மின் தடையால் ஊர் இருட்டு
ஊசி விழுந்தால் கேட்கும் சப்தம்
அப்படியொரு நிசப்தம் ..
இருட்டிற்கு நடுவே ..
மின்னொளியால் மின்னும் [ ஜெனரேடர் மூலம் ]
மாளிகை ..சுவற்கும்
ஒளி பாய்ச்சும் விளக்கு அது விரயத்தின் உச்சம் ..
மாளிகையில் வீட்டிருக்கும்
சீமாட்டி வாழ்வில்
குறை ஒன்றும் இல்லை
நினைத்த தெல்லாம்
கிடைக்கும் வளமாய் அவள் வாழ்வு
நகை அவளிடம் தஞ்சம்
பணிவிடைக்கும் குறைவில்லை
குறைவில்லா சீமாட்டி
நிசப்த இரவில்
வீரிட்டு அழுதாள்...
தேம்பி தேம்பி அழுதாள்
ஓடி வந்தான் கணவன்
என்ன ஆயிற்று ..என்றான்
அழுகையே பதில்தனையன் கேட்டான்
விசும்பல் மட்டும்தான்அவளிடமிருந்து
அக்கம் பக்கம் திரண்டது
என்ன ஆயிற்று ...
எனக்கு பிடித்த சீரியல்
நாயகி பேருந்து மோதி
சாய்ந்து விட்டாள்..என்றாள்
அதிரை சித்திக்
அழும் குரல் தொடரும்...
காலச்சூழலுக்கேற்ற அட்டகாசமான கவிதை !
ReplyDeleteடி.வி சீரியலில் மூழ்கிகிடக்கும் வீட்டுக் கண்மணிகளின் பரிதாப நிலையை அழகாக வர்ணித்துள்ளார் பத்திரிக்கைதுறை நிபுணர்
வாழ்த்துகள்
வாழ்த்துகள் சகோ. அதிரை சித்திக் அவர்களுக்கு...
ReplyDeleteதங்களின் கவிதையை தளத்தில் முதன் முதலாக தனி லேபிளுடன் பதிந்துள்ளோம்
தொடருங்கள்...சமூக விழிப்புணர்வைத் தூண்டும் கவிதைகளாக என்றென்றும்
பிரபலமான தமிழ் திரட்டியிலும் இக்கவிதையை இணைக்க முயற்சிக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் !
அசத்தும் கவிதை .நன்றாக அழட்டும் நம்மையும் அழவைக்கட்டும். கேட்பதெல்லாம் வாங்கி கொடுத்த பலன் நமக்கு கிடைக்க வேண்டுமல்லவா!அப்பொழுதுதான் கேட்பது குறையும் .
ReplyDeleteஇது சகஜம், கரண்ட் இருந்தா எல்லா வீடுகளிலேயும் இதே நிலமைதான் (அழுகுரல் அதிகமா கேட்கும்), இதுலே ஏழை/பணக்காரர் பாகுபாடில்லை
ReplyDeleteஹா ஹா
ஆஹா அருமை. இதுதான் நடக்கிறது இங்கே. நன்கு படம் பிடித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteபதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteஅருமையான கவிதை.
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் திரைப்படம் பார்த்தது போல் இருந்தது, காரணம் அவள் அழுகையின் காரணத்தினால்.
வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
HO Palayankottai. TN.,
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அவளின் அழுகையின் படம் + கவிதை அசத்து விட்டது
ReplyDeleteவாழ்த்துகள்.
அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள் சகோ. அதிரை சித்திக் அவர்களுக்கு..
பேரூந்தில் சாய்ந்தது கதிக்கா அல்லது நிஜமா
ReplyDeleteஎதுவானாலும் சீரியல் அபிமானிகளின் கவலை
அல்லாஹ்வை மரந்த கவலையே
கவிஞ்ஞரே கலக்குங்கள்
எப்படி சொன்னாலும் உணரமாட்டாங்க மக்கள் எப்படி திருத்துவது இவர்களை இப்படி சொன்னாலாவது கேட்பார்களா ?
ReplyDelete