.

Pages

Wednesday, January 30, 2013

தஞ்சை(ப்) பூங்கா !



அதிரை – இது சேது பெருவழிச் சாலையில் அமையப் பெற்றிருக்கும் கடற்கரையோர ஊர். இங்கிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தஞ்சாவூர், இவை வரலாற்று நகர், சுற்றுலா நகர், தொழில் நகர் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கூடுதலாக பெற்றிருந்தாலும் 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்நகரின் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளப் பகுதியில்  'சிவகங்கைப் பூங்கா' ஒன்று உள்ளது. இவை தஞ்சை நகராட்சியின் நிர்வாகத்திற்கு உட்பட்டவையாகும். கோடை கால விடுமுறை தினங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை இங்கு வந்து செல்வது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.


இப்பூங்காவில்....
சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க மான், வான்கோழி, பச்சைக்கிளி, வாத்து போன்ற பறவை இனங்களும், நரி, முயல், புறா, சீமை எலி, யானை போன்ற விலங்கு இனங்களும் உள்ளது.
சிறுவர் சிறுமிகளுக்கென்று இருக்கும் சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு, குடை ஊஞ்சல் போன்றவற்றில் குழந்தைகள் பலர் விளையாடி மகிழ்கின்றனர்.


கோடை வெயிலின் உஸ்ணத்தைப் போக்குவதற்கென்றே அங்கு காணப்படுகின்ற செயற்கை ஊற்று குளத்தில் பெரும்பாலும் சிறுவர் சிறுமிகள் பலர் குளித்து மகிழ்கின்றனர். 

நீந்துவதற்கென்று கண் கவர் நீச்சல் குளமும் அங்கு இடம் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடிச் செல்லும் 'தொங்கு பாலம்' நம் அனைவரையும் சுண்டி இழுக்கும் !


இப்பூங்காவில் அமைந்துள்ள மிகப்பெரிய குளத்தை சுற்றிப் பார்ப்பதற்கென்றே மிதி படகு சவாரி, துடுப்பு படகு சவாரி போன்றவற்றோடு அனைத்து பகுதிகளையும் ஒரு முறைச் சுற்றிவர ரயில் சவாரியும் உள்ளது. 


முதியோர்கள் இல்லைப்பாறுவதற்கென்று படர்ந்த புல்வெளி, அரச மரம், ஆழ மரம், அசோகா மரம், யானைக்கால் மரம் ( ? ! ) போன்ற வயது முதிர்ந்த பெரிய மரங்களும், அழகிய செடி வகைகளும் பார்ப்பதற்கு அழகுறக் காட்சியளிக்கின்றன.
பூங்காவிற்கு வருகை தரும் பல குடும்பங்கள் தங்களின் வீட்டிலிருந்து கட்டிச்சோறு, புளிச்சோறு, தயிர்ச்சோறு போன்றவற்றை எடுத்துவந்து ஆங்காங்கே இருக்கின்ற நிழற்கூடத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது நம்மை நெகிழ வைக்கும்.



சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள் பதிவு ]

8 comments:

  1. அன்புடன் புகாரிJanuary 30, 2013 at 9:56 PM

    ஆகா, காணக் கண்கொள்ளாக் காட்சி. எங்கள் ஊராச்சே. என்ன அற்புதமாகத் தொகுத்திருக்கிறீர்கள் மிக அழகிய படங்களுடன். நன்றி நன்றி. இந்தப் பூங்காவுக்குள் ஓர் ஆயிரம் முறை போயிருப்பேன் ;-)


    ReplyDelete
  2. பார்க்காத இடம். நிச்சயம் போகத் தூண்டும் பதிவு.

    நல்லபடியாக பராமரித்து வந்தால் நன்றாக இருக்கும். அங்கு போகும் போது மக்களும் தங்கள் கடமையை உணர்ந்து குப்பைகள் போடாமல், அசுத்தம் செய்யாமல் இருக்க வேண்டும்.

    நல்லதொரு சுற்றுலா தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. உங்கள் ஊர் மிக அழகாகவே இருக்கின்றது நண்பரே புகைப்படங்களும் அருமை. பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. சகோதரர் நிஜாமின் வண்ணப்படங்கள் செம தூள்.

    பல திறமைகளை தனக்குள் புதைத்து வைத்திருப்பது அவரது புகைப்படமே சொல்கிறது.

    மெய்யாலுமே பாராட்டப்படவேண்டியவை.

    இத்தனை காலமாக நமதூருக்கு மிக அருகாமையில் இவ்வளவு பொழுது போக்குடன் அழகிய பூங்கா அமைந்திருப்பதை என்னைப்போல் அறியாத பலருக்கு அறியத்தந்த சகோதரருக்கு மனமார்ந்த நன்றி.

    இனி ஊர்வரும் காலத்தில் அவசியம் போய் இந்த பூங்காவை பார்த்து விட வேண்டியது தான்.

    ReplyDelete
  5. படங்களுடன் பகிர்வு அருமை
    நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற உணர்வையும்
    அவசியம் பார்க்கவேண்டும் என்னும் உணர்வையும்
    ஏற்படுத்திப் போகும் பகிர்வு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சில வருடங்களுக்கு முன்பு சென்றது இப்போது தங்கள் படங்களை பார்க்கும் போது நவீனப் படுத்தப்பட்டுள்ளது போல சிறப்புங்க.

    ReplyDelete
  7. ஆக மிக அருமையான புகைப்படம் பார்பதற்கு மென்மை பார்க்க தூண்டும் உணர்வு அதன் வரலாறும் பதிந்து இருபது அருமை வாழ்த்துக்கள் காக்கா.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers