kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, May 13, 2015
[ 5 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !
நேபாளில் நடந்த நில நடுக்கம், மக்களின் அவலம் பற்றி செய்தி சேகரிக்க வந்த இந்திய பத்திரிகையாளர்கள் தான் செய்தி சேகரிக்க வந்த இடம் மனித இழப்புகள் நிகழ்ந்த இடம் என்ற எண்ணமே இல்லாத அளவுக்கு அங்குள்ள மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நாடகம் எடுப்பது போல வீடியோ கேமராவுடன் அலைந்து கொண்டிருப்பதை காண முடிந்தது. ஊடகத்தை பற்றி ஊடகத்திலே குறை !
பாகிஸ்தான் .மலேசியா, கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகளின் பல உதவிகள் நேபாளில் குவிந்தது. இதனை பார்க்கும்போது என் மனதில் தோன்றிய எண்ணம். மத வேறுபாடுகள் காரணமாக மனிதன் மோதி கொண்டு
அதன் காரணமாக மனித அழிவுகள் ஏற்பட்டால் ..அல்லது இரண்டு நாடுகள் சண்டையிட்டு மோதிக்கொண்டு அதன் காரணமாக ஏற்படும் மனித அழிவுகள் ஏற்படும்போது யாரும் ஒன்று கூடி உதவி செய்வதில்லை. ஆனால் இயற்கை சீரழிவு ஏற்பட்டால் மதம் பாராது, இனம் பாராது ஒன்று சேர்வதை பார்க்கும்போது, இயற்கை மனிதர்களை ஒற்றுமையாய் இருக்க சொல்கிறது .
என்றே தோன்றுகிறது.
சந்திப்பு !
மணிமேகலை பதிப்பகம்,கற்கண்டு வார இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்களின் மகன் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. எதோ நெருங்கிய உறவை சந்தித்தது போன்ற உணர்வு.
நான் நேசிக்கும் துறை சார்ந்த வல்லுனரின் பிள்ளை என்ற ஒரே காரணம் தான். எனது ஆர்வம் கண்டு பிரமித்து போனார். தனக்கும் எழுத்து ஆர்வம் உண்டு என கூறினார். ஆனந்த விகடனில் அவருடைய கதை அரசு என்ற புனை பெயரில் வெளி வந்ததாக கூறினார். ஆத்ம பூர்வமான சந்திப்பு.
கேள்வி:
நான் தமிழூற்று மாத இதழ் நடத்திய போது, கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர் கேள்வி கேட்டார்.
நான் வசதி குறைவான நிலையில் ஊள்ளேன். எனது மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளான். படிக்க வைக்க ஆசை, சரியான வழி சொல்லுங்கள் என்றார். கல்லூரி வரை படிக்க வாய்பில்லை என குறிப்பிட்டிருந்தார். நான் கூறிய பதிலை பின்னூட்டத்தில் கூறுகிறேன் நீங்கள் உங்கள் பதிலை கூறுங்களேன் .
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...

பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
//இயற்கை மனிதர்களை ஒற்றுமையாய் இருக்க சொல்கிறது.//
ReplyDeleteஇயற்கையும் ஒன்றே. அதன் குணமும் ஒற்றுமையே.
ஆனால் மனிதன்தான் பலப்பலப் பிரிவுகளாகப் பிரிந்துக்கொண்டே செல்கிறான். இயற்கைப் பிரிவினைகளை ஏற்காது அவ்வப்போதுத் தண்டிக்க மறக்கவில்லை. ஆனால் மனிதன் அதுப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒன்றுப் பற்றியும், ஒற்றுமையைப் பற்றியும் சிந்திப்பவனும், ஒற்றுமையாக வாழ்பவனும், வாழ்ந்துக் காட்டுபவன் எவனோ அவனே மனிதன்.
சரியாக சொன்னீர்கள் ..அறிஞர் நபிதாஸ் அவர்களே ..
Deleteமனித சமுதாயம் கொள்கையால் பிளவுப்பட்டு கிடப்பது ..பல இன்னல்களுக்கு காரணமாக அமைகிறது ...
திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் மகனாரைக் கண்டு உரையாடிய சம்பவம் சுவையாகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருந்தது. அவரது
ReplyDeleteபெயரைக் குறிப்பிடவில்லையே?
அ.முகம்மது நிஜாமுதீன் ,,தங்களின் வரவு நல்வரவாகுக ...
Deleteலேனா ,தமிழ்வாணனின் மூத்த மகன் ராம நாதன்.., "அரசு தமிழ் வாணன்"
என்ற புனை பெயரில் கதை கட்டுரை எழுதி வருகிறார் .
மேலும் தகவல் அறிய முனைந்த உங்களின் ஆவல் ..தங்களின் எழுத்துலக ஈடுபாட்டினை ..என்னால் உணர முடிகிறது .விழிப்புணர்வு பக்கத்தில் தங்களின் படைப்புகளையும் எதிர்ப்பார்கிறேன்
நேபாளத்தில் மீண்டும் மீண்டுமாய் நிலநடுக்கம் வந்து மக்கள் இன்னும் மீலாத்துயரில் இருக்கும் போது அவர்களை விதவிதமாய் படமெடுத்து வியாபாரமாக்குவது மனிதநேயம் இல்லாத செயலே. நன்றாக சாடியுள்ளீர்கள். அருமை
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் ..
ReplyDeleteதகவல்கள் தருவது ஊடகத்தின் கடமை ..ஆனால் வியாபார நோக்கில் செயல் படுவது ...மிக கொடுமையான ஒன்று ...
இயற்க்கை மனிதனை ஒற்றுமையாய் இருக்கச்சொல்கிறது உண்மைதான் இயற்க்கை என்பது இறைவனல்லவா
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் நண்பரே..
ReplyDeleteஇறைவனின் எச்சரிக்கையே...இயற்கை சீற்றம் ..
நமக்கு இடப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மனித நேயத்தை காப்போம்
நான் கடைசியாய் கேட்ட கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் இல்லை .எனவே நான் தமிழூற்றில் பதிந்ததை இங்கு பதிகிறேன் ...
ReplyDeleteதங்களின் மகன் படிப்பில் ஆர்வம் உள்ள பிள்ளையாய் தெரிகிறது .ஆனால் உங்களின் குடும்ப சூழல் ...தங்களின் இயலா நிலை குறித்தும் விளக்கி விட்டீர்கள் ..ஒரு வருடம் பயிலும் டிப்ளமோ கோர்ஸில் சேர்த்து விடுங்கள் ...அடுத்த வருடமே தங்களின் மகன் தொழில் புரிவார் ...தங்கள் குடும்பத்திற்கு கஷ்டம் நீங்கும் ...தங்களின் மகன் ஆசை படும் படிப்பு பிறகு பகுதி நேரமாக தொடரலாம் .
வெற்றி நிச்சயம் ..எந்த காரணம் கொண்டும் பிள்ளையின் படிப்பு ஆர்வத்தை குடும்ப சூழலை காட்டி தடை செய்து விடாதீர்கள் .
இதுவே எனது பதில்