kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, October 19, 2012
ரயில் : டாட்டா... பை-பை... ஸீ யு... [ காணொளி ]
ரயில் பயணம் சுகமானது மட்டுமல்ல, மனதுக்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. பயணக்கட்டணம் குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பானதாகவும் இருப்பதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் விரும்புகின்றனர்.
1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் மாயவரம் முதல் காரைக்குடி வரை வழி தடத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அதிரை ரயில் நிலையம் பாரம்பரியமிக்க தொன்மையும் பழமையும் வாய்ந்ததாகும்.
கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள இந்நிலையத்திலிருந்து அதிக எண்ணிக்கையைக் கொண்ட வர்த்தகர்கள், சபூராளிகள் என சென்னை மாநகரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் உற்பத்தியாகும் மீன், இறால், நண்டு, கருவாடு, உப்பு, தேங்காய் போன்ற விவசாயப்பொருட்களும் அதிகளவில் வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்நிலையத்தில் காலஞ்சென்ற ஐத்துரிஸ், அரக்கிடா போன்ற அப்பாக்களின் குதிரைவண்டிகள் முதல், சோட்டா, பக்கடா போன்ற பேராண்டிகளின் ஆட்டோக்கள் வரை புழங்கிய இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெற்கு ரயில்வேயில் மலைப்பாதை தவிர அகலப்பாதையாக மாற்றப்படாமல் உள்ள கடைசி மீட்டர்கேஜ் பாதையில் செல்லும் கடைசி ரயில் என்ற பெருமையை தட்டிச்செல்கின்றன வண்டி எண் 56893.
இன்று [18-10-2012] அதிரை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழியனுப்பு விழாவில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயணிகளுக்கு இனிப்பு வழங்கி இறுதி ரயிலை கனத்த இதயத்துடன் வழியனுப்பிவைத்தனர்.
அதிரை ரயில் நிலையம் கடற்கரையோர பகுதியைக் கொண்டுருப்பதால் இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு புதிய ரயில் நிலையம் அமைய வேண்டும் என்பதும், மேலும் தொலை தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குரிய அனைத்து வசதிகளும் அமையபெற்றுள்ள நிலையமாக உருவாக்க வேண்டும் என்றும், அகல ரயில் பாதைக்கான பணிகள் எவ்வித குறிக்கீடுகள் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சேக்கனா M. நிஜாம்
1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் மாயவரம் முதல் காரைக்குடி வரை வழி தடத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அதிரை ரயில் நிலையம் பாரம்பரியமிக்க தொன்மையும் பழமையும் வாய்ந்ததாகும்.
கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள இந்நிலையத்திலிருந்து அதிக எண்ணிக்கையைக் கொண்ட வர்த்தகர்கள், சபூராளிகள் என சென்னை மாநகரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் உற்பத்தியாகும் மீன், இறால், நண்டு, கருவாடு, உப்பு, தேங்காய் போன்ற விவசாயப்பொருட்களும் அதிகளவில் வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இந்நிலையத்தில் காலஞ்சென்ற ஐத்துரிஸ், அரக்கிடா போன்ற அப்பாக்களின் குதிரைவண்டிகள் முதல், சோட்டா, பக்கடா போன்ற பேராண்டிகளின் ஆட்டோக்கள் வரை புழங்கிய இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிரை ரயில் நிலையம் கடற்கரையோர பகுதியைக் கொண்டுருப்பதால் இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு புதிய ரயில் நிலையம் அமைய வேண்டும் என்பதும், மேலும் தொலை தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்குரிய அனைத்து வசதிகளும் அமையபெற்றுள்ள நிலையமாக உருவாக்க வேண்டும் என்றும், அகல ரயில் பாதைக்கான பணிகள் எவ்வித குறிக்கீடுகள் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
சேக்கனா M. நிஜாம்
Subscribe to:
Post Comments (Atom)
1927 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய ரயில் இன்று 18/10/2012 வரை முடிந்தது. திருவாரூர்-காரைக்குடி பணிகள் அனைத்தும் நான்கு முதல் ஆறு ஆண்டுக்குள் நிறைவுறும்' என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteநீண்ட நாள் கனவு நிறைவேறியது..........
ReplyDeleteபதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteஅன்பின் தம்பி சேக்கனா எம்.நிஜாம் அவர்களைப்பற்றி சொல்லவே தேவைஇல்லை, ஆனாலும் இன்று சொல்லியே ஆகனும், காரணம் யாராவது இன்றுதான் முதன் முதலாக இந்த வலைதளத்தை பார்ப்பவராக இருந்தால்!!??
தம்பி உங்களுடைய இதுமாதிரி சேவைகளைப்பற்றி, அதாவது, எப்படி சொல்லுவது, உங்களைப்பற்றி சுருக்கமாக சொன்னால், நீங்கள் ஒரு பம்பரம் இல்லை அதுவும் சரியான விசை இல்லையென்றால் நின்றுவிடும், நீங்கள் ஒரு கடிகாரம் இல்லை அதுவும் சரியான விசை இல்லையென்றால் நின்றுவிடும், அப்போ நீங்கள் ஒரு புவி அவ்வளவுதான், ஏன் அப்படி சொன்னேன், அது மட்டும்தான் இறுதிநாள் வரை சுற்றிக்கொண்டே இருப்பதோடு ஓடிக்கொண்டிருக்கும்.
தொகுப்பை படிக்கும் போது மாயவரத்திலிருந்து நகர்ந்து அதிரை வந்தது போல் இருக்கு. வண்ணப் படங்கள் மற்றும் எல்லாம் ரொம்பவே அந்தமாதிரி இருக்கு.
உங்கள் இந்த மாதிரி தனிஆக்கங்கள் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
HO Palayankottai TN.,
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
ஒரு பக்கம் புதிய வரவை நினைத்து மனம் மகிழ்கிறது மறு பக்கம் நமது வாழ்வோடும் வளத்தோடும் ஒன்றி இருந்த இரயிலை நினைத்து - அதன் நினைவுகளில் நமது மனம் ஏங்குகிறது.
ReplyDeleteபழையன கழிதலும்
புதியன புகுதலும்
வழுவல - கால
வகையினானே.
போகுதே போகுதே
ReplyDeleteபைங்கிளி வானிலே
எனும் மன நிலயொடு
வழி அனுப்பி வைத்தோம்
அவள் வருவாளா?
அவள் வருவாளா?
என்று காதிருக்கும் நாம்
இன்ஷா அல்லாஹ்
வாராயோ தோழி வாராயோ
என்று வரவேற்ப்போமாக
இதையும் சேக்கண்னா நிஜாம் அவர்களின் கானோளில்
கேட்போமாக
இதை ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற எண்ண வந்து அதை செயல்முறை படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.. இன்ஷா அல்லாஹ் அகல ரயில் பாதையில் பயணிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருளுவானாகவும் ஆமீன்
ReplyDelete