.

Pages

Sunday, August 2, 2015

[ 7 ] பத்திரிக்கையாளன் ஒரு பார்வையாளன் !

என் அன்பு நெஞ்சங்களே ! உங்களிடம் மீண்டும் என்னுள் எழும் எண்ணங்களை நான் வாசித்த,பார்த்த, ரசித்தவற்றை பகிர்ந்து கொள்வதில் மனநிறைவடைகிறேன் .

ஊடக பார்வை:
கடந்த சில நாட்களாக இந்திய ஊடகத்தை முற்றிலும் ஆட்கொண்ட செய்தி மறைந்த முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களை பற்றிய செய்திகள் தான்.
* ஒரு விஞ்ஞானியாக
* ஒரு எழுத்தாளனாக
* ஒரு விரிவுரையாளனாக
* ஒரு மேடை பேச்சாளனாக

இப்படி பண்முக திறமையை தன்னுள் அடக்கி கொண்ட ஒரு அறிவாளி அவரின் இத்தனை திறமைகள் அனைத்தும் வருங்கால இளைஞர்களிடம் போய் சேர வேண்டும் என்று நினைத்த அவருடைய வேட்கை  எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.  அவருடைய பொன் மொழிகள். எல்லோராலும் ஏற்று கொள்ள தக்கவை .

"உன் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் உன் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்"

"கனவு காணுங்கள், உறக்கத்தில் அல்ல உறக்கத்தை விரட்டும் உனது எதிர்கால இலக்கு பற்றியதாக உள்ள கனவு"

இப்படி மாணவ செல்வங்கள் பற்றிய சிந்தனை தான் தாய், தந்தையை போற்ற வேண்டும் என்று எப்பொழுதும் அறிவுறுத்துவார். அவரின் இழப்பு பேரிழப்பு தான்.

வலைதளங்களில் அவருடைய செய்திகளும், பொன்மொழிகளும் நிறைத்து தனது அஞ்சலியை இளைஞர்கள் செலுத்தி வருகிறார்கள்.

நான் பத்து வருடத்திற்கு எனதூரில் ஒரு டியூசன் சென்டர் நடத்தி வந்தேன். ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் பயிற்சி அளித்தேன். கல்லூரி படிப்பை முடித்த இளைஞன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் தருவாயில் ஆங்கிலம் படிக்க வரவில்லை என என்னிடம் வந்தான் நான் கொடுத்த பயிற்சியில் ஓரளவு தெரிந்து கொண்டான். ஒரு நாள் நான் எனதூரில் உள்ள நூலகம் செல்ல நடந்து சென்று கொண்டிருந்தேன். எதிரே வந்த அந்த மாணவன் எனக்கு அளித்த மரியாதையை இன்றும் என்னை நெகிழ வைக்கிறது.

இலட்ச கணக்கான மாணவ சமுதாயத்தை கவர்ந்த அப்துல் கலாம் அவர்களுக்கு அவர் மறைவுக்கு இந்திய நாடே மரியாதை செலுத்துவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. எல்லா பணியை விட ஆசிரியர் பணியே சிறந்த பணி என்பதை அறிந்து கொள்வோம்.
மீண்டும் சந்திக்கிறேன்...
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

4 comments:

  1. பெருமானார் (ஸல்) அவர்கள்
    'கல்வி கற்க சீன தேசம் சென்றாகிலும்
    கற்றுக்கொள்' என்றார்கள்.

    அதனால்

    எல்லாப் பணியைவிட
    ஆசிரியப் பணியே
    சிறந்தது தான்.

    ReplyDelete
  2. இளைய தலைமுறையின் எதிர்காலம் சிறக்க கலாம் ஆற்றிய பணி இன்றியமையாதது ....தனது இறுதி மூச்சுவரை ...அதனை செயலில் காட்டினார்
    சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்ததாலேயே எல்லோராலும் போற்ற படுகிறார்

    ReplyDelete
  3. எல்லாப்பணிகளிலும் சிறந்த பணி ஆசிரியப்பணி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது
    ஒழுக்கத்தை மாணவர்களிடத்து கற்றுக்கொடுத்து, அதன்படி அவர்கள் ஒழுக்கமுள்ளவர்கலாய் நடந்தால் அதன் நன்மை ஆசிரியரின் கல்லறைவரை பயனளிக்கும் இது நாயகத்தின் வாக்கு

    ReplyDelete
  4. ஆம் சரியாக சொன்னீர்கள் ..

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers