அதிரையிலுள்ள ஒவ்வொரு தெருவிலும் விரல் விட்டு எண்ணிகிட்டே வந்தால் எப்படியும் புரோட்டாக் கடைகளின் எண்ணிக்கை 50 ஐ தாண்டும். அந்தளவிற்கு இரவு வேலை உணவாக இவற்றை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிரை புரோட்டா என்றாலே தனி ருசி அதுவும் இரவு நேரக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொரிச்சப் புரோட்டாவிற்காக அலைமோதும் கூட்டங்களால் வியாபாரம் படு ஜோராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தினமும் வாடிக்கையாக இவற்றை வாங்கிச் செல்வதுதான் பெரும் வேடிக்கை. அதுவும் விஷேச தினங்களில் !? கொத்து புரோட்டா, முர்தபா போன்றவற்றை கடைகளில் தயாரிக்கப்படும் போது கமழுகின்ற நறுமணமும், அங்கே எழுப்பப்படும் ஓசையும் அனைவரையும் சுண்டி இழுத்துவிடும்.
1. தினமும் புரோட்டா சாப்பிட்டால்தான் எனக்கு தூக்கமே வரும் எனச் சொல்வோரும்...
2. என்னால் வேலை பார்க்க முடியாதுங்க !? ப்ளீஸ்...வீட்டுக்கு வரும் போது அப்படியே புரோட்டா வாங்கிட்டு வந்துடுங்க என வாடிக்கையாகச் சொல்லும் வீட்டுக் கண்மணிகளும்...
3. புரோட்டாவுடன் சால்னாவை ஊற்றி ஊறவைத்து தனது குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பெற்றோர்களும்...
4. 'முன்பசி'க்கு எனச் சொல்லி முன்பாகவே கடைகளுக்குச் சென்று ருசித்து சாப்பிடும் இளைஞர்களும்...
என இருக்கத்தான் செய்கின்றனர்.
இப்படி அதிரை மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள பொரிச்ச புரோட்டாவின் செயல்முறை விளக்கத்தைக் இங்கே காண்போம்...
கவனத்தில் கொள்ள வேண்டியவை :
மைதாவைப் பற்றி இணையத்தில் கிடைத்த தகவல் நமக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைட் ( Benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா.
( ( Benzoyl peroxide ) என்பது நாம் முடியில் டை அடிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள ப்ரொட்டீன்னுடன் சேர்ந்து நீரழிவுக்கு காரணியாக அமைகிறது. மேலும் இது தவிர, Alloxan என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது. மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinamotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இது மைதாவை மேலும் அபாயகரமாக்குகிறது.
இதில் Alloxan சோதனைகூடத்தில் எலிகளுக்கு நீரழிவுநோய் வரவைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக ப்ரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணைபுரிகிறது. மேலும் மைதாவில் செய்யப்படும் புரோட்டா ஜீரணத்துக்கும் உகந்ததல்ல. இதனால் சிலருக்கு சாப்பிட்ட ப்ரோட்டா செரிக்காமல் அஜீரண கோளாறு உண்டாகிறது. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.
இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழ்ந்தைகளுக்கு மைதாவினால் செய்யப்பட்ட பேக்கரி பண்டம் உணவுகளை கொடுக்கக்கூடாது.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Wow... Missing it tooo
ReplyDeleteI hope this info is not cent percent correct
பரோட்டா பார்த்த விசயம் தானே என்று
ReplyDeleteபார்க்காமல் விட்டிருந்தால் தங்களின்
மைதா மாவின் தகவல் தெரியாமல் போய் இருக்கும்
விளிப்புனறு வித்தகர்க்கு வாழ்த்துக்கள்
அவசியம் அடுத்த நூலில் இத்தகவலை
வெளியிடுங்கள் ...நன்றி
முறு முறுப்பான தகவலுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteகாலங்காலமாக ருசித்த நாக்குகள், பரோட்டாவை பலவிதங்களில் உட்கொண்ட மனிதர்கள், இப்படி நிறைய சொல்லலாம்.
விழிப்புணர்வு என்ற பலவிதமான தூண்டுதல்களை அன்பின் தம்பி நிஜாம் அவர்கள் அயராது தந்து கொண்டிருக்கிறார்கள், இப்படியாகப்பட்ட தூண்டுதல்களை உட்கொண்ட மனிதர்கள் எத்தனைபேர்?
மனிதர்களே காலங்காலமாக தூங்கினது போதும், நாளை என்று இருக்காமல் இன்றே சிந்தித்து செயல்படுங்கள்.
சும்மா முறு முறுக்கக் கூடாது. எல்லாம் உங்கள் நல்லதுக்குத்தான்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
H.O. Palayankottai. TN.,
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
********************************************
அன்பின் தம்பி நிஜாம். அருமையான விழிப்புணர்வு மருத்து. பரோட்டா பலவிதங்களில் கெடுதி செய்வதாக அமீரக வானொலியில் அடிக்கடி சொல்வார்கள்
ReplyDeleteசெய்திக்களஞ்ஜியம் சேக்கன்னா நீஜாமுக்கு 2 முட்ட புரோட்டா ஆடர்
ReplyDeleteAssalamu Alaikkum.
ReplyDeleteThank you Brother Nijam.
நீங்கள் சுட்டிக்காட்டுவது நிஜம. இரவில் கடைகளில் கூட்டம் .ஆர்டர் கொடுத்துவிட்டு கடைக்கு வெளியே காத்து நிற்கிறார்கள். ஆபத்தை விலைக்கு வாங்க . இந்த மாலை நேரக் கடைகளில் உள்ள கூட்டத்தையும் தஞ்சை, பட்டுக்கோட்டை, மதுரை, திருச்சி, சென்னை ,கோவை ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவர்களைத்தேடி நம்மவர்கள், அதிரையினர் அதிக அளவில் படையெடுத்து செல்லும் கூட்டத்தையும் ஒப்பிடுங்கள். இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
நாக்கு ருசி பாக்கெட்டை காலி செய்கிறது. விழிப்புணர்வு ஏற்படவேண்டிய பலவற்றில் புரோட்டா முக்கியத்துவம் வகிக்கிறது.
சலாம் சகோ.சேக்கணா நிஜாம்,
ReplyDeleteஎன்னன்னவோ ///Benzoyl peroxide, Alloxan , Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinamotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகின்றன/// சேர்க்கப்பட்ட கோதுமை மாவுதான் மைதா என்றால்.... அது ஏன் கோதுமை மாவை விட விலை குறைவாக விற்கப்படுகிறது..? கோதுமை மாவை விட விலை கூடுதலாக அல்லவா விற்கப்பட வேண்டும்..?! டவுட்டு..!
வலைக்கு முஸ்ஸலாம் சகோ. முஹம்மது ஆஷிக்
Delete// சேர்க்கப்பட்ட கோதுமை மாவுதான் மைதா என்றால்.... அது ஏன் கோதுமை மாவை விட விலை குறைவாக விற்கப்படுகிறது..? கோதுமை மாவை விட விலை கூடுதலாக அல்லவா விற்கப்பட வேண்டும்..?! டவுட்டு..! //
நியாமான டவுட்டுதான் ! :)
ஒரு வேளை கோதுமையிலிருந்து பெறப்படும் கழிவாக மைதா இருப்பதால் விலை சல்லிசா இருக்குமோ !?
நல்லதொரு விழிப்புணர்வு. பதிவு .
ReplyDeleteநன்றி சகோ.நிஜாம்
பரோட்டாவின் ருசியை கொடுத்து விட்டு அதை தயார் செய்யும் மைதாவை எப்படி உருவாக்குகிறார்கள்.!?///என்பதையும் அதன் தீமையையும் அழகாக சுற்றிக்காட்டி அசத்திவிட்டீர்கள்.
ஆயிலினால் (including cholastrol free oil) செய்யப்படும் அனைத்து தீன்பண்டங்களுமே உடலுக்கு தீமையானதே..!
அதிலும் அதிக தீமையை ஏற்படுத்துவது இந்த பரோட்டாதான்.
அப்படி தெரிந்திருந்தும் பாமரர்களிலிருந்து படித்த விபரமறிந்தவர்கள் வரை இந்த பரோட்டாவிற்கு தினமும் அடிமையானது தான் வேதனைக்குரிய விஷயம்.
Athirai? Can u please tell me the exact name of the city? I am a parotta addict :)
ReplyDelete// Athirai? Can u please tell me the exact name of the city? I am a parotta addict :)//
DeleteDear Keralite,
Thanks for your visit and comment...
if you type the word 'ADIRAI' in google search and you will get lot of informations about the great ADIRAI :)
ஆஹா! சூப்பர் வாயில் எச்சில் ஊறுகிறது போங்க.. அருமை.
ReplyDeleteநிறைய தகவல்களை சொன்னீர்கள். எத்தனை ஆபத்துகளை நாம் விலைகொடுத்து வாங்குகிறோம்.
ReplyDeleteகோதுமையிலிருந்து வரும் மைதா அது மைதா புரோட்டாவாக வர சாப்பிட ருசிதான் .சமூக விழிப்புணர்வு தரும் தகவல் சிந்திக்க வைக்கிறது. ருசிக்கு முக்கியம் கொடுககும் போது உடல்நலத்தையும் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது . நல்ல கட்டுரை .
ReplyDeleteபுரோட்டா அதிரைக்கு மட்டும் உரிய சொத்தல்ல. நீங்கள் பொதுவாக ஊரை குறிப்பிடாமலும் எழுதலாம்,
உங்க ஊரு ஒசத்தி ஊருதான். அதுபோல் அனைவருக்கும் அவங்க ஊரு உயர்வுதான்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்புச்சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்களே,
Delete// புரோட்டா அதிரைக்கு மட்டும் உரிய சொத்தல்ல. நீங்கள் பொதுவாக ஊரை குறிப்பிடாமலும் எழுதலாம்,
உங்க ஊரு ஒசத்தி ஊருதான். அதுபோல் அனைவருக்கும் அவங்க ஊரு உயர்வுதான் //
புரோட்டா குறித்து அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் பதியப்பட்டதே இப்பதிவு !
அதிரை புரோட்டா உணமையில் ருசியாக இருப்பதோடு :) இக்காணொளி அதிரையில் எடுக்கப்பட்டதால் தலைப்பு அவ்வாறு வைக்கப்பட்டன.
நீங்கள் கூறியது போல் இப்பதிவு அனைத்து ஊர்களுக்கும் [ உங்க ஊரையும் சேர்த்துதான் :) ] பொருந்தக்கூடியதுதான்.
முதலில் விழிப்புணர்வு தகவலுக்கு பாரட்டுக்கள்...
ReplyDeleteபார்பதற்கு மொருமொருப்பாவும் சாப்புடறதுக்கு ருசியாகவும் இருக்கும் ஆனால் இதன் விளைவோ மிக மோசமானது என்ன செய்வது நமதூர் மக்களுக்கு இரவில் இதை சாப்பிட்டால் தான் தூக்கமே வருது சிலர்க்கு.
சிகரட்டு குடிப்போரும் புரோட்டா சாப்பிடுவோரும். ஒன்றுதான் ஏன் என்றால் சிகரட்டு பாக்கட்டில் கேன்சர் உண்டாவும் என்று எழுதி இருப்பார்கள் ஆனால் அதை விட மாட்டார்கள் அது போல்தான் மைதா உடலுக்கு கேடு என்று தெரியும் ஆனால் சாப்பிடுவதை விட மாட்டார்கள் புரோட்டா பிரியர்களும்.இந்த பதிவுக்கு பிறகாவது விளித்துக்கொள்ளட்டும் நம் மக்கள்.
வாழ்க வளமுடன்.
அதிரை புரோட்டா உணமையில் ருசி
ReplyDeleteபுராட்டா விலை என்னன்னு சொள்ளல்லையே
ReplyDeleteEXCELLENT. நல்லதொரு விழிப்புணர்வு..!
ReplyDelete