.

Pages

Wednesday, April 22, 2015

உலக பூமி தினம் !

நாளும் மெலிகிறது
நாட்டின் பசுமை
கோளும் எரிகிறது
கோடை வெயிலில்!
சுற்றும் பூமியெனும்
சுகந்தரும் மாத்திரையைப்
பற்றிச் சாப்பிடத்தான்
பலமுடன் காத்திருக்கு!
.
தீவுகள் எல்லாம்
திரைகடல் உள்ளே
காவுகள் கொண்டு
கரைந்துதான் போகும்!
உயிராம் காற்றும்
உணவான நீருமின்றி
பயிரும் வாடும்
பரிதாபம் வேருடனே!
காசுகள்தான் இசைத்தாலும்
காகிதம் இசைக்குமா?
வீசுகின்ற அசைவின்றி
வேகிடும் நிலையிது!
பூவுலகின் உடலில்
பூவிதழ் உலர்ந்து
ஆவியினால் திடலாய்
ஆகிடும் கடலும்!
வானத் தாயின்
வல்லமை ஓசானாம்
மானத் தைத்தான்
மண்ணிலே துகிலுரித்தோம்!
புறவூதா தீக்குச்சிப்
புலம்பெயர்ந்து தெரிகிறது
நிறம்மாறும் போக்குத்தான்
நிலமடுப்பு எரிகிறது!
பச்சைத் துணியகற்றி
பால்வெண்மை விதவை:
இச்சைத் தணித்திடுமா
இந்தக்கா கிதமும்!
மரத்தை அறுத்து
மாளிகைச் சாளரம்
வரத்தைத் தருமா
வானிலே மாமழை!
காசின் தணப்பில்
காற்றின் துரோகிகள்
வீசும் அனலில்
வியர்க்கும் வறியவர் !
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

5 comments:

 1. பதிவுக்கு மிக்க நன்றி, சமூக விழிப்புணர்வு வித்தகர், சகோதரர் நிஜாம் அவர்களுக்கு என் உளம்நிறைவுடன் சமர்ப்பிக்கின்றேன்

  ReplyDelete
 2. கவித்தீபத்தின் வரிகளில்
  கானலாய்க் கொதிக்குது
  பூமியின் தரை

  வாழும் பூமியை மறந்தோரை
  நாளும் நினைத்திட
  நல்லதொரு கவி தந்தீர்
  அருமை

  ReplyDelete
 3. தங்கள் கவிபடிக்கத்
  தன்னுள்ளே உற்றாய்
  பொங்கி வருகிறதே
  பொறிக்கின்றேன் நானே...

  நாளும் செழித்திடுமே
  நாட்டின் வளங்கள்
  கோளும் எரிவதனால்
  குளிரும் குறைந்தே
  சுற்றிடுதே பூமியும்
  சுகமும் தெரிகிறதே
  பற்றி வாழும்
  பலதும் பெருகுகிறதே !

  ReplyDelete
 4. மிக்க நன்றி அதிரையின் இருபெரும் கவிஞர்கட்கு!

  ReplyDelete
 5. வாவ் ..
  பூமியை தாயாய் .
  ஓசான் படலத்தை துகிலாய் .
  கவிஞரின் கற்பனை பார்வை அபாரம்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers