.

Pages

Tuesday, October 2, 2012

சந்திப்பு : ‘பதிவர்’ சகோ. மு.செ.மு. நெய்னா முஹம்மது [காணொளி]


நமது இளமைக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் நினைக்கும்போது ஏற்படும் உணர்வு நமக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. மு.செ.மு. நெய்னா முஹம்மது அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு:
நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை அழகாக நமதூர் வழக்குச்சொற்களில் எழுதக்கூடியவர். நமது சகோதர வலைதளங்களில் பல்வேறு ஆக்கங்களை எழுதியுள்ளதோடு மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் இருப்பது இவருக்கு கூடுதல் சிறப்பாகும்.

இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

6 comments:

  1. மாப்ளே ஒன்னைய பார்த்த்துலே சந்தோஷம்

    ReplyDelete
  2. துணிவுடைமை, நேர்மை, நடுநிலைமை என்பதே ஊடகத்துக்குரிய பால பாடம் என்று அழுத்தமாய் அறிவித்த அன்புச் சகோதரர் நெய்னா அவர்கட்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்” இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சந்திக்கலாமா?

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் !

    நண்பர் நெய்னாவின் கருத்து ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரியதாக உள்ளது. இளம் பதிவர்களுக்கு கண்டிப்பாக உதவும்.

    அவரின் எளிமை + அமைதியான பேச்சு என்னை வியக்கவைத்தன.

    தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. கனடா கவிநாவால் “நெய்நா” என்றழைக்கப்பட்டவரின் அருமையான பேட்டி இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருப்பதன் மர்மம் என்ன என்றே எனக்கும் புரியவில்லை?!

    ReplyDelete
  5. அன்பின் தம்பி நெய்னா அவர்களின் பேட்டியை தாமதமாகவே கேட்க நேரிட்டது, தன்னுடைய எழுத்தின் பாணியைப் போலவே எளிமையாகவும் இனிமையாகவும் தனது கருத்துக்களை வெளியிடும் பாங்கு பாராட்டுக்குரியது.

    விடுமுறை கழிந்து புறப்பட்டுவிட்டீர்களா? அல்லது ஊரிலா? தாங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த எனது நூல் வெளியீடு விரைவில் உண்டாகும் இன்ஷா அல்லாஹ். தாங்கள் ஹ்ஜ்ஜுப் பெருநாள் விடுமுறை வரை ஊரில் இருப்பீர்களா என்று அறிய விரும்புகிறேன்.

    ReplyDelete
  6. தம்பி நெய்நாவின் கருத்து
    எதார்த்த சூழலை எடுத்துரைப்பதாக
    உள்ளது ..பின்னூட்டங்களில் கூட
    காண முடியவில்லையே ..
    அலுவல் கூடுதலோ ..?

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers