.

Pages

Monday, October 22, 2012

எது நிரந்தரம் !?

இவ்வுலகம் வந்தேன், இவ்வுலகும் நிரந்தரமா ?
பெற்றோர்கள் உண்டு, பெற்றோர்களும் நிரந்தரமா ?

உறவுகள் உண்டு, உறவுகளும் நிரந்தரமா ?
உடைகள் உண்டு, உடைகளும் நிரந்தரமா ?

உணவுகள் உண்டு, உணவுகளும் நிரந்தரமா ?
நட்புகள் உண்டு, நட்புகளும் நிரந்தரமா ?

பள்ளி சென்றேன், பள்ளிகளும் நிரந்தரமா ?
கல்வி கற்றோம்ம், கல்வியும் நிரந்தரமா ?

வசதிகள் உண்டு, வசதிகளும் நிரந்தரமா ?
காசு பணம் உண்டு, இவையெல்லாம் நிரந்தரமா ?

இல்லறம் உண்டு, இல்லறமும் நிரந்தரமா ?
சொத்து சுகம் உண்டு, இவைகளும் நிரந்தரமா ?

துணையாள் உண்டு, துனையாளும் நிரந்தரமா ?
பிள்ளைகள் உண்டு, பிள்ளைகளும் நிரந்தரமா ?

சரீரம் உண்டு, சரீரமும் நிரந்தரமா ?
உயிர் உண்டு, உயிரும் நிரந்தரமா ?

எது நிரந்தரம் ? அது மறுமையே,
அதுக்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?

K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

9 comments:

  1. சகோ. K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் தளத்தில் பதியும் முதல் ஆக்கம் !

    வாழ்த்துகள் !

    இறைவன் நாடினால் ! தொடரட்டும் சமூக விழிப்புணர்வு ஆக்கங்களாக என்றென்றும்

    ReplyDelete
  2. மனித உரிமைக்காவலரின் முதல் கவிதை கண்ணி முயற்சியாக இருந்தாலும் வாழ்வின் கடைசி முயற்சியை நமக்கு சிந்திக்க வைக்கின்றன.

    மரணத்தின் நிலைக்கு வந்துவிட்டால்...

    1. இனி நீங்கள் மையித் என்ற பெயரில் அழைக்கப்படுவீர்கள்!

    2. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டி, அனைத்து மஸ்ஜித்களிலும் உங்களின் மரண அறிவிப்புத் தகவல் அறிவிப்புச் செய்யப்படும்!

    3. உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் வருகை தந்து, உங்களின் மையத் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் (“சலாம்”) எனக் கூறுவார்கள்.

    4. சுத்தமான முறையில் குளிப்பாட்டப்படுவீர்கள்.

    5. ஏறக்குறைய 12 மீட்டர் அளவுள்ள வெள்ளைத் துணியால் கஃபனிடப்படுவீர்கள்!

    6. வீட்டிலிருந்து “சந்தூக்” எனும் பெட்டியில் உங்களை (மையத்தை) வைத்து கப்ர்ஸ்த்தான் நோக்கிக் கொண்டுச் செல்லப்படுவீர்கள்.

    7. கப்ர்ஸ்த்தானில் ஆறு அடி நீளம், முன்று அடி அகலம், ஐந்து அடி ஆழத்தில் வெட்டப்பட்ட குழியில் அடக்கம் செய்யப்படுவீர்கள்!

    8. “உன் இறைவன் யார்? உன் மார்க்கம் எது? உன் வழிகாட்டி ( நபி ) யார்? போன்ற கேள்விகள் கேட்கப்படுவீர்கள்! பதில் சொல்லத் தயாராகுங்கள்!

    “உங்களுக்காக தொழுகை வைக்கப்படும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!”

    என்ற அறிவிப்புப் பலகை வாசித்த நினைவு உண்டுதானே?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. என் தகப்பனாரின் பல ஆக்கங்களில் இவ்வலைத்தள்த்தில் பதியும் முதல் ஆக்கம் இது............
    முதல் ஆக்கமாக இருந்தாலும்......முத்தான ஆக்கம்.....
    என் தகப்பனாரின் படைப்புகள் மேலும்...மேலும் இவ்வலைத்தளத்தில் பதித்திட என் அன்பான வாழ்துக்கள்....
    _________________
    J,M MOHAMED NIZAMUDEEN
    (www.nplanners.webs.com)

    ReplyDelete
  5. ஜமால் காக்க
    உங்கள் ஆக்கத்தில்
    நல்ல தாக்கம் உள்ளது
    தந்தையின் ஆக்கத்தை
    மகன் அகம் மகிழ்ந்தது
    நல்ல துவக்கம் ...
    ஒத்த கருத்துடைய நல்ல
    மகனை பெற்றுள்ளீர்கள் காக்கா
    மாஷா அல்லாஹ் ...!

    ReplyDelete
  6. அருமை வாழ்த்துக்கள் காக்கா..

    ReplyDelete
  7. சகோ. K.M.A. ஜமால் முஹம்மது அவர்களின் முதல் ஆக்கம் !!வாழ்த்துக்கள் பல!!!!!

    ReplyDelete
  8. என்னுடைய ஏழ்மையான கவிதைக்கு கருத்துட்டு வாழ்த்திட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றி பல, என்னுடைய ஏழ்மையான கவிதைகள் தொடர்ந்து தவழ்ந்த வண்ணம் இருக்கும் இன்ஷாஅல்லாஹ்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    ---------------------

    ReplyDelete
  9. சகோ. K.M.A. ஜமால் முஹம்மது காக்கா கவிதையே பின்னி பேடல் எடுகிறார்கள். அருமை அருமை மிக அருமை.இன்னும் உங்கள் கவிதை மழைப்பொழியட்டும் எங்களுக்கு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers