kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, August 6, 2012
அங்கீகாரமில்லா மனைகளா !? கதி என்ன ?
ஏக்கர் கணக்கில் விவசாய விளை நிலங்கள் மனைக்கட்டு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு பெயர்களில் அவற்றை அழைத்து விற்பனை செய்யப்படுகிறது. இவைகள் அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வில்லை என்பது பெரும்பாலோனருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை !?
ஒவ்வொரு ஊரிலும் மனைக்கட்டு நிலங்களின் விலையை “சதுர அடி” என்று கணக்கீடு செய்து விற்பனை செய்யப்படுகின்றன. அழகிய வடிவமைப்புடன் நிலத்தின் வரைபடங்களை கையில் வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தேடிச்செல்லும் இடைத் தரகர்களால் கூறப்படும் ஆசை வார்த்தைகள், பொய்யான வாக்குறுதிகள், தொடர்ந்து தரும் அன்புத்தொல்லைகள் போன்றவற்றால் கூடுதல் விலையுடன் இவற்றை வாங்கும் பெரும்பாலானோர் இரண்டு சதவீத கமிசன் தொகையை அவர்களுக்கு வழங்க தவறியதில்லை. இரண்டு தரப்பினர்களுக்கிடையே தலா இரண்டு சதவீத கமிசன் தொகையைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள் ஒரு வருடத்தில் இரண்டு மடங்கு தொகையில் விற்றுத் தறுகிறேன் !? என்று சொல்வதுதான் வேடிக்கை !
மனைக்கட்டு நிலம் வாங்கும்போது பத்திர பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி ( Guideline Values ) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு முழுவதும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு பல மடங்குகளாக உயர்த்தப்பட்டன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்ந்து இருக்கின்றன.
மனையின் விலை, தரகர்களின் கமிசன் தொகை, கூடுதலான பத்திர பதிவு செலவு போன்றவற்றை செலுத்தி மனைக்கட்டு நிலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்நிலத்தில்“அரசின் அங்கீகாரம்”, “போதுமான சாலை வசதிகள்”, “பூங்கா” போன்றவைள் உள்ளனவா ? என்பதில் கவனம் செலுத்துவதில்லை.
கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. நிலத்தின் பட்டா , சிட்டா அடங்கல், வில்லங்க சான்றிதழ், சொத்து ஆவணம் ( பத்திரம் ) போன்றவற்றில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ( இவற்றைப் பற்றி விரிவாக கவனம் : நிலம் வாங்கும் முன் ! என்ற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை பதிந்துருக்கிறேன். பார்க்கவும் )
2. சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பரிந்துரையுடன் நிலத்தின் லே-அவுட் ( Layout ) போட்டு அதற்கு அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
3. மனைப்பிரிவின் மொத்த இடத்தில் 10 சதவீத இடத்தை பூங்காவுக்காக ஒதுக்குவதோடு, அதில் அமையும் சாலையையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விதிகளை கடைபிடித்தால்தான் மனைபிரிவுக்கு உரிய அங்கீகாரம் பெறமுடியும்.
4. "லே-அவுட்"டின் நீளத்தை பொறுத்து குறைந்தபட்சம் 23 அடி முதல் 40 அடி வரை ரோடுக்கு இடம் ஒதுக்க வேண்டும். கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துஇருக்க வேண்டும்.
5. "லே-அவுட்” அமைந்துள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகள் சிரமமில்லாமல் அப்பகுதிக்கு குடிநீர் இணைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்த முடியும்.
6. “டிடிசிபி" அங்கீகாரம் இல்லாத லே-அவுட்'களில் மனைக்கட்டு நிலம் வாங்கினால், வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்காது.
7. அங்கீகாரம் இல்லாத மனைகளில் வீடு கட்டுவதால் மேற்கண்ட அடிப்படை வசதிகள் கிடைக்காது.
8. மேலும் மயானம் (சுடுகாடு ), ஏரி குளம் போன்ற நீர் நிலைகள் , மாநில நெடுஞ்சாலையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளி விட்டு "லே-அவுட்” அமைந்து இருக்கவேண்டும்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
சிலர் வாங்குவதோட. சரி அதை சரியாக பராமரிப்பது கிடையாது.இதனால் அந்த மனைகள் இப்படி அங்கீகாரமில்லா மனைகளாகி விடுகின்றது.
ReplyDelete