.

Pages

Sunday, August 2, 2015

அற்புத மனிதர் - அப்துல் கலாம் !

மக்கள் திலகமே!
மாமணியே!
அப்துல் கலாமே
நீ கேட்டதை விட
அதிகமே அருளினான்
இறைவன்!

நிறுத்தாதப் பேச்சு
நீ பிறந்து விழுந்த
நாளிலிருந்தே!
பிராணன் போகும் போதும்
பேசியவரே!

பேசிய தெல்லாம்
தேசியம் காக்க!
இளஞ்சிட்டுகளை
இராஜாளிப் பறவைகளாக்க!

கடுகைப் பொறித்த போதும்
"கலாம் " என்றது
கடுகளவு உள்ளப்
பொருளிலெல்லாம்
களங்கண்டவன் நீ!

கனவு கண்டவன்
களிக்க வல்ல,
காக்க நாட்டை
சாதிக்க!

அக்னிச் சிறைக்குள்
அடை காக்கப் பட்டவன்
ஆழ்ந்த ஞானம்பூண்ட
தந்தையாம்
மரத்தில் இருந்து
விழுந்த கனி
உலகமே சுவைத்தது!

உன் தலையில்
வகுடு பிளந்தாலும்
உள்ளத்தில்
ஒரு
கீரலுமில்லை!

விரிந்த பார்வை
வியப்பான நோக்கு!
நாட்டு மக்கள்
ஒன்றுபட
நாள்தோறும் பிரார்த்தித்தாய்!
மதத்தை இணைக்கும்
கயிறாக்கினாய்!

வாழ்வதும் வீழ்வதும்
நாட்டுக்கே என்ற
நற்குறிக் கோளை
நெஞ்சங்களில்
மலர்ச்சி தீபமாக்கினாய்!

நாட்டு மக்களின்
உறுதிக்கு
உறுதுணையாகி
களங்கமிலா கல்வியைப்
போதித்தாய்
வேளாண்மையை
வளர்த்தாய்

கணிப்பொறியில்
கருத்தைப் பொருத்தி
ககனத்தார் முன்
பாரத நாட்டைப்
பார்த்திட வைத்தாய்
வியப்பாக!

மதச் சகிப்புத்
தன்மையை
மண்முடியாய் பூண்ட
ஜனாதிபதி நீ!

நல்வழியில் நடத்திச் செல்ல
எண்ணி எண்ணித்
தொழுதாய்!

இறைவன் நடத்தினான்
நன்றி காட்டினாய்!
'செயல்களின் பலனே
செய்தவனுக்கு ' என்ற
வேதக்கருத்தில் ஊறினாய் :
உன்மரணத்தில்

அதை
உலகமும் உணரவைத்தாய்!
வேதம் கற்றவன்
பிறமத
நாதங்கற்றவன்
விந்தையாளனை
விளங்கிக் கொண்டவன் :

வளர்பொருள்
வல்லரசாதல் -
நாட்டைப் பற்றி
உன் கனவு!

இரண்டாயிரத்து
இருபதை
இலட்சியப் புள்ளியாக்கினாய்
அதைக்காணு முன்பே
மண்ணறைப்
பள்ளிக்குப் போனாய்!

கோடிக் கணக்கான
நெஞ்சங்களில்
கூடுகட்டி வாழும்
புல்புல் நீ!
குவலயம் கண்டிராதப்
புகழ்மாலைப் போட்ட
புனிதன் நீ!

வளர்ந்த இந்தியாவைக்
காண
உன்னுள் எரியும்
அறிவுத் தீயை
அணையாமல் காப்போம்
உறுதி!

ஆசானின் பிரம்படி
உன்னை
விஞ்ஞானி யாக்கியது!
தந்தையின் உபதேசம்
உன்னை
மெய்ஞ்ஞானி யாக்கியது!
தாயின் வளர்ப்பு
உன்னை
உலகப் பிரஜையாக்கியது!

மற்றவர் மகிழ -
நீமட்டும் அழுதுப்
பிறந்தாய்!
இன்று
நீமட்டும் மகிழ
உலகெல்லாம் அழ
எங்களைப்
பிரிந்தாய்!

ஓ! அப்துல் கலாமே
நீர் அற்புதமான மனிதர்!
நீ பிறந்ததும் சிறப்பு
நீ வாழ்ந்ததும் சிறப்பு
உன்னுடைய இறப்பு
சிறப்பே!
'கவிஞர்' அதிரை தாஹா

4 comments:

 1. //
  விரிந்த பார்வை
  வியப்பான நோக்கு!
  நாட்டு மக்கள்
  ஒன்றுபட
  நாள்தோறும் பிரார்த்தித்தாய்!
  மதத்தை இணைக்கும்
  கயிறாக்கினாய்!
  //

  ஏ.பி.ஜெ. பற்றி தங்களது
  விரிந்த பார்வை
  வியப்புகளை எங்களுள்ளும்
  விரியச்செய்கிறது.

  நன்றி.

  தங்கள் கவிதைப் படிக்க
  என்னுள்ளும்....

  நாடு நாடு என்றதனால் - அவனை
  நாடிச் சென்றுவிட்டாயோ !

  விண்வெளிக்கு ராகெட் அனுப்பி
  விவேகமாய் வல்லரசாக ஆசையோ !
  மண்ணை வீட்டும் பறந்துவிட்டாய்
  மன்னவனிடம் பாரதத்திற்காக மண்டியிட

  ReplyDelete
 2. விரிந்த பார்வை
  வியப்பான நோக்கு!
  நாட்டு மக்கள்
  ஒன்றுபட
  நாள்தோறும் பிரார்த்தித்தாய்!
  மதத்தை இணைக்கும்
  கயிறாக்கினாய்...ஆம் இன்னும் ஆயிரம் அப்துல் கலாம் இந்தியாவில் பிறக்க வேண்டும் ...

  ReplyDelete
 3. என்னத்தச்சொல்ல

  ReplyDelete
 4. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

  பணம் அறம் இணையதளம்

  ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

  உதவிக்கு பயன்படுத்து லிங்க்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers