kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Tuesday, November 10, 2015
அரக்கனை அழிப்போம் !
தூய அன்பு மலரும்
தொடர்வோமே ஒற்றுமையில்
மாய அரக்கன் அறிவோம்
மதியினிலே தெளிவோமே
நேயம் கெடுப்பது அதுவே
நினைவினிலே கொள்வோமே
தீய அரக்கன் கொல்லத்
தித்திக்கும் தீபாவளி
தீமைகள் தருவதுஎதுவோ
தீர்மானம் கொண்டிடலாம்
ஊமையாய் இருக்க வேண்டாம்
ஒற்றுமையைக் குழைத்திடுமே
ஆமை போலே நுழைந்தே
அழித்திடுமே நேசத்தை
கூர்மை கொண்டே அறிவோம்
கொடுங்கோலன் அதுவேதான்
சுயநலம் காக்க சூழ்ச்சி
சுரண்டிடுமே தேசத்தை
பயமில் லாதே பலதிலும்
பக்குவமாய் பிரித்திடுமே
நயமாய் பேசும் நரிதான்
நாம்தானே புரிந்திடணும்
தயவு காட்ட வேண்டாம்
தவிர்த்துடுவோம் துவேசத்தைநாம்
பிரிக்கும் உணர்வைத் தூண்டி
பிரகாசமாய் தான்வாழ
விரிக்கும் இனத்தின் வலையை
விட்டில்பூச் சாய்யழிய
திரிக்கும் துவேசம் மனதில்
தீங்குகளைத் தூண்டிவிட
எரித்திடு அதுவே அரக்கன்
இன்பங்கள் நிலைத்திடுமே
உன்னில் வளர்ந்தப் பகைதான்
உறுமிடும்உன் ராக்கெட்டாம்
துன்பம் தூண்டும் துவேசம்
தூக்கிபிடிக்கும் மத்தாப்பு
வன்மம் உருவாய் பாட்டாஸ்
வாழ்விலே நிறைந்திருந்தால்
இன்பம் நிறைய இவையை
இனிதேநாம் வெடித்தழிப்போம்
துன்பம் ஒழித்தத் தினத்தில்
தூயபட்டா டையுடுத்தி
அன்பைப் பேசி அனைத்து
அருந்துவோமே பலகாரம்
வன்ம அரக்கன் இனியும்
வாழ்வில்நு ழையவிடோமே
நான்மை பெருக வாழ்வோம்
நலன்களுமே நிலைத்திடுமே..
நபிதாஸ்
தொடர்வோமே ஒற்றுமையில்
மாய அரக்கன் அறிவோம்
மதியினிலே தெளிவோமே
நேயம் கெடுப்பது அதுவே
நினைவினிலே கொள்வோமே
தீய அரக்கன் கொல்லத்
தித்திக்கும் தீபாவளி
தீமைகள் தருவதுஎதுவோ
தீர்மானம் கொண்டிடலாம்
ஊமையாய் இருக்க வேண்டாம்
ஒற்றுமையைக் குழைத்திடுமே
ஆமை போலே நுழைந்தே
அழித்திடுமே நேசத்தை
கூர்மை கொண்டே அறிவோம்
கொடுங்கோலன் அதுவேதான்
சுயநலம் காக்க சூழ்ச்சி
சுரண்டிடுமே தேசத்தை
பயமில் லாதே பலதிலும்
பக்குவமாய் பிரித்திடுமே
நயமாய் பேசும் நரிதான்
நாம்தானே புரிந்திடணும்
தயவு காட்ட வேண்டாம்
தவிர்த்துடுவோம் துவேசத்தைநாம்
பிரிக்கும் உணர்வைத் தூண்டி
பிரகாசமாய் தான்வாழ
விரிக்கும் இனத்தின் வலையை
விட்டில்பூச் சாய்யழிய
திரிக்கும் துவேசம் மனதில்
தீங்குகளைத் தூண்டிவிட
எரித்திடு அதுவே அரக்கன்
இன்பங்கள் நிலைத்திடுமே
உன்னில் வளர்ந்தப் பகைதான்
உறுமிடும்உன் ராக்கெட்டாம்
துன்பம் தூண்டும் துவேசம்
தூக்கிபிடிக்கும் மத்தாப்பு
வன்மம் உருவாய் பாட்டாஸ்
வாழ்விலே நிறைந்திருந்தால்
இன்பம் நிறைய இவையை
இனிதேநாம் வெடித்தழிப்போம்
துன்பம் ஒழித்தத் தினத்தில்
தூயபட்டா டையுடுத்தி
அன்பைப் பேசி அனைத்து
அருந்துவோமே பலகாரம்
வன்ம அரக்கன் இனியும்
வாழ்வில்நு ழையவிடோமே
நான்மை பெருக வாழ்வோம்
நலன்களுமே நிலைத்திடுமே..
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteஉன்னதமாய் ...
Deleteஉரைத்தீர்கள் ....
உண்பது ...முதல் உடுத்தும் உடை வரை
ஒரே முறை ..யாரோ சிலர் வாழ
மத பேதம் பேசி ..மானிடம் அழிக்க நினைக்கும்
அரக்கனை ஒழிக்கும்..தீபாவளியாக அமையட்டும் ..
அன்பு நபி தாஸ் அவர்களின் ...கவி சென்றடயட்டும் ..உலகெங்கும்
வளரட்டும் மனித நேயம் ..
சமூக விழிப்புணர்வு ..மீண்டும் புத்துயிர் பெறட்டும்
வாழ்க வளமுடன்
தங்கள் வாழ்த்தினுக்கு நன்றிகள் பல.
ReplyDelete