சமூகத்தில் குற்றவியல்
சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு
சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது
நமது காவல்நிலையத்திற்கே.........
காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவது என்பது நிதர்சனமான உண்மை.
காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவது என்பது நிதர்சனமான உண்மை.
இச்சூழலில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்காக காவல்நிலையத்திற்கு
வரும் புகாரை விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே காவல்துறை
அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படும் என்ற ஒரு கருத்து பெரும்பாலானோர் மத்தியில் காணப்பட்டாலும், சமூகத்தில் செல்வாக்கு
மிக்கவர்களால் தரப்படும் புகாரையோ, செல்வாக்கு மிக்கவர்களின் பரிந்துரையுடன் வருபவர்களின்
புகார்களை விசாரிப்பதில் காட்டப்படும் முனைப்பு, சாமானிய
மக்களின் புகார்களை விசாரிப்பதில் காட்டப்படுவதில்லை என்பதை காவல்துறையினரே
ஒப்புக்கொள்வர். இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது.
காவல்துறைக்கு எடுத்துச்செல்லும் நியாமான நமது புகார்களை
முறையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வில்லையா ?
தமிழ்நாடு போலீசின் அதிகாரப்பூர்வ இணையதளமாக http://www.tnpolice.gov.in/ இவை உள்ளது. இதில் தமிழ்நாடு போலீசின் விவரங்கள், காவல்துறையின்
அன்றாட நிகழ்வுகள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தில், காணாமல் போனவர்களின் பட்டியலும், புகைப்படங்களும்
வெளியிடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதளம் மூலமாக பொதுமக்கள் தங்கள் புகார்கள் குறிப்பாக கிரிமினல் குற்றங்கள், நில மோசடி, விபத்துகள் மற்றும் நமது கருத்துகள் போன்றவற்றை பதிவு செய்யலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்லைனில் நமது புகார்களை பதிவு செய்யும் முறை : ( ONLINE PETITION FILING )
- அதில் கிளிக் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தை
தேர்வு செய்து அதில் நம்முடைய புகார்களை பதிவு செய்துகொள்ளலாம்.
- மேலும் நமது புகாரின் நிலவரத்தையும் அதில் அறிந்துகொள்ளலாம்.
- நாம் பதியும் புகார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
( Superintendent of Police )அவர்களின்
நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சகோதரர்களே, கோரிக்கையில் பதியும்
விவரங்கள் அனைத்தும் குறிப்பாக நமது பெயர், தொலைப்பேசி எண்கள், புகாரின் தன்மை போன்றவை உண்மையானதாக
இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன்
நாடினால் ! தொடரும்...................
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நிஜாம் காக்கா அவர்களுக்கு.
ReplyDelete