.

Pages

Saturday, October 20, 2012

காகம் தணிந்த தாகம் !!!


 சிறுதுளி ! பெருவெள்ளம் !!


 சிறுகக்கட்டி  பெருக வாழ் 


 சிறுசேமிப்பு நாட்டுக்கும்
 வீட்டுக்கும் தேவை
   

இதுவெல்லாம் பழமொழி ஆனால் இன்றைய சமுதாயத்திற்கு பழயமொழி காரணம் அவர்களுடைய திங்கிங் Do one project Get more Jocpot இந்த தாட் டோடுதான் தம்முடைய செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாமெல்லாம் கேட்ட பழையக் கதையை இன்றைய 10th படிக்கும் குழந்தைகளுக்கு அதனுடைய தகப்பனார் சொல்ல நாமும் கேட்போம்

ஒரு ஊரில் ஒரு காகம் இருந்ததாம் அதற்கு தாகம் எடுத்ததாம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து ஓர் இடத்தில் கூஜா ஒன்றை கண்டதாம் அதனுல் சிறிதளவே தண்ணீர் இருந்ததாம் காகத்திற்கு தண்ணீர் எட்டவில்லையாம் உடனே அது கொஞ்சம் தூரம் சென்று ஒவ்வொரு சிறு கற்களாக எடுத்து வந்து கூஜாவினுள் போட்டதாம், ஏன் வாப்பா அப்படி செய்கிறது ? கதை சொல்லும்போது  குறுக்கே பேசப்பிடாது.

கூஜாவினுள் கொஞ்சம் கொஞ்சமாக கற்களை போடும் பொழுது அடியில் கிடந்த தண்ணீர் கூஜவின் மேல் பாகம் வந்ததாம் காகமும் தண்ணீரை குடித்து விட்டு தாகம் தீர பரந்ததாம்.

ஏன் வாப்பா கொஞ்சம் கொஞ்சமாக கல்லை போடுவதற்கு பதிலாக எங்காவது தேடிபிடித்து ஒரு ஸ்ட்ரா கெடச்சா காக்கைக்கு இவ்வளவு கஸ்டம் இருந்திருக்காதில்லே வாப்பா !!!!!

கேட்டீர்களா இன்றைய தலைமுறைகளை இதுதான் அவர்களுடை தாட். மேலும் பேசிப்பருங்கள் Life is very short period  வாழ்க்கை வாழ்வதற்கே என்று தத்துவங்கள் பேசுவார்கள் தொழுகையில் நோன்பில் இருக்கும் கவனம் சம்பாத்தியத்தில் செலுத்துவதில்லை அல்லாஹ் பாதுகாப்பானாக வஸ்ஸலாம்

மு.செ.மு.சபீர் அஹமது

[ Video Credit : Ullikkottai ]

5 comments:

  1. சகோ. மு.செ.மு.சபீர் அஹமது அவர்கள் தளத்தில் பதியும் முதல் கட்டுரை !!

    வாழ்த்துகள் !

    இறைவன் நாடினால் ! தொடரட்டும் சமூக விழிப்புணர்வு ஆக்கங்களாக என்றென்றும்

    ReplyDelete
  2. படு சுவாரசியமான கதையில் இறுதியில் நச்சென்ற கிளைமாக்ஸ் !

    சிறு சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அருமையான விழிப்புணர்வு

    வாழ்த்துகள் தொழில் அதிபருக்கு...

    ReplyDelete
  3. பதிவுக்கு முதலில் நன்றி.

    இக்காலத்தவர்களுக்கு நல்லதொரு தூண்டுதலான விஷயம். அதோடு நின்றுவிடாமலம் கடும் முயற்சி எடுத்து அசையும் வரைகலையையும் வரைந்து காட்டியிருப்பது உண்மையில் ஒரு படிமேல்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    HO Palayankottai TN.,
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    **********************************************

    ReplyDelete
  4. காலம் செல்ல செல்ல
    நவீனம் புகும் ..
    மன சாட்சி வெளியேறும்
    இது காலத்தின் கட்டாயம்

    ReplyDelete
  5. காக்கா கதை. ச.காக்காவின் அருமை சிந்தனை!

    பிள்ளைகளின் முற்போக்கு சிந்தனைக்கு ஸ்ட்ரா ஒரு அழகான எடுத்துக்காட்டு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers