kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, June 15, 2015
ஜுன் மாதம் !
வருக! வருக!
வள்ளல் மாதமே!
மருத்துவக்கல்லூரி
மணவிழாப் போல
கூட்டம்! ஒரே கூட்டம்!
பொறியியல் கல்லூரியில்
பொரி பொரித்துப்
பூரிக்கும் காட்சி
கூட்டம்!
நாட்டிலே படிப்பு
இதுமட்டும் தானா ?
மற்றப்படிப் பெல்லாம்
கருவாற்றுக் கடைபோல
கண்டு கொள்ளாமல்
கிடக்கிறது!
அதிக மதிப்பெண்
அப்படியே கல்லூரியில் சேர்ந்துவிடுவர்
வசதியுள்ள பெற்றோர்
வாரிவழங்கிப்
பெற்றுவிடுவர் "சீட் "
அதிக மதிப்பெண் பெற்ற
ஏழைகள்
சொத்துக்களை
விற்றுப் போண்டியாகிப்
படிப்பில் சேர்ப்பர்!
பொருளைப் புரட்ட
முடியாதவர்கள்
கண்பிதுங்கி,
கிடைக்கின்ற படிப்பில்
கவனம்!
எந்தந்தத் துறையில்
திறமை இருக்குமோ
அதைப்படிப் பதால்
நாடு முன்னேறும்
பணம் பெருக்கும்
படிப்பு மட்டும்
தேர்ந்தால்
நாடு தேயவடையும்!
பிறபடிப்பும் படியுங்கள்
பிறகு பாருங்கள்
வாழ்க்கையில்
இன்பத்தை!
வள்ளல் மாதமே!
மருத்துவக்கல்லூரி
மணவிழாப் போல
கூட்டம்! ஒரே கூட்டம்!
பொறியியல் கல்லூரியில்
பொரி பொரித்துப்
பூரிக்கும் காட்சி
கூட்டம்!
நாட்டிலே படிப்பு
இதுமட்டும் தானா ?
மற்றப்படிப் பெல்லாம்
கருவாற்றுக் கடைபோல
கண்டு கொள்ளாமல்
கிடக்கிறது!
அதிக மதிப்பெண்
அப்படியே கல்லூரியில் சேர்ந்துவிடுவர்
வசதியுள்ள பெற்றோர்
வாரிவழங்கிப்
பெற்றுவிடுவர் "சீட் "
அதிக மதிப்பெண் பெற்ற
ஏழைகள்
சொத்துக்களை
விற்றுப் போண்டியாகிப்
படிப்பில் சேர்ப்பர்!
பொருளைப் புரட்ட
முடியாதவர்கள்
கண்பிதுங்கி,
கிடைக்கின்ற படிப்பில்
கவனம்!
எந்தந்தத் துறையில்
திறமை இருக்குமோ
அதைப்படிப் பதால்
நாடு முன்னேறும்
பணம் பெருக்கும்
படிப்பு மட்டும்
தேர்ந்தால்
நாடு தேயவடையும்!
பிறபடிப்பும் படியுங்கள்
பிறகு பாருங்கள்
வாழ்க்கையில்
இன்பத்தை!
'கவிஞர்' அதிரை தாஹா
Subscribe to:
Post Comments (Atom)
ஜூன்மாதக் கூட்டம்
ReplyDeleteஜுரம் பிடிக்கும் கேட்டால்
வேன்நிரை நோட்டும்
வெள்ளாமை போலத் திரட்டும்
டாக்கடர் விலை உச்சம்
டன் கணக்கில் சேரும்
ஊக்கமுடன் அலைவார்
உறுதிபெற சீட் அட்மிசன்
எஞ்சினியர் ஏக்கம்
எல்லாவயலும் கல்லூரி பிதுக்கம்
மிஞ்சிவிட்டார் எண்ணிக்கையில்
மின்னுகிறார் எல்லாத் தெருவெங்கும்
கலைக்கல்லூரி தொடர்ந்தும்
கற்க வருவோர் நிறைந்தும்
நிலைகளில் மந்தம்
நியா முன்னேற்றமும் மந்தம்
கல்வி கற்பதில்
கவனங்கள் இல்லை
கல்வி கற்பிப்போரே
கல்லூரி தரத்தின் எல்லை
பட்டங்கள் பெயருடன்
பதவிகள் பெறுவதில் ஏக்கங்கள்
திட்டங்கள் தன்னில்
தீட்டியதின் விளைவே பாருங்கள்
செய்வதை திருந்தச்
செய்வதில் உள்ளது முன்னேற்றம்
பொய்யாக நடித்தால்
புதிராகத்தானே போய்விடும் ஏற்றம் ?!
கவிஞரின் தாக்கம்
கவலைக் கொள்ள வேண்டும்
கவிதையில் தந்தார்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிறப் படிப்பு
பிறவியின் உண்மைப் படிப்பு
அறம்நிறை படிப்பு
அவனையறியும் அவசியப் படிப்பு
அதனைக் கற்றால்
அத்தனையும் உன்னில் மிளிரும்
இதனைத் தானே
இம்மண்ணின் அருட்கவி பொழிந்தார்.