம் வருமாம் தெளிவில் - நெருப்பும்
குணத்தால் தணியும், குலமும் சிறக்கும்
மணத்தால் மனிதனே மதிப்பு.