kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Wednesday, July 1, 2015
[ 22 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி
(81)
நாடிடுவீர் உச்சமாக நாயகரின் வாழ்வுதனைத்
தேடிடுவீர் உந்தன் தியானத்தில் - வீடுபேறும்
இல்வாழ்வின் நல்லமைவாய் என்றும் நிலைத்திடுமே
சல்லாபம் விட்டே தரித்து.
(82)
தரித்திட வேண்டும் தலைவனில் ஆழப்
புரிந்திட நல்லடிமைப் போல - அரிதாகும்
துன்பம், துயரம், துரோகங்கள் வாழ்வினில்,
இன்பம் நிறையும் இணங்கு.
(83)
இணங்கியே இல்லாதும் ஏகனில்எல் லாம்மாய்
வணக்கத்தில் ஒன்றி வரனும் - சுணங்காதாம்
ஆற்றல்கள் நோக்கத்தை ஆற்றிவிடும் எப்போதும்
போற்றிடுவார்மேன்மைப்புகுத்து
(84)
புகுந்திடு ஏற்றமிகுப் புண்ணிய வாழ்வில்
மிகுந்திட ஆனந்தம் மின்னும் - வகுத்திடு
வல்லவன் பாதையில் வாழ்வுகள், தன்னைப்போல்
எல்லாமும் என்பதில் என்று.
நபிதாஸ் (தொடரும்)
வெண்பா (81)
பொருள்: மனிதகுல முன்மாதரி நாயகப் பெருமானின் வாழ்க்கை முறைகளை தீவிரமாக விரும்பி நாட்டம்கொண்டு மனவோர்மை நிலை தியானத்தில் அவ்வாழ்வு நிலைகளை சிந்தித்து அடைந்துக்கொள். அதன்மூலம் வீடுபேறு என்ற சுவர்க்கநிலை உன்னுடைய இல்லற வாழ்க்கையிலே நல்லமைவாக இனி நிலைத்துவிடும். அதனால் சிற்றின்பம் தூண்டும் பேச்சுக்களை விட்டு அந்நல்வழியில் உன்னைப் புகுத்தி அவ்வாழ்வையே அணிந்துக்கொள்.
வெண்பா (82)
பொருள்: இறைவனை நன்கு ஆழப் புரிந்திட்ட நல்ல அடிமைப்போல இறைவனின் வழிகாட்டுதலைத் தரித்துக்கொள். அதனால் துன்பங்கள், துயரங்கள், துரோகங்கள் உன் வாழ்வில் இல்லாமல் போய் மாறாக இன்பம் வாழ்வில் நிறைந்துவிடும். அதனால் அந்நல்லடிமை வழிகாட்டுதலை உன்னில் இணக்கமாக்கி அமைத்துக்கொள்.
வெண்பா (83)
பொருள்: இறைவணக்கத்தில் அவனன்றி ஏதுமில்லாத அவனில் தன்னையிழந்து ஒன்றிவிடனும். அவ்வாறானவர்களின் நோக்கங்களை ஆற்றல்கள செயலக்கிவிடும். அவைகள் காலத்தாலும் போற்றப்படும். அத்தகைய மேன்மையான வணக்கத்தை உன்னில்கொள் என்பதாகும்.
வெண்பா (84)
பொருள்: நன்மைகள் செய்யும் புண்ணிய வாழ்க்கையாக உன் வாழ்க்கையை அமைத்திடு. அவ்வாறாக அங்கு ஆனந்தம் பிரகாசிக்கும். இறைவன் வகுத்திட்ட பாதைகளை தன் வாழ்க்கையின் பாதையாக அமைத்திட தன்னைப்போல் எல்லாமும் என்ற பரந்த எண்ணத்தில் அப்புண்ணிய வாழ்வு அமையும்.

Subscribe to:
Post Comments (Atom)
புணர்ச்சி, ஒற்று இவைகளின் விதிகளுக்கு உட்பட்டு அவன் அடிமை :
ReplyDelete(81)
நாடிடுவீ ருச்சமாக நாயகரின் வாழ்வுதனைத்
தேடிடுவீ ருந்தன் தியானத்தில் - வீடுபேறு
மில்வாழ்வின் நல்லமைவா யென்றும் நிலைத்திடுமே
சல்லாபம் விட்டே தரித்து.
(82)
தரித்திட வேண்டும் தலைவனி லாழப்
புரிந்திட நல்லடிமைப் போல - அரிதாகும்
துன்பம், துயரம், துரோகங்கள் வாழ்வினி
லின்பம் நிறையு மிணங்கு.
(83)
இணங்கியே யில்லாது மேகனிலெல் லாம்மாய்
வணக்கத்தி லொன்றி வரனும் - சுணங்காதா
மாற்றல்கள் நோக்கத்தை யாற்றிவிடு மெப்போதும்
போற்றிடுவார் மேன்மைப் புகுத்து
(84)
புகுந்திடு யேற்றமிகுப் புண்ணிய வாழ்வில்
மிகுந்திட வானந்தம் மின்னும் - வகுத்திடு
வல்லவன் பாதையில் வாழ்வுகள், தன்னைப்போ
லெல்லாமு மென்பதி லென்று.