kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Thursday, April 16, 2015
[ 18 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]
(65)
நிலைகள் நிலையற்ற நித்தியத்தின் மாற்றம்
நிலைத்தஅதிலே நிகழும் - அலைகள்
கடலில்பிறந்தே கலைந்திடும், ஒன்றில்
தொடரும் சுழற்சித் துடிப்பு.
(66)
துடித்திடும் துன்பம் தொடரும்பிரிக்க
வெடித்திடும் வேதனை விடாமல் - படித்திடும்
தத்துவம் நன்றே தடுத்தும் இணைவைக்கும்
பித்தனின் நல்லப் பிழை.
(67)
பிழைகளெனப் பார்வைப் பிரிக்கத் தெரியாத்
தழைத்திட்ட உள்ளமே தப்பு - விழையும்
விபரத்திலே நேர்மை விதியின் சமாதி
சுபமறியும் கல்வியைத் தொற்று.
(68)
தொற்றிடும் கொள்கைத் துவைதமே ஆகிடின்
பற்றிடும் எட்டே பரமனைக் - கற்றிடும்
எங்குமே நன்றே இருக்கும்இறையென்றே
தங்கிடும் அத்துவைதம் தாவு
நபிதாஸ் (தொடரும்)
வெண்பா (65)
பொருள்: அலைகள் கடலில் பிறந்தே கலைந்திடுவதுப் போன்று ஒவ்வொருத் தோற்ற நிலைகளும், மாற்றங்களைத் தன்னிலே உண்டாகிக்கொண்டே இருக்கும் நிலையான நித்தியத்தின் நிலைகள். இவ்வாறு ஒன்றிலே தொடரும் சுழற்சிகள்.
வெண்பா (66)
பொருள்: அறிந்தோம் என்ற ஆணவப் பித்தன் பிரிக்கும் நல்லப் பிழையாம் இறைவன் ஒருவன் என்றத் தத்துவம் அறிந்தும் அத்தத்துவம் தெளிவாகப் புரியாமல் இணைவைக்கும் செயலில் இருத்தல். எங்கும் நிறைந்த இறைவனை இவ்வாறே என்றறியாததனால் அமைதியின்மையின் துன்பம் தொடரும். எங்கும் நிறைந்தவனை எங்கோ இருப்பதாக இருக்குமிடம்; இலாத இடமாகப் பிரிக்கும் உணர்வால் அவ்வுலகிலும் வேதனை விடாமல் வெடிக்கும்.
வெண்பா (67)
பொருள்: எனது உனது என்பதில் உரிமைகள் உண்டாக்கித் துன்பம் ஏற்படும். அதுபோலப் பார்வையில் தனது உரிமைப்பார்வைத் தனக்கும் துன்பம் தரும். அறிந்துக்கொள்வதற்காக உண்டாகும் உரிமைக்கொள்ளாப் பார்வை பிழையற்றப் பார்வையாகும். அந்த பிழை; பிழையற்றப் பார்வைப் பிரித்தறியாமல் இதுகால்வரை வளர்ந்த உள்ளம் தப்பானதே. விரும்புகின்ற விபரத்திலே தவறில்லாத நேர்மையான என்றும் அமைதியுடன் வாழும் நன்மைகள் தரும் சமாதி என்ற மனம் அமைதியுடன் வாழும் கல்வியை அறிந்துப் பற்றிக்கொள்.
வெண்பா (68)
பொருள்:இறைவன் அல்லாத வேறு ஆற்றல்கள் உண்டு எனக்கொள்ளும் துவைதக் கொள்கை ஏற்றவர் இறைவனை எங்கோ அல்லது சிலவற்றில் இருப்பதாகக் காண்பார். இவர்கள் இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை காலபோக்கில் கேட்டும்; ஏற்றும் கொள்வார்கள். அது அத்துவைதக் கொள்கை. காலப்போக்கில் அது மனதில் தங்கிடும்.ஏற்றுக்கொண்ட அத்துவைத அக்கொள்கைக்குத் தாவிவிடு.எனவே அறிந்தும் அறியாமல் அத்துவைதக் கொள்கையில் இருந்துக்கொண்டுத் துவைதக் கொள்கை செயல்பாட்டில் இருக்காதே என்பதாகும்.

Subscribe to:
Post Comments (Atom)
உத்தமன் கீதம்
ReplyDeleteஉறங்கிடக் காண
எத்தனித்த உயிரோ
எங்குதங்கும் நிலையில்
உந்தன் வெண்பா கீதம்
உயிர்கொடுக்கும் வழியில்
புதுமை கவரும் உலகை
புரட்சி படைப்பாய் நீயே
என்னில் தெளிய எனக்கே எழுதினேன்
ReplyDeleteஉன்னில் அதிர்வுமே உண்டானதே - நன்மைகள்
எங்கும் பரவிட எல்லாமே வல்லவன்
இங்கு வகுத்த இசைவு